Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இது தேவையா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விளக்கம் கூடியவர் என்று எங்கே என்றாலும் கூறியிருக்கிறேனா?

பகிடிக்கு தான் சொன்னனான்... கோவிக்கிறிங்கள் போல இருக்கு...தவறாக புரியிற மாதிரி சொல்லியிருந்தால் மன்னிச்சுக்கொள்ளுங்கோ... :roll: :lol:

  • Replies 184
  • Views 17.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆதிவாசி நீங்கள் அடுக்கடுக்காய்பல கேள்விகள் வைத்திருக்கலாம். எந்த விடயமானாலும் கேள்விகள் கேட்காவிட்டால் தெளிவிருக்காது.

ஒரு பெண்ணின் பருவ மாற்றத்தை எடுத்து அளவளாவுவது என்பது பெண்களாகிய எங்களுக்கு பெரும் சங்கடத்தையும், வலியையும் தருகின்றது என்பதை முதலில் உணர்ந்து கொள்ளுங்கள்.

சாமத்தியச் சடங்கு என்பதைப்பற்றி பல காரணங்கள் கூறப்படுகின்றன. அதில் அதிகமானோர் திருமணத்திற்கு எனது மகள் தயார் என்பதை அறிவிக்கவே அச்சடங்கு உதயம் பெற்றதாகக் கூறுகின்றனர். காரணம் பண்டைய காலங்களில் உறவினர்களுக்குள் தமது மகளைத் திருமணம் செய்து கொடுக்கும் பொருட்டு தூர இடங்களில் வாழும் உறவினர்களுக்கு தமக்கு திருமணத்திற்குத் தயாரான பெண் இருக்கிறாள் என்பதை அறிவிப்பதற்காகவே இச்சடங்கு நடாத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

வேறு சிலர் வீட்டில் உள்ள வயதானவர்கள் அதாவது தாத்தா, பாட்டி போன்றோர் தம் பேரப்பிள்ளையின் திருமணத்தைப் பார்க்கும் வரை உயிருடன் இருக்கும் சந்தர்ப்பக்குறைவால் பேரமகளை கிட்டத்தட்ட திருமணக்கோல அலங்காரத்தில் பார்க்க ஆசைப்படுவதாலும் இச்சடங்கு நடாத்தப்படுகிறது என்று கூறப்பட்டாலும் இச்சடங்கின் நேரடிக்காரணத்தை நாகரீகம் கருதி மறைக்கும் பொருட்டு இக்காரணி உருவாக்கப்பட்டதாகக் கூறுகின்றனர். இதே வேளை விலைமாதர் கதையையும் கூட சிலர் என்னிடம் கூறியுள்ளனர். எது எப்படி ஆயினும் தற்காலத்தில் இது தேவையா?

சில பெண்பிள்ளைகளிடம் பேசிப் பார்த்தபோது அவர்கள் கூறிய காரணங்களாவன- பரிசுப் பொருட்கள் கிடைக்கின்ற படியாலும், சேலைகட்டி விதவித அலங்காரம் செய்வதாலும் அந்தப் பதின்ம வயதில் தங்களுக்கு அச்சடங்கின் மேல் விருப்பு இருந்ததாகவும் அதையே ஒரு வருடம் தாண்டிய பிற்பாடு சிந்திக்கின்ற வேளையில் வெட்கமும், வேதனையும் ஏற்படுவதாகவும் கூறுகின்றனர். அதே வேளை நான் அவர்களிடம் உங்களுக்கு ஏற்படும் இந்த சங்கடத்தை ஏன் நீங்கள் மற்றவர்களுக்கு புரிய வைக்க முயலவில்லை என்று கேட்டதற்கு அவர்கள் சொன்ன காரணம்....

இவற்றைப் பேச முற்பட்டால் பெரியவர்கள் கலச்சாரம், பண்பாடு எனப்பல காரணங்கள் சொல்கிறார்கள். அதில் முதன்மை பெறுவது நீ பெரிய பெண் கவனமாக இருக்கவேண்டும். ஆண்களிடத்திருந்து விலகி இருக்கவேண்டும் என்பதே... இதைக் கூறும் அப்பெண்பிள்ளைகளே இன்னொரு கேள்வியையும் கேட்கிறார்கள். எங்களுக்குத்தான் பாடசாலைகளில் பாலியல் பற்றிய தெளிவை ஆசிரியர்கள் ஒன்பது வயதிலேயே கற்பிக்கிறார்களே அதற்குப் பிற்பாடு பருவமடையும் போது சடங்கு வைத்து எங்கள் பெற்றோர் சொல்ல முற்படுவது என்ன? நாங்கள் திருமணத்திற்குத் தயார் என்ற அறிவிப்பையா?

ஆக பெண் பிள்ளைகள் விரும்புகிறார்கள் செய்கிறோம் என்ற வாய் சவடால்கள் அந்தப் பெண் பிள்ளையின் குழந்தைத்தனத்தைவிட பெற்றோரின் பொறுப்பின்மையைத்தான் காட்டுகிறது.

நாங்கள் ஊரில் வாழ்ந்த காலங்களில் ஊருக்கு ஊர் வித்தியாசமான நடைமுறைகளுடன் சில சாதியக் கோட்பாடுகளுடன் அச்சடங்குகளை நிகழ்த்தியிருக்கிறோம். இதன் ஊடும் சாதியப் பேய்களை வளர்த்திருக்கிறோம். இப்போது புலம் பெயர் தேசங்களில் திரண்ட பொருளாதார வளத்தால் அச்சடங்கின் உட்பொருள் தெரியாது ஊருக்கே அழைப்புக் கொடுத்து கொண்டாடுவது என்பது எந்த வகைக்குள் அடக்கும் என்பதை கொண்டாட்டம் செய்யத் துணியும் பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும்.

உங்கள் ஆடம்பரத்தை பொருளாதாரத்தை காட்டவேண்டும் என்றால் வேறு கொண்டாட்டங்கள் இருக்கின்றன. தயவு செய்து பெண்களை சங்கடத்திற்குள்ளாக்கும் இச்சடங்கைத் தவிருங்கள்.

யாருக்கு யார் சொல்வது? ஒவ்வொரு தாயும் உணர்ந்தால் மாத்திரமே எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகளைத் தவிர்க்கலாம். இந்தச் சடங்கை ஆண்களே எம்மிடம் திணிக்கிறார்கள் என்று எந்தப் பெண்ணும் கூற முடியுமா?

முதலில் பெண்ணுக்குப் பெண்தான் எதிரி

மற்றும் ஆதிவாசி நீங்கள் பெண்களை ஏட்டுச் சுரைக்காய்களா? என்று கேட்டு இருந்தீர்கள். சில சமயங்களில் நாங்கள் ஏட்டுச்சுரைக்காய்களாகவும் இருக்கிறோம் என்பது எங்களுக்கும் புரிகிறது. பொறுப்புகளை உதறிவிட்டு பெண்ணியம் பேச நாங்கள் வரவில்லை. பொறுப்புகளையும் கையாண்டு பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்கிறோம் ஆதலால் சில சமயங்கள் மற்றையோரின் பார்வைக்குக் கையாலாகாதவர்களாகவும் தோன்றுகிறோம்.

புல்லாங்குழல் எடுத்து அடுப்புூதச் சொன்னீர்கள்!

அது கூட ஒரு கலை வடிவம்தான் அதற்கு நாங்கள் நன்றிதான் சொல்வோம்.

சொந்தக் கருத்துக் கிடையாதா? என்று கேட்டீர்கள்.

பண்டைய காலத்துச் சடங்குபற்றி சரியான தகவல்களை அறியமுன் எங்கள் சொந்தக் கருத்தை நீங்கள் எப்படி எங்களிடம் எதிர்பார்க்கலாம்?

உங்களின் இந்தக் கருத்துக்கு அன்றே வாதிட என் மனம் எழுந்தது. ஆனால் ரமா உங்களுடன் வாதாடிக் கொண்டிருக்கும் வேளையில் இடையில் குறுக்கீடு செய்ய விரும்பவில்லை அதனாலேயே இப்போது இதனை இங்கு இணைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் கற்பனைவாதி என்பதற்கு அப்பால், கருத்தில் பாதி உங்களுடையது என்று நான் சொல்வேன் என்று, நீங்கள் வைக்கும் கற்பனை தான் மிகமிக அதிகமானது. ஆனால் அவ்வாறு பாதிப் பேரின் கருத்துக்களை எழுதும் அளவுக்கு அறிவுள்ளவர் நீங்கள் என்று நான் எள்ளவும் எண்ணியது கிடையாது. ஆகவே உங்களைப் பற்றிய அதிக பிரமிப்புக்கள் வேண்டமே!

சமீபத்தில், கனடாத் தேனிக்காரர்கள், ரிபிசி பற்றிய கட்டுரை ஒன்றுக்கு, விவாதித்து விட்டு, உடனேயே பதில் எழுதியபோது, கூட, நீர் இந்த ஜடியில் தான் எழுதினீர். இப்படி நிறைய சம்பவங்கள் இருக்கின்றன. ஆனால் அதை நிருபிக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் காலத்துக்கு காலம் யாழ்களத்தின் மீது அவதூறு புூச முனைபவர்களின் நோக்கத்தை வெளிப்படுத்துவது மட்டுமே தான் செய்ய நினைத்தேன். நாளைக்கு இன்னுமோரு பெயரில் வந்து நீர் எழுதினால் கூட அறிந்து கொள்ள முடியாத சந்தர்ப்பத்தை கொண்டிருக்கலாம்.

எனவே, இந்தச் சமாளிப்புக்கள், நழுவல்களுக்கு பதிலளிக்கத் தேவையில்லை என நினைக்கின்றேன். மேலும் உமக்கு கவிதை எழுதத் தெரியுமா இல்லையா என்பது குறித்து ஆராய்வு, பட்டிமன்றம் நடத்தும் அளவுக்கு பெருமிதப்பட ஒன்றுமில்லையே!

  • கருத்துக்கள உறவுகள்

புூப்புூ நீராட்டு விழா என்றால் என்ன?

புூப்புனித நீராட்டு விழா என்றால் என்ன?

கவனியுங்கப்பா தெளிவாகத்தான் கேட்கிறேன்.

ரமாக்கா மன்னிச்சுக் கொள்ளுங்க. நீங்க எழுதுகோலுக்கு உரியவர்தான். அது ஏன் ஆதிசொன்ன கருத்து தனியாக உங்களை மட்டுமே தாக்குகிறது? மற்றவu;கl;கு உணர்வே இல்லையா? அல்லது பொங்கி எழத் தெரியாதா?

அல்லது யாரேனும் கூப்பிட்டு உங்களை ஆதி கிண்டலடிக்கிறார் என்று சொல்ல வேண்டுமா? அப்படிச் சொன்னால்த்தான் வந்து மொத்துவார்களா?

ஆதியைப்போல் அடியைக் கேட்டு வாங்கும் பிறவி இருக்கமுடியுமா?

ஆதிவாசி அவர்களே!

பருவமடைதல் என்பது பற்றிய விளக்கமல்லாவிட்டால், அது வேண்டவே வேண்டாம் என்று அடம்பிடிப்பது என்ன நியாயம்? உங்களுக்கு அது பற்றித் தெரிந்து கொள்ள ஆசையிருந்தால், விளக்கமுள்ளவர்களோடு அறிந்து கொள்ளுங்களேன்.

மற்றவர்களுக்கு பொங்கி எழத் தெரியுமா தெரியாதா என்பதை உங்களிடம் கேட்டுக் பார்க்கின்றேன். தேவையில்லை என்றால் தூக்கிப் போட்டு விசுற பெண்களுக்குத் தெரியாதா? நீங்கள் ஏன் இடையில் நின்று சத்தம் போடுகின்றீர்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மற்றவu;கl;கு உணர்வே இல்லையா? அல்லது பொங்கி எழத் தெரியாதா?

ஊருக்குத்தான் உபதேசம் உனக்கல்லடி .......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பூனை கண்ணை மூடிக்கொண்டால் இருட்டாகுமோ? கற்பனைகளை நிஜமாக்க ஏதாவது தமிழ் மீடீயா இழிச்ச வாயங்கள் இருப்பாங்க அவங்களிட்ட சேர்ந்தால் நல்லா உழைக்கலாம்.!

[

புூப்புூ நீராட்டு விழா என்றால் என்ன?

புூப்புனித நீராட்டு விழா என்றால் என்ன?

கவனியுங்கப்பா தெளிவாகத்தான் கேட்கிறேன்.

ரமாக்கா மன்னிச்சுக் கொள்ளுங்க. நீங்க எழுதுகோலுக்கு உரியவர்தான். அது ஏன் ஆதிசொன்ன கருத்து தனியாக உங்களை மட்டுமே தாக்குகிறது? மற்றவu;கl;கு உணர்வே இல்லையா? அல்லது பொங்கி எழத் தெரியாதா?

அல்லது யாரேனும் கூப்பிட்டு உங்களை ஆதி கிண்டலடிக்கிறார் என்று சொல்ல வேண்டுமா? அப்படிச் சொன்னால்த்தான் வந்து மொத்துவார்களா?

ஆதியைப்போல் அடியைக் கேட்டு வாங்கும் பிறவி இருக்கமுடியுமா?

ஊருக்குத்தான் உபதேசம் உனக்கல்லடி .......

அண்ணா பிறேமண்ணா!

குருட்டுப் புூனை விட்டத்தில் பாய்வது என்று கேள்விப்பட்டிருங்கீங்களா?

உங்களுக்கு நன்றாகப் பொருந்துகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜடிஸஎல்லாரும் ஏதோ அவரவருக்குத் தெரிந்த விளக்கங்களைக் கொடுக்கிறீர்கள்....

இந்தப் பெண்பிள்ளையின் மனநிலையை யாரேனும் தெளிவுபடுத்தமுடியுமா? அதாவது புூப்புூ நீராட்டுவிழாக் கதாநாயகியின் நிலையைக் கேட்டேன்.

கேள்வி கேட்டுவிட்டேன் என்பதற்காக வாத விவாதங்களை பந்தி பந்தியாக எழுதி குவிக்காமல் பழைய ஆய்வுகளுக்குப் புதியவடிவம் கொடுக்காமலும் தற்காலத்தோடு ஒட்டிய கருத்தை முன்வையுங்கள் உங்கள் சொந்தக்கருத்தை அறியத்தான் ஆவலுள்ளது.

ரொம்ப முக்கியம் கோபிதா : பேசமால் ஒரு புத்தகமாக வெளிவிடும்.

உமது கதையிலிருந்து ஒரு பெண்ணின் மனநிலை நன்றாக தெரிகின்றது??? நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள். வாசிப்பதற்கு ஆட்கள் இருக்கினம். பேசமால் இதை சினிமா பகுதிக்கு நகர்த்தச் சொல்லிவிட்டு எழுதுங்கள். யாரவது உங்கள் கதையை வாசித்து விட்டு படம் எடுக்கட்டும் :

ரமா அக்கா இதோ ஒரு பேர்பரில் கதை வந்து விட்டது இனி யாரையாவது கூட்டி வந்து படம் எடுப்பதுதான் பாக்கி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.