Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விதி செய்த சதியோ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
டிசம்பர் மாதம் என்று சொல்ல முடியாதவாறு வானமும் நிலமும் வெயில் குடித்துக் கிடந்தது. இன்னும் பத்து நாட்களில் அடுத்த ஆண்டு வந்துவிடும். சில்லென்ற காற்று வீசுவது யன்னலூடாக வெளியே அசையும் மரங்கள் உணர்த்தின. குளிர் காலத்தில் வெயில் வந்தாலே லண்டனில் ஒரு ஊசிக் காற்றும் அதனோடு சேர்ந்து வீசும்.
 
அபிக்கு வெளியே செல்லவே மனமின்றி இருந்தது அந்தக் காற்றைப் பார்க்க.ஆனாலும் என்ன செய்வது வேலைக்குச் செல்லத்தானே வேண்டும். அண்ணனின் உழைப்பில் சாப்பிட முடியுமா ??? என மனம் கேட்டுக்கொண்டது.
 
அபியின் அண்ணன் வசந்தன் லண்டனில் ஆறு ஆண்டுகளாக வசிக்கிறான்.PR கிடைத்துவிட்டதுதான். ஆனாலும் தங்கைக்கும் மகேந்திரனுக்கும் ஏயென்சியில் கட்டின காசுக்கடன் இன்னும் முடிந்தபாடு இல்லை. அதனால் இரவு பகல் என்று வேலை. இந்த ஒருவருடத்தில் பன்னீராயிரம் கடன் அடைத்தாயிற்று. இன்னும் மீதியையும் அடைத்து அபியையும் திருமணம் செய்து குடுத்தபின்தான் அவனின் வாழ்வை எண்ணிப் பார்க்கலாம்.
 
அபி யன்னலை விட்டு நகர்ந்து கொஞ்சம் ஆறிப்போய் இருந்த மிகுதித் தேநீரையும் குடித்து முடித்துவிட்டு குசினிக்குள் சென்று கப்பையும் கழுவி வைத்துவிட்டு வெளியே போவதற்காக ஆடைகளை அணிந்து கைப்பையைத் தூக்கியதும், அதற்குள் பிரயாணச்சீட்டு இருக்கிறதா என்று ஒருமுறை பார்த்துக்கொண்டாள். ஒரு மாதத்துக்குரிய பயணச்சீட்டு என்பதனால் இவள் பயன்படுத்தாத நேரம் தமையனுக்குத் தேவைப்படும் போது அவனும் பயன்படுத்துவதுண்டு. அது ஒன்று லண்டனில் நல்ல விடயம் என எண்ணியவள், கைப்பையை நன்றாகக் கொட்டி ஒவ்வொன்றாகப் பார்த்தாள்.
 
அண்ணன் மறந்துபோய் தனது மட்டையைக் கொண்டுபோய்விட்டது அப்போதுதான் நினைவில் வர வீணாக  இன்று 4.40 நட்டம் என்று மனதுள் எண்ணியபடிமீண்டும் பொருட்களைப் பையுள் போட்டபோது மகேந்திரனின் படம் சிரித்தபடி கண்ணில் பட்டது. யோசனையோடு அதனை மீண்டும் கைப்பையுள் வைக்காது தன் உடைகள் வைக்கும் தட்டில் வைத்துவிட்டு, அண்ணனுக்கு எப்படியும் நான் ஒரு வாரத்தில் முடிவு சொல்ல வேண்டும் என்பது மனதை உறுத்த, இப்படி ஒரு நிலை யாருக்கும் வரவே கூடாதென எண்ணியபடி கைப்பையை எடுத்துக்கொண்டு இறங்கி நடந்தாள்.
 
***********************
 
மகேந்திரனை அபி தொண்டு நிறுவனம் ஒன்றில் வேலை செய்த போதுதான் சந்தித்தது. அவளும் கூட அங்கு வேலை செய்தவள் தான். அவனை அடிக்கடி சந்திக்க நேர்ந்ததும் அவனின் அன்பான பேச்சும் கெட்டித்தனமும் அவளை மட்டுமல்ல எல்லோரையுமே வசீகரித்ததுதான் எனினும் அவனின் அன்புக்குரியவளாக அபியே ஆனதில் அவளின் சந்தோசம் எல்லைகளற்று விரிந்தது. அவனை விசாரணை என்ற பேரில் கைதுசெய்து கொண்டு சென்றபோது அவள் பட்ட துடிப்பும் வேதனையும்சொல்லிமுடியாது. ஒருவாறு தொண்டு நிறுவனத்தார் தலையிட்டு அவன் எந்தவித சேதாரமும் இன்றி விடுவிக்கப்பட்டான்.
 
அப்போதுதான் அவனை இனியும் இங்கு இருக்க விடுவது நல்லதல்ல என்று தோன்ற இவள் தமையனுக்கு போன் செய்து அவனை வெளிநாட்டுக்குக் கூப்பிட ஒழுங்கு செய்யுமாறு கேட்டுக்கொண்டாள். தாயும் தமையன் வசந்தனும் ஏற்கனவே மகேந்திரன் விடயம் அறிந்திருந்ததால் இரண்டுபேரும் வெளிநாடு வாற ஒழுங்கைச் செய்யும்படியும் தான் காசை அனுப்புகிறேன் என்றவுடன் அபிக்குத்தான் தாயைத் தனியே விட்டுவிட்டு வருவதோ என்று மனம் அங்கலாய்த்தது. இறுதியில் ஆசை வென்றுவிட இருவரும் தாயையும் கூட்டிக்கொண்டு கொழும்புக்கு வந்தனர்.
 
வசந்தனே லண்டனில் இருந்தவாறே ஏஜென்சியை ஒழுங்குசெய்து பணமும் அரைவாசி கொடுத்தபடி கிட்டத்தட்ட ஆறு மாதங்களின் பின்னர் இருவருக்கும் பிரையாண ஒழுங்கு சரி வந்தது. ஆனாலும் அதிலும் ஒரு சிக்கல் எழுந்தது. இருவரும் சேர்ந்து போக முடியாது என்று கூறி ஏஜென்சி தனித்தனியாகச் செல்வதற்கு ஒழுங்குசெய்து வேறு வழியே இன்றி அபியும் சம்மதிக்க தாயிடம் கண்ணீருடன் விடைபெற்று விமானம் ஏறினாள் அபி.
 
ஒரு வாரத்தில் மகேந்திரனும் வேறு பாதையால் புறப்பட்டிருந்தான். அபி ஒருவனின் மனைவியின் புத்தகத்தில் அழைத்துவரப்பட்டதனால் எந்தவிதப் பிரச்சனையும் இன்றி வந்துசேர மகேந்திரன் உடனே வந்துசேர முடியாமல் தாய்லாந்தில் தங்கவேண்டியதாகிவிட்டது.

இந்தா அந்தா என்று இப்ப ஒருவருடங்கள் முடியப்போகிறது. இப்ப ஆறு மாதங்களாக மகேந்திரனிடம் இருந்து எந்தத் தொடர்பும் இல்லை. ஆறு மாதங்களுக்கு முன் ஏயென்சி நாளைக்கு அனுப்பப் போறான் எண்டு ஒரு போன் செய்ததுதான். இவளும் வந்துவிடுவான் வந்துவிடுவான் என்று திருமணக் கனவில் மிதந்ததுதான் மிச்சம். அவன்தான் வந்தபாடு இல்லை. 

******************************************

போன வாரம் யாழ்ப்பாணத்திலிருந்து அம்மா போன்செய்து சொன்ன செய்திதான் வசந்தனுக்கு மனக்கலக்கத்தைக் கொடுத்துக் கொண்டு இருந்தது. மகேந்திரனதும் அபியினதும் சாதகத்தைக் கொண்டுபோய் ஒரு சாத்திரியிட்டைக் காட்ட அவர் மகேந்திரனின் சாதகத்தைப் பார்த்துவிட்டு இவர் உயிருடனேயே இல்லை இப்ப என்று அடித்துக் கூறியதையும் அம்மா உடனே மயங்கி விழுந்ததையும் பக்கத்துவீட்டு மலர் அக்கா போனில் சொன்னபோது இவன் சாத்திரி சொன்னதை நம்பவில்லை. இரு நாட்கள் கழித்து அம்மாவே தொலைபேசியில் கதைத்தபோது " சாத்திரி சொன்னா தப்பாதடா வசந்தன்.  அந்தாள் சொல்லி ஒண்டும் நடக்காமல் விட்டதில்லை ஊரில". அம்மா புலம்பியபடி சொல்ல இவனுக்கும் யோசனையாக இருந்தது.

அதன்பின் இவன் பலரிடமும் மகேந்திரன் பற்றி விசாரித்தும் எந்தத் தகவலும் கிடைக்காது போக இவனால் அந்த முடிவை எடுப்பதுதவிர வேறு வழி இருக்கவில்லை.

*************************************

பஸ்ஸில் ஏறி அமர்ந்த அபி எத்தனை தான் யோசித்தாலும் எந்த ஒரு முடிவையும் எடுக்கவே முடியாதிருந்தது. மகேந்திரன் இப்ப உயிருடன் இல்லை என்று சாத்திரி சொன்ன விபரத்தை அண்ணன் கூறியதிலிருந்து மனம் அல்லோலகல்லோலப் பட்டதுதான் எனினும் அதை உண்மை என்றோ பொய் என்றோ நம்பவும் மனம் இடங்கொடுக்காததால் ஒரு வாரங்கள் அண்ணனுக்குத் தெரியாமல் அழுவதும் பெருமூச்சு விடுவதுமாய் காலம் நகர, அண்ணன் அடுத்துச் சொன்ன விடயம் இன்னும் மனத்தைக் குழப்புவதாய் இவள் நின்மதியைக் கெடுத்தது.

கரன் வசந்தனின் நண்பனின் நண்பன். படித்து நல்ல வேலையிலும் இருப்பவன். பார்க்கவும் கறுப்பு என்றாலும் களையோடு இருந்தான். தமயனிடம் வந்தபோது இவளைப் பார்த்துள்ளான் இரண்டு மூன்று தடவைகள். இவளின் அமைதியான தன்மை பிடித்துவிட இவளைத் தான் திருமணம் செய்ய விருப்பப்படுகிறேன் என்று தாசண்ணன் மூலம் அண்ணனிடம் கேட்டானாம் என்று வசந்தன் கடந்தவாரம் இவளுக்குக் கூறியிருந்தான்.

"அபி மகேந்திரன் இருக்கிறானோ இல்லையோ எண்டு தெரியாது. நீயும் தான் அந்தச் சாத்திரி சொன்னது எல்லாம் நடந்திருக்கு என்றாய். உண்மையிலேயே மகேந்திரன் இல்லாமல் இருந்தால் உப்பிடியே உன்ர வாழ்க்கையைத் துலைக்கப்போறியே ??? இப்ப கரன் விருப்பப்பட்டுக் கேட்கிறான். வடிவா யோசிச்சுப்போட்டு உன்ர விருப்பத்தைச் சொல்லு என்று கூறிவிட்டுச் செல்ல, இவளால் முடிவை மட்டும் எடுக்கவே முடியவில்லை.

வேலைக்குச் சென்றபின்னும் மனம் நிலைகொள்ளாது தவித்தது. ஒருவனை விரும்பிவிட்டு அவனைக் காணவில்லை என்றதும் எப்படி இன்னொருவனை மணப்பது. ஆண்களுக்கு பெண்களின் மனம் புரிவதில்லை. அவர்கள் போல் எமக்கும் கல் நெஞ்சு என்று எண்ணிவிட்டார் போல என்று மனதுள் மருகுவதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியவில்லை.

**********************************************

நாளை அபிக்குத் திருமணம். பாவம் அம்மா தான் பார்க்கக் குடுத்துவைக்கவில்லை. இன்னும் நிரந்தர வதிவிட உரிமை கிடைக்காததால் வசந்தன் ஸ்பொன்சர் செய்ய முடியாது. அபி போன மாதம்தான் இந்தத் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்திருந்தாள். எங்கே அவள் மனம் மாறிவிடுவாளோ என்ற பயத்தில் கரணுடன் கதைத்து இவன் உடனேயே திருமணத்தை நடத்த ஒழுங்கு செய்துவிட்டான்.

ஏழு மாதங்களின் முன் அபியிடம் கரனின் விடயம் கூறி முடிவு சொல்லும்படி கேட்டபோது இன்னும் ஆறு மாதங்கள் பார்ப்போம் அண்ணா. அப்பவும் மகேந்திரனிமிருந்து எந்தத் தொடர்பும் இல்லை என்றால் நான் கரனைத் திருமணம் செய்கிறேன் என்று அபி கூறியதை இவன் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியிருந்தது. 

இவனுக்கு என்ன மகேந்திரனில் வெறுப்பா? என்ன தங்கையை ஒருவனிடம் பிடித்துக் கொடுத்தாலாலவா அவன் தன்னைப் பற்றி யோசிக்க.

ஆடம்பரமான திருமணம் இல்லைத்தான். ஆனாலும்  ஒரு ஐம்பது பேர் கூட இல்லாமல் என்ன திருமணம். அதுவும் வாழ்வில் ஒருமுறை தான் நடப்பது. தன் ஒரேயொரு தங்கை வேறு. தனக்கு நன்கு அறிமுகமான ஒரு முப்பது குடும்பங்களுக்கு மட்டும் சொல்லி, இவனது நண்பர்கள் என்று பார்க்க நாற்பது பேரைத் தாண்டிவிட்டது. கரனின் பக்கமும் முப்பது குடும்பம், நண்பர்கள். இனி ஒரு குடும்பத்தில கடைசி மூண்டு பேராவது வருவினம் என்று சாப்பாடு, மண்டபம், வீடியோ சீலை நகை எண்டு பத்தாயிரம் தாண்டீட்டுது. மண்டபமும் சாப்பாடும் வீடியோவுக்கும் சேர்த்து தானும் அரைவாசிக்காசு தருகிறேன் என்று கரன் கூறினான் தான் என்றாலும் வசந்தன் மறுத்துவிட்டான். 

பெண்ணைக் கூட்டி வாங்கோ என்று ஐயர் கூற குனிந்த தலை நிமிராமல் அழகுப் பதுமையாக வந்த அபியைப் பார்க்க வசந்தனுக்குப்  பெருமிதமும் நின்மதியும் ஏற்பட்டது. அவன் மாப்பிளைத் தோழன் என்பதால் அவனின் நண்பர்கள் தான் ஓடியோடி எல்லாவற்றையும் நடத்திக் கொண்டிருந்தார்கள்.ஒருவாறு அபியின் கழுத்தில் தாலி ஏற இவனுக்கு மனம் மட்டிலா நின்மதி கொண்டது.

*****************************

திருமணம் முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. அபியும் கரனும் கரனது வீட்டில் வசிக்கத் தொடங்க தங்கை இல்லாத வீடு வெறிச்சோடிப் போனதுபோல் இருந்தது. அம்மாட்டைச் சொல்லி எனக்கும் சொல்லி எனக்கும் பெண் பார்க்கச் சொல்லவேணும். எதுக்கும் ஒரு வருடம் போகட்டும். அப்பத்தான் எனக்கும் நசனாலிட்டி வந்திடும். கடனும் அடைஞ்சிடும் என்று எண்ணிப் பெருமூச்சை விட்டபடி படுக்கையில் கிடந்த வசந்தனை, கைத் தொலைபேசி அழைப்புக் கலைக்க கலோ என்றபடி போனைக் காதுக்குள் வைக்க " நான் மகேந்திரன். தாய்லாந்திலிருந்து கதைக்கிறன் என்னும் குரலில் காதுக்குள் செல் விழுந்ததாய் அதிர்வை உணர்த்த போனைத் தூரப் போட்டான் வசந்தன்.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

டிசம்பர் மாதம் என்று சொல்ல முடியாதவாறு வானமும் நிலமும் வெயில் குடித்துக் கிடந்தது. இன்னும் பத்து நாட்களில் அடுத்த ஆண்டு வந்துவிடும். சில்லென்ற காற்று வீசுவது யன்னலூடாக வெளியே அசையும் மரங்கள் உணர்த்தின. குளிர் காலத்தில் வெயில் வந்தாலே லண்டனில் ஒரு ஊசிக் காற்றும் அதனோடு சேர்ந்து வீசும்.
 
அபிக்கு வெளியே செல்லவே மனமின்றி இருந்தது அந்தக் காற்றைப் பார்க்க.ஆனாலும் என்ன செய்வது வேலைக்குச் செல்லத்தானே வேண்டும். அண்ணனின் உழைப்பில் சாப்பிட முடியுமா ??? என மனம் கேட்டுக்கொண்டது.
 
அபியின் அண்ணன் வசந்தன் லண்டனில் ஆறு ஆண்டுகளாக வசிக்கிறான்.PR கிடைத்துவிட்டதுதான். ஆனாலும் தங்கைக்கும் மகேந்திரனுக்கும் ஏயென்சியில் கட்டின காசுக்கடன் இன்னும் முடிந்தபாடு இல்லை. அதனால் இரவு பகல் என்று வேலை. இந்த ஒருவருடத்தில் பன்னீராயிரம் கடன் அடைத்தாயிற்று. இன்னும் மீதியையும் அடைத்து அபியையும் திருமணம் செய்து குடுத்தபின்தான் அவனின் வாழ்வை எண்ணிப் பார்க்கலாம்.
 
அபி யன்னலை விட்டு நகர்ந்து கொஞ்சம் ஆறிப்போய் இருந்த மிகுதித் தேநீரையும் குடித்து முடித்துவிட்டு குசினிக்குள் சென்று கப்பையும் கழுவி வைத்துவிட்டு வெளியே போவதற்காக ஆடைகளை அணிந்து கைப்பையைத் தூக்கியதும், அதற்குள் பிரயாணச்சீட்டு இருக்கிறதா என்று ஒருமுறை பார்த்துக்கொண்டாள். ஒரு மாதத்துக்குரிய பயணச்சீட்டு என்பதனால் இவள் பயன்படுத்தாத நேரம் தமையனுக்குத் தேவைப்படும் போது அவனும் பயன்படுத்துவதுண்டு. அது ஒன்று லண்டனில் நல்ல விடயம் என எண்ணியவள், கைப்பையை நன்றாகக் கொட்டி ஒவ்வொன்றாகப் பார்த்தாள்.
 
அண்ணன் மறந்துபோய் தனது மட்டையைக் கொண்டுபோய்விட்டது அப்போதுதான் நினைவில் வர வீணாக  இன்று 4.40 நட்டம் என்று மனதுள் எண்ணியபடிமீண்டும் பொருட்களைப் பையுள் போட்டபோது மகேந்திரனின் படம் சிரித்தபடி கண்ணில் பட்டது. யோசனையோடு அதனை மீண்டும் கைப்பையுள் வைக்காது தன் உடைகள் வைக்கும் தட்டில் வைத்துவிட்டு, அண்ணனுக்கு எப்படியும் நான் ஒரு வாரத்தில் முடிவு சொல்ல வேண்டும் என்பது மனதை உறுத்த, இப்படி ஒரு நிலை யாருக்கும் வரவே கூடாதென எண்ணியபடி கைப்பையை எடுத்துக்கொண்டு இறங்கி நடந்தாள்.
 
***********************
 
மகேந்திரனை அபி தொண்டு நிறுவனம் ஒன்றில் வேலை செய்த போதுதான் சந்தித்தது. அவளும் கூட அங்கு வேலை செய்தவள் தான். அவனை அடிக்கடி சந்திக்க நேர்ந்ததும் அவனின் அன்பான பேச்சும் கெட்டித்தனமும் அவளை மட்டுமல்ல எல்லோரையுமே வசீகரித்ததுதான் எனினும் அவனின் அன்புக்குரியவளாக அபியே ஆனதில் அவளின் சந்தோசம் எல்லைகளற்று விரிந்தது. அவனை விசாரணை என்ற பேரில் கைதுசெய்து கொண்டு சென்றபோது அவள் பட்ட துடிப்பும் வேதனையும்சொல்லிமுடியாது. ஒருவாறு தொண்டு நிறுவனத்தார் தலையிட்டு அவன் எந்தவித சேதாரமும் இன்றி விடுவிக்கப்பட்டான்.
 
அப்போதுதான் அவனை இனியும் இங்கு இருக்க விடுவது நல்லதல்ல என்று தோன்ற இவள் தமையனுக்கு போன் செய்து அவனை வெளிநாட்டுக்குக் கூப்பிட ஒழுங்கு செய்யுமாறு கேட்டுக்கொண்டாள். தாயும் தமையன் வசந்தனும் ஏற்கனவே மகேந்திரன் விடயம் அறிந்திருந்ததால் இரண்டுபேரும் வெளிநாடு வாற ஒழுங்கைச் செய்யும்படியும் தான் காசை அனுப்புகிறேன் என்றவுடன் அபிக்குத்தான் தாயைத் தனியே விட்டுவிட்டு வருவதோ என்று மனம் அங்கலாய்த்தது. இறுதியில் ஆசை வென்றுவிட இருவரும் தாயையும் கூட்டிக்கொண்டு கொழும்புக்கு வந்தனர்.
 
வசந்தனே லண்டனில் இருந்தவாறே ஏஜென்சியை ஒழுங்குசெய்து பணமும் அரைவாசி கொடுத்தபடி கிட்டத்தட்ட ஆறு மாதங்களின் பின்னர் இருவருக்கும் பிரையாண ஒழுங்கு சரி வந்தது. ஆனாலும் அதிலும் ஒரு சிக்கல் எழுந்தது. இருவரும் சேர்ந்து போக முடியாது என்று கூறி ஏஜென்சி தனித்தனியாகச் செல்வதற்கு ஒழுங்குசெய்து வேறு வழியே இன்றி அபியும் சம்மதிக்க தாயிடம் கண்ணீருடன் விடைபெற்று விமானம் ஏறினாள் அபி.
 
ஒரு வாரத்தில் மகேந்திரனும் வேறு பாதையால் புறப்பட்டிருந்தான். அபி ஒருவனின் மனைவியின் புத்தகத்தில் அழைத்துவரப்பட்டதனால் எந்தவிதப் பிரச்சனையும் இன்றி வந்துசேர மகேந்திரன் உடனே வந்துசேர முடியாமல் தாய்லாந்தில் தங்கவேண்டியதாகிவிட்டது.

இந்தா அந்தா என்று இப்ப ஒருவருடங்கள் முடியப்போகிறது. இப்ப ஆறு மாதங்களாக மகேந்திரனிடம் இருந்து எந்தத் தொடர்பும் இல்லை. ஆறு மாதங்களுக்கு முன் ஏயென்சி நாளைக்கு அனுப்பப் போறான் எண்டு ஒரு போன் செய்ததுதான். இவளும் வந்துவிடுவான் வந்துவிடுவான் என்று திருமணக் கனவில் மிதந்ததுதான் மிச்சம். அவன்தான் வந்தபாடு இல்லை. 

******************************************

போன வாரம் யாழ்ப்பாணத்திலிருந்து அம்மா போன்செய்து சொன்ன செய்திதான் வசந்தனுக்கு மனக்கலக்கத்தைக் கொடுத்துக் கொண்டு இருந்தது. மகேந்திரனதும் அபியினதும் சாதகத்தைக் கொண்டுபோய் ஒரு சாத்திரியிட்டைக் காட்ட அவர் மகேந்திரனின் சாதகத்தைப் பார்த்துவிட்டு இவர் உயிருடனேயே இல்லை இப்ப என்று அடித்துக் கூறியதையும் அம்மா உடனே மயங்கி விழுந்ததையும் பக்கத்துவீட்டு மலர் அக்கா போனில் சொன்னபோது இவன் சாத்திரி சொன்னதை நம்பவில்லை. இரு நாட்கள் கழித்து அம்மாவே தொலைபேசியில் கதைத்தபோது " சாத்திரி சொன்னா தப்பாதடா வசந்தன்.  அந்தாள் சொல்லி ஒண்டும் நடக்காமல் விட்டதில்லை ஊரில". அம்மா புலம்பியபடி சொல்ல இவனுக்கும் யோசனையாக இருந்தது.

அதன்பின் இவன் பலரிடமும் மகேந்திரன் பற்றி விசாரித்தும் எந்தத் தகவலும் கிடைக்காது போக இவனால் அந்த முடிவை எடுப்பதுதவிர வேறு வழி இருக்கவில்லை.

*************************************

பஸ்ஸில் ஏறி அமர்ந்த அபி எத்தனை தான் யோசித்தாலும் எந்த ஒரு முடிவையும் எடுக்கவே முடியாதிருந்தது. மகேந்திரன் இப்ப உயிருடன் இல்லை என்று சாத்திரி சொன்ன விபரத்தை அண்ணன் கூறியதிலிருந்து மனம் அல்லோலகல்லோலப் பட்டதுதான் எனினும் அதை உண்மை என்றோ பொய் என்றோ நம்பவும் மனம் இடங்கொடுக்காததால் ஒரு வாரங்கள் அண்ணனுக்குத் தெரியாமல் அழுவதும் பெருமூச்சு விடுவதுமாய் காலம் நகர, அண்ணன் அடுத்துச் சொன்ன விடயம் இன்னும் மனத்தைக் குழப்புவதாய் இவள் நின்மதியைக் கெடுத்தது.

கரன் வசந்தனின் நண்பனின் நண்பன். படித்து நல்ல வேலையிலும் இருப்பவன். பார்க்கவும் கறுப்பு என்றாலும் களையோடு இருந்தான். தமயனிடம் வந்தபோது இவளைப் பார்த்துள்ளான் இரண்டு மூன்று தடவைகள். இவளின் அமைதியான தன்மை பிடித்துவிட இவளைத் தான் திருமணம் செய்ய விருப்பப்படுகிறேன் என்று தாசண்ணன் மூலம் அண்ணனிடம் கேட்டானாம் என்று வசந்தன் கடந்தவாரம் இவளுக்குக் கூறியிருந்தான்.

"அபி மகேந்திரன் இருக்கிறானோ இல்லையோ எண்டு தெரியாது. நீயும் தான் அந்தச் சாத்திரி சொன்னது எல்லாம் நடந்திருக்கு என்றாய். உண்மையிலேயே மகேந்திரன் இல்லாமல் இருந்தால் உப்பிடியே உன்ர வாழ்க்கையைத் துலைக்கப்போறியே ??? இப்ப கரன் விருப்பப்பட்டுக் கேட்கிறான். வடிவா யோசிச்சுப்போட்டு உன்ர விருப்பத்தைச் சொல்லு என்று கூறிவிட்டுச் செல்ல, இவளால் முடிவை மட்டும் எடுக்கவே முடியவில்லை.

வேலைக்குச் சென்றபின்னும் மனம் நிலைகொள்ளாது தவித்தது. ஒருவனை விரும்பிவிட்டு அவனைக் காணவில்லை என்றதும் எப்படி இன்னொருவனை மணப்பது. ஆண்களுக்கு பெண்களின் மனம் புரிவதில்லை. அவர்கள் போல் எமக்கும் கல் நெஞ்சு என்று எண்ணிவிட்டார் போல என்று மனதுள் மருகுவதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியவில்லை.

**********************************************

நாளை அபிக்குத் திருமணம். பாவம் அம்மா தான் பார்க்கக் குடுத்துவைக்கவில்லை. இன்னும் நிரந்தர வதிவிட உரிமை கிடைக்காததால் மகேந்திரன் ஸ்பொன்சர் செய்ய முடியாது. அபி போன மாதம்தான் இந்தத் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்திருந்தாள். எங்கே அவள் மனம் மாறிவிடுவாளோ என்ற பயத்தில் கரணுடன் கதைத்து இவன் உடனேயே திருமணத்தை நடத்த ஒழுங்கு செய்துவிட்டான்.

ஏழு மாதங்களின் முன் அபியிடம் கரனின் விடயம் கூறி முடிவு சொல்லும்படி கேட்டபோது இன்னும் ஆறு மாதங்கள் பார்ப்போம் அண்ணா. அப்பவும் மகேந்திரனிமிருந்து எந்தத் தொடர்பும் இல்லை என்றால் நான் கரனைத் திருமணம் செய்கிறேன் என்று அபி கூறியதை இவன் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியிருந்தது. 

இவனுக்கு என்ன மகேந்திரனில் வெறுப்பா? என்ன தங்கையை ஒருவனிடம் பிடித்துக் கொடுத்தாலாலவா அவன் தன்னைப் பற்றி யோசிக்க.

ஆடம்பரமான திருமணம் இல்லைத்தான். ஆனாலும்  ஒரு ஐம்பது பேர் கூட இல்லாமல் என்ன திருமணம். அதுவும் வாழ்வில் ஒருமுறை தான் நடப்பது. தன் ஒரேயொரு தங்கை வேறு. தனக்கு நன்கு அறிமுகமான ஒரு முப்பது குடும்பங்களுக்கு மட்டும் சொல்லி, இவனது நண்பர்கள் என்று பார்க்க நாற்பது பேரைத் தாண்டிவிட்டது. கரனின் பக்கமும் முப்பது குடும்பம், நண்பர்கள். இனி ஒரு குடும்பத்தில கடைசி மூண்டு பேராவது வருவினம் என்று சாப்பாடு, மண்டபம், வீடியோ சீலை நகை எண்டு பத்தாயிரம் தாண்டீட்டுது. மண்டபமும் சாப்பாடும் வீடியோவுக்கும் சேர்த்து தானும் அரைவாசிக்காசு தருகிறேன் என்று கரன் கூறினான் தான் என்றாலும் மகேந்திரன் மறுத்துவிட்டான். 

பெண்ணைக் கூட்டி வாங்கோ என்று ஐயர் கூற குனிந்த தலை நிமிராமல் அழகுப் பதுமையாக வந்த அபியைப் பார்க்க மகேந்திரனுக்கும் பெருமிதமும் நின்மதியும் ஏற்பட்டது. அவன் மாப்பிளைத் தோழன் என்பதால் அவனின் நண்பர்கள் தான் ஓடியோடி எல்லாவற்றையும் நடத்திக் கொண்டிருந்தார்கள்.ஒருவாறு அபியின் கழுத்தில் தாலி ஏற இவனுக்கு மனம் மட்டிலா நின்மதி கொண்டது.

*****************************

திருமணம் முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. அபியும் கரனும் கரனது வீட்டில் வசிக்கத் தொடங்க தங்கை இல்லாத வீடு வெறிச்சோடிப் போனதுபோல் இருந்தது. அம்மாட்டைச் சொல்லி எனக்கும் சொல்லி எனக்கும் பெண் பார்க்கச் சொல்லவேணும். எதுக்கும் ஒரு வருடம் போகட்டும். அப்பத்தான் எனக்கும் நசனாலிட்டி வந்திடும். கடனும் அடைஞ்சிடும் என்று எண்ணிப் பெருமூச்சை விட்டபடி படுக்கையில் கிடந்த வசந்தனை, கைத் தொலைபேசி அழைப்புக் கலைக்க கலோ என்றபடி போனைக் காதுக்குள் வைக்க " நான் மகேந்திரன். தாய்லாந்திலிருந்து கதைக்கிறன் என்னும் குரலில் காதுக்குள் செல் விழுந்ததாய் அதிர்வை உணர்த்த போனைத் தூரப் போட்டான் வசந்தன்.

கதைக்கு நன்றி

பெயரில் சில தடுமாற்றம்

கவனிக்குக..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தவறைச் சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி விசுகுஅண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்

பெயரை தடுமாறி  எழுதி விட்டீர்கள்   மீண்டும் எடிட் பண்ணி திருத்தி விடுங்கள். மிகவும் நன்றாய் இருக்கும்.

அக்கா, உண்மை சம்பவத்தை கதை என்ற பெயரில் எழுதி இருக்கிற மாதிரி தெரியுது. எனக்கு தெரியவே இலண்டனில இது மாதிரி இரண்டு சம்பவம் நடந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாகக் கொண்டு சென்றிருக்கின்றீர்கள் கதையை.  இனி வசந்தன் சிம் மாத்தப் போகின்றாரா , பவுன்ஸ் அனுப்பப் போகின்றாரா...!

அக்கா என் கண்களுக்குத் தட்டுப்படுதில்லை எந்தப் பந்தி என்று குறிப்பிடுங்கள்.

அக்கா, உண்மை சம்பவத்தை கதை என்ற பெயரில் எழுதி இருக்கிற மாதிரி தெரியுது. எனக்கு தெரியவே இலண்டனில இது மாதிரி இரண்டு சம்பவம் நடந்தது.

என் கதைகள் எல்லாமே உண்மைச் சம்பவங்களின் தழுவல் தான் :D

நன்றாகக் கொண்டு சென்றிருக்கின்றீர்கள் கதையை.  இனி வசந்தன் சிம் மாத்தப் போகின்றாரா , பவுன்ஸ் அனுப்பப் போகின்றாரா...!

அது வசந்தனை அல்லோ கேட்கவேணும் சுவி அண்ணா :lol:

வருகைதந்த உறவுகள் அனைவருக்கும் நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

பாகம் 2:

தன்னுடைய அதிர்ஷ்டம் இப்படி மாறும் என மகேந்திரன் நினைக்கவேயில்லை.. தாய்லாந்தில் பிடிபடும் சூழ்நிலைகள்எத்தனையோ வந்தபோதும் ஒருவழியாக சமாளித்தவன்தான்.. மலேசிய கடவுச்சீட்டு ஒன்று கிடைத்து லண்டன் வந்து சேரும் மட்டும் மனக்கலக்கமும் கூடவே வந்து சேர்ந்திருந்தது கடவுச்சீட்டு எதுவும் இல்லாமலேயே.. :wub:

சிக்கலான சூழ்நிலைகளை சமாளித்தவனுக்கு பூவூம் பொட்டுடன் கழுத்தில் மின்னிய புதுத்தாலியுடன் அபியைக் கண்டபோது, இடியே தலையில் விழுந்ததுபோல் கலங்கித்தான் போனான். பைத்தியம் பிடித்தவன்போல் அடுத்த மூன்று மாதங்கள் சுற்றித் திரிந்தவன்தான்..

இன்று கொலியர்ஸ்வுட் ரயில் நிலையத்தில் நிற்கிறான்.. யாருடைய ஆதரவுமற்ற ஒரு அனாதை..

"மகி..!"

திரும்பிப் பார்க்கிறான். சிறு பிரயாணப் பொதியும் கையுமாக அபி. கட்டியணைத்துக் கொள்கிறாள் அபி.. :huh:

"என்ன அபி.. தாலிக்கொடியைக் காணேல்ல..?"

"தாலியை கழட்டி வச்சிட்டு வந்திட்டன்.. ஆனால்.. கொடியை ஹான்ட் பாக்குக்குள்ள வச்சிருக்கிறன்.. அது 21 பவுன்.. இப்ப ஸ்ரேர்லிங் பவுண்ட்ஸ்.." :D

தனது அதிர்ஷ்டம் இப்படி மாறும் என்று மகேந்திரன் நினைத்திருக்கவேயில்லை.. :wub::D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றாகத்தான் இருக்குத் தொடர். ம் போற் இடமெல்லாம் வில்லங்கமாக் கிடக்கு

  • கருத்துக்கள உறவுகள்

வாசித்தேன் ரசித்தேன்.....கதைக்கு நன்றிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.