Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு அதிவேக நெடுஞ்சாலை இடைநிறுத்தம்..!

Featured Replies

D521d15.jpg
 
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆட்சியில் செலிடப்பட்ட முழு விபரங்களை ஆராயும் வரை வடக்குக்கான அதிவேக நெடுஞ்சாலை பணிகள் தற்காலிகமான இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாயக்க தெரிவித்தார்.
 
வடக்குக்கான அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணத்துக்கான முதற்கட்ட பணி கடந்த வருடம் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக மஹிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
 
 இதன்படி, செங்கடகல நுழைவாயிலுக்கான அடிக்கல், முன்னைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவினால்நட்டப்பட்டது. 300 கிலோமீற்றர் நீலத்தைக் கொண்ட இந்த நெடுஞ்சாலை, நான்கு கட்டங்களாக நிர்மாணிக்கப்படவிருந்தது.
 
 முதற்கட்டமாக, என்டேரமுல்லயில் இருந்து அம்பேபுஸ்ஸ வரையிலும், இரண்டாம் கட்டமாக குருநாகல் முதல் பெலெந்தெனிய வரையிலும், மூன்றாம் கட்டமாக தம்புள்ளை வரையிலும் நான்காம் கட்டமாக தம்புள்ளையிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலும் நிர்மாணப் பணிகள் இடம்பெற இருந்தன.
 
 6 ஆயிரத்து 750 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவிருந்த இந்த பாதை 2018 ஆம் ஆண்டு பூர்த்தியடையும் என்று எதிர்வுகூறப்பட்ட போதும் தற்போது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

ravi%2520Karunanayake.jpg

வடக்கு அதிவேக நெடுஞ்சாலைப் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட செயற்திட்டங்கள் தொடர்பில் முழு விபரங்களையும் ஆராயும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாவும், அதன் பின்னரே வடக்கு அதிவேக நெடுஞ்சாலை தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்குக்கான அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணத்துக்கான முதற்கட்ட பணி கடந்த வருடம் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்படி, செங்கடகல நுழைவாயிலுக்கான அடிக்கல், முன்னைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நட்டப்பட்டது. 300 கிலோமீற்றர் நீலத்தைக் கொண்ட இந்த நெடுஞ்சாலை, நான்கு கட்டங்களாக நிர்மாணிக்கப்படவிருந்தது.

முதற்கட்டமாக, என்டேரமுல்லயில் இருந்து அம்பேபுஸ்ஸ வரையிலும், இரண்டாம் கட்டமாக குருநாகல் முதல் பெலெந்தெனிய வரையிலும், மூன்றாம் கட்டமாக தம்புள்ளை வரையிலும், நான்காம் கட்டமாக தம்புள்ளையிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலும் நிர்மாணப் பணிகள் இடம்பெற இருந்தன.

6 ஆயிரத்து 750 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவிருந்த இந்த பாதை 2018 ஆம் ஆண்டு பூர்த்தியடையும் என்று எதிர்வுகூறப்பட்ட போதும் தற்போது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.4tamilmedia.com/newses/srilanka/28568-2015-01-19-07-04-40

ஆரம்பிச்சிட்டாங்யா ஆரம்பிச்சிட்டாங்க.
 
தமிழ் நாடு மாதிரி ஆட்சி மாற்றம் வந்ததும் பழைய ஆட்சியின் அபிவிருத்தி திட்டங்களை கிடப்பில் போடுவதை ஆதரிக்க முடியாது. ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு தடையற்ற மின் விநியோகம், இலகுவான தொலைதொடர்பு, நீர்வழங்கல், தரமான வீதிகள் பாலங்கள போன்ற உட்கட்டுமானங்கள் (infrastructure) மிகவும் அவசியமான ஒன்று. தற்போது யாழ் கண்டி நெடுஞ்சாலை, லோட்டர்ஸ் ரவர் (Lotus Tower), கொழும்பு துறைமுக நகரம்,  லோட்டர்ஸ் சிற்றி (Lotus city), கொழும்பு மொனோ புகையிரதம் (Colombo Monorail), லோட்டர்ஸ் சிற்றி - கட்டுநாயக்கா கடுகதி புகையிரதம் (Airport Express Colombo - Katunayake Speed Train),  இரணைமடுவிலிருந்து யாழிற்கான நீர்வழங்கல் போன்ற பல திட்டங்கள் மகிந்தவால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 
 
வெறுமனே இவை மகிந்தவால் ஆரம்பிக்கப்பட்டது என்பதை விடுத்து  நாட்டின் அபிவிருத்தி, ஏதிர்காலம், பொருளாதாரம் போன்றவற்றை கவனத்தில் எடுத்து ஒரு முடிவுக்கு வரவேண்டும். அம்பாந்தோட்டை துறைமுகம், விமான நிலையம் போலல்லாது இத்திட்டங்கள் வெற்றி பெற வேண்டுமானால் இத்திட்டங்கள் பற்றிய பூரண ஆரம்ப ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். இத்திட்டங்கள் வழங்கும் வேலைவாய்ப்புகள் முதல் வருமானம் வரை கவனத்தில் கொள்ள வேண்டும். ஊழல் முறைகேடுகள் இருப்பின் அதற்கான விசாரணைகளை மேற்கொண்டு  மேலும் முறைகேடுகள் வராமல் பாதுகாத்துக்கொண்டு திட்டங்களை தொடரலாம். இதில் அரசியல் பழிவாங்கல் இருக்கக்கூடாது.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகிந்த ஐயா திருப்பியும் வந்திருந்தால் லம்போகினி வேகத்திலை றோட்டு முன்னேறியிருக்கும். :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.