Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னர் அப்துல்லா: பிரிட்டனின் அரைக்கம்பக் கொடிகளால் விமர்சனம்

Featured Replies

150124121208_king_abdullah_uk_flags_512x

 

பிரிட்டிஷ் அரசியல்வாதி ஒருவரின் டுவிட்டர் பதிவு

 

சவுதி மன்னர் அப்துல்லாவின் மரணத்தைத் தொடர்ந்து பிரிட்டனில் அரச கட்டடங்களில் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட நிகழ்வு பொதுமக்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களை தோற்றுவித்துள்ளது.
வெளிநாட்டு மன்னர் ஒருவர் உயிரிழந்தால் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிடுவது பிரிட்டனின் வழக்கம்.
 
எனினும், சவுதி மன்னரின் மரணத்துக்கு கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டமையை சில அரசியல்வாதிகளும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் பத்திரிகைகளும் எதிர்த்துள்ளன.
 
சவுதியில் பெண்களுக்கு எதிரான பாரபட்சமான போக்கும் கருத்துச் சுதந்திரத்துக்கு உள்ள மட்டுப்பாடுகளும் மதச் சுதந்திரத்துக்கு உள்ள கட்டுப்பாடுகளும் நிலவுகின்ற சூழ்நிலையில் அந்நாட்டு மன்னருக்கு பிரிட்டனின் பாரம்பரியமான மரியாதை அஞ்சலி பொருத்தமற்றது என்று விமர்சகர்கள் வாதிடுகின்றனர்.
சவுதியின் சவுக்கடி மற்றும் மரண தண்டனை போன்ற நீதிமன்ற தண்டனை முறைகளும் மனித உரிமை ஆர்வலர்களின் விமர்சனத்துக்கு காரணம்.
 

 

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப பிரித்தானியால முஸ்லிம்களின் ஆட்சிதானே நடக்குது

  • கருத்துக்கள உறவுகள்

சலாம் அலைக்கும்  :D

  • கருத்துக்கள உறவுகள்

அலைக்கும் சலாம்     :D

அரை கம்பத்தில் பறப்பது கொஞ்சம் ஓவர் .....இருந்தாலும் UK US தாளங்களுக்கு ரொம்ப நல்லாக ஆடிய மனிதர் ......

  • கருத்துக்கள உறவுகள்

ஈராக்கின் எண்ணையை உறிஞ்ச விட்டிருந்தால் சதாமும் நல்லவரே..

  • கருத்துக்கள உறவுகள்

சம்மந்தன் ஐயா போல் மிகவும் தெளிவான அரசியல்வாதி.

இப்போதைய உலக நிலையில் அமெரிக்காவையோ பிரிட்டனியோ எதிர்த்து வாழ முடியாது என்ற துல்லியமான அரசியல் நகர்வை செய்தவர்.

அதன் மூலம் 200இட்கு மேற்பட்ட வெள்ளைகார பெண்களை தமது அரண்மனையில் எந்த மொட்டாக்குகளும் இல்லாது வேலைக்கு வைத்திருக்கும் வாய்ப்பை மன்னர்கள் அடைய கூடியதாக இருந்தது.

தல்லாம் காசுக்கு அமெரிக்கா தேவையான எண்ணையை பெற்று கொண்டு இருக்கிறது. காசை கேட்டால் சவூதி பயங்கரவாதிகள் நாடு ஆகும் என்பதை தெளிவாக புரிந்தவர்.

நாட்டில் கால்வாசி மக்கள் வறுமை கோட்டின் கீழ் வாழ்கிறார்கள் குடிநீர்  இல்லாத நிலை இப்போதும் தொடர்கிறது. விட்டுகொடுப்பு அரசியலால் நாட்டு மக்கள் எதையும் காணாது போனாலும்.
மன்னரின் அந்தபுரம் அழகாக இருந்தது நாடிட்கு என்றும் பெருமை சேர்க்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை

பெண்களுக்கு சாரதி  அனுமதிப்பத்திரத்தை கூட அனுமதிக்காத  நாடு... :( 

பிரித்தானியாவின் கொடி அரைக்கம்பத்தில்..

நல்ல அரசியல்..

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியக் கொடிக்கே அவமானம்.
அயல் நாட்டு மன்னர் இறந்ததுக்கு, வேறு வழிகளில் தமது அஞ்சலியை தெரிவித்து இருக்கலாம்.
ஐரோப்பாவில் உள்ள மற்றைய நாடுகள்.... இப்படியான செயலை, நினைத்தும் பார்க்க மாட்டார்கள்.

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.