Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆஸ்பத்திரியில் கொல்லப்பட்டோர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

.

ஆஸ்பத்திரியில் கொல்லப்பட்டோர்

நினைவுதினம் இன்று

யாழ்ப்பாணம், ஒக்.21

யாழ் போதனா வைத்தியசாலையில் கடமையின் போது படுகொலை செய்யப்பட்ட 21ஊழியர்களினது 19ஆவது நினைவுதினம் இன்றாகும்.

1987ஆம் ஆண்டு ஒக்ரோபர் 21ஆம் திகதியன்று இந்திய அமைதிப்படையினரால் கடமையில் இருந்த டாக்டர்கள், தாதியர்கள், சிற்×ழியர்கள் உட்பட 21 ஊழியர்கள் கண்மூடித்தனமாக சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இன்று காலை 10மணிக்கு அவர்களின் நினைவாக திருவுருவப்படங்களுக்கு 21ஈகச் சுடரரேற்றி மலர்மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு, நினைவுக் கூட்டமும் நடைபெறும்.

யாழ். போதனா வைத்தியசாலையில் நடை பெறும் மேற்படி நிகழ்வுகளின் முடிவில் வைத்தியசாலை வளாகத்தில் அமைந்திருக்கும், இந்து, கிறிஸ்தவ ஆலயங்களில் ஆத்ம சாந்திப் பூசைகள் நடைபெறும்.

உயிரிழந்தவர்களின் பெற்றோர், உறவினர்களும் இந்நிகழ்வில் பங்குகொண்டு அஞ்சலி செலுத்தவுள்ளனர். (11578)நன்றி உதயன்

இந்திய அமைதிப்படை பிசாசுகளால் கொலப்பட்ட பொதுமக்களுக்கு என் கண்ணீர் அஞ்சலிகல் இதற்கு இந்தியா தமிழீழத்திடம் மன்னிப்பு கெட்க்கும் நால் வெகு விரைவில் வரும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உயிர் நீத்த அனைவருக்கும் என் இதய அஞ்சலிகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளே இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது கொல்லப்பட்ட இடம்.

  • கருத்துக்கள உறவுகள்

உயிர் நீத்த அனைவருக்கும் என் இதய அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான். வைத்தியசாலை என்பது சேவையில் இயங்குவது என்பதை துளியும் மதிக்கமல், பலரைக் கொன்றொழித்த, இந்திய அமைதிப் படை என்று சொல்லிக் கொண்டு வந்தவர்கள் மீது பலருக்கு வெறுப்பேற்படுத்திய, கோபத்தை ஏற்படுத்திய சம்பவங்களில் அதுவும் ஒன்று.

அழிவுகளை நடத்தியவர்கள் அவமானப்பட்டே போனார்கள். ஒரு ராஐPவைப் பற்றி பேசுபவர்கள் இதைப்பற்றியும் பேசுவார்களா?

ஈழத்திலிருந்து

ஐhனா

அமைதி காக்கிறதெண்டு சொல்லிக்கொண்டு பொறுக்கியெடுத்த வெறிநாய்களையே அமைதிப்படையென்ட பெயரில எங்கடை மண்ணுக்கு அனுப்பிவைச்சவையள்? கேக்க ஆக்களில்லையெண்ட தைரியமே? எங்கடை தாய்மண்ணிலை வைச்சு எங்கடை பிள்ளைகளின்ரை உயிரை அநியாயமா பலி எடுத்ததுக்கு ஆயிரம் ரா.....வை கொண்டாலும் எங்களுக்குப் பாவமில்லையெண:டுதான் நான் சொல்லுவன். இப்ப போதாதெண்டு துலையிலை நிண்டு வேடிக்கை பாத்துக்கொண்டு நாசவேலைகளைத் தூண்டிவிட்டுக் கொண்டுமெல்லே இருக்கிறானுகள். பொறணையப்பு உவையளுக்கு சரியாக் கிடைக்கும்.

செத்த பிள்ளையளை நினைச்சு என்ரை அஞ்சலியையும் நான் சொல்லுறன் தம்பி.

21/10/1987 அன்று நடைபெற்ற பாரதத்தின் யழ் வைத்தியசாலை கொலைகள்

hospital5.jpg

அன்று தீபாவளி தினம் .இத் தினம் தமிழ் மக்களின் கறுப்பு நாளாக வரலாற்றில் குறிக்கபடவேண்டிய ஓரு நாள்.பாரதம் தன் கொலை வெறிகண்டு வெட்கபடவேண்டிய ஒரு நாள்.அவ்நாட்களில் யாழ் மண்ணில் வைத்தியசாலைகள் இயங்காத ஒரு கரும் காலப்பகுதி.போக்குவரத்து வசதிகள் முடக்கப்பட்டு இருந்த காலம்.அக்காலகட்டத்தில் யாழ் அப்பாவி மக்களுக்கு தன் சேவையை வழங்கிகொண்டுருந்தன்ர் யாழ் வைத்தியசாலை வைதியரும் ஊழியரும்.இச் சேவை அப்பாவி மக்களின் வைத்தியதெவையை ஓரளவாவது பூத்தி செய்தது.

இவ்வாறு 21/10/1987 வந்தது காடைத்தனமான ipkf இராணுவம் தன் கொலை வெறியை வைதியசாலையிலும் ஆரம்பித்தது சரமாரியான வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன x-ray அறையிலும்,வைத்தியரிகளின் ஓய்வு அறையிலும்,வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் தங்கும் விடுதிகளிலும் தாக்குதல் நடத்தப்பட்டதில் வைத்தியர்கள்,ஊழியர்கள்,நோயளி

எனக்கும் ஒரு நண்பியிருகிர்ரார். இந்த சம்பவத்தில், தன் இரு சகோதரர்களையும்( அவர்கள் அப்பொது, 10 வயதுக்கு உட்பட்டவர்கள்), தாயையும் பறி கொடுத்தவர். எல்லோருக்கும் என் இதய அஞ்சலிகள்.!

  • கருத்துக்கள உறவுகள்

தீபாவளிப் படுகொலை நினைவு கூரப்பட்டுள்ளது

1987 ஆம் ஆண்டு, இந்திய அமைதி காக்கும் படையினரால் யாழ்ப்பாண போதனா மருத்துவமனையில் தீபாவளித் தினத்தன்று - படுகொலை செய்யப்பட்ட 21 ஊழியர்களினது 19ஆவது நினைவுதினம் இன்று நினைவு கூரப்படுகின்றது.

1987ஆம் ஆண்டு ஒக்ரோபர் 21ஆம் திகதியன்று, இந்திய அமைதிப்படையினரால் கடமையில் இருந்த மருத்துவர்கள், தாதியர்கள், சிற்றூ×ழியர்கள் உட்பட 21 ஊழியர்கள் கண்மூடித்தனமாக சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இவர்களின் நினைவாக இவர்களது திருவுருவப்படங்களுக்கு 21 ஈகச் சுடர்கள் ஏற்றப்பட்டு, மலர்மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் நினைவுக் கூட்டமும் நடைபெற்றுள்ளது.

மேலும், இவர்களின் ஆத்ம சாந்திக்கான பூசை வழிபாடுகள், வைத்தியசாலை வளாகத்தில் அமைந்திருக்கும், இந்து, கிறிஸ்தவ ஆலயங்களில் ஆத்ம சாந்திப் பூசைகள் நடைபெற்றுள்ளது.

உயிரிழந்தவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் எனப் பெருமளவானோர் இந்த நிகழ்வில் பங்குகொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

-தமிழ் கனேடியன்

  • கருத்துக்கள உறவுகள்

தீபாவளி அன்று யாழ் போதான வைத்திய சாலையில் கொல்லப்பட்டவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி. அதே திபாவளி அன்று உரும்பிராயிலும் பலர் கொல்லப்பட்டனர். இணுவிலிலும் இந்தியா இந்து நாடு தீபாவளி என்றால் ஒன்றும் செய்யமாட்டார்கள் என நினைத்து கோவில்களில் அகதிகளாக இருந்த மக்களில் சிலர் (கிட்டத்தட்ட 40 பேர்) வீடுகளில் தீபம் ஏற்றச் சென்று அனியாயமாக இந்தியா இராணுவத்தினால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். இவர்களுக்கும் அஞ்சலி.

இந்தியா அமைதிப்படையினரால் படுகொலை செய்யப்பட்ட அனைவரையும் நினைவு கூர்ந்து அவர்களுக்கு எமது இதய அஞ்சலிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.