Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணாவின் உதவியாளர் இனியபாரதியை மட்டக்களப்பை விட்டே அடித்து துரத்திய மக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கருணாவின் உதவியாளர் இனியபாரதியை மட்டக்களப்பை விட்டே அடித்து துரத்திய மக்கள்

 

10693_10204713725836892_1100042538354754

 

 

கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அம்பாறை மாவட்ட இணைப்பாளருமான கே.புஸ்பகுமாரின் (இனியபாரதி) வீட்டை வெள்ளிக்கிழமை(09) முற்றுகையிட்ட பிரதேச மக்கள் அவரை பிரதேசத்தை விட்டு வெளியேறுமாறு கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். அத்துடன், வீட்டிற்குள் நுழைந்து அவருக்கு தர்மஅடி கொடுக்கவும் முனைந்தனர். இதனால் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

திருக்கோவில் பிரதேசத்தில் தம்பிலுவில் மத்திய சந்தைக்கு முன்பாக  அமைத்துள்ள அவரது விட்டை முற்றுகையிட்டு, சுமார்  இரண்டு மணித்தியாலயங்களுக்கு மேலாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். நிலைமை மோசமடைந்து செல்வதையடுத்து, அங்கு பொலிசாரும், இராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வந்து, மக்களை கட்டுப்படுத்தினார்கள்.

 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன்  தலைமையில் இராணுவம் மற்றும் பொலிசார் தரப்பிற்கும் பொதுமக்களிற்கிடையிலும் சமரசப் பேச்சு நடந்தது. அவரை தமது பிரதேசத்தில் இருந்து வெளியேற்றிவிட வேண்டுமென மக்கள் உறுதியாக நின்றதையடுத்து, அவர் இராணுவப்பாதுகாப்புடன் அந்த பிரதேசத்தைவிட்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

 

கருணா தலைமையிலான ஒட்டுக்குழுவின் உறுப்பினராகவும், பின்னர் ஜனாதிபதியின் இணைப்பாளர் என்ற பெயரில் அவர் அந்த பகுதியில் செய்த அட்டகாசத்தினாலேயே மக்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

http://www.deepamnews.com/details.php?nid=1&catid=22803&hit

இந்தச்செய்தியும் உண்மையா அல்லது கேபி தப்பிட்டார் என்று சொன்னது போலவா ...முடியல  :D

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள், துராேகிகளை தங்களால் முடிந்த பாணியில் வெளியேற்றுகிறாா்கள். இது பல வழியில் பலரால் பலபோ்வழிகளுக்கும் தாெடரும். நல்லவேளை காேத்தா தப்பிவிட்டாா். மக்களை காேமாளிகள் என்று நினைத்த தறுதலையள்தான் இயக்கத்தையும் கருவறுத்ததுகள். வருட தாெடக்கமே நல்ல செய்தி. தாெடரட்டும். ஆளான ஆளையே மண் கவ்வ வைச்சு விட்டாா்கள். சனம் றெயின் பாக்குது, காணாததை காணுது, அா்த்த ராத்திரியில குடை பிடிக்குதெண்டுதான் நானுமிருந்தனான். அரசியல் வாதியளை நாங்கள் நம்பேலை, எங்களுக்கு என்ன வேணும்?  உங்களை காப்பாத்துற உங்கட அபிவிருத்தி புலுடா வேண்டாமெண்டு செயலிலையும் இறங்கிட்டுதுகள். "மக்கள் இதை ஏற்றுக் காெள்ளமாட்டாா்கள்" எண்டு அடிக்கடி பிள்ளையையும்கிள்ளி தாெட்டிலையும் ஆட்டுற ஆட்சிக்கு, சந்தா்ப்பத்துக்கு ஒன்றுபேசும் தலைமைகளுக்கு, "தன்கையே தனக்குதவி". என்று காட்டி விட்டாா்கள். ஈழத்து எம்.ஜி.ஆா்? ? ஐ......ஐ..... இனி ஒரு வீரவசனம் பேசி வாக்கு கேக்கேலாது. மக்களே வீரராகிவிட்டாா்கள். ஆளான ஆளெல்லாம் தப்பியாேட, இது நிலவு நிரந்தரம் எண்டு இருந்திருக்குது.வாங்கி கட்டி இருக்குது.

இந்தச்செய்தியும் உண்மையா அல்லது கேபி தப்பிட்டார் என்று சொன்னது போலவா ...முடியல  :D

 

இந்த செய்தி உண்மை, இவருக்கு அடியும் விழுந்தது உண்மை. 

 

இராணுவத்தை உதவிக்கு கூப்பிட்டதும் அவருடைய பினாமிகள் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

எஜமானனையே துரத்தி போட்டோம் ஏன் அவரின்ட ஆலோசகர் எங்களுக்கு என சனம் நினைச்சிட்டுது போல :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.