Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லசந்த விக்ரமதுங்க அரச பயங்கரவாதத்தின் ஊடாகவே கொலை செய்யப்பட்டார் – சஜித் பிரேமதாச

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நந்தன் நீங்கள் சொல்லும் நிகழ்வுக்கு ஆதாரம் இருக்கா? நான் சொல்லும் நிகழ்வுக்கு ஆதாரமில்லை ஆனால்

ஏன் கேட்கிறேன் என்றால் - அப்போ புலிகளின் 2ம் மட்ட தலைவர்கள் இருவர்(இதில்,ஒருவர் பிற்காலத்தில் முன்னணி தலைவரானார்) நான் காதுபட பேசிக்கொண்டது, ஒரு முசுலீமுக்காகதான் நாங்கள் சண்டையை தொடக்கினோம், இப்போ அவங்களே கிழக்கில் அட்டூழியம் செய்கிறார்கள் என்று.

  • கருத்துக்கள உறவுகள்

அந்த நேரம் அங்கே இருந்தேன் .ஒரு முனாவுக்காக சண்டை தொடங்கியதாக நீங்கள் சொல்பவர் கூறியிருந்தால்,கையில் பெரிய பூமாலை வச்சிருந்திருப்பார் போல இருக்கு காதில சுத்த

  • கருத்துக்கள உறவுகள்

அவர் பூமாலை காதில் சுற்றும் அளவுக்கு நான் அப்போ ஒன்றும் பெரியாளில்லை (இப்போதும் இல்லை). ஒரு பன்னிரெண்டு வயதுப்பொடியனாக பல சம்பாசணைகளை கேட்க மட்டுமே முடிந்த காலமது. சிலசமயம் அவர்கள் கதைத்ததை நான் தான் பிழையாக விளங்கிக் கொண்டேனோ தெரியாது.

மட்டக்களப்பு நகரில் ஒரு முஸ்லீம் டெய்லர் புலிகளுக்கு உடுப்புத்தைத்தாயும், அவரை ஆமி அடித்ததாயும் அதில் இருந்தே சண்டை வலுத்ததாயும் பேசிக்கொண்டதாய் நியாபகம். என் மீள்கூறலில் தவறாயும் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு விவகாரம் நடந்த இருநாள்களில் நான் மட்டக்களப்பில் இருந்து என் தந்தையுடன் ஆனையிறவு வழியாக பயணித்தோம். அப்போதே , செங்கலடி, ஒட்டுசுட்டான்போன்ற போலீஸ் நிலையங்கள் புலிகளின் கைக்கு வந்துவிட்டிருந்தன, தமிழ் போலீஸ்காரர் எச்சரித்து விடுவிக்கப்பட, சிங்கள பொலீசார் கதைதானார்கள். மட்ட்டகளப்பில் 600 பொலீச்காரரை கருணா ஏற்கனவே டம் பண்ணவும் தொடங்கிவிட்டார்.

கொக்காவில்,காம்பை தாண்டி பயணித்து மாங்குளம் வந்தபோது ஆமி ரோட்டை மறித்து முன்னால் போன டிரக்டருக்கு சுட மாங்குளத்தை சுத்தி மீண்டும் ஏ9 இல்,ஏறி வந்தோம். ஆனையிறவில் எமக்குப் பின்னால் வந்த லொறியை ஆமி திருப்பி விட்டு, உங்களதுதான் கடைசி வாகனத்தொடர், அதுவும் அரச வாகனங்கள் என்பதால் விடுகிறோம். திரும்பி வவுனியா போங்கள், புலிகள் வாகனத்தை பறிப்பார்கள் என்று மிரட்டல் கலந்து எச்சரித்து அனுப்பினார்கள்.

இரவு வீடு வந்தபோதே கோட்டைப் பக்கம் சூட்டுச் சத்தமும், பலாலியில் இருந்து ஓரிரு செல்வீச்சுக்களும் ஆரம்பமாகி விட்டிருந்தன.

ஹமீது வந்தது இதற்க்கும் அடுத்தநாள். அப்போ சண்டை முற்றாக தொடங்கி விட்டிருந்தது. கிழக்கில் அன்று இரு பகுதியும் பலமாக மோதிக்கொண்டனர். கமீது வந்த விமானமே மயிரிலையில் தப்பியதாக அன்று உதயனில் படித்த நியாபகம். இந்நிலையில்தான் அவரை ஏற்றப்போன வாகனம் மீதும் சூடு விழுந்தது.

பிரேமதாசாவை மீறி ரஞ்சன், காமினி எந்த கொம்பனும் ஒரு விரலையும் அசைக்க முடியாத நிலையே அன்றிருந்தது. யுத்தத்தை உடனடியாக தொடங்க விரும்பாத பிரேமதாசா யுத்தம் தொடங்கிய பின்பும் இறுதி முயற்சியாக ஹமீதை பலாலிக்கு அனுப்பினார் என்பதே உண்மை.

அப்போது யாழில் இருந்த பலர் இங்கு இருக்கிறார்கள் கமீத் வந்த அன்று காலைதான் ஒரு 10 மணிபோல கோட்டையில் இருந்து டவுனுக்குள் செல்வீசினார்கள். 
பின்பு 11 மணிபோல பலாலியில் இருந்து ஆட்லறி அடித்தார்கள்.
அதற்கு முதல் நாள் நான் ஆனையிறவால் வந்தேன். பயந்து பயந்து தான் வந்தோம் ஆனால் ஒன்றும் நடக்கவில்லை.
 
நான் நினைக்கிறன் நீங்கள் கமீத் வந்த மறுநாள் வந்திருக்கிறீர்கள் என்று.
கொஞ்சம் வடிவாக யோசித்து பாருங்கள். 
 
பிரேமதாசவை மீறி அவர்கள் இருக்கவில்லை.........
ஆனால் அவர்கள் எல்லோரும் ஒன்று கூடினால் தனக்கு வில்லங்கம் வரலாம் என்று பிரேமதாச எண்ணி இருக்கலாம் என்று நான் நம்புகிறேன்.
 
அவர்கள் போரை திணிக்க முயற்சி செய்வதாக கமித்திடம் செய்தி சொல்லி அனுப்பி இருந்தார் என்று. அன்டன் பாலசிங்கம் அவர்கள் தனது புத்தகத்தில் எழுதி உள்ளாரே?
சண்டை தொடக்கும் எண்ணம் இருந்திருந்தால் .... தந்திரமாக எதிர்பாராத நேரத்தில் தான் தொடங்கி இருப்பார்கள்.
  • கருத்துக்கள உறவுகள்

கோசான் சொல்லும் டெய்லர் கதை நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன்.அந்த பிரச்சனையுடனே சண்டை பெரிதாக தொடங்கி விட்டது.இந்த சண்டையை புலிகள் வேண்டுமேன்றே தொடங்க வேண்டுமென்பதற்காக தொடங்கினார்கள்.இந்த சம்பவம் ஆரம்பிக்க முன்னர் மட்டு மாவட்டத்தின் தளபதி றீகன் அண்ணா வன்னி சென்று வந்திருந்தார்.அவர் வந்தவுடன் புலிகள் இன்னும் தீவிரமாக பயிற்சியை தொடங்கி இருந்தார்கள்.அவர் 2,3 நாட்களில் இந்த டெய்லர் சம்பவத்தை காரணம் காட்டி சண்டை தொடங்கப்பட்டது.

கோசான் சொல்வது மாதிரி புலிகள் ஒன்றும் முகாமை கைப்பற்றி இருக்கவில்லை.எல்லாத்தையும் விட்டுட்டு காட்டுக்கும்,வாகரைக்கும் தான் ஓடினார்கள்.அந்தப் போராளிகள் வன்னியில் இருந்து பானு அண்ணா தலைமையில் போராளிகள் தங்களுக்கு உதவிக்கு வருவார்கள் என்றே சொன்னார்கள்.ஆனால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை.ஆனால் சண்டை தொடங்கி 2,3 நாட்களில் புலிகளுக்கு பெரிதாக இழப்பில்லாமல் பின் வாங்கிக் கொண்டார்கள்.இது தான் தலைமையின் திட்டமாக இருக்கும்.இந்த சம்பவம் நடந்து 2,3 மாதங்களிலே றீகன் அண்ணா கொல்லப்பட்டார்.

ஹமீத் மீதான தாக்குதல் எல்லாம் அதற்கு முதலே தொடங்கி விட்டது.பொறுத்த புலிகளால் கடைசியாக தொடங்கப்பட்டது தான் இத் தாக்குதல்.நான் சொல்வது சரியாக இருக்க வேண்டியதில்லை.எனக்கு ஞாபகத்தில் இருந்ததையே எழுதினேன்...இந்த கிழக்கு சம்பவங்கள் எல்லாம் தப்பிலி போன்றோருக்கு நன்றாகத் தெரிந்திருக்கும்.அவர் யாழை வாசித்துக் கொண்டு இருப்பார் அவர் வந்து இதை தெளிவு படுத்தினால் நல்லது

Edited by ரதி

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் யாராவது தெளிவுபடுத்தினால் நல்லது. எனக்கும் கொஞ்சம் குழப்பாமகத்தான் கிடக்கு.

ரதியக்கா முகாம்கள் எதையும் பிடிக்கவில்லை, ஆனால் பல பொலீஸ்டேசன்களை கைப்பற்றினர். கும்புறுப்பிட்டி முகாமை சுற்றி காவல் நிண்டு கிட்டத்தட்ட அது வீழும் நிலைக்கு வரும் போது ஆமி திருப்பி அடித்தான். இதிலிருந்துதான் ஆமி பதில் தாக்குதல் தொடங்கியது.

  • கருத்துக்கள உறவுகள்

அன்ரன் பாலசிங்கம் எழுதிய போரும் சமாதானமும் பக்கம் 335 இலிருந்து...

மோதலின் உடனடிக் காரணம் ஒரு சிறிய சம்பவமே. மட்டக்களப்பு காவல் நிலையத்தில் ஜூன் 10ஆம் திகதியன்று முஸ்லிம் பெண் ஒருவர் தொந்தரவு செய்யப்பட்டார். விடுதலைப் புலிகள் தலையிட்டு, காவல்துறையினரின் நடத்தையை கண்டித்தனர். இது விடுதலைப் புலிகளுக்கும் காவல் துறையினருக்கும் இடையே மோதலைத் தோற்றுவித்தது. இந்தச் சண்டை விரிவடைந்து வடக்கு-கிழக்கின் தமிழ்ப் பகுதிகளில் விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள ஆயுதப் படைகளுக்கும் இடையே மோதல்களாக வடிவெடுத்தது. ஒரு முழு நிலைப் போர் வெடித்தது. மோதல்களைத் தவிர்க்கும் கடைசி நேர முயற்சியாக, ஜூன் 11ஆம் திகதி ஹமீது அவர்கள் விமானம் மூலம் யாழ்ப்பாணம் வந்தார். பலாலி விமான நிலையத்திற்கு வெளியே அவரை வரவேற்க பாலாவுடனும் வேறு போராளிகளுடனும் நான் கூடச் சென்றேன். சந்திப்பு இடம்பெறும் இடத்தை ஹமீது வண்டி அடையுமுன், ஒழுக்கம் மீறிய சிங்கள இராணுவத்தினர் சிலர் அவருடைய வண்டியை நோக்கிச் சுட்டனர். எனினும், பிரபாகரன் அவர்களையும் வேறு புலித் தலைவர்களையும் ஹமீது அவர்கள் சந்தித்தார். போர் நிறுத்தம் ஒன்றை ஏற்பாடு செய்ய அவர் மேற்கொண்ட முயற்சி, போரைத் தொடரவேண்டும் என்று உறுதி பூண்ட கிழக்கு மாகாண அரச படைகளின் பிடிவாதத்தால் தோல்வியில் முடிந்தது; ஹமீது ஒருவரைத் தவிர, அவருடைய அரசுத் தலைவரோ, கடும்போக்கு அமைச்சர்களோ அமைதியை விரும்பவில்லை. போர் தனது குரூர வேகத்துடன் மீளத் தொடங்கியபோது, பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் திரு. ரஞ்சன் விஜேரத்தினா நாடாளுமன்றத்திலேயே "முழுமையாகப் புலிகள் மீது பாயப் போகின்றேன். அவர்களை நாம் அழித்தொழிப்போம்", என்று முழங்கினார். விடுதலை புலிகளுக்கும் பிரேமதாசா நிர்வாகத்திற்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தை, இவ்வாறு தோல்வியடைந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கிருபன்,

நான் மேலே சொன்னதுடன் அடேல் எழுதியது ஒத்துப் போகிறது. ஆனால் அடேல் கிழக்கில் ராணுவம் வலிந்து சண்டையை தொடங்கியது என்கிறார் - நான் கிழக்கில் புலிகள் சண்டைய தொடங்கினார்கள் என்றேன்.

புலிகள்தான் சண்டையை வலிய தொடங்கினார்கள் என்று அடேல் ஒத்துக்கொள்ள மாட்டார்தானே அதுவும் ஒரு புத்தகத்தில். ஆகா உய்துணரக்கூடியது - கிழக்கில் புலிகள் வலிந்து சண்டையை தொடங்கினர் என்பதே.

  • கருத்துக்கள உறவுகள்

நான் பதிந்ததற்கு முந்தைய பந்திகள் இப்படி உள்ளன. புலிகள் வலியச் சண்டையைத் தொடங்கினார்கள் என்பதைவிட அப்படியான நிலையைச் சிங்களப் படைகள் தோற்றுவித்தன என்று சொல்லலாம். இதற்கு அடிப்படையான அரசியல் காரணங்களும் சொல்லப்பட்டிருக்கு.

.... பல சம்பவங்கள், குறிப்பாக கிழக்கில் நிகழ்ந்தன. போர்நிறுத்த உடன்படிக்கையை அவை மீறின; பொறுமையைக் கைவிடும் அளவுக்கு விடுதலைப் புலிகளைச் சீண்டின.

கிழக்கு மாவட்டங்களில் உள்ள இராணுவத் தளங்களுக்கும் காவல் நிலையங்களுக்கும் பலம் ஊட்டும் பொருட்டு 1990 மே மாத இறுதியில் புதிய படையணிகளும் கூடுதலான காவல்துறையினரும், அங்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள். நகரங்களிலும் பட்டினங்களிலும் படைகளின் காவல் உலாக்கள் அதிகரிக்க, சிங்கள ஆயுதப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே முறுகல் நிலை கூர்மை அடைந்தது. எமது போராளிகளை இராணுவத்தினர் துன்புறுத்தும் காரமான ஆத்திரமூட்டும் சம்பவங்கள் பல இடம்பெற்றன. மட்டக்களப்பு இராணுவ முகாமுக்கு அருகே ஒரு சம்பவம் நடந்தது. இரண்டு மூத்த புலிப் போராளிகளின் ஆயுதங்களைப் பறித்தெடுத்த இராணுவத்தினர், பல மணிநேரம் தார் வீதியில், உச்சி வெய்யிலில் முழந்தாளிட்டு நிற்க அவர்களை நிர்ப்பந்தித்தார்கள். பெருந்திரளான மக்கள் முன்னிலையில் இது நடந்தது, அவமானம் தாங்காத ஒரு போராளி தனது சயனைட் குப்பியைக் கடித்து அந்த இடத்தில் மரணத்தைத் தழுவினார். அடுத்த போராளி மயங்கி விழும் வரை, இராணுவத்தினர் அவரைத் தாக்கியிருக்கின்றார்கள். இத்தகைய கொடுமைகளும் சித்திரவதைகளும் அதிகரிக்க, புலிகளை வேண்டுமென்றே சீண்டி மோதச் செய்வதற்கு சிறீலங்கா அரச படைகள் முயல்வதை, புலித் தலைமை உணர்ந்தது. பாலா அந்தத் தருணத்தில் கொழும்பில் இருந்தார். அரச படைகளைக் கட்டுப்படுத்துமாறு அரசுத் தலைவரிடம் வேண்டுகோள் விடுத்தார். ஆனால், பலன் எதுவும் கிட்டவில்லை. இந்தியப் படைகள் விட்டுச் சென்ற வெற்றிடத்தை படிப்படியாக நிரப்புமாறு இராணுவ உயர் பீடத்திற்கு பிரேமதாசா கட்டளையிட்டிருப்பதை ஹமீது அவர்கள் மூலமாகப் பின்னர் அறிந்தோம். கிழக்கு மாவட்டங்களான திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறையில் முதலிலும், வடபகுதியில் பின்னரும் முழுக் கட்டுப்பாட்டை நிறுவுமாறு படையினருக்கு அவர் பணிப்புரை வழங்கியிருந்தார். இரண்டாவது ஈழப் போரைத் தவிர்க்க முடியாது என்று உணர்ந்த பிரேமதாசா, அதற்காகத் தமது ஆயுதப் படைகளைத் தயாராக்கினார்.

  • கருத்துக்கள உறவுகள்

கோசான் சொல்லும் டெய்லர் கதை நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன்.அந்த பிரச்சனையுடனே சண்டை பெரிதாக தொடங்கி விட்டது.இந்த சண்டையை புலிகள் வேண்டுமேன்றே தொடங்க வேண்டுமென்பதற்காக தொடங்கினார்கள்.இந்த சம்பவம் ஆரம்பிக்க முன்னர் மட்டு மாவட்டத்தின் தளபதி றீகன் அண்ணா வன்னி சென்று வந்திருந்தார்.அவர் வந்தவுடன் புலிகள் இன்னும் தீவிரமாக பயிற்சியை தொடங்கி இருந்தார்கள்.அவர் 2,3 நாட்களில் இந்த டெய்லர் சம்பவத்தை காரணம் காட்டி சண்டை தொடங்கப்பட்டது.

கோசான் சொல்வது மாதிரி புலிகள் ஒன்றும் முகாமை கைப்பற்றி இருக்கவில்லை.எல்லாத்தையும் விட்டுட்டு காட்டுக்கும்,வாகரைக்கும் தான் ஓடினார்கள்.அந்தப் போராளிகள் வன்னியில் இருந்து பானு அண்ணா தலைமையில் போராளிகள் தங்களுக்கு உதவிக்கு வருவார்கள் என்றே சொன்னார்கள்.ஆனால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை.ஆனால் சண்டை தொடங்கி 2,3 நாட்களில் புலிகளுக்கு பெரிதாக இழப்பில்லாமல் பின் வாங்கிக் கொண்டார்கள்.இது தான் தலைமையின் திட்டமாக இருக்கும்.இந்த சம்பவம் நடந்து 2,3 மாதங்களிலே றீகன் அண்ணா கொல்லப்பட்டார்.

ஹமீத் மீதான தாக்குதல் எல்லாம் அதற்கு முதலே தொடங்கி விட்டது.பொறுத்த புலிகளால் கடைசியாக தொடங்கப்பட்டது தான் இத் தாக்குதல்.நான் சொல்வது சரியாக இருக்க வேண்டியதில்லை.எனக்கு ஞாபகத்தில் இருந்ததையே எழுதினேன்...இந்த கிழக்கு சம்பவங்கள் எல்லாம் தப்பிலி போன்றோருக்கு நன்றாகத் தெரிந்திருக்கும்.அவர் யாழை வாசித்துக் கொண்டு இருப்பார் அவர் வந்து இதை தெளிவு படுத்தினால் நல்லது

அக்காவிற்கு நேற்று லீவு போல கொஞ்சம் சந்தோசமாக இருந்துவிட்டு அந்த மயக்கத்தில் இப்படி எழுதினீர்களோ?
 
ரீகன் அண்ணா 1989 ஈப்பி யின் பிரதான கிழக்கு மாகான முகாமை தகர்த்து பாரிய அளவிலான ஆயுதங்களை கைப்பற்றி வண்டியில் கொண்டுவரும்போது.
பாரம் கூடி வண்டி தாண்டு 1989இல் வீரசாவு அடைந்துவிட்டார். 
அந்த முகம் தகர்போடுதான் இந்தியா தனது கூலிபடையையும் கூட்டிபோவது உத்தமம் என்று முடிவெடுத்தது. அதற்குமுதல்  பாரிய ஆயுதங்களை வழங்கி அவர்களை பலபடுத்தி வந்தது. அவர்கள் எல்லாவற்றையும் டம் பண்ணிக்கொண்டு திரிந்தார்கள் பின்பு புலிகள் எல்லாவற்றையும் கிண்டி எடுத்தார்கள். 

நான் பதிந்ததற்கு முந்தைய பந்திகள் இப்படி உள்ளன. புலிகள் வலியச் சண்டையைத் தொடங்கினார்கள் என்பதைவிட அப்படியான நிலையைச் சிங்களப் படைகள் தோற்றுவித்தன என்று சொல்லலாம். இதற்கு அடிப்படையான அரசியல் காரணங்களும் சொல்லப்பட்டிருக்கு.

.... பல சம்பவங்கள், குறிப்பாக கிழக்கில் நிகழ்ந்தன. போர்நிறுத்த உடன்படிக்கையை அவை மீறின; பொறுமையைக் கைவிடும் அளவுக்கு விடுதலைப் புலிகளைச் சீண்டின.

கிழக்கு மாவட்டங்களில் உள்ள இராணுவத் தளங்களுக்கும் காவல் நிலையங்களுக்கும் பலம் ஊட்டும் பொருட்டு 1990 மே மாத இறுதியில் புதிய படையணிகளும் கூடுதலான காவல்துறையினரும், அங்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள். நகரங்களிலும் பட்டினங்களிலும் படைகளின் காவல் உலாக்கள் அதிகரிக்க, சிங்கள ஆயுதப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே முறுகல் நிலை கூர்மை அடைந்தது. எமது போராளிகளை இராணுவத்தினர் துன்புறுத்தும் காரமான ஆத்திரமூட்டும் சம்பவங்கள் பல இடம்பெற்றன. மட்டக்களப்பு இராணுவ முகாமுக்கு அருகே ஒரு சம்பவம் நடந்தது. இரண்டு மூத்த புலிப் போராளிகளின் ஆயுதங்களைப் பறித்தெடுத்த இராணுவத்தினர், பல மணிநேரம் தார் வீதியில், உச்சி வெய்யிலில் முழந்தாளிட்டு நிற்க அவர்களை நிர்ப்பந்தித்தார்கள். பெருந்திரளான மக்கள் முன்னிலையில் இது நடந்தது, அவமானம் தாங்காத ஒரு போராளி தனது சயனைட் குப்பியைக் கடித்து அந்த இடத்தில் மரணத்தைத் தழுவினார். அடுத்த போராளி மயங்கி விழும் வரை, இராணுவத்தினர் அவரைத் தாக்கியிருக்கின்றார்கள். இத்தகைய கொடுமைகளும் சித்திரவதைகளும் அதிகரிக்க, புலிகளை வேண்டுமென்றே சீண்டி மோதச் செய்வதற்கு சிறீலங்கா அரச படைகள் முயல்வதை, புலித் தலைமை உணர்ந்தது. பாலா அந்தத் தருணத்தில் கொழும்பில் இருந்தார். அரச படைகளைக் கட்டுப்படுத்துமாறு அரசுத் தலைவரிடம் வேண்டுகோள் விடுத்தார். ஆனால், பலன் எதுவும் கிட்டவில்லை. இந்தியப் படைகள் விட்டுச் சென்ற வெற்றிடத்தை படிப்படியாக நிரப்புமாறு இராணுவ உயர் பீடத்திற்கு பிரேமதாசா கட்டளையிட்டிருப்பதை ஹமீது அவர்கள் மூலமாகப் பின்னர் அறிந்தோம். கிழக்கு மாவட்டங்களான திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறையில் முதலிலும், வடபகுதியில் பின்னரும் முழுக் கட்டுப்பாட்டை நிறுவுமாறு படையினருக்கு அவர் பணிப்புரை வழங்கியிருந்தார். இரண்டாவது ஈழப் போரைத் தவிர்க்க முடியாது என்று உணர்ந்த பிரேமதாசா, அதற்காகத் தமது ஆயுதப் படைகளைத் தயாராக்கினார்.

இராணுவத்திற்கு பாதுகாப்பு அமைச்சே கொம்பு சீவி விட்டுகொண்டிருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கனும் மருதர் அண்ணே றீகன் அண்ணா வீரச்சாவடைந்தது.1990ல் இலங்கை இராணுவத்துடனான சண்டையின் போது.ரதி சொல்வது சரியான தகவலே

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கனும் மருதர் அண்ணே றீகன் அண்ணா வீரச்சாவடைந்தது.1990ல் இலங்கை இராணுவத்துடனான சண்டையின் போது.ரதி சொல்வது சரியான தகவலே

இல்லை எனக்கு நல்ல ஞபகமாக இருக்கிறது..... அவர் கடலில் வண்டி மூழ்கித்தான் வீரமரணம் அடைந்ததாக.
கரையில் இருந்து ஆயுதங்களை எறியும்படி சொல்லியும் அவர்கள் கேட்டிருக்கவில்லை. எப்படியாவது கரைச் சேர்க்கலாம் என்று போராடி இறுதியில் அவர்களும் வீரமரணம் அடைந்தார்கள்.
 
உங்களுக்கு அது ஞாபகத்தில் இருந்தால் ..... 
அதில் வீரச்சாவை அடைந்த லெப்டினன் கேணல்  யார் என்று சொல்ல முடியுமா? 
 
அது ரீகன் என்பது எனக்கு நல்ல ஞாபகமாக இருக்கிறது. 
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது திருமலைக்கடலில் நடந்த சம்பவம் அதில் லெ.கேணல் தரத்தில் போராளிகள் எவரும் வீரச்சாவடையவில்லை.மேஜர் தரத்தில் மூண்று போராளிகள் வீரச்சாவடைந்திருந்தனர்.

  • கருத்துக்கள உறவுகள்

அக்காவிற்கு நேற்று லீவு போல கொஞ்சம் சந்தோசமாக இருந்துவிட்டு அந்த மயக்கத்தில் இப்படி எழுதினீர்களோ?

ரீகன் அண்ணா 1989 ஈப்பி யின் பிரதான கிழக்கு மாகான முகாமை தகர்த்து பாரிய அளவிலான ஆயுதங்களை கைப்பற்றி வண்டியில் கொண்டுவரும்போது.

பாரம் கூடி வண்டி தாண்டு 1989இல் வீரசாவு அடைந்துவிட்டார்.

அந்த முகம் தகர்போடுதான் இந்தியா தனது கூலிபடையையும் கூட்டிபோவது உத்தமம் என்று முடிவெடுத்தது. அதற்குமுதல் பாரிய ஆயுதங்களை வழங்கி அவர்களை பலபடுத்தி வந்தது. அவர்கள் எல்லாவற்றையும் டம் பண்ணிக்கொண்டு திரிந்தார்கள் பின்பு புலிகள் எல்லாவற்றையும் கிண்டி எடுத்தார்கள்.

இராணுவத்திற்கு பாதுகாப்பு அமைச்சே கொம்பு சீவி விட்டுகொண்டிருந்தது.

மருதங்கேணி,90ம் ஆண்டு றீகன் அண்ணாவின் முகாம் மட்டகளப்பு முகத்துவாரத்தில் இருந்தது.அதற்கு அண்மையில் தான் நாங்கள் இருந்தோம்.அவரைத் நல்லாத் தெரியும் என்ற படியால் இதில் எழுதினேன்.அநியாய சாவு இவரோடது.புலிகள் த்ப்பிப் போது இவரும் தப்பி இருந்தார்.2,3 மாதங்களுக்குப் பின்னர் மோட்டார் சைக்கிளிலில் பயணிக்கும் போது காட்டிக் கொடுக்கப்பட்டு[வெருகல் அருகில் சரியாகத் தெரியாது]சிங்க்ள ஆமியால் சுடப்பட்டு மரணமடைந்தார்.தீலிபனுக்கு அடுத்ததாக எங்களை பாதித்தது இவரது மரணம் தான்...இவர் மட்டும் தான் இயக்கத்தில் இருந்தார் ஆனால் இவரது குடும்பத்தையே அழித்தார்கள்.இணையத்தில் இவரைப் பற்றி இருக்குது வேண்டுமானால் தேடிப் பாருங்கள்.அடுத்து அடுத்தவரை நக்கலடிக்க முன்னர் யோசித்து நக்கல்டியுங்கள்

http://www.eelamview.com/2013/07/15/editara-attack/

16.07.1990 அன்று மட்டக்களப்பு மாவட்டம் பாலையடிவெட்டைப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிய மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட துணைத்தளபதி லெப்.கேணல் றீகன் அவர்களின் 23 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களில் சிறிலங்கா, இந்தியப் படைகளிற்கு எதிராக பல்வேறு வெற்றிகரத் தாக்குதல்களை வழி நடாத்தியவர் தளபதி லெப்.கேணல் றீகன் அவர்கள்.இவரின் தாக்குதல்களினால் பல நூறு சிறிலங்கா, இந்தியப் படையினர் உயிரிழந்தும், காயமடைந்தும் களமுனைகளிலிருந்து அகற்றப்பட்டிருந்தனர்.தென் தமிழீழத்தின் புகழ் பூத்த தளபதிகளான கேணல் ரமேஸ், கேணல் ரமணன், கேணல் ராம் ஆகியோர் லெப்.கேணல் றீகன் அவர்களின் படையணியில் இருந்து அவரினால் வளர்த்தெடுக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.16.07.1990 அன்று பாலையடி வெட்டைப்பகுதியில் எதிர்பாராதவிதமாக சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற மோதலில் லெப்.கேணல் தளபதி றீகன் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்

ரதி மன்னிக்கவும் !
தவறான எழுத்திற்கு.
நந்தனும் இப்படித்தான் சொல்கிறார். நீங்கள் இணைப்பை வேறு இணைத்திருக்கிறீர்கள்.
 
இப்போதும் கூட எனது மனம் ஏனோ இல்லை என்று அடம் பிடித்துக்கொண்டுதான் இருக்கிறது.
எதோ ஒரு விதமாக 100 வீதமாக நம்புகிறேன் ரீகன் திருமலை தாக்குதல் நடத்திவிட்டு திரும்புகையில் இறந்ததாக.
அந்த தாக்குதல் ரீகன் தலைமையில்தான் நடந்தது. 
வடக்கு கிழக்கு முதலமைச்சரின் அலரி மாளிகை போல் அதை இந்திய இராணுவம் கருதி பெருப்பித்தார்கள். முதாலவது அடியே ஒரு நெத்தியடியாக இருக்க வேண்டும் என்று சுற்றி இராணுவம் இருக்கும்போதே அடித்தார்கள். பெருமளவில் ஆயுதங்கள் கொண்டுவரும்போது தான் அந்த விபத்து நடந்தது.
அதில் ஒரு முக்கிய தளபதி வீரமரணம் அடைந்தார். அவர் யார் என்று தேடி கொண்டு இருக்கிறேன். 
 
அதில் இறந்தவர்களின் பெயரை கேட்பதற்கு திருமலை நண்பர் ஒருவருக்கு வாய்ஸ் மெயில் விட்டிருக்கு அவர் திருப்பி எடுத்தால்தான் தெரியும்.
  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திரியை வாசித்துக்கொனண்டிருக்கும்போது, 2009 இல் நடந்த இறுதிக்கட்ட போர் பற்றியும் அறியவேண்டும் போல இருந்தது. அதிலும் குறிப்பாக புலிகளை மீண்டும் எழும்ப இயலாதபடி முடக்கிய ஆனந்தபுரச் சண்டை பற்றி அறிய யோசித்தேன்.

ஜெயராஜ் எழுதிய கட்டுரையை வாசிக்கக் கிடைத்தது.

வெறும் 1500 போரளிகள் 50,000 பேர்கொண்ட பலத்த ஆயுதம் தரித்த சிங்களத்தின் விசேட படையணிகளால் சூழப்பட்டு ஒரு சிறிய பெட்டிவடிவ பகுதிக்குள் அடைக்கப்பட்டு சிங்கள ராணுவம் தன்வசம் வைத்திருந்த சகலவிதமான கனரக ஆயுதங்களையும் பாவித்து நடத்திய அழித்தொழிப்புச் சமர் என்பது விளங்கியது.

போதிய உணவில்லாமல், தாக்குவதற்குப் போதிய ஆயுதங்கள் இல்லாமல் வெறும் மனத் தைரியத்தை மட்டும் நம்பியே தயாரிப்பில் ஈடுபட்டிருந்த போராளிகளும் தளபதிகளும், வஞ்சனை ஒன்றின்மூலம் சிங்கள ராணுவத்திற்குக் காட்டிக் கொடுக்கப்பட்டு, பிரபாகரன் அப்பகுதிக்குள் உள்ளார் என்று ஊகித்த சிங்கள ராணுவம், ஹெலிகள், தாக்குதல் விமானங்கள், பல்குழல் எறிகணைகள், வெள்ளைப் பொசுபரஸு எனப்படும் எரிக்கும் ரசாயனம் கொண்ட எறிகணைகள் , இவை எல்லாவற்றிற்கும் மேலாக 5 டிவிசன்கள் அடங்கிய சிங்களத்தின் விடசேட படையணிகளின் இடையறாத மூர்க்கத்தனமான தாக்குதல்கள் என்று அப்பகுதிக்குள் அன்று அகப்பட்ட அனைத்துப் புலிகளையும் கொல்ல சிங்களம் தன்னாலான முழுவதையும் செய்து இறுதியில் தமிழினத்தின் ஒப்பற்ற தளபதிகளான தீபன், விதுஷா, துர்க்கா, பாணு என்று 625 பேரைக் கொன்று குவித்ததென்றும், 20 பேரை உயிருடன் பிடித்ததென்றும் வாசித்தேன். அடுத்தடுத்து இரு தினங்களில் தனது உடலில் காயம்பட்டிருந்த தீபனை, முற்றுகையை ஒரு வழியால் உடைத்துக்கொண்டு உள்நுழைந்திருந்த பாணுவின் அணி வெளியே கொண்டுவர முயற்சித்தபோது, 'எனது போராளிகள் வெளியே வராமால், நான் வெளியே வரமாட்டேன், அவர்களுடன் இறுதிவரை இருந்து சாகிறேன்' என்று கூறிச் சாகும்வரை போரிட்டே மடிந்த தீபன் பற்றியும், அவரைப் பற்றி அன்று போர்க்களத்திலிருந்த சிங்களத் தளபதிகளே மெச்சிக்கொண்டனர் என்பதும் நான் அறியாதவை.

விதுஷா தனது அணிக்கு மருத்துவ உதவிகளும், ஆயுதங்களும் அனுப்பும்படி பொட்டருக்கு அனுப்பிய தொடர்ச்சியான தகவல்களும், அதற்குப் பதிலளித்த பொட்டர், 'நான் எதுவுமே செய்ய முடியவில்லை, நாங்கள் அனுப்பிய அனைத்து அணிகளும் அழிக்கப்பட்டு விட்டனவே' என்று தொலைபேசியில் அழுததும் கூட எழுதப்பட்டிருக்கிறது.

வாசித்தபின்னர் ஏண்டா வாசித்தோம் என்றாகிவிட்டது.

உணவில்லாமல், ஆயுதங்களில்லாமல், மருந்தில்லாமல் அரை உயிராக இருந்த போராளிகளால், சகலவிதமான வசதிகளும், ஆயுதங்களும், வான், கடல் தரை வழி அதீத தாக்குதல் திறணும், 50,000 பேர்கொண்ட பெருத்த ராணுவத்தைச் சமாளிக்கமுடியாமல்ப் போனது வியப்பில்லை. இவ்வளவு காலமும் அவர்கள் தாக்குப்பிடித்ததே பெரியவிடயம் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

இப்படியான மனிதர்கள் பிறந்த இனத்தில் பிறந்ததற்காகப் பெருமைப்படுகிறேன். அதேவேளை எம்மால் அவர்களைக் காப்பாற்ற முடியவில்லையே என்று எண்ணும்போது மிகவும் வேதனையாக இருக்கிறது. அவர்களது தியாகங்களுக்கு எப்போது நீதிகிடைக்கும் ///

  • கருத்துக்கள உறவுகள்

6/2/90 திருமலை கடல் விபத்தில் மேஜர் கமல்,மேஜர் சுரேஸ்,மேஜர் மதி உட்பட 21 போராளிகள் வீரச்சாவடைந்தனர்.

  • கருத்துக்கள உறவுகள்

6/2/90 திருமலை கடல் விபத்தில் மேஜர் கமல்,மேஜர் சுரேஸ்,மேஜர் மதி உட்பட 21 போராளிகள் வீரச்சாவடைந்தனர்.

நன்றி தகவலுக்கு!
ஏன் ரீகன் அவர்களை அதுக்குள் நுழைத்தேன் என்பது தெரியவில்லை.
அவர் அதில் வீரச்சாவு அடைந்ததாக்தான் நான் எண்ணி கொண்டு இருந்தேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.