Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் நிதியுதவியுடன் வன்னியில் ஆடைத்தொழில்சாலை

Featured Replies

On 2016-03-10 at 2:04 AM, விசுகு said:

உறவுகளே

ஏற்கனவே இங்கு நான் குறிப்பிட்ட

புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தால் ஆரம்பிக்கப்பட்ட ஆடைத்தொழிற்சாலையின் 

அடுத்த கட்டம் ஈடேறியிருக்கிறது.

எமது கட்டமைப்பையும்

அதன் நோக்கத்தையும் நண்பர்களுக்கு கொண்டு சென்றதன் பலனாக

நண்பரொருவர் இரண்டு மில்லியன் ரூபாக்களை முதலீடு செய்து

சாவகச்சேரியில் (ஏற்கனவே இணுவில் என எழுதியிருந்தேன். ஆனால் இடம் இங்கு தான் கிடைத்தது) உருவாக்கியுள்ளார்.

அந்த நண்பர் தனது பெயரை தற்பொழுது எங்கும் வெளியிடவேண்டாம் என அறிவுறுத்தியதால்

அவரது பெயரை மட்டும் தவிர்க்கின்றேன்.

உங்கள் யாருக்காவது இது போன்ற திட்டங்களில்

அல்லது அவர்களிடமிருந்து இறக்கமதி செய்யும் விருப்பமிருந்தால் அவர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

அதுவே இப்பதிவின் முக்கிய நோக்கமாகும்.

நன்றி.

 

[நண்பரொருவர் இரண்டு மில்லியன் ரூபாக்களை முதலீடு செய்து

சாவகச்சேரியில் (ஏற்கனவே இணுவில் என எழுதியிருந்தேன். ஆனால் இடம் இங்கு தான் கிடைத்தது) உருவாக்கியுள்ளார்.]

 

முதலீடுசெய்தால் ஏதாவது லாபம் கிடைக்குமா (~1%/month)?

 

Edited by Knowthyself

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, புங்கையூரன் said:

செயல் வீரர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களும் நன்றிகளும்!

ஆண்டுக்கான மொத்த வருமானத்தையும் தெரிவித்து விட்டால்...முதலில் இடப்பட்ட மூலதனம்..எவ்வாறு அதிகரித்துள்ளது அல்லது குறைந்துள்ளது என மற்றவர்கள் அறிந்து கொள்ள முடியுமல்லவா?

இலாப நோக்கமற்ற நிறுவனம் எனினும்...இதனைப் பார்க்கும் மற்றையவர்கள்  இவ்வாறான முயற்சிகளில் ஈடுபடுவதற்கு ஒரு ஊக்குவிப்பாக அமையும் அல்லவா?

மேலுள்ளவாறு எழுதுவதையும் வருங்காலங்களில் குறைக்கச் சொல்லுங்கள்!

இது அவர்களது உழைப்பால் விளைந்தது என்று அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்! அவர்களது தன்னம்பிக்கையை வளர்க்க இது உதவும் எனக் கருதுகின்றேன்!

நன்றி அண்ணா

இலாப நோக்கமற்றது என்பதுடன்

எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு என்பதே இலக்காக இருப்பதால் அதனுடன்  முதலாண்டு கணக்கறிக்கை நிற்கிறது அண்ணா.

எமது நிர்வாகக்கூட்டத்தில் இது பற்றி விவாதித்தபோது

1 மில்லியன் ரூபா முதலீட்டுடன் பரீட்சார்த்தமாக 6 பேருடன் தொடங்கி

ஒரு வருடத்தில் 13 பேருக்கு வேலை வாய்ப்பும் நிர்வாகச்செலவுமாக 1.1 மில்லியன் ரூபாக்களை அது இலாபமாக பெற்றிருப்பது கருத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் முதலீட்டின் பற்றாக்குறை சார்ந்து விடுக்கப்பட்ட கோரிக்கைக்கும் இந்தவருடம் மேலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் மட்டக்கிளப்பில் இதன் கிளையாக ஒரு நிறுவனத்தை அமைக்கவும் குறைந்தது 10 பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தவும் ஒத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

1 மில்லியன் ரூபா முதலீட்டுடன் பல இடைஞ்சல்கள் தடைகள் குறுக்கீடுகளுக்கிடையில்

ஒரு சிலரின் தைரியப்படுத்தலில் பரீட்சார்த்தமாக ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் 

வெற்றிகரமாக 3வது கிளை பரப்பி கிட்டத்தட்ட 5 மில்லியன் ரூபா முதலீட்டுடன் 

போரால் குடும்பத்தலைவர்களை இழந்த

பெண்கள் தலமை தாங்கும் 50 குடும்பங்களுக்கு அவர்களின் சொந்தக்காலில் நின்று வாழும் வாழ்வாதாரத்தை  கொடுத்து நிற்பது தான் எமது இலக்கு அண்ணா.

அதை நாம் அடைந்துள்ளோம்.

இத்துடன் நின்றுவிடாது. தொடர்வோம்.

முடிந்தவர்கள் தொடருங்கள் என்பதே எமது முன்னுதாரணத்துடனான கோரிக்கை.

 

(மேலுள்ளவாறு எழுதுவதையும் வருங்காலங்களில் குறைக்கச் சொல்லுங்கள்! 

பலமுறை சொல்லியாச்சண்ணா. அவர்களின் வலியோ அல்லது எல்லோராலும் கைவிடப்பட்ட நிலையில் நாம் வந்ததன் விளைவோ கேட்கிறார்களில்லை. அந்த வரிகள் எம் இதயங்களை மிகவும் கூச வைக்கின்றன.)

 

 

 

28 minutes ago, Knowthyself said:

 

[நண்பரொருவர் இரண்டு மில்லியன் ரூபாக்களை முதலீடு செய்து

சாவகச்சேரியில் (ஏற்கனவே இணுவில் என எழுதியிருந்தேன். ஆனால் இடம் இங்கு தான் கிடைத்தது) உருவாக்கியுள்ளார்.]

 

முதலீடுசெய்தால் ஏதாவது லாபம் கிடைக்குமா (~1%/month)?

 

வணக்கம் சகோதரா

மேலே புங்கை அண்ணாவுக்கு எழுதியதை வாசித்தால் எமது நிலை தெரியும்

இலாபம் எவ்வாறு உள்ளது என்பதையும் அறிவீர்கள்

சாவகச்சேரியில் ஆரம்பித்த நண்பரும் போட்ட ஒரேயொரு கண்டிசன்

எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பளிக்கின்றீர்கள் என்று தான் பார்ப்பேன் என்பதாகும்.

எனவே அவருக்கும் இலாபநோக்கமில்லை.

உங்களுக்கு ஆவலிருப்பின்

சசிகரனின் தொலைபேசி இலக்கம் தருகின்றேன் பேசுங்கள்.

நன்றி  ஆர்வத்துக்கும் நேரத்துக்கும்...

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

இதைத் தான் 
ஒருவனுக்கு மீனை கொடுப்பதை விட
அவனுக்கு மீனை பிடிக்க கற்றுக் கொடு

என்று மாவோ இரண்டு வரிகளில் மிக அழகாக சொல்லியிருக்கிறார்.

கள உறவுகளை வாழவைக்கும் நல்ல உள்ளம் கொண்டோர்க்கு பாராட்டுக்கள்.நீழீழி வாழ்க.

5 hours ago, விசுகு said:

வணக்கம் சகோதரா

மேலே புங்கை அண்ணாவுக்கு எழுதியதை வாசித்தால் எமது நிலை தெரியும்

இலாபம் எவ்வாறு உள்ளது என்பதையும் அறிவீர்கள்

சாவகச்சேரியில் ஆரம்பித்த நண்பரும் போட்ட ஒரேயொரு கண்டிசன்

எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பளிக்கின்றீர்கள் என்று தான் பார்ப்பேன் என்பதாகும்.

எனவே அவருக்கும் இலாபநோக்கமில்லை.

உங்களுக்கு ஆவலிருப்பின்

சசிகரனின் தொலைபேசி இலக்கம் தருகின்றேன் பேசுங்கள்.

நன்றி  ஆர்வத்துக்கும் நேரத்துக்கும்...

 

(நண்பர்) முதலீடு என்று எழுதினீர்கள் அதுதான் கேட்டேன், குறைவிளங்காதீர்கள், எனக்கு 2 millions அளவில் செய்ய சிலகாலம் எடுக்கும்

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் உறவுகளே...

 

கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலையை மேலும் பலமாக்குதல்

கிழக்கில் மட்டக்கிளப்பில் இதேபோல் ஒரு தொழிற்சாலையை ஆரம்பித்தல் என 

செக்டா நிறுவனத்தால் வைக்கப்பட்ட கோரிக்கை

France - புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் நிர்வாகசபையால் ஆராயப்பட்டு

2016க்கான தாயகத்துக்கான கொடுப்பனவாக

10 லட்சம் ரூபா ஒதுக்குவதென தீர்மானிக்கப்பட்டு

அதற்கு செக்டா தலைவர் சசிகரனின் ஒப்புதல் பெறப்பட்டு

திங்கட்கிழமை (23-05-2016)

5 லட்சம் ரூபாக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

மேலும் திட்டத்தின் முன்னேற்ற நடவடிக்கைகளின் பதில்கள் கிடைத்ததும்

மீதி 5 லட்சம் அனுப்பி வைக்கப்படும்.

 

நன்றிக்கடிதம் இணைக்கப்படுகிறது.

 

தலைவர்
புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்ஸ்
25/05/2016

அன்புடையீர் வணக்கம்

அண்ணா

ஆடைத் தொழிற்சாலை அனுசரனைக்கான நன்றி மடல்

பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் அனுசரணையில் மட்டக்களப்பு கிளிநொச்சியில் அமைந்திருக்கும் ஆடைத் தொழிற்சாலை செயல் திட்டத்திற்காக 2016ம் ஆண்டுக்கான அனுசரணை நிதியாக ஐந்து இலட்சம் ரூபா நிதியினை வழங்கியமைக்கு செக்டா நிறுவனத்தின் சார்பிலும் ஆடைத் தொழிற்சாலை யின் சார்பிலும் பயனாளிகள் சார்பிலும் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கின்றோம்.

தங்கள் மனித நேயப் பணிக்கு எமது வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றோம்.

நன்றி
ச.சசிகரன்
தலைவர்
செக்டா.

 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

ஓ மட்டக்களப்பிலா வாழ்த்துக்கள் பல்வேறு இடங்களில் வேலை செய்யும் பெண்களுக்கு இது உதவும் என நினைக்கிறேன் 

மீண்டும்  வாழ்த்துகள் ???

  • கருத்துக்கள உறவுகள்

"பிரான்ஸ் மக்கள் புங்குடுதீவு ஒன்றியத்தை"  வாழ்த்த வரிகள் கிடைக்கவில்லை.
தமது ஊருக்கு உதவி செய்து, வன்னி, கிளிநொச்சி, மட்டக்களப்பு என்று... இவர்களின் உதவி பரந்து விரிந்து செல்வதுடன்...
"நாவலர் குறும்பட போட்டி" என்றும் வைத்து... கலைஞர்களை ஊக்குவிக்கும் பணியையும்... சிறப்பே செய்யும்,
அந்த நல் உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள். sLove_100-108-101

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, முனிவர் ஜீ said:

ஓ மட்டக்களப்பிலா வாழ்த்துக்கள் பல்வேறு இடங்களில் வேலை செய்யும் பெண்களுக்கு இது உதவும் என நினைக்கிறேன் 

மீண்டும்  வாழ்த்துகள் ???

நன்றி முனிவர் ஜீ

போரினால் கணவன்மாரை இழந்து

பெண்கள் தலமை தாங்கும் குடும்பங்களுக்கு

வேலை வாய்ப்பை வளங்கும் நோக்குடன் தொடங்கப்பட்ட இந்த திட்டம் 

எதிர்பார்த்ததைவிட வளர்ச்சி கண்டு

இன்று 50 குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை தருவதாக செயற்ப்பட ஆரம்பித்திருக்கிறது.

இந்த இலக்கை இவ்வளவு விரைவில் அடைவோம் என கனவிலும் நினைக்கவில்லை.

இது மேலும் வளரும்

பயன் தரும்.

 

 

1 hour ago, தமிழ் சிறி said:

"பிரான்ஸ் மக்கள் புங்குடுதீவு ஒன்றியத்தை"  வாழ்த்த வரிகள் கிடைக்கவில்லை.
தமது ஊருக்கு உதவி செய்து, வன்னி, கிளிநொச்சி, மட்டக்களப்பு என்று... இவர்களின் உதவி பரந்து விரிந்து செல்வதுடன்...
"நாவலர் குறும்பட போட்டி" என்றும் வைத்து... கலைஞர்களை ஊக்குவிக்கும் பணியையும்... சிறப்பே செய்யும்,
அந்த நல் உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள். sLove_100-108-101

நன்றி  சிறி

உங்களது சிமிலியைப்பார்த்ததும்

எல்லாக்களைப்பும் தீர்ந்து போனது போலிருக்கு...

நான் அடிக்கடி சொல்வதை அப்படியே ஒரு சிமிலியில் கொண்டு வர உங்களால் மட்டுமே முடியும்

நாலு பேர் சேர்ந்தால்

எவ்வளவோ செய்யலாம்...

எத்தனையோ பேர் வாழ உதவலாம்..

 

  • 2 weeks later...

அருமையான முயற்சி, மிகவும் சிறப்பாக வளர்வது ஆனந்தத்தை தருகிறது.  
 

  • 5 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இடம் மாற்றம் தொடர்பாக

 

புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் அமைப்பின் அனுசரணையுடன் செக்டா தொண்டு நிறுவனத்துடன் கூட்டிணைந்து முன்னெடுக்கப்பட்ட கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை செயற்திட்டம் இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் இயங்கிய தொழிற்சாலை தற்போது நரசிம்மர் வைரவர் கோவிலடி A9 வீதி, பளை நகரம், பளை, கிளிநொச்சி என்ற முகவரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதனை அறியத்தருகின்றோம். (பளை, A9 வீதியிலிருந்து 2வது காணி)

கிளிநொச்சி பளை பிரதேச செயலகத்தில் சமுர்த்திப் பிரிவுடன் இணைந்து அவர்களின் நிர்வாக ரீதியான அனுசரனையுடன் செயற்திட்டம் இயங்கி வருகின்றது என்பதனையும் அறியத்தருகின்றோம்.

நன்றி

இவ்வண்ணம்

ச.சசிகரன்

செக்டா

ஆடைத் தொழிற்சாலை 23 மே – 2௦16

அனுசரனைக்கான கணக்கறிக்கை

 

புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் அனுசரணையில் கிளிநொச்சி மாவட்டத்தில் செக்டா தொண்டு நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் ஆடைத் தொழிற்சாலை செயற்திட்ட அபிவிருத்திக்கு 23 மே – 2௦16ல் அனுப்பிவைக்கப்பட்ட 500,000.00 (ரூபா ஐந்து இலட்சம்) நிதிக்கான கணக்கறிக்கை விபரத்தினை தங்கள் பார்வைக்கு அனுப்பிவைக்கின்றேன்.

திகதி

விபரம்

வீதம்

தொகை

12.3.2016

ரெனிம் துணி 365m

362.5X320

116000.00

30.7.2016

பயனாளிகளுக்கான விசேட கொடுப்பனவு

 

36000.00

14.11.2016

சோக்கோத் துணி

275m x 320

88000.00

14.11.2016

சேட் துணி

225m x 210

67000.00

14.11.2016

பஞ்சாவித்துணி

200 x 600

120000.00

14.11.2016

நூல் கட்டை

120 x 90

18000.00

14.11.2016

லேஸ் வகைகள்

 

15500.00

14.11.2016

கொழும்பு போக்குவரத்து செலவு

 

6250.00

16.11.2016

2 தையல் இயந்திர மோட்டர்

720 x 2

14500.00

 

வர்த்தக விளம்பரம்

 

5000.00

 

புதிய நிலையஇயந்திரத்திற்கு மின் இணைப்பு

 

7450.00

 

வரவுகள்

 

500000.00

 

செலவுகள்

 

493700.00

 

மீதி

 

6300.00

 

12.3.2௦16ல் கடன் கொள்வனவாக 116௦௦௦ துணிகள் கொள்வனவு செய்யப்பட்டது. இதற்கான கடன் 26 மே 2௦16ல் செலுத்தப்பட்டது.

3௦.7.2௦16 ஆடைத் தொழிற்சாலை பயனாளிகளுக்கு விசேட கொடுப்பனவுகளுக்காக ரூபா 36௦௦௦ பயன்படுத்தப்பட்டது. இந்த நிதி பயன்பாடு அவசரகால சூழ்நிலை காரணமாக பயன்படுத்தப்பட்டது.

ரூபா 92௦௦௦ நிதி சாவகச்சேரி செயற்திட்டத்திற்கு கடனாக பயன்படுத்தப்பட்டிருந்தது. அந்த நிதி 12.11.2௦16 மீளப் பெறப்பட்டு கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலைக்கு மீண்டும் பயன்படுத்தப்பட்டு செயற்திட்டம் மீண்டும் இயங்குநிலைக்கு கொண்டுவரப்பட்டது.

15.௦6.2௦16 பயனாளிகள் சம்பளங்களுக்காக தாங்கள் அனுப்பிய நிதியில் ரூபா 13௦௦௦௦ பயன்படுத்தப்பட்டது. அந்த நிதியும் கடன் விற்பனைகள் மூலம் மீள் திரும்பிய நிதி மூலம் மீள் நிரப்பப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களிடமிருந்து மீளப் பெறப்பட்டது.

ஆடைத் தொழிற்சாலை செயற்திட்டத்திற்காக தாங்கள் அனுப்பிய நிதி மாற்றீட்டு தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டாலும் மீண்டும் மூலதன இருப்பினை மேம்படுத்துவதற்காக அல்லது சொத்து மதிப்பினை அதிகரிப்பதற்காக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது என்பதனை இதய சுத்தியுடன் அறியத்தருகின்றேன்.

புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினால் 2௦16ம் ஆண்டுக்காக முதலாம் கட்டமாக அனுப்பப்பட்ட நிதி ரூபா 5௦௦,௦௦௦வும் கிளிநொச்சி செயற்திட்டத்திற்காகவே பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உருவானதினால் கிளிநொச்சி செயற்திட்டதிற்கே பயன்படுத்தப்பட்டது.

கிளிநொச்சி செயற்திட்டம் இயங்கு நிலையில் ஏற்பட்ட தடங்கலினால் மீண்டும் அதனை இயல்பு நிலைக்கு கொண்டுவரவேண்டிய தேவை இருந்ததினால் தாங்கள் அனுப்பிய நிதி கிளிநொச்சி செயற்திட்டதிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

கணக்கறிக்கை அனுப்புவதில் ஏற்பட்ட தாமதம் மாற்றீட்டு தேவைக்கு பயன்படுத்தப்பட்ட நிதி மீள் திரட்ட ஏற்பட்ட கால தாமதமும் செயற்திட்டத்தை மீள் இயங்குநிலைக்கு கொண்டுவருவதற்கு எடுத்தகால அவகாசமும் காரணமும் ஆகும்.

புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் இனால் 23 மே 2௦16ல் செக்டா தொண்டு நிறுவனத்தின் ஆடைத் தொழிற்சாலை செயற்திட்டத்திற்காக அனுப்பி வைக்கப்பட்ட ரூபா 5௦௦,௦௦௦,௦௦ நிதிக்கான கணக்கறிக்கையினை தங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றோம். மேற் கூறப்பட்ட தகவல்கள் அனைத்தும் இதய சுத்தியுடன் அளிக்கப்படுகின்றது என்பதனை அறியத்தருகின்றோம்.

 

புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்சின் செக்டா நிறுவனத்துடன் கூட்டிணைந்த ஆடைத் தொழிற்சாலையின் சொத்துமதிப்பு 21 இலட்சம் சொத்து மதிப்பினை கொண்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டு காலப் பகுதியிலும் தேறிய 3 இலட்சம் ரூபா தேறிய இலபாமீட்டியுள்ளோம் என்பதனையும் அறியத்தருகின்றோம்.

 

கடந்த 4 மாதங்கள் ஏற்பட்ட இடையூறுகள் அனைத்தும் இயல்பு நிலையை எட்டியுள்ளது என்பதனையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

செயற்திட்டத்தின் இடையே ஏற்ப்பட்ட இடயூறுகளுக்காக மன்னிப்பு கோருவதுடன் எனது உள்ளம் சார்ந்த வருத்தத்தினையும் தெருவிக்கின்றோம். தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.

 

நன்றி

இவ்வண்ணம்

ச.சசிகரன்

தலைவர்  

செக்டா

அன்புடையீர் வணக்கம்

 சுயமான முறையில் தனித்துவத்துடன் இயங்கும்

புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் அனுசரணையில் செக்டா தொண்டு நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் ஆடைத் தொழிற்சாலை செயற்திட்டம் ஆடைத் தொழிற்சாலைகளின் பிரதான (தலைமை) நிலையமாகவும் இயங்கும் மட்டக்களப்பு, சாவகச்சேரி செயற்திட்டங்கள் சகோதர நிறுவனங்களாக செயற்படும்.எதிர்காலத்தில் கைமாற்று நடவடிக்கைகள் அனைத்தும் உத்தியோக பூர்வமாகவும் கடன் அடிப்படையிலும் இடம்பெறும். தங்கள் அனுசரணையுடனான திட்டம் சுயமான முறையில் இயங்கும் தனித்துவத்துடன் இயங்கும் என்பதை அறியத்தருகின்றேன்.

நன்றி

இவ்வண்ணம்

ச.சசிகரன்

தலைவர்  

செக்டா

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.