Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணாநிதியின் உண்ணாவிரத சமயத்தில் நடந்தது என்ன?: கோத்தபாய வெளியிடும் தகவல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதியின் உண்ணாவிரத சமயத்தில் நடந்தது என்ன?: கோத்தபாய வெளியிடும் தகவல்!

hgtyhj.jpg

யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்த இராணுவத்தினர்தான் முன்னைய ஆட்சிக்காலங்களிலும் பணியாற்றினார்கள். ஆனால் அவர்களால் சிறப்பாக செயற்பட முடியவில்லை. சரத் பொன்சேகா கூட 38 வருட சேவையை நிறைவு செய்தவர்தான். ஆனால் அவராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. மகிந்த ராஜபக்ச பதவிக்கு வந்ததன் பின்னர்தான் அனைத்தும் சிறப்பாக நடந்தன என கூறியுள்ளார் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச.

இலங்கை – இந்­திய சமு­தா­யப்பே­ர­வையின் ஏற்­பாட்டில் பாது­காப்புச் செய­லா­ள­ருக்கு ஹோட்டல் ஹில்­டனில் அளிக்­கப்­பட்ட விருந்­து­ப­சார வைப­வத்தில் கலந்துகொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இதனை தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

“ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ச இந்த நாட்டின் தலை­மைத்­து­வத்தை 2005ஆம் ஆண்டு ஏற்­கும்­போது நாடு மிகுந்த நெருக்­க­டி­யினுள் காணப்­பட்­டது. மூன்று தசாப்­த­மாக தொட­ரப்­பட்ட யுத்­தத்­தினால் பெரும் இன்­னல்கள் நடை­பெற்­றுக்­கொண்­டி­ருந்­தன. அதனால் இந்த நாட்டின் அபி­வி­ருத்தி மற்றும் பொரு­ளா­தாரம் வெகு­வாகப் பாதிக்­கப்­பட்­ட­வண்­ண­மி­ருந்­தது. ஆகவே இவற்றை கவ­னத்தில் கொண்ட ஜனா­தி­பதி அதற்கு முக்­கி­யத்­துவம் அளித்தார். பயங்­க­ர­வா­தத்தை முடிவுக் கொண்­டு­வந்து சமா­தானத்தை நிலை­நாட்ட வேண்டும் என உறு­தி­பூண்டார்.

கடந்த கால ஜனா­தி­பதிகளும் இரா­ணுவ நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டனர். சமா­தா­னத்­திற்குச் சென்­றனர். பேச்­சு­வார்த்­தை­களை மேற்­கொண்­டனர். இந்­தியா உட்­பட பல்­வேறு நாடுகள் மத்­தி­யஸ்தம் வகித்­தன. ஆனால் அந்த முயற்­சிகள் எவை­யுமே வெற்­றி­ய­ளிக்­க­வில்லை. அந்­நி­லையில் வேறு­பட்டதொரு சவாலை ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ச எதிர்­கொண்டார்.

அந்த காலத்தில் இரண்டு நாடு­க­ளாக எமது நாடு பிள­வு­பட்­டுக்­கா­ணப்­பட்­டது. மன்னார், வுனியா, வெலி­யோயா எல்லை, முக­மாலை எல்லை ஆகிய பகு­தி­களில் இரண்டு பதுங்­கு­கு­ழிகள் எல்­லைகள் காணப்­பட்­டன. இவ்­வா­றான நிலை­மையை முடி­வுக்கு கொண்­டு­வ­ரு­வதற்­காக நாம் பல்­வேறு பிரச்­சி­னை­களை எதிர்­கொண்டோம். ஜனா­தி­பதி நாட்டின் தலைவர் என்ற வகையில் சமா­தா­னத்தை நிலை­நாட்ட வேண்டும் என்­பதில் உறு­தி­யுடன் இருந்தார். முன்­னைய தலை­வர்­களால் நிறை­வுக்கு கொண்­டு­வர முடி­யாத பிரச்­சி­னையை ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ச அதே உத்­தி­யோ­கத்­தர்­க­ளையும், இரா­ணு­வத்­தி­ன­ரையும் பயன்­ப­டுத்தி முடி­வுக்­கொண்­டு­வந்தார். குறிப்­பாக இரா­ணு­வத்தில் பலர் 35வரு­டங்­க­ளுக்கும் மேலாக பணி­பு­ரிந்­த­வர்­க­ளாக இருந்­தார்கள். ஆனால் அவர்­களால் ஆக்­க­பூர்­வ­மாக செயற்­ப­ட­மு­டி­ய­வில்லை. எத­னையும் சாதிக்க முடி­ய­வில்லை.

சரத் பொன்­சேகா கூட 38வருட சேவைக்­கா­லத்தை நிறைவு செய்­தி­ருந்தார். அவரால் கூட வெற்­றி­க­ர­மாக எதனையும் செய்ய முடியவில்லை. நாட்டின் தலை­வ­ராக ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ச பத­வி­யேற்­றதன் கார­ணத்தால் அவற்றை செவ்­வனே செய்­ய­மு­டிந்­தது. தலை­மைத்­துவம் என்­பது மிகவும் முக்­கி­ய­மா­ன­தொன்­றாகும். ஜனா­தி­பதி நாட்டின் தலை­மைத்­து­வத்தை ஏற்று இரா­ணுவம் உட்­பட அனைத்து விட­யங்­க­ளிலும் சிறப்­பான முடி­வு­களை எடுத்தார். அத்­துடன் எமது அயல் நாடான இந்­தியா மூன்று தசாப்த கால யுத்­தத்தை முடி­வுக்கு கொண்டு வரு­வ­தற்கு பாரிய உதவி புரிந்­தது. இந்­தி­யா­வுடன் எமது நாடு சாதா­ரண இரா­ஜ­தந்­திர உற­வு­களைக் கடந்து புதிய சிந்­த­னை­களும் உரு­வெ­டுத்­தன. ஜனா­தி­ப­தியின் ஆலோ­ச­கர்­க­ளாக செயற்­பட்ட லலித்­வீ­ர­துங்க மற்றும் பஷில் ராஜபக்ச ஆகி­யோரும் இந்­தி­யாவின் பாது­காப்­புத்­துறை சார்பில் நார­யணன், சிவ்­சங்கர் மேனன், வி.கே.சிங் ஆகியோர் குறிப்­பிட்ட கால இடை­வெளியில் சந்­தித்து எமது இலக்­குகள் தொடர்பில் விரி­வாக கலந்­து­ரை­யா­டினோம். குறிப்­பாக கரு­ணா­நிதி உண்­ணா­வி­ரதம் இருந்­த­போது சிவ்­சங்கர் மேனன் எனது கைத்­தொ­லை­பே­சிக்கு தொடர்பை ஏற்­ப­டுத்தி நாம் ஜனா­தி­ப­தியை சந்­தித்து இந்த நெருக்­கடி நிலைமை தொடர்­பாக கலந்­து­ரை­யா­ட­வேண்டும் எனக்­கோ­ரினார்.

அந்தச் ­சந்­தர்ப்­பத்தில் நான் ஜனா­தி­ப­தி­யிடம் விட­யத்தைக் கூறவும் அவர் மறு­தினம் காலை உணவில் சந்­திக்க முடியும் எனக் கூறவும் அவர் மறு­தி­னமே இலங்­கைக்கு விஜயம் செய்தார். ஜனா­தி­ப­தி­யுடன் சந்­தித்து கலந்­து­ரை­யா­டினார்.

அவ்­வ­ளவு தூரம் இந்­தி­யா­வுடன் நெருக்­க­மாக இருந்­த­துடன் உட­ன­டி­யாக ஒவ்­வொரு பிரச்­சி­னைக்கும் தீர்­வு­களை எடுத்து வந்தோம். அவ்­வாறான செயற்­பா­டுகள் மூலமே இரா­ணு­வத்­தினர் பயங்­க­ர­வாதத்­திற்கு முடிவை வைத்து சமா­தா­னத்தை நிலை­நாட்­டினர்.

இருந்­த­போதும் பங்­க­ர­வாதத்­திற்கு பின்­ன­ரான காலத்தில் பல்­வேறு சவால்­க­ளையும் நெருக்­க­டி­க­ளுக்கும் முகங்­கொ­டுக்­க­வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டது. யுத்தம் முடி­வ­டைந்து இரண்­டரை வரு­டங்கள் நிறைவில் 70சத­வீ­த­மான பரப்பில் கண்­ணி­வெ­டிக்கள் அகற்­ற­ப்­பட்டு 3இலட்சம் மக்கள் மீள்­கு­டி­யேற்­றப்­பட்­டுள்­ளனர். 12 ஆயிரத்திற்கும் அதிகமான விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு புனர்­வாழ்வு அளித்து சமூ­கத்­துடன் இணைக்­கப்­பட்­டுள்­ளனர். இன்று வடக்கில் சமா­தான நிலை­மைகள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்ளன. அபி­வி­ருத்­திச்­செ­யற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. அவ்­வா­றான நிலை­மையில் பலர் அர­சாங்­கத்தை விமர்­சனம் செய்­கின்­றார்கள். அவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். மூன்று தசாப்த காலத்தின் பின்னர் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதுஎன்பது இலகுவானதொரு இலக்குடைய விடயமல்ல.

படிப்படியாக அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை மேற்கொள்வோம். இந்தச் செயற்பாடுகளை தனியே அரசாங்கமே மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணப்பாடு தவறானது. சிவில் சமூகத்தினர் உட்பட அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து மேற்கொள்ள வேண்டும் ஐந்து வருட காலத்திற்கு பின்னர் சிறந்த நிலைமையொன்று காணப்படுகின்றது. குறிப்பிட்ட காலப்பகுதியில் பல்வேறு பிரச்சினைகளை ஒன்றன் பின் ஒன்றாக தீர்த்துக்கொண்டே வருகின்றோம். சமாதானத்தை நிலைநாட்டுவதே எமது பிரதான நோக்கமாகும் என்பதுடன் சமாதானமான இலங்கையே எம் அனைவரதும் இலக்கு” என்றார்.

http://pagetamil.com/?p=17738

  • கருத்துக்கள உறவுகள்

ஆகப் பூனை வெளியே வந்துவிட்டது.

 

தாம் எதையுமே செய்யவில்லை என்று இந்தியா கற்பூரத்தை அணைத்துச் சத்தியம் செய்துகொண்டிருக்க, கோத்தாபய இந்தியாதான் எல்லாவற்றையுமே செய்தது என்று சொல்கிறான்.

 

இந்த மூவரணி பற்றி ஏற்கனவே பலமுறை செய்திகள் வந்திருந்தன. பலர் இந்த கூட்டுப் பற்றி எழுதியுமிருந்தனர். இப்போதுதான் வெளிப்படையாக கோத்தா இந்த அணிபற்றிச் சொல்கிறான்.

 

156,000 அப்பாவிகளது ரத்தக்கறை இந்த இரு மலையாளிகளின் கைய்யிலும், பிரனாப், சிங் ஆகிய வட இந்தியர்களின் கைய்யிலும் இன்னும் ஈரமாக இருக்கிறது.

 

சோனியா எனும் ஒரு அரக்கியின் பழிவாங்கும் நாடகத்தின் முக்கிய கதாநாயகர்களான இந்த கூட்டணி தாம் செய்த அக்கிரமங்களுக்காக ஒருநாள் வருந்தும்.

 

மனித குலத்திற்கெதிரான அக்கிரமங்களைச் செய்துவிட்டு அகிம்ஸா வேஷம் போடும் இந்திய மிருகங்களின் சாயம் வெளுக்கும்.

 

எமது மக்களின் அழிவுக்கு இந்தியா பதில் சொல்லும். அது சீனா மூலமாகவோ அல்லது வேறு ஒரு வழியிலோ நடக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யார்....எவர்...என்ன செய்தார்கள்....எப்படி செய்தார்கள்...மூலகாரணிகள் யார் என்ன நடந்தது எல்லாம் ஒவ்வொரு ஈழத்தமிழனுக்கும் அக்குவேறு ஆணிவேறாகத் தெரியும். மற்றவர்கள் சொல்லி தெரியவேண்டிய அவசியம் இனிவரும் காலங்களுக்கு முக்கியமில்லை.

கிணறு வெட்ட பூதம் வந்த கதை தான் இந்தியாவின் செயல்பாடு , சரியான நேரம் பார்த்து சீனா ஆப்பு செருகிட்டான் , இதனை இன்னும் உணரமுடியாத இந்தியா ,

எங்களுக்கு செய்த பாரிய துரோகம் சீனாவின் மூலம் அவர்களுக்கு ஈடு செயப்படும் .

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

பண்டைக்கால முதலே சீன தமிழ் உறவு நெருக்கமான ஒரு உறவைக் கொண்டுள்ளதை சரித்திரக் கதைகளும் கொண்டுள்ளன. அதன் ஈரம் காயாது இன்றும் தமிழ் சீனாவில் அந்தநாட்டு மக்களாலேயே வளர்க்கப்படுவதைப் பல்வேறு வழிகளிலும் அறிய முடிகிறது. தென்கிழக்காசிய மொழிகளில் தமிழைப்போல் வேறெந்த மொழியும் சீனாவில் இடம்பிடித்துள்ளதாகவும் தெரியவில்லை. ஆகவே சீனர்களால் தமிழர்களுக்கும் கேடுவரும், ஆபத்துவரும் என எண்ணுவதில் அர்த்தமில்லை என்றே தெரிகிறது.   

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.