Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளீ அரசுவைத்தியசாலை மற்றும் பாடசாலை மீது கிபீர் தாக்குதல்

Featured Replies

கிளிநொச்சி வைத்தியசாலை இலக்கு வைத்து தாக்கப்பட்டது என்ற செய்தி மூலம் என்ன சொல்லவாறியள்?

கிளிநொச்சி வைத்தியசாலை மாதிரி ஒரு பாரிய இலக்கை வானில் இருந்து தெளிவாக காணக்கூடிய நிரந்தர இலக்கை தாக்க முடியா இயலாமை சிறீலங்கா விமானப்படைக்கு இருக்கு என்றியளா?

இலக்கில வடிவா குண்டு விளவில்லை திருப்பி கொண்டு வந்து போடச்சொல்லுகிறியளா?

இங்கு உண்மை வைத்தியசாலை சுற்றுவட்டாரத்தில் குண்டு விழுந்தது என்பதை புலிகளின் சமாதான செயலக வரைபே சுட்டிக்காட்டுது. முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டியது கிளிநொச்சி வைத்தியசாலைக்கும் அதன் சுற்றுவட்டாரத்திற்கும் சர்வதேச செஞ்சிலுவை சங்க யுத்த சூனிய பிரதேச அங்கீகாரத்தை ஏற்றுக் கௌ;ள மறுக்கிறது சிறீலங்கா. இதே நிலை தான் நேற்று திறந்து வைக்கப்பட்ட முல்லைத்தீவு வைத்தியசாலைக்கும். இந்த அங்கீகரங்களை பெறுவது மூலம் தான் இந்த வைத்தியசாலைகளை காப்பாற்ற முடியும் அதை மீறி சிறீலங்கா செயற்படும் பொழுது அதற்குரிய பலாபலனை எதிர்கொள்ள சட்டரீதியான சிக்கலிற்குள் சிறீலங்கா மாட்டுப்படும்.

அதை விட்டுட்டு ஏன் கிளிநொச்சி வைத்தியசாலையை இலக்கு வைத்து எண்டு பூச்சாண்டி?

முகமாலை முன்னரங்க பகுதிகளில் தொடர்ந்தும் படையினர் பெருமளவில் குவிப்பு.

யாழ்.பலாலி படைத்தளத்தில் இருந்து வடபோர் முனையான முகமாலை மற்றும் எழுதுமட்டுவாள் படைமுகாம்களை நோக்கி பெருமளவு படையினரும் ஆயுதத்தளபாடங்களும் இன்று காலையிலும் நகர்த்தப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பொதுமக்களின் போக்குவரத்துக்களை இடை நிறுத்தி இந்த படையினர் மற்றும் ஆயுத தளபாட நகர்வுகள் நடைபெற்றுள்ளது.

கடந்த சில நாட்களாக பெரும் எடுப்பில் முன்னரங்க பகுதிகளை நோக்கி படையினரும் ஆயுத தளபாடங்களும் நகர்த்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

நன்றி: பதிவு

அதை விட்டுட்டு ஏன் கிளிநொச்சி வைத்தியசாலையை இலக்கு வைத்து எண்டு பூச்சாண்டி?

மேலே உள்ள செய்திக்கும் இதுக்கும் தொடர்ப்பு இல்லை என்று கூற முடியுமா?

அதவாது இராணுவம் பெரும் இராணுவ நடவடிக்கக தொடங்க போகிறார்கள் அதுக்கு முன் கீளிநேச்சி வைத்தியசாலையை செயல் இளக்க செய்யும் ஒரு செய்லே இந்த தாக்குதல் பாருங்கள் சண்டை நடக்கும் போது இப்படி பல குண்டு தாக்குதல் வைத்தியசாலையை சுற்றி நடக்கும் ஏன் வைத்தியசாலைக்கு நேரடியாக தாக்குதல் நடந்தாலும் யாரும் ஒன்று சொல்லவோ இல்லை செய்யவோ முடிய்யாது அவர்கள் காரனம் சொல்லுவார்கள் அங்கு நோயாளிகள் வெள்யேறிவிட்டார்கள் காயப்பட்ட போராளிகள் தான் சிகிச்சை கொடுக்க படுகிறது என்று

கயப்படவர்கள் மீது தாக்குதல் நடத்த முடியுமோ என்று கேட்காதிர்கள் இலங்கை அரசுக்கு இருக்கும் பின் புல ஆதரவு அரசு என்ன செய்தாலும் அதை கண்டு கொள்ள மாட்டாது.......

இப்போ கண்காணிப்பு குழுவை பாருங்கள் நேற்று அறிகையில் சொல்லுகிறார்கள் குண்டு போட்ட பகுதியை பாத்து விட்டு இன்னுமும் காலம் கடந்துவிடவில்லை இரண்டு பக்கமும் யுத்த நிறுத்ததை கடைபிடிக்க வேனும் என்று,,,,,,,,,,,,,,,,,,

இது இனையத்தள நாடுகM அடிகடி விடும் அறிக்கை போலும் அமெரிக்காவிடும் அறிக்கைகள் போலும்

அரசை கண்டிக்கும் போது எபப்டியும் அதில் புலிகளையும் இணைத்து விடுவார்கள்,,,,,,,,,,,,,,,,,,,

வினித், பதிவின் கன்றுகுட்டித்தனமான தலையங்கத்திற்கு நீர் தாற விளக்கத்தையும் ஆய்வையும் பற்றி தமிழ்ச்செல்வன் அண்ணாவிட்டான் கேக்க வேணும்.

Aerial attack near Hospital, a message of terror, says Thamilchelvan

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=20119

ஏன் கிளிநொச்சி வைத்தியசாலையை இலக்கு வைத்து விமானத்தாக்குதல் நடந்தது என்று ஒப்பாரி வைக்கவில்லை எண்டு. பிறகு கண்காணிப்பு குழு சொல்லும் அதிர்வில் வந்த சேதங்களே அன்றி நேரடியான குண்டு வெடிப்பில்லை என்று. அதுக்கு பிறகு களவு பிடிபட்டு போக சொல்ல வேண்டிய செய்தியும் அடிபட்டு போகும் சிறீலங்காவின் களவும் மறைபட்டு போகும்.

முன்னர் நீங்கள் விரும்பினமாதிரி செய்திகளை எழுதலாம் எதிரியை தூற்றியும் மட்டம் தட்டியும் வரிக்கு வரி விளாசினா சனம் வாசிச்சு திருப்பத்திப்படும். அவை வெறும் தமிழர் என்ற வட்டத்திற்கு மாத்திரம் தான் இருந்தது.

இப்பொழுது நீங்கள் உங்களுக்கு சார்பாக உணர்வாளர்கள் எழுதுவதாக நினைத்து இழப்புகளையும் அரச பயங்கரவாதத்தையும் சோடிப்பதை ஆதாரத்தோடு சுட்டிக்காட்ட களத்தில் கண்காணிப்பு குழு இருக்கு. அதன் மூலம் உங்கள் நம்பிக்கைத்தன்மையும் நியாயப்பாடுகளும் உண்மையான அவலங்களை எழுதும் பொழுதும் சந்தேகத்தோடுதான் பார்க்கப்படும்.

அதேபோல் தேவை அற்ற வீராப்புகள் பேசினால் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தவும் களத்தில் கண்காணிப்பு குழு இருக்கு. உதாரணத்திற்கு கெப்பிற்றிக் கொலாவை நிகழ்வு.

நீங்கள் 99 வீதம் உண்மை சொல்லலாம் ஆனால் 1 வீதம் பொய் சொல்லும் பொழுது அதை ஆதாரத்தோடு தூக்கி வைத்து மிச்ச 99வீத உண்மைகளையும் கேள்விக்குறியாக்குவதில் எந்த பரிதாபத்தையோ தயக்கத்தையோ சர்வதேசம் காட்டப்போவது இல்லை.

சர்வதேசம் வந்திருக்கிறது எங்கள் போராட்டத்தை நியாயம் அற்றது என்று பிரச்சாரப்படுத்தவும் ஏனைய வழிகளில் பலவீனப்படுத்தவும். அதற்கு எதிர் விழைவை உருவாக்க வேண்டியது தான் எமக்கு இருக்கிற இன்றய கடமையும் சவாலும். அதற்கு எமக்கு பழக்கப்பட்டு போன கிளுகிளு நடத்தையில் பல மாற்றங்களை கொண்டுவர வேண்டும்.

எதிரியை குறைத்து மதிப்பிடுவது மட்டம் தட்டிற பழக்கங்களை நிறுத்த வேண்டும். கற்பனையில் வெறும் தனிமனித நிலைப்பாடுகள் கொள்கைகள் சார்பில் ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தின் முக்கிய காலகட்டத்தில் நடக்கும் நிகழ்வுகளிற்கு அர்த்தம் கற்பிக்கும் செய்தி சித்தரிப்புகளை நிறுத்த வேண்டும்.

நீங்கள் எழுதுபவற்றை வெறும் தமிழர்கள் நம்பினால் காணும் என்ற நிலை இன்று இல்லை. அவ்வாறு நம்பாது கேள்வி கேப்பவர்களை துரோகி என்று பட்டம் கொடுத்துவிட்டு உங்கள் கிளுகிளு பாணியை தொடர்வது இன்றய சூழ்நிலைக்கு பொருத்தமானது அல்ல. நீங்கள் நம்பிக்கையையும் அங்கீகாரத்தையும் பெறவேண்டியது சர்வதேசத்திடம்.

1970கள் 1980கள் 1990களின் நிலையில் எமது போராட்டம் இல்லை வெறுமனே எம்மை நாமே திருப்த்திப்படுத்தியும் நியாப்படுத்திக் கொண்டு ஒரு குறுகிய வட்டத்தில் இருக்க.

இல்லாவிட்டால் எமது பலவீனங்களான இவை எல்லாம் எதிரிக்கு பலங்களாக மாறுவதை அல்ல தொடர்வதை தவிர்க்க முடியாது.

ஏன் கிளிநொச்சி வைத்தியசாலையை இலக்கு வைத்து விமானத்தாக்குதல் நடந்தது என்று ஒப்பாரி வைக்கவில்லை எண்டு. பிறகு கண்காணிப்பு குழு சொல்லும் அதிர்வில் வந்த சேதங்களே அன்றி நேரடியான குண்டு வெடிப்பில்லை என்று. அதுக்கு பிறகு களவு பிடிபட்டு போக சொல்ல வேண்டிய செய்தியும் அடிபட்டு போகும் சிறீலங்காவின் களவும் மறைபட்டு போகும்.

:wink: :wink: :wink:

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு இணைத்தலைமை நாடுகள் கண்டனம்

சிறிலங்கா விமானப்படையின் கிபீர் விமானங்கள் கிளிநொச்சி பொது மருத்துவமனை மீது நடத்திய திட்டமிட்ட வான் தாக்குதலை சிறிலங்காவுக்கு உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகள் கண்டித்துள்ளன.

இணைத் தலைமை நாடுகள் வெளியிட்டுள்ள அறிக்கை:

கிளிநொச்சியில் நவம்பர் 2ஆம் நாளன்று வீடு ஒன்றின் மீது வான்குண்டுத் தாக்குதல் நடத்தியதில் 5 பொதுமக்கள் கொல்லப்பட்டமை குறித்து இலங்கைக்கு உதவி வழங்கும் டோக்கியோ இணைத் தலைமை நாடுகளின்(ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், நோர்வே மற்றும் அமெரிக்கா) தூதுவர்கள் வருந்துகின்றனர். இந்த குண்டுத் தாக்குதலால் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனை பாதிப்புக்குள்ளாகி நோயாளர்கள் வெளியேறி உள்ளனர்.

சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் இராணுவ நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும் என்று இணைத் தலைமை நாடுகள் எதிர்பார்க்கின்றன.

இருதரப்பினருக்கு இடையே நம்பிக்கையை கட்டியெழுப்பி அடுத்த கட்டப் பேச்சுக்களை நடத்தக் கூடிய சூழ்நிலையில் மோதல்களை தவிர்க்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு இணைத்தலைமை நாடுகள் கண்டனம்

சிறிலங்கா விமானப்படையின் கிபீர் விமானங்கள் கிளிநொச்சி பொது மருத்துவமனை மீது நடத்திய திட்டமிட்ட வான் தாக்குதலை சிறிலங்காவுக்கு உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகள் கண்டித்துள்ளன.

http://www.eelampage.com/?cn=29597

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைத்தலமை நாடுகள் என்பவர்கள் கண்டிக்கவில்லை வருத்தம் தான் தெரிவித்திருக்கின்றனர் எமது இணையத்தளங்கள் மீண்டும் ஒரு முறை செய்திகளை மெருப்படத்துவதைக்காணக்கூடி

  • கருத்துக்கள உறவுகள்

Co-Chairs express deep regret over Kilinochchi bombing

[TamilNet, Friday, 03 November 2006, 13:43 GMT]

The Tokyo Co-Chair (EU, Japan, Norway and the US) ambassadors in Sri Lanka, in a press releas issued Friday, expressed their "deep regret over the bombing of a house in Kilinochchi on 2 November 2006 that resulted in the death of five civilians," and added that "the explosion comes at a delicate time when both sides should seek to build confidence and compromise to ensure further rounds of talks can soon be agreed, and an escalation of the conflict can be avoided."

Full text of the press release issued by the Co-Chairs follows:

PRESS RELEASE

Co-Chairs express deep regret over Kilinochchi bombing

The Tokyo Co-Chair (EU, Japan, Norway and the US) ambassadors in Sri Lanka express their deep regret over the bombing of a house in Kilinochchi on 2 November 2006 that resulted in the death of five civilians. The explosion also damaged the Kilinochchi District Hospital and caused patients to flee.

The Co-Chairs expect both the Government of Sri Lanka and the LTTE to refrain from military action.

This latest attack comes at a delicate time when both sides should seek to build confidence and compromise to ensure further rounds of talks can soon be agreed, and an escalation of the conflict can be avoided.

வருத்தம் தெரிவித்திருப்பதே உண்மையான வடிவம். தமிழ் இணையத்தளங்கள் அதை கண்டனம் என்று மொழிபெயர்த்துள்ளன போலும். :roll: :idea:

  • கருத்துக்கள உறவுகள்

The island's main donors -- the United States, Japan, the European Union and Norway -- condemned Thursday's air raid, and called on both sides to halt military action.

"This latest attack comes at a delicate time when both sides should seek to build confidence and compromise to ensure further rounds of talks can soon be agreed, and an escalation of the conflict can be avoided," the donors said in a joint statement.

http://today.reuters.com/news/articlenews...._C2_worldNews-4

ரொயிட்டரும் கண்டனம் என்றுதான் எழுதியுள்ளது. தமிழ் இணையத்தளங்கள் ரொயிட்டரைப் பின்பற்றி எழுதினவையா தமிழ்நெற்றைப் பின்பற்றினவையா?

:roll: :?: :idea:

Full text of the press release issued by the Co-Chairs follows:

PRESS RELEASE

Co-Chairs express deep regret over Kilinochchi bombing

The Tokyo Co-Chair (EU, Japan, Norway and the US) ambassadors in Sri Lanka express their deep regret over the bombing of a house in Kilinochchi on 2 November 2006 that resulted in the death of five civilians. The explosion also damaged the Kilinochchi District Hospital and caused patients to flee.

The Co-Chairs expect both the Government of Sri Lanka and the LTTE to refrain from military action.

This latest attack comes at a delicate time when both sides should seek to build confidence and compromise to ensure further rounds of talks can soon be agreed, and an escalation of the conflict can be avoided.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=20136

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிளிநொச்சி மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு இணைத்தலைமை நாடுகள் கண்டனம்

சிறிலங்கா விமானப்படையின் கிபீர் விமானங்கள் கிளிநொச்சி பொது மருத்துவமனை மீது நடத்திய திட்டமிட்ட வான் தாக்குதலை சிறிலங்காவுக்கு உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகள் கண்டித்துள்ளன.

இணைத் தலைமை நாடுகள் வெளியிட்டுள்ள அறிக்கை:

கிளிநொச்சியில் நவம்பர் 2ஆம் நாளன்று வீடு ஒன்றின் மீது வான்குண்டுத் தாக்குதல் நடத்தியதில் 5 பொதுமக்கள் கொல்லப்பட்டமை குறித்து இலங்கைக்கு உதவி வழங்கும் டோக்கியோ இணைத் தலைமை நாடுகளின்(ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், நோர்வே மற்றும் அமெரிக்கா) தூதுவர்கள் வருந்துகின்றனர். இந்த குண்டுத் தாக்குதலால் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனை பாதிப்புக்குள்ளாகி நோயாளர்கள் வெளியேறி உள்ளனர்.

சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் இராணுவ நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும் என்று இணைத் தலைமை நாடுகள் எதிர்பார்க்கின்றன.

இருதரப்பினருக்கு இடையே நம்பிக்கையை கட்டியெழுப்பி அடுத்த கட்டப் பேச்சுக்களை நடத்தக் கூடிய சூழ்நிலையில் மோதல்களை தவிர்க்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு இணைத்தலைமை நாடுகள் கண்டனம்

சிறிலங்கா விமானப்படையின் கிபீர் விமானங்கள் கிளிநொச்சி பொது மருத்துவமனை மீது நடத்திய திட்டமிட்ட வான் தாக்குதலை சிறிலங்காவுக்கு உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகள் கண்டித்துள்ளன.

http://www.eelampage.com/?cn=29597

  • கருத்துக்கள உறவுகள்

புதினம் செய்தியை மாற்றிக் கவலை வருத்தம் என்று எழுதியுள்ளது.

ரொயிட்டர் கண்டனம் என்றே எழுதியுள்ளது.

ரொய்ட்டர்ஸ் செய்தியாளருக்கு சிறிலங்கா இராணுவம் அச்சுறுத்தல்.

சர்வதேச செய்தி நிறுவனமான ரொய்ட்டர்ஸ் மற்றும் சிரச ஊடகத்தின் செய்தியாளர் ஜோர்ஜ் டேவிட்டுக்கு சிறிலங்கா இராணுவத்தினர் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

தனது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பத் தயார் செய்து கொண்டிருந்தமையால் வழமையான சோதனை நடவடிக்கைக்கு இராணுவத்தினரை காத்திருக்குமாறு ஜோர்ஜ் கூறியதையடுத்து இராணுவத்தினர் அவருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக திருகோணமலை சிறிலங்கா காவல்துறை அதிகாரி நிமல் சமரக்கோனிடம் ஜோர்ஜ் டேவிட் முறைப்பாடு செய்துள்ளார்.

"நீ ஒரு சந்தேக நபர். எமக்கு அதிகாரம் உள்ளது. நாங்கள் எதனையும் செய்ய முடியும்" என்று சுற்றுக்காவல் பணியில் இருந்த இராணுவத்தினர் அச்சுறுத்தியதாகவும் ஜோர்ஜ் டேவிட் கூறியுள்ளார்.

அதன் பின்னர் ஜோர்ஜை கைது செய்ய வாகனத்தில் மீண்டும் வருவோம் என்றும் சிறிலங்கா இராணுவத்தினர் கூறியுள்ளனர்.

http://www.eelampage.com/?cn=29601

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Co-Chairs Turn A Blind Eye To Civilian Murder In Sri Lanka Air-Strike

The powerful Co-Chairs, by their refusal to reprimand the government of Sri Lanka for its attempt on the District Hospital at Kilinochchi, has encouraged the State Armed Forces to continue perpetration of aerial bombardment of the traditional homeland of the Tamils.

The State aerial bombardment of the Vanni at two different towns Thursday resulted in the death of five civilians and seriously wounding ten others.

The bombardment and rocket attacks had taken place within 500 metres of the hospital and a large school. There were more than 2000 people including out-door patients at the hospital and more than 1000 children attending classes. All ran screaming helter-skelter in different directions, wailing and crying out for help and safety and pandemonium had reigned in the town for some time.

Although the bombardment of the civilian settlements deserved world-wide condemnation, the Co-Chair Ambassadors, including those from the US, EU, Japan and Norway, based in Colombo could only think of advising the parties to the conflict to "refrain from military action."

http://www.sibernews.com/news/sri-lanka/-200611036377/

இலங்கையில் கடும் விமானத் தாக்குதல்.

-----------------------------------

இலங்கை விமானப்படை விமானங்கள் நேற்று கிளிநொச்சி நகரின் மீதும் பூநகரிப்பகுதி யிலும் நடத்திய வான்குண்டுத் தாக்குதல்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

இத்தாக்குதலால் கிளிநொச்சி பொது மருத்துவமனையிலிருந்து 500-க்கும் மேற் பட்ட நோயாளிகள் வெளியேற்றப்பட்டு உயிர் தப்பியுள்ளனர். பூநகரிப்பகுதியில் வியாழக்கிழமை முற்பகல் 11.45 மணிக்கு விமானங்கள் மொத்தம் 16 குண்டுகளை வீசின.

அதனைத் தொடர்ந்து கிளிநொச்சி நகரின் மீது பிற்பகல் 2 மணியளவில் கிபீர் விமானங்கள் இரண்டு குண்டுகளையும் எறிபடை குண்டுகளையும் வீசின. இதனால் கிளிநொச்சி நகரமே அதிர்ந்தது. கிளிநொச்சி பொது மருத்துவமனை அதிர்ந்தது. அங்கிருந்த பொருட்கள் சிதறின. கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. கூரைத்தகடுகள் உடைந்து வீழ்ந்தன. அதிர்ச்சியில் நோயாளி ஒருவர் மரணமடைந்தார்.

நோயாளிகள் அதிர்ச்சியில் உறைந்து சிதறி ஓடினர். இதனால் அவர்கள் படுகாயமடைந்துள்ளனர். நோயாளிகள் பலர் அதிர்ச்சியில் மயங்கியுள்ளனர். நோயாளிகள் அதிகமாகப் பாதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் நின்ற நோயாளி காவு வாகனங்கள் (ஆம்புலன்ஸ்) மருத்துவமனை வளாகத்தை விட்டு வேகமாக வெளியேறின.

நோயாளிகள் மருத்துவமனையிலிருந்து வெளியேறி வீதிகள் எங்கும் சிதறி ஓடினர்.

பல தாய்மார்கள் கைக்குழந்தைகளுடன் சிதறி ஓடிய அவலம் ஏற்பட்டது.

மேலும் பள்ளிக்கூடங்கள் விடும் நேரத்தில் நடத்தப்பட்ட இந்த கிபீர் விமானத் தாக்குதலால் மாணவர்கள் பெரும் அல்லல்பட்டனர். மாணவர்கள் கதறி அழுதவண்ணம் சிதறி ஓடினர். மாணவர்கள் பலர் மயங்கி விழுந்தனர். கிளிநொச்சி மத்திய கல்லுìரி குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்துக்கு அருகில் இருந்ததால் அங்கு மாணவர்கள் அதிகம் அதிர்ச்சியடைந்தனர். பிள்ளைகளைத் தேடி பெற்றோர் பள்ளிக்கூடங்களுக்கும் நோயாளிகளைத் தேடி அவர்களின் உறவினர்கள் மருத்துவமனைக்கும் அவலப்பட்டு அலைந் தனர். இதனால் கிளிநொச்சி நகரமே பெரும் துயரத்துக்குள்ளானது.

கிளிநொச்சி பொதுமருத்துவமனை வளாகத்தின் எல்லையுடனான திருவையாறு மக்கள் குடியிருப்புக்கள் மீது இரு கிபீர் விமானங்கள் குண்டுத்தாக்குதலை நடத்தின.

அருகிலுள்ள மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் குண்டுகள் வீழ்ந்து வெடித்துள்ளன. இதில் பத்து பேர் படுகாயமடைந்துள்ளனர். தாக்குதல்களை மேற்கொள்ளக்கூடாது என்று ëஜனீவாப் பேச்சுக்களில் நார்வே வேண்டுகோள் விடுத்தபோதிலும் இலங்கை அரசு இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.

இந்நிலையில் கிளிநொச்சி மருத்துவமனையின் அருகே விடுதலைப் புலிகளின் ராணுவ நிலைகள் எதுவும் இல்லாத நிலையில் இலங்கை விமானப்படையினர் இத்தாக்குதலை நடத்தியிருப்பது அதிர்ச்சியளித்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே நேற்று மூன்றாவது நாளாக இலங்கை விமானப்படை தாக்குதல் தொடர்ந்தது என்றும் நேற்று புலிகளின் நிலைகள் தாக்கப்பட்டதாகவும் இருவர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இவ்வேளையில் கிளிநொச்சியில் நடத்தப்பட்ட விமானக் குண்டுவீச்சு போர் நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாக மீறும் செயலாகும் என்று போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் கிளிநொச்சி மாவட்ட பிரதிநிதி அலன் ஒலோவ் தெரிவித்தார்.

கிளிநொச்சி மருத்துவமனை வளாகப்பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல் மூலம் அரசாங்கம் பயங்கரவாதத்தைக் கடைப்பிடிக் கிறது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது என்று விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச் செல்வன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இலங்கைப் பிரச்சினையில் தீர்வொன்றைக் காண்பதற்கு நார்வேயுடன் இந்தியாவும் இணைந்து செயற்படமுடியும் என்று ஆறு நாள் பயணமாக இந்தியா சென்றுள்ள நார்வேயின் பட்டத்து இளவரசர் ஹாக்கூன் தெரிவித்துள்ளார்.

நனறி-TAMILMURASU-SINGAPORE.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.