Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெல்லிப்பழை மகாஜனா, யூனியன் கல்லூரிகளின் கிணறுகளில் எண்ணெய்க் கசிவு

Featured Replies

image1(3).JPG

 

தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி மற்றும் தெல்லிப்பழை யூனியன் கல்லூரிகளிலுள்ள கிணறுகளிலும் எண்ணெய் கசிவு இருப்பதாக சுகாதார பரிசோதகர்களால் வழங்கப்பட்ட தகவலையடுத்து, மாணவர்களுக்கான குடிநீருக்கான மாற்று நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக இரு கல்லூரிகளின் அதிபர்களும் தெரிவித்தனர்.

 

இது தொடர்பில் கருத்து தெரிவித்த தெல்லிப்பழை யூனியன் கல்லூரி அதிபர் க.ரட்ணகுமார்,

 

'கடந்த 6ஆம் திகதி சுகாதார பரிசோதகர்களால் எமது பாடசாலை கிணறு சோதனை செய்யப்பட்டு, அதில் எண்ணெய் கசிவுகள் தென்படுவதாகவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தியிருந்தனர்' என்றார். 'இது தொடர்பாக தெல்லிப்பழை பிரதேச செயலகம், வலிகாமம் வடக்கு பிரதேச சபை ஆகியவற்றுக்கு அறிவித்து அவர்களின் மூலம், குடிநீர் வசதிகளை பாடசாலையில் மேற்கொண்டு வருகின்றோம்.  எமது பாடசாலையில் 1,020 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். 60 ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றனர்' எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த மகாஜனாக் கல்லூரி அதிபர் ம.மணிசேகரன், 'எமது பாடசாலையில் பொதுக்கிணறு உள்ளது. நீர் இறைக்கும் இயந்திரம் மூலம் நீரை பெற்று வருகின்றோம். கிணற்று நீரின் மேற்பகுதி தூசுகள் படிந்த நிலையில் காணப்படுகின்றது' என்றார். 'தெல்லிப்பழை சுகாதார வைத்தியதிகாரி, சுகாதார பரிசோதகர்களால் கடந்த வாரம் பரிசோதனை மேற்கொண்டு, எண்ணெய் கசிவு காணப்படுவதாகவும் குடிநீருக்கு உரிய மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டது. அதற்கமைய குடிநீர் பெற்றுக்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளோம்.

 

எமது பாடசாலையிலுள்ள 1,700 மாணவர்களும், 75 ஆசிரியர்களும் இந்த நீரையே தற்போது பருகி வருகின்றனர்' எனவும் அவ்வதிபர் தெரிவித்தார்.  இது தொடர்பாக கருத்து தெரிவித்த தெல்லிப்பழை சுகாதார வைத்தியதிகாரி ப.நந்தகுமார், 'தெல்லிப்பழை சுகாதார வைத்தியதிகாரி பிரிவின் கீழுள்ள கட்டுவன், மல்லாகம், தெல்லிப்பழை ஆகிய சுகாதார பரிசோதகர் பிரிவுகளிலுள்ள 800 க்கும் அதிகமான கிணறுகளில் எண்ணெய் கசிவு கண்டறியப்பட்டுள்ளது. அந்த பகுதிகளிலுள்ள கிணறுகளின் நீர் எடுக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட மாதிரிகளில் 90 வீதமானவை எண்ணெய் கசிவு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது' என்றார்.

 

அத்துடன், 'எண்ணெய் கசிவு ஏற்பட்ட கிணறுகளிலுள்ள நீரானது பாவனைக்கு உகந்ததல்ல. இது தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். இது தொடர்பாக பிரதேச செயலகம், பிரதேச சபைக்கு ஆகியவற்றுக்கு அறிவித்துள்ளோம். அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நீரை வழங்கி வருகின்றார்கள். எனினும் அவை போதியளவாக இருக்கவில்லை. இருப்பினும் குடிநீர் விநியோகமும் பரிசோதனை நடவடிக்கைகளும் தேவைப்படுகின்றது. அதிகாரிகள் கூடிய கவனம் எடுக்க வேண்டும்' எனக் கூறினார். சுன்னாகம் பகுதியில் அமைந்துள்ள இலங்கை மின்சார சபையின் மின்பிறப்பாக்கியிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு எண்ணெய் வெறுமனவே நிலத்தில் கொட்டப்பட்டமையால் சுற்றாடலிலுள்ள கிணறுகளில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதாகக் கூறி, உத்துரு ஜனனி மற்றும் நொர்தேன் பவர் நிறுவனங்களுக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 http://www.tamilmirror.lk/137592#sthash.Fwj3ItPI.dpuf

  • தொடங்கியவர்
அரசியல் பின்புலத்தால் மறைக்கப்பட்ட சுன்னாகம் கழிவு ஒயில் விவகாரத்தை இனியாவது வெளிக்கொணர்ந்து தீருங்கள்
 
chunnakam%2098787780.jpg
 
கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக சுன்னானம் மின் உற்பத்தி நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவு ஓயில் குறித்து மக்கள் விசனம் தெரிவித்தபோது அதிகாரிகள், அரசியல்வாதிகளின் துணையுடன் இந்த பிரச்சினையை வெளிவராது தடுத்தனர். இதன் காரணமாகவே இன்று பொதுமக்கள் குடிதண்ணீருக்கு அலையவேண்டியுள்ளது. எனவே இனியாவது அரசியலைக் கடந்து இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
சுன்னாகம் மேற்கு பகுதியில் உள்ள கிணறுகளில் தற்போது பரவும் கழிவு ஓயில் சம்பந்தமான கலந்துரையாடல் சுன்னாகம் சிவன்கோவில் மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை சி.குமாரவேல் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் சுமார் நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டு தமது நிலைமையை எடுத்துரைத்தனர்.
 
கடந்த காலத்தில் இந்தப் பிரச்சினை எழுந்த போதிலும், சுகாதார அதிகாரிகளும், அரச ஊழியாகளும் இதுவரையில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டையும் முன்வைத்தனர். இந்தக் கூட்டத்தில் உடுவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அ.ஜெயக்குமரன், வட மாகாண சபை உறுப்பினர் கே.கஜதீபன், பிரதேச சபையின் செயலாளர், பொது சுகாதார பரிசோதகர்கள், பிரதேச சபையின் உறுப்பினர் எனப் பலரும் கலந்து கொண்டார்கள்.
 
chunnakam%2098787779.jpg
 
 
chunnakam%2098787778.jpg
 
http://www.malarum.com/article/tam/2015/01/14/8086/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%92%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-.html#sthash.jxnAOaQA.dpuf
 
 

 

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு ஒரு, ஈனத்தனமான... செயல். :o 
ஒரு அரச நிறுவனமே.... கழிவு எண்ணையை, நிலத்தில் எட்டு வருடங்களாக ஊற்றிக் கொண்டு வந்துள்ளதை,

கற்பனையில் கூட... நினைத்துப் பார்க்க முடியவில்லை.
 

இப்போ.... அந்த இடத்தை சுற்றியுள்ள...சுன்னாகம், மல்லாகம், தெல்லிப்பளை மக்களுக்கு நல்ல நீரை... யார் கொடுப்பது? :(

 

இங்கு.... ஒரு போத்தல் எண்ணை நிலத்தில் ஊற்றப் பட்டாலே.... அடுத்த நிமிடம் தீயணைப்பு வண்டி,

காவல் துறை என்று பதறியடித்துக் கொண்டு வந்து விடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
சுன்னாகத்தில் ஊற்றிய எண்ணெய் இவளவு தூரத்தில் தெள்ளிபளை வரை செல்லுமா?
மண் எல்லாவற்றையும் வடி கட்டிவிடாதா ?
இது எதோ எண்ணெய் போலதான் தெரிகிறது .... அல்லது யாராவது கிணறுகளில் ஊற்றுகிரார்களோ ?
தெரியவில்லை.

எவ்வளவு ஒரு, ஈனத்தனமான... செயல். :o 

ஒரு அரச நிறுவனமே.... கழிவு எண்ணையை, நிலத்தில் எட்டு வருடங்களாக ஊற்றிக் கொண்டு வந்துள்ளதை,

கற்பனையில் கூட... நினைத்துப் பார்க்க முடியவில்லை.

 

இப்போ.... அந்த இடத்தை சுற்றியுள்ள...சுன்னாகம், மல்லாகம், தெல்லிப்பளை மக்களுக்கு நல்ல நீரை... யார் கொடுப்பது? :(

 

இங்கு.... ஒரு போத்தல் எண்ணை நிலத்தில் ஊற்றப் பட்டாலே.... அடுத்த நிமிடம் தீயணைப்பு வண்டி,

காவல் துறை என்று பதறியடித்துக் கொண்டு வந்து விடுவார்கள்.

 

இது ஒரு தனியார் நிறுவனம் என்றும் அதற்கு பொறுப்பாக ஒரு பிரித்தானியர் உள்ளார் என்றும் அண்மையில் ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டு இருந்தது.

 

சுன்னாகத்தில் ஊற்றிய எண்ணெய் இவளவு தூரத்தில் தெள்ளிபளை வரை செல்லுமா?
மண் எல்லாவற்றையும் வடி கட்டிவிடாதா ?
இது எதோ எண்ணெய் போலதான் தெரிகிறது .... அல்லது யாராவது கிணறுகளில் ஊற்றுகிரார்களோ ?
தெரியவில்லை.

 

 

கடந்த 8  வருடங்களால் நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான லீட்டர் கழிவு எண்ணெய் நேரடியாக நிலத்தில் கொட்டப்பட்டுக் கொண்டு இருக்கின்றது....

தேடும் போது கிடைத்தது

 

 

-----------

 

பிரித்தானிய அரசியலில் மட்டுமல்ல இலங்கை அரசியலிலும் அதிகாரத் தரகராகச் செயற்படும் நிர்ஜ் தேவா என்ற ஐரோப்பியப் பாராளுமன்ற உறுப்பினர் (MEP) சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளார். யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு மின்சாரம் வழங்கும் தனியார் நிறுவனமான mtd walkers plc இன் இயக்குனர்களில் ஒருவரான இவர் பிரித்தானிய ஆளும் கட்சியின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவராவார்.

 

வெளி நாட்டு அபிவிருத்திக்கான கொன்சர்வேட்டிவ் கட்சியின் பேச்சாளரான இவர், பல்தேசிய நிறுவனங்களில் அறியப்பட்ட தரகர்களில் ஒருவர். பில்கேட்ஸ் அறக்கட்டளை வறிய நாடுகளின் மக்களை மருந்துகளைப் பரிசோதிப்பதற்கன எலிகள் போன்று பயன்படுத்துகிறது. மூன்றாம் உலக நாடுகளில் பில்கேட்ஸ் அறக்கட்டளையை அறிமுகப்படுத்தி ஆதரிப்பவர்களில் நிர்ஜ் தேவா முக்கிய புள்ளி.

 

சுன்னாகம் மின் உற்பத்தி நிலையம் ipp power என்ற முறையில் பெற்றோலியக் கழிவு எண்ணைகளின் ஊடாக உற்பத்தி செய்யப்படுகின்றது. சிறிய அளவிலான மின்னுற்பத்திக்கே பொருத்தமான இந்த முறையினூடாக உற்பத்தி செய்யப்படும் யாழ் குடா நாட்டின் மின்னுற்பத்தி பெரும் தொகையான கழிவுகளை விட்டுச் செல்கிறது. இக் கழிவுகளை உரிய முறையில் வெளியேற்ற பெரும் தொகைப் பணம் செலவாகும் என்பதால், உற்பத்தியில் ஈடுபடும் பல்தேசிய நிறுவனமான எம்.ரி.டி வோக்கஸ், மக்கள் பயன்படுத்தும் நிலப்பகுதிகளில் அவற்றை வெளியேற்றுகிறது. ஒப்பீட்டளவில் சிறிய நிலப்பரப்பான யாழ் குடா நாட்டுப் பகுதியில் மக்கள் போத்தலில் அடைக்கப்பட்ட நீரைப் பயன்படுத்திய வரலாறு கிடையாது.

 

சுத்தமான நீரைக் கொண்ட யாழ்ப்பாண மண்ணின் நீரை சுன்னாகம் மின்னுற்பத்தில் நிலையத்திலிருந்து வெளியாகும் கழிவுகள் நச்சாக்கி வருகின்றன. சுன்னாகம், ஏழாலை, கோப்பாய் போன்ற பகுதிகளில் நீர் அசுத்தமடைந்ததால் மக்கள் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆய்வு செய்து கொண்டிருப்பதாக வாக்குப் பொறுக்கும் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கிறது. மக்கள் போராடத் தயாரானாலும் அவர்களை முடக்குவதே அரசியல் கட்சிகளின் தொழில் என்பது வேறுவிடயம்.

 

இக் கழிவுகள் யாழ் குடாநாட்டின் நீர் வளத்தையும் விவசாயத்தையும் அடியோடு அழிக்கும் நிலை உருவாகியுள்ளது.

சுற்றுச் சூழலை நச்சாக்கும் கிரிமினல் வேலையில் ஈடுபட்டிருக்கும் எம்.ரி.டி வோக்கேஸ் என்ற மலேசிய நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவராக நிர்ஜ் தேவா பதவி வகிக்கிறார். பிரித்தானியாவிலிருந்து ஈழம் பிடிக்கிறோம் என்று கூச்சலிடும் தமிழர் தலைமைகள் நிர்ஜ் தேவாவின் சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் குற்றச் செயலுக்கு எதிராக பிரித்தானியாவில் வழக்குத் தாக்கல் செய்ய அத்தனை வாய்ப்புக்களும் உண்டு. யாழ்ப்பாணத்திற்குச் சென்று எம்.ஜீ.ஆர் பாணியில் படம் காட்டிய டேவிட் கமரனை விழுந்து வணங்கிய தமிழர் தலைமைகள் அவரது கட்சியின் முக்கிய உறுப்பினர் ஒருவரின் ஊடாக அழிப்பு நடக்கும் போது அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். மக்களிடம் பணம் திரட்டவும் அதிகாரம் செலுத்தவும் அலையும் இந்த அமைப்புக்கள் ஈழத்தின் ஒரு பகுதி அழிக்கப்படும் போது வாழவிருப்பதன் நோக்கம் சந்தேகத்திற்குரியது.

 

http://inioru.com/?p=43002

70 80ல் சுண்ணாகத்தில் இருந்துதான் குடிநீர் புகையிரதம் மூலமாக சாவகச்சேரி முதல் பளை வரை வினியோகித்த ஞாபகம். இதற்காக தண்ணி புகையிரதம் தினமும் கான்கேசன்துறையில் இருந்து வரும். இப்புகையிரதத்தில் பாடசாலைக்கு பயணித்த ஞாபகம் மனதை வருடுகின்றது.

 

ஆனால் இன்று சுண்ணாகத்தில் இருப்பவர்க்கே குடிநீர் இல்லை
 
என்ன கொடுமை சரவணா இது !!!!
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பல அறிஞர்கள், அரசியல்வாதிகள் நிறைந்த வலிகாமம் பிரதேசத்தில் சூழல் மாசுபடுத்தல் மேற்கொள்ளபட்டபோது ஏன் ஒன்றும் செய்யமுடியாமல் போனது? தமது வீட்டு கிணற்றில் நல்ல தண்ணீர் வருகின்றது என்பதால் உதாசீனமாய் இருந்தார்களா? கழிவு எண்ணை ஊற்றிய நிறுவனம் மீது சட்ட நடவடிக்கை எடுத்து இழப்பீடு பெறவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.