Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவின் சுதந்திர நாள் நிகழ்வில் பங்கேற்றது ஏன்? – சம்பந்தன் விளக்கம்

Featured Replies

சிறிலங்காவின் சுதந்திர நாள் நிகழ்வில் பங்கேற்றது ஏன்? – சம்பந்தன் விளக்கம் FEB 05, 2015 | 0:08by புதினப்பணிமனைin செய்திகள்

sampanthan-300x200.jpgகொழும்பில் நேற்று நடைபெற்ற சிறிலங்காவின் 67வது சுதந்திர நாள் நிகழ்வில் தாம் பங்கேற்றதை நியாயப்படுத்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கருத்து வெளியிட்டுள்ளார்.

கடந்த 43 ஆண்டுகளுக்குப் பின்னர், சிறிலங்காவின் சுதந்திர நாள் நிகழ்வில் பங்கேற்றுள்ள முதல் தமிழ்த் தேசிய அரசியல் தலைவரான இரா.சம்பந்தன் தான் எதற்காக இந்த நிகழ்வில் பங்கெடுத்தேன் என்பதை பிபிசிக்கு விபரித்துள்ளார்.

இந்த விழாவில் பங்கேற்பது குறித்து கவனமாக சிந்தித்த பின்னரே தான் முடிவெடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

“நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம், தமிழ் மக்களின் எதிர்காலம், புதிய ஆட்சியாளர்கள் மீதுள்ள நம்பிக்கை ஆகியவற்றின் காரணமாக, நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் எனக்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று சுதந்திர நாள் விழாவில் பங்கேற்பது என்று முடிவெடுத்தேன்.

அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளேயே இது குறித்து மாற்றுக் கருத்துக்கள் இருந்தன.

எனினும் இது தொடர்பாக, மூத்த தலைவர்கள் பலருடனும் கலந்துரையாடினேன். அவர்கள் அனைவரும் எனது முடிவை ஏற்றுக் கொண்டனர் என்று கூறமாட்டேன்.

முந்தைய ஆட்சிபோல் அல்லாமல், இந்த ஆண்டின் சுதந்திர நாள் நிகழ்வு, இராணுவ வெற்றியை மையப்படுத்தியதாக இருக்கவில்லை.

அப்படியான சூழலில் இந்த நிகழ்வில் பங்கேற்பது நாட்டில் வாழும் எல்லா மக்களுக்கும் ஒரு நல்ல செய்தியை அனுப்பும்.

இலங்கையில் நிரந்தரமான சமாதானம் ஏற்படும் வகையிலும், மக்கள் மத்தியில் நல்லிணக்கம் மற்றும் சமத்துவம் ஏற்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த ஆண்டின் நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டிருந்தன” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2015/02/05/news/3387

"இந்தியா சிறிலங்கா அமெரிக்க வென்று அலையாமல் அமெரிக்காவின் பின்னாலேயே நில்லுங்கள்.அமெரிக்காவிற்கு பெரிய தேவைகளெல்லாம் இருக்கின்றது.அதெற்கெல்லாம் உங்கள் அரசியல் சாணக்கியம் பயன்பட்டால்தமிழருக்கு ஏதும் கிடைக்காதவிடத்துபெரியண்ணாதான் எல்லைக்கோட்டுக்கு கதியால் போடவேண்டிவரும்.அவர் ஒருவரால் தான் இது முடியும்" இது தான் இந்த சிறியவனின் ஆலோசனை

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்

புதினப் பத்திரிகை ஒன்றில் வின்சன்சேர்ச்சிலைப்பற்றிய செய்தி ஒன்று படித்த ஞாபகம்.... :rolleyes:

ஒருவர்: நான் அரசியல்வாதி ஆகவேண்டும் அதற்கு என்ன தகுதி வேண்டும்..?  :)  

சேர்ச்சில்: நீ தவறான இழிவான எதனையும் கூறலாம், செய்யலாம் ஆனால் அதனை மற்றவர் ஏற்றுக்கொள்ளும்படி நியாயப்படுத்தக் கூடிய திறமை உன்னிடம் இருக்குமே ஆனால் நீ அரசியல்வாதி..!!  :o

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் ஐயா, நாற்பது வருடங்களாக சிறீலங்காவின் சிங்களம் இராணுவ வெற்றியை மையப்படுத்தி தனது அரசவிழாக்களை நடாத்தியது எனக் கூறுகிறார்.

முப்படைகளுக்கும் காவல்துறை அதிகாரங்கள் வழங்கி, தமிழர் பகுதிகளில் நடைபெறும் படைகளால் மேற்கொள்ளப்படும் கைதுகள் காணாமற்போதல் ஆகியவற்றுக்கு சட்ட அங்கீகாரம் கொடுப்பதற்கும் இதில் ஈடுபடுவோரைக் காப்பாற்றவும் புதிய சட்டமூலத்தை அறிவித்து கையெழுத்திட்ட மை காய்வதற்குள் சிங்களத்தின் அரசவிழாவில் கலந்துகொண்டுவிட்டு சல்யாப்புக் கதைகள் சொல்லுகிறார் சம்பந்தர்.

இந்த நடைமுறை விடுதலைப்புலிகளது காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஒன்றல்ல உங்கள் தந்தையார் திரு இரசவரோதையம் அரசியலில் இருந்தபோதே ஆரம்பிக்கப்பட்டது என்பதை சம்பந்தன் நினைவுக்கு யாராவது கொண்டுவாங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் சந்திரிக்கா கேட்டுக் கொண்டால்.. சுடலைக்கும் போவார். அவ்வளவு பாசம். உவர் திருந்தார். நம்பி தான் கெட்டால் பறுவாயில்லை.. தமிழ் சனத்தை எல்லோ நாசம் பண்ணுது உந்தாள். :D:lol:

சம்பந்தன் ஐயா, நாற்பது வருடங்களாக சிறீலங்காவின் சிங்களம் இராணுவ வெற்றியை மையப்படுத்தி தனது அரசவிழாக்களை நடாத்தியது எனக் கூறுகிறார்.

முப்படைகளுக்கும் காவல்துறை அதிகாரங்கள் வழங்கி, தமிழர் பகுதிகளில் நடைபெறும் படைகளால் மேற்கொள்ளப்படும் கைதுகள் காணாமற்போதல் ஆகியவற்றுக்கு சட்ட அங்கீகாரம் கொடுப்பதற்கும் இதில் ஈடுபடுவோரைக் காப்பாற்றவும் புதிய சட்டமூலத்தை அறிவித்து கையெழுத்திட்ட மை காய்வதற்குள் சிங்களத்தின் அரசவிழாவில் கலந்துகொண்டுவிட்டு சல்யாப்புக் கதைகள் சொல்லுகிறார் சம்பந்தர்.

இந்த நடைமுறை விடுதலைப்புலிகளது காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஒன்றல்ல உங்கள் தந்தையார் திரு இரசவரோதையம் அரசியலில் இருந்தபோதே ஆரம்பிக்கப்பட்டது என்பதை சம்பந்தன் நினைவுக்கு யாராவது கொண்டுவாங்கோ.

சம்பந்தன் ஐயா வின் தந்தையார் பெயரும் இராஜவரோதயம் ,பாராளுமன்ற உறுப்பினராக இருந்த இராஜவரோதயம் சம்பந்தன் ஐயாவின் தந்தையார் இல்லை .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சம்பந்தன் ஐயா வின் தந்தையார் பெயரும் இராஜவரோதயம் ,பாராளுமன்ற உறுப்பினராக இருந்த இராஜவரோதயம் சம்பந்தன் ஐயாவின் தந்தையார் இல்லை .

சம்பந்தன் ஐயாவின் தந்தையார் கல்லோயா திட்டத்தின் பணிபுரிந்தவர் என்று நினைக்கிறேன். அரசியல்வாதி அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

சரி பெயர் கிடக்கட்டும் ஹரி அவர்களே!சம்பந்தர் செய்தது சரியா? தப்பா?

  • கருத்துக்கள உறவுகள்

மாவையே மௌனம் ஏன்????

Edited by புலவர்

முந்தைய ஆட்சிபோல் அல்லாமல், இந்த ஆண்டின் சுதந்திர நாள் நிகழ்வு, இராணுவ வெற்றியை மையப்படுத்தியதாக இருக்கவில்லை.

அப்படியான சூழலில் இந்த நிகழ்வில் பங்கேற்பது நாட்டில் வாழும் எல்லா மக்களுக்கும் ஒரு நல்ல செய்தியை அனுப்பும்.

இலங்கையில் நிரந்தரமான சமாதானம் ஏற்படும் வகையிலும், மக்கள் மத்தியில் நல்லிணக்கம் மற்றும் சமத்துவம் ஏற்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த ஆண்டின் நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டிருந்தன” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்..

அது  எல்லாம்  தெரியாது எமக்கு போர்  ஆமா  போர்  எம்மை   கேட்காமல்  எப்படி  ஐயா  நீர்  போவீர்  கூட்டத்துக்கு  துரோக வரலாறு  எழுத ..

இவன் இணைய போராளி  :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.