Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முரளி விஜய் ஆஸ்திரேலியாவில் அடித்து நொறுக்கியும் புண்ணியம் இல்லாம போச்சே!

Featured Replies

முரளி விஜய் ஆஸ்திரேலியாவில் அடித்து நொறுக்கியும் புண்ணியம் இல்லாம போச்சே!

 

 

சென்னை: தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்று தொடக்க போட்டிகளில் மிகச் சிறப்பாக ஆடி ரன் குவித்த தமிழகத்தின் முரளி விஜய்க்கு உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இந்திய தேர்வாளர்கள் மறுத்துள்ளனர். விராத் கோஹ்லி போல முரளி விஜய்யும் ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக ஆடி வந்தார். சதம், அரை சதம் என்று இவரும் தன் பங்குக்கு ரன் குவித்தார். அதை விட முக்கியமாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, ஆஸ்திரேலியாவில் மிகச் சிறப்பாக விளையாடும் இந்திய வீரர் என்ற பெருமையும் இவருக்கு மட்டுமே உண்டு.

 

 

முரளி விஜய் ஆஸ்திரேலியாவில் அடித்து நொறுக்கியும் புண்ணியம் இல்லாம போச்சே! நடப்புத் தொடரிலும் கூட இவரது சிறப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் திணறிப் போகும் நிலையும் ஏற்பட்டது. முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும் இவர் விளையாடிய விதத்தைப் பார்த்தாலே இது தெரியும். இங்கு மட்டுமல்ல, கடந்த சில மாதங்களாகவே முரளி விஜய் நன்றாகத்தான் ஆடி வருகிறார். டெஸ்ட் போட்டிகளில் அவர் தற்போது நிலையாக ஆடி ரன் குவிக்கிறார். கடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இவர்தான் அதிக ரன்களைக் குவித்துள்ளார் (402). ஆஸ்திரேலியத் தொடரிலும் இவர் 3 போட்டிகளில் 402 ரன்களைக் குவித்து வைத்துள்ளார்.

 

 

வேகப் பந்து வீச்சு, பவுன்ஸ் என எதைப் பார்த்தும் இவர் அஞ்சுவதில்லை என்பதே முரளியின் மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட். மேலும் வெளிநாடுகளில் இவர் சிறப்பாக விளையாடுவதும் அனைவருக்கும் தெரிந்ததே. ஆனாலும் என்ன புண்ணியம்.. ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெறப் போகும் உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் முரளி விஜய்க்கு இடம் கொடுக்கப்படவில்லை. தற்போது ஆஸ்திரேலிய மண்ணில் நல்ல பார்முடன் உள்ள வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும்போது அது அவர்களுக்கு மட்டுமல்லாமல் அணிக்கும் கூட பிரயோஜனமாக இருக்கும்.

இருப்பினும் இ்ந்திய தேர்வாளர்கள் அந்த அளவீட்டின்படி வீரர்களைத் தேர்வு செய்துள்ளனர் என்று தெரியவில்லை, புரியவில்லை. மொத்தத்தில் ஆஸ்திரேலியாவில் சிறப்பாக ஆடியும் கூட அந்த மண்ணில் நடைபெறப் போகும் உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்க முடியாத நிலைக்கு முரளி விஜய் தள்ளப்பட்டுள்ளார்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/in-form-murali-vijay-ignored-wc-218444.html

  • தொடங்கியவர்

உலக கோப்பைக்கான இந்திய அணியில் ஒரே ஒரு தமிழக வீரர்! கடைசி நேரத்தில் விஜய்க்கு கல்தா

 

 

மும்பை: உலக கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணியில் தமிழகத்தை சேர்ந்த ஒரு வீரருக்கு மட்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியில் தமிழகத்தின் ஆதிக்கம் எப்போதுமே குறைவுதான். கர்நாடகாவும், மகாராஷ்டிராவும்தான் அதிக வீரர்களை அளித்து வந்தது. ஆனால் சமீபகாலமாக டெல்லி ஆதிக்கம் தலை தூக்கியுள்ளது. உலக கோப்பைக்கான இந்திய அணியில் ஒரே ஒரு தமிழக வீரர்! கடைசி நேரத்தில் விஜய்க்கு கல்தா 1983ம் ஆண்டு இந்தியா முதல் முறையாக உலக கோப்பையை வெற்றி பெற்றபோது, அந்த அணியில் தமிழகத்தை சேர்ந்த வீரர், ஸ்ரீகாந்த் இடம் பெற்றிருந்தார்.

 

2011ல் இந்தியா மீண்டும் உலக கோப்பையை தூக்கியபோது, 15 பேர் கொண்ட அணியில் தமிழக வீரரான அஸ்வின் இடம் பெற்றிருந்தார். அதற்கு முந்தைய 2007 உலக கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியில் தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் இடம் பெற்றிருந்தார். ஆனால் அதற்கும் முந்தைய உலக கோப்பைகளில் தமிழகத்துக்கு ஏமாற்றமே கிடைத்தது. இம்முறையும் தமிழகத்தின் சார்பில் அஸ்வின் மட்டுமே இடம் பெற்றுள்ளார். மற்றொரு தமிழக வீரரான முரளி விஜய், டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும், அவருக்கு பதிலாக ஆல்ரவுண்ட்ர் ஸ்டூவர்ட் பின்னிக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. முரளி விஜய்தான் தேர்வு செய்யப்பட உள்ளதாக கடைசி வரை நிலைமை இருந்தது, ஆனால் சில சிபாரிசுகள், பின்னிக்கு அந்த வாய்ப்பை பெற்றுத்தந்ததாக கூறுகிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/world-cup-indian-squad-ashwin-is-the-only-player-from-tamil-nadu-218451.html

  • தொடங்கியவர்

கேள்விகளைச் சந்திக்காத தேர்வுக்குழுத் தலைவர் சந்தீப் பாட்டீல்: செய்தியாளர்கள் அதிர்ச்சி
 

 

உலகக்கோப்பை கிரிக்கெட் அணியை அறிவிக்கும் செய்தியாளர்கள் கூட்டத்தில் இந்திய அணித் தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பாட்டீல் கேள்விகளுக்கு பதில் அளிக்காதது செய்தியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

சந்தீப் பாட்டீல் தேர்வுக்குழுத்தலைவராகி சுமார் 2 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. ஆனால், எந்த ஒரு தருணத்திலும் அவர் செய்தியாளர்களைச் சந்தித்து ஒரு வார்த்தை கூட பேசியதில்லை.

இந்த முறை உலகக் கோப்பை அணியை அறிவிக்கும் சந்திப்பில் சந்தீப் நிச்சயம் கேள்விகளைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மும்பையில் இன்று பிசிசிஐ அலுவலகம் முன்பு காத்திருந்த பத்திரிகையாளர்களை செயலர் சஞ்சய் படேல் அறிவிப்பின்றி முறையான செய்தியாளர்கள் சந்திப்பிற்கு உள்ளே அழைத்தார்.

 

 

சஞ்சய் படேலுடன் சந்தீப் பாட்டீலும் இருந்தார். ஆனால் அணியை அறிவித்ததும் சஞ்சய் படேல், கேள்விகளுக்கு பதில் அளித்ததும் சஞ்சய் படேல். செய்தியாளரக்ள் சந்தீப் பாட்டீலை நோக்கி கேள்விகளைக் கேட்டும் சஞ்சய் படேல்தான் பதிலளித்தார்.

இன்று சிட்னி டெஸ்ட் போட்டியில் இஷாந்த் சர்மா விளையாடதது ஏன் என்பதற்கு மட்டும் அவருக்கு முழங்கால் காயம் ஏற்பட்டதாக சஞ்சய் படேலிடம் சந்தீப் தெரிவித்தார்.

1983ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இந்தியா கபில்தேவ் தலைமையில் வென்ற இந்திய அணியின் முக்கிய வீரராக இருந்த சந்தீப் பாட்டீல் ஏன் பதிலளிக்காமல் உடனிருந்தார் என்பது செய்தியாளர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

 

 

கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தேர்வுக்குழு தலைவராக இருந்த போது விரேந்திர சேவாக் பற்றி செய்தியாளர் ஒருவர் மீண்டும் மீண்டும் கேட்க எரிச்சலடைந்த ஸ்ரீகாந்து அவரை நோக்கி கடும் சொற்களைப் பயன்படுத்தினார். அதிலிருந்து தலைமைத் தேர்வாளர் செய்தியாளர்களுக்கு நேரடியாக பதில் அளிப்பதை பிசிசிஐ நிறுத்தி வைத்துள்ளது போலும்.

6 ஆண்டுகளுக்குப் பிறகு அணித் தேர்வுக்குழு கூட்டம் முடிந்த பிறகு பிசிசிஐ தலைமை அலுவலகத்திற்குள் செய்தியாளர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ-யைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/article6760594.ece

  • கருத்துக்கள உறவுகள்

கே.எல் ராகுல் என்று ஒரு கர்நாடகா பெடியை கூட்டிக் கொண்டு போயுள்ளார்கள்.. போன டெஸ்ட் போட்டியின் இரண்டு இனிங்ஸ் இலும் சொதப்பினார்.. இந்தப் போட்டியில்இன்னொரு வாய்ப்பு கொடுத்துள்ளார்கள். ஸலிப்சில் இலகுவான ஒரு பிடியை தவறவிட்டது பெடி. இதனால் அவுசுக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது..

டிராவிட் இந்தப் பெடிக்கு ஆதரவாம்.. :rolleyes:

  • தொடங்கியவர்

மகனை தேர்வு செய்த தந்தை
ஜனவரி 06, 2015.

 

இந்திய அணி தேர்வாளர்களில் ஒருவர் ரோஜர் பின்னி. கடந்த 1983 உலக கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றவர். நேற்று நடந்த தேர்வுக்குழுவில் பங்கேற்ற இவர், ஐ.பி.எல்., சூதாட்ட அறிக்கையில் இடம் பெற்ற தனது மகன் ஸ்டூவர்ட் பின்னியை தேர்வு செய்தது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

 

விஜய் பாவம்

தற்போதைய ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் எதிர்பார்ப்புக்கு மாறாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் துவக்க வீரர் முரளி விஜய். பயிற்சி போட்டிகளில் இரு அரைசதம் (51, 60) அடித்த இவர், முதல் 3 டெஸ்டில் (53, 99, 144, 27, 68, 11) மொத்தம் 402 ரன்கள் குவித்து, அதிக ரன்கள் சேர்த்த வீரர்களில் 4வது இடத்தில் உள்ளார்.

 

இப்படி அசத்தியும் உலக கோப்பை அணியில் இவரை தேர்வு செய்யாதது ஏன் என்றே புரியவில்லை. தவிர, கடந்த உலக கோப்பை தொடரில் தொடர் நாயகன் ஆன, யுவராஜ் சிங்கையும் புறக்கணித்து விட்டு, 6 போட்டியில் மட்டும் பங்கேற்று மொத்தம் 40 ரன்கள் எடுத்த ஸ்டூவர்ட் பின்னியை எப்படித் தான் தேர்வு செய்தார்களோ. எல்லாம் அவரது தந்தைக்குத் தான் தெரியும்.

 

http://sports.dinamalar.com/2015/01/1420565736/stuartbinnyteamindia.html

  • தொடங்கியவர்

டோணி வைத்த கோரிக்கைகளை கண்ணை மூடிக் கொண்டு டிஸ்மிஸ் செய்த பாட்டீல் அன் கோ!!

 

 

மும்பை: முரளி விஜய்யை சேர்க்க வேண்டும். வருண் ஆரோனை சேர்க்க வேண்டும் அது முடியாவிட்டால் மோஹித் சர்மாவை சேர்க்க வேண்டும். இதெல்லாம் கேப்டன் டோணி தேர்வுக் குழுவிடம் வைத்த கோரிக்கைகள். ஆனால் அனைத்துக் கோரிக்கைகளையும் தேர்வுக் குழு நிராகரித்து விட்டதாம். உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிக்கான 15 பேர் கொண்ட அணியை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக் குழு சந்தீப் பாட்டீல் தலைமையில் கூடி நேற்று அறிவித்தது. இதில் பலருக்கும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் கேப்டன் என்ற முறையில் டோணி வைத்த கோரிக்கை அனைத்தையும் தேர்வுக் குழு நிராகரித்து விட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. டோணி வைத்த கோரிக்கைகளை கண்ணை மூடிக் கொண்டு டிஸ்மிஸ் செய்த பாட்டீல் அன் கோ!! தற்போது ஆஸ்திரேலியாவில் முகாமிட்டுள்ள டோணியுடன், வீடியோ கான்பரன்சிங் மூலம் தேர்வுக் குழுவினர் ஆலோசனை நடத்தி அணியைத் தேர்வு செய்தனர். அப்போது 3 கோரிக்கைகளை வைத்துள்ளார் டோணி.

 

1. கூடுதல் தொடக்க வீரராக முரளி விஜய்யை சேர்க்க வேண்டும். 2. 5 வது வேகப்பந்து வீரராக மோகித்சர்மா அல்லது வருண் ஆரோனை தேர்வு செய்ய வேண்டும். ஆனால் இந்த இரண்டு கோரிக்கைகளையும் தேர்வுக் குழு ஏற்கவில்லையாம். விஜய் ஆஸ்திரேலியாவில் சிறப்பாக ஆடி வருவதை சுட்டிக் காட்டி அவரைச் சேர்க்க்க கோரினாராம் டோணி. ஆனால் அதை தேர்வுக் குழு ஏற்கவில்லையாம். நிராகரிப்புக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/selectors-refuse-heed-dhoni-s-demands-218523.html

  • கருத்துக்கள உறவுகள்

நிராகரிப்புக்குக் காரணம் முரளி விஜய் தமிழ்நாட்டுக்காரர். இதைப் பார்த்த பிறகாவது தமிழ்நாட்டு ரசிகர்கள் திருந்த வேண்டும்.

  • தொடங்கியவர்

 இது இன்று நேற்று அல்ல பல காலமாக நடைபெறுகிறது. முன்பு  வெங்கட்ராகவன் என்று ஒரு தமிழ்நாட்டு வீரர் இருந்தார்.

 

அவரை அணித்தலைவராக ஒரு வெளிநாட்டு போட்டிக்கு நியமித்தார்கள். விமானத்தில் ஏறும் நேரம் கவாஸ்கர் உட்பட பல வீரர்கள்

 

விமானத்தில் ஏறாமல் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

 

http://en.wikipedia.org/wiki/Srinivasaraghavan_Venkataraghavan

 

 

http://www.espncricinfo.com/india/content/player/35656.html

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் முரளி விஜய்க்கு இடமில்லை. அவரை சேர்க்க மறுத்து விட்டது இந்திய அணித் தேர்வாளர் குழு. ஆனால் அவரோ டெஸ்ட் கிரிக்கெட்டில், ஆஸ்திரேலியாவில் வைத்து ஒரு புதிய சாதனை படைத்துள்ளார்.

இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஒருவர் ஆஸ்திரேலியாவில் அதிக அளவில் ரன் குவித்த சாதனை இதுவரை வீரேந்திர ஷேவாக்கிடம் இருந்து வந்தது. அதாவது அவர் 58 என்ற சராசரியுடன், 2003-04 தொடரில் 464 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்து வந்தது. ஆனால் முரளி இதை அடித்து நொறுக்கியுள்ளார். அவர் 60.25 என்ற சராசரியுடன், 482 ரன்களைக் குவித்து சாதனை படைத்துள்ளார்.

அவருடைய அருமையான பேட்டிங்குக்கு சாட்சியமாக இது விளங்குகிறது. ஆனால் செமத்தியான பார்மில் இருக்கும் முரளி விஜய்க்கு உலகக் கோப்பைத் தொடரில் இடம் கொடுக்காமல் மறுத்துள்ளனர் தேர்வாளர்கள்.

http://tamil.oneindia.com/news/sports/india-vs-australia-murali-vijay-betters-virender-sehwag-record-218765.html

முரளி விஜயை இனி இணைத்து கொள்ளுவார்கள் என்று நம்புகின்றேன் .

முதல் இரண்டு உலக கோப்பைக்கு கப்டனாக நியமித்தது வெங்கட்ராகவனைத்தான் .முதல் உலக கோப்பை ஒரு ஆட்டம் மட்டும் வென்றார்கள் என்று நினைக்கின்றேன் இரண்டாவது உலக கோப்பை அனைத்து ஆட்டங்களும் தோல்வி இலங்கை உட்பட .மூன்றாவது உலக கோப்பை கபில்தேவ் தலைமை தாங்கி கோப்பையை வென்றார் .

 

பாகுபாடு இல்லை என்று சொல்லவரவில்லை ஆனால் எம்மவர் கொடுத்த சந்தர்பங்களையும் சரியாக பயன்படுத்தவில்லை என்பதுதான் உண்மை .பட்டியல் ரொம்ப நீளம் .இலங்கை டீமிலும் அதே தான் நடந்தது .அப்ப எப்படி முரளிதரன் உலக சாதனை நிகழ்த்தினார் .

  • தொடங்கியவர்

உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவித்துவிட்டார்கள். அதில் முரளி விஜய் இல்லை.

அவுஸ்ரேலியாவில் தற்சமயம் நல்லாக ஆடியவரை உலக கோப்பைக்கான அணியில் இணைக்காமல் விட்டது ஆச்சரியமாக இருக்கிறது.

தோனி கேட்டும் சேர்க்கும் படி, அது நடக்கவில்லை. மேலே உள்ள செய்திகளின் படி.

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.