Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடத்தப்பட்டோரின் கண்ணீர்க்கதைகள்

Featured Replies

வீரகேசரி பத்திரிகையில் வெளிவந்த கடத்தப்பட்டோரின் கண்ணீர்க்கதைகள்

http://www.yarl.com/forum3/files/kadathal/

:roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll:

இணைப்பு வேலை செய்யுதில்லை அண்ணா...!

கா...அண்னோய் மோகன் என்ன வீரகேசரியில ஒண்ணையும் கானோம்...என்ன டுபுக்கு விளையாட்டு...??

பர பரப்பு செய்தியோ போடுறியள்..என்ன ஆதாரம்...???

கா..கா...கா...

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ வேலை செய்யுதே

  • கருத்துக்கள உறவுகள்

எனது அப்பா எங்கே?

எனது அப்பா எங்கே எனது அப்பாவை விடுவியுங்கள் என்ற சுலோக அட்டைய ஏந்தியவாறு கொழும்பு புகையிரத நிலையத்தின் முன்னால் நின்றிருந்த அந்த குழுந்தை "காணாமல்போதல்" இலங்கையில் ஏற்படுத்தியுள்ள மனித துயரத்தின் அளவை வெளிப்படுத்துகிறது.

கண் முன்னால் கைது செய்யப்பட்டு காணாமல்போனவர்கள் சுவடு தெரியாமல் போனவர்கள் என இந்தப் பட்டியல் நீள்கிறது.

நீர்கொழும்பு வத்தளை வீதியில் கடை வாசலில் நின்று கொண்டிருந்த அவரை இரவு 9.45 மணிக்கு வெள்ளை வானில் வந்து தூக்கிக் கொண்டு போனவர்கள் தான் அதற்கு பிறகு என்ன நடந்தது என்று தெரியாது என்கின்றனர் குடும்பத்தினர்.

கடையை ஆரம்பித்து 15 நாட்களே ஆன நிலையில் அவர் கடத்தப்பட்டுள்ளார்.

குடும்பத்தினருக்கு தொலைபேசியில் அழைப்பு வந்துள்ளது. குறிப்பிட்ட தொகை பணம் கோரப்பட்டுள்ளதுடன் வங்கிக் கணக்கிலிடுமாறு கோரியுள்ளனர்.

தொலைபேசியில் விடுக்கப்பட்ட அழைப்பில் கோரப்பட்ட தொகையை குடும்பத்தினர் வங்கியில் வைப்பிலிட்டுள்ளனர். எனினும், அதன் பின்னரும் அவர் விடுதலை செய்யப்படவில்லை.

எங்கெல்லாம் சென்று முறையிட முடியுமோ அங்கெல்லாம் சென்றோம். மனித உரிமை ஆணைக்குழு, மனித உரிமை அமைப்புகள், சர்வதேச அமைப்புகள் என சகல இடமும் சென்றோம் என்கின்றனர் அவர்கள்.

குறிப்பிட்ட வங்கிக் கணக்கு இலக்கத்தை பேலியகொட பொலிஸாரிடம் சமர்ப்பித்துள்ளனர். காணாமல்போனோர் தொடர்பாக விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட ஆணைக்குழு, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பொலிஸ் மா அதிபர், பூஜித ஜெயசுந்தர போன்றோரிடம் சென்றுள்ளனர்.

இந்தியத் தூதரகத்திற்குக் கூடச் சென்றோம். எந்தப் பதிலும் இல்லை என தமது மனவேதனையை அவர்கள் வெளிப்படுத்துகின்றனர்.

வங்கிக் கணக்கு இலக்கம் போன்ற துல்லியமான தகவலை அளித்தும் எந்தப் பயனும் இல்லை.

தனது கணவன் தான் கடத்தப்படுகின்றார் என்பதை அறியாமல் அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த துயரமான அனுபவம் பிரபாகரனின் மனைவிக்கு கிடைத்துள்ளது.

கொட்டாஞ்சேனை மாரியம்மன் கோவிலுக்கு அருகில் வசித்து வந்தவர் பிரபாகரன். இரவு ஒன்பது மணிக்கு உணவு வாங்குவதற்காக வெளியே சென்றிருக்கிறார் பிரபாகரன்.

உணவு வாங்கிவிட்டு திரும்பிக் கொண்டிருக்கையில் வெள்ளை வானில் வந்தவர்களால் கடத்தப்பட்டுள்ளார்.

கத்திச் சத்தம் கேட்டது, மேலே நின்று பார்த்தேன். இவர் தான் என்று தெரியாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன் என்கிறார் பிரபாகரனின் மனைவி. சற்று நேரம் சென்ற பின்னர் அவருக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுக்கலாம் என முயற்சி செய்த வேளை தான் அவர் தனது கையடக்கத் தொலைபேசியை விட்டு விட்டு சென்றிருப்பதை கண்டேன் என்கிறார் அவர்.

அதற்கு பிறகு தான் சந்தேகம் வரவே கீழே வந்து பார்த்தேன். சாப்பாடு சிதறி கிடந்தது. கதறியழுதேன். சற்று தூரத்தில் செருப்பு காணப்பட்டது என்கிறார் பிரபாகரனின் மனைவி.

அவரை கடத்திய வேளை, ஆட்கள் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். ஒன்றும் செய்ய முடியாத நிலை. கடத்தியவர்களின் கையில் துப்பாக்கி இருந்திருக்கிறது என அவர் தெரிவித்தார்.

பொலிஸ் நிலையம் பக்கத்தில் இருந்ததினால் உடனே அங்கு சென்றேன். ஒன்பதரைக்கு கடத்தினார்கள். பத்தரைக்கு பொலிஸ் நிலையம் சென்றேன். அவர்கள் விபரங்களை பதிவு செய்ய தொடங்கும் போது 12.30 மணி. எல்லாம் முடிந்து நான் வீடு திரும்பும் போது மூன்று என தனது விரக்தியை வர்ணிக்கிறார் பிரபாகரனின் மனைவி.

பிரபாகரன் திருமணம் முடித்து மூன்று மாதங்களே ஆகின்றது. அவரது சொந்த இடம் யாழ்ப்பாணம்.

மனைவி திருகோணமலையை சேர்ந்தவர். (TRINCO) கல்யாணமாலை எனும் திருமண நிலையமொன்றை நடத்தி வந்துள்ளனர்.

இப்போதும் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கிறேன், கடத்தியவர்களுக்கு காசு தேவையா அல்லது இவர் தவறு ஏதேனும் செய்தாரா என்பது எனக்கு இன்னமும் தெரியாது என்கிறார் அவர். நாங்கள் செல்லாத ஒரு இடமும் இல்லை, ஒவ்வொரு இடமாக சென்று கொண்டிருக்கிறோம் என்கிறார் அவர்.

பிரபாகரன் கடத்தப்படுவதற்கு 22 நாட்களுக்கு முன்னதாகத்தான் அவரது வீட்டிற்கு அருகில் கடை வைத்திருந்த மணிவண்ணன் என்பவர் கடத்தப்பட்டுள்ளார்.

பொலிஸாரினால் தொடர்ச்சியாக விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் காணாமல் போயுள்ளார் சிலாபம் முன்னேஸ்வரத்தை சேர்ந்த செல்வரத்தினம். அண்ணா ஆறாம் திகதி காணாமல் போயுள்ளார். ஏழாம் திகதி தான் எங்களுக்கு தெரிய வந்தது என்கிறார் அவரது சகோதரி. அண்ணா அவுஸ்திரேலியாவிலிருக்கும் நண்பர் ஒருவரின் வீட்டிலேயே தங்கியிருந்தார், வழமையாக வானை எடுத்துக் கொண்டு சாப்பிட வருவார் அன்றைக்கு வரவில்லை என்கிறார்.

இரவு சாப்பிடவராததால் அவர் கராஜ் சென்றிருப்பார் என நினைத்தோம். எனினும், பின்னர் அவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முடியாமல் போகவும் வீட்டின் லைட் போடப்படாமலிருக்கவுமே எமக்கு சந்தேகம் வந்தது என்கிறார். கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதி இவரை பொலிஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக அவர் தெரிவிக்கின்றார். செல்வா அதற்கு சில நாட்களுக்கு முன்னர் தான் மரணச் சடங்கொன்றிற்காக யாழ்ப்பாணம் சென்று திரும்பியுள்ளார். பொலிஸார் அவர் ஏன் யாழ்ப்பாணம் சென்றார் எனக் கேட்டுள்ளனர் வான் வாங்குவதற்கு காசு யார் தந்தது என விசாரித்துள்ளனர். செல்வா தங்கியிருக்கும் வீடு யாருடையது எனவும் கேட்டுள்ளனர். அதற்கு இரண்டு மாதத்திற்கு பிறகு மீண்டும் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர், அதே கேள்விகளை கேட்டுள்ளனர்.

அவரது தனிப்பட்ட விடயங்கள் குறித்து விசாரித்துள்ளனர். நாங்கள் அவரை அவதானமாக இருக்கும்படி கேட்டோம். எனினும், அவர் நான் குற்றவாளியல்ல யாருக்கு பயப்பட வேண்டும் என நம்பிக்கையுடன் இருந்தார் என்கிறார் அவரது சகோதரி. செல்வாவிற்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை அவர் காணாமல் போயுள்ளார்.

நாங்கள் போகாத இடமில்லை. கைது செய்து எங்கு வைத்திருக்கிறார்கள் என்பது தெரியாமல் தவிக்கிறோம். இருக்கிற இடத்தையாவது தெரிவியுங்கள் என கதறுகிறார் செல்வாவின் சகோதரி.

ஒவ்வொரு நாளும் செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கிறோம் என்கிறார் அவர். போயா தினத்தன்று தன்சலவில் இருந்த வேளை காணாமல் போயுள்ளார் பாபு என அழைக்கப்படும் சமரக்கொடி ஆராச்சிகே உமாகாந்த. இவருக்கு என்ன நடந்தது என்பதை கண்ணால் பார்த்த சாட்சியங்கள் மூவர் உள்ளனர். இவர்கள் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையிலும் இதனை தெரிவித்துள்ளனர்.உமாகாந்தவி

  • கருத்துக்கள உறவுகள்

பிரகடனப்படுத்தப்படாத யுத்தமும் தமிழ் மக்கள் மீதான கெடுபிடியும்! -(அஜாதசத்ரு)

வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசங்களில் பிரகடனப்படுத்தப்படாத யுத்தமொன்றின் மூலம் அங்குவாழும் தமிழ் மக்கள் போரின் அவலங்களை தினமும் எதிர்கொண்டுவரும் நிலையில் தலைநகர் கொழும்பு உட்பட தென்னிலங்கையில் வசிக்கும் தமிழ் மக்கள் கைது, காணாமல் போதல், கப்பம் கொடுத்தல், படுகொலை போன்ற மிக மோசமான மனித உரிமை மீறல்களுக்கு முகம்கொடுத்துவருகின்றனர்.

இதெல்லாவற்றிற்குமப்பால் அதிஉச்ச பாதுகாப்பையும் சந்திக்கு சந்தி வீதிச் சோதனைச் சாவடிகளையும், விசேட கண்காணிப்புப் பிரிவின் துரிதமான செயற்பாடுகளை மிக அதிகளவில் கொண்டுள்ள தலைநகர் கொழும்பில் கடந்த மூன்று மாதகாலத்திற்கும் மேலாக ஆட்கடத்தல், கப்பம் பெறுதல், கைது, காணாமல் போதல் போன்ற சம்பவங்கள் மிக அதிகளவில் அதிகரித்துள்ள போதிலும் அதனைக் கட்டுப்படுத்துவதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தலைநகரில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் கைது, காணாமல் போதல், படுகொலைச் சம்பவங்கள், தமிழ் வர்த்தகர்களை கடத்திச்சென்று கப்பம் பெறுதல் போன்ற நடவடிக்கைகள் தொடர்பாக தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், அண்மையில் ஒய்வுபெற்ற முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ ஆகியோரிடம் முறையிட்ட போதும் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டதே தவிர எந்தவொரு ஆரோக்கியமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இரவு நேரங்களில் மட்டுமன்றி பகல்வேளையிலும் பொதுமக்கள் அதிகமாக கூடுமிடங்களுக்கு அருகாமையிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் நிறைந்த இடங்களிலும் வைத்தே பலர் வெள்ளை வான் ஆயுதபாணிகளால் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.

தலைநகர் கொழும்பில் கடந்த மூன்றுமாத காலப்பகுதியில் 40 இற்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் கடத்தப்பட்டுள்ளனர். கடத்தப்பட்ட பலர் கோடிக்கணக்கான ரூபா பணம் கப்பமாக பெறப்பட்ட நிலையில், விடுவிக்கப்பட்டுள்ளனர். பணம் செலுத்தியும் இன்னும் பலர் விடுவிக்கப்படவில்லையென்றும

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.