Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 34

ஈழம் 

 

ஈழம் -

ஒரு தீவு;

ஒரு தீர்வு;

ஒரு கனவு;

கட்சிகளுக்கு ஒரு பிழைப்பு.

  • Replies 228
  • Views 34k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 35

ஒத்தி வைப்பு

 

மூணு நாள் என்றால்

மூணு நாளேவா

அஞ்சாவது நாள் தான் என்று

அஞ்சாது சொல்வாள்

மூணு வருசம் என்றாள்

மூணு வருசமேவா என்று

இரண்டாவது பிள்ளையை

ஏழு வருசம் தள்ளிவைத்தாள்

அவள் கொண்டு வரும்

ஒத்திவைப்புத் தீர்மானங்கள்

எதிர்க்கட்சி

பலமில்லாததால்

ஏக மனதாக

நிறைவேற்றப்படுகின்றன

நீ குடை கொண்டுவர விரும்பாத
ஒரு நாளில்
திடீரென்று மழை வந்தது.
எனது குடையில்
இருவருக்கும் இடமிருந்தபோதும்
நாகரிகமும் கூடவர
இடமில்லாததால்
குடையை உன்னிடம் தந்து
நனைந்தபடி நானும் நடந்தேன்.

 

ரணம் பெயர்க்க

 

பெண் குழந்தை பிறந்தால்

உன் நிறைவேறாத

காதலுக்குச் சொந்தக்காரியின்

பெயரை வைப்பதென்னவோ

நியாயந்தான்

 

ஆனால்

ஆண்குழந்தை பிறந்தால்

பெயர் வைக்கும் உரிமையை

மனைவிக்குக் கொடுத்துவிடு

பின் பெயர்க்காரணம் கேட்காதே.

 

 

உண்மைச்  சம்பவத்தின் பதிவுகள்.   வாழ்த்துகள். தொடருங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 36

எல்லாவற்றையும்

 

சொற்களின்

சுவடொன்றுமில்லை

உதடுகளில்

கேட்டதன்

கறையொன்றுமில்லை

செவிகளில்

பார்த்ததன்

பதிவொன்றுமில்லை

விழிகளில்

எதையும்

மறுக்கவும்

மறைக்கவும்

மறக்கவும்

முடிகிறது

எளிதாக 

 

-சேயோன் யாழ்வேந்தன் (நன்றி.  www.valaitamil.com)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 37

பச்சை

வளமான ஊரில்தான்

வாழ்க்கைப்பட்டு இருக்கிறாய்

ஆலப்புழையில்

வீட்டு வாசற்படியில்

தண்ணீர் ஓடுமாமே,

எல்லாவற்றையும் கழுவி

சுத்தமாய் வைத்துக்கொள்ளலாம்.

சுடுமணல் ஓடுகிற ஆற்றில்

நான் போய்

எதைக் கழுவ முடியும்?

எங்கு பார்த்தாலும் பச்சை எனில்

உனக்கு வேறெந்த நினைவும் வராது.

மொட்டைத் தென்னைகளையே

பார்க்கும் எனக்குத்தான்

இளநீர்க்காலங்கள் நினைவிலாடுகின்றன.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 38

பின் நவீனத்துவக் கவிதை

பின் நவீனத்துவக் கவிதை

என்றால் என்னவென்று

போயும் போயும்

என்னிடம் கேட்டான் ஒருவன்.

நான் சொன்னேன்

இரு சக்கர வாகனத்தில்

முன் செல்லும்

பெண்ணொருத்தியின்

பின் நவீனத்துவம் பார்த்து

வேகத்தை நீ அதிகரித்து

முன் சென்று பார்த்து

ஏமாறுவது போல்தான் இதுவும்.

விளங்காத வாழ்வு பற்றி

விளங்காத கவிதை எழுதி

அவன் பெயர் விளங்க,

நீ விளங்காமல் நின்றிருப்பாய்

நூறாவது முறை படித்து.

 

கவிதையில் புதுசாக

புகுத்த இனி ஏதுமில்லை என்பதனால்,

வழக்கமான ‘பின்’ தவிர்த்து

தங்கம் வெள்ளியில்

பின் அடிப்பதும்,

வழக்கமான இடம் தவிர்த்து

மற்ற மூன்று மூலைகளில்

பின் அடிப்பதும்,

பல வண்ணங்களில்

பின் அடிப்பதும்,

இன்னும் முற்றிப் போனால்

ஒற்றைத்தாளுக்குப்

பின் அடிப்பதும்

பின் நவீனத்துவம் தான் என்றேன்.

பாவம் அவனோ

காதலிக்காக கவிதை எழுதும்

புதுக்கவிஞன்

அவள் இவனைக்

கைகழுவினால் தான்

மற்ற கவிதைகளைப் பற்றி

அவனால் யோசிக்கவே முடியும்.

நல்ல வேளை

அவன் என்னிடம் வந்தான்.

வேறொரு நவீனக்கவிஞனிடம்

சென்றிருந்தால்

விளக்கம் சொல்லியே

கொன்றிருப்பான்.

எடுத்துக்காட்டாய் அவனுடைய

நவீனக்கவிதை ஒன்று சொல்லியிருந்தால்,

இடிவிழுந்து செத்திருப்பான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 39

அன்பானவர்களுக்கு

 

இலக்கியமும் கவிதையும்

இன்னும் பலவும்

காலம் கடந்து நாம்

பேசிக்கொண்டிருந்ததில்

கணவன் சந்தேகிப்பான் என்பதையோ

மனைவி சபித்துக்கொண்டே

சமைத்துக்கொண்டிருப்பாள் என்பதையோ

மறந்தேபோனோம்

வீடு திரும்ப மனமில்லாதது போல்

ரயில் வாராத

நடைமேடையில்

அமர்ந்திருந்தோம்

இன்னும் பேசவேண்டியது

மிச்சமுள்ளது போல்.

சட்டென எழுந்து நின்றோம்

விடைபெறும் வேளையில்

மனதில் வினா எழுந்தது

மறுபடி எப்போது

சந்திப்போம் என்று.

எதுவும் பேசாமல்

எதிரெதிர் திசை பிரிந்தோம்.

என்ன செய்ய,

அன்பில்லாதவர்களுக்கு

எளிதாக இருக்கும் விஷயங்கள்

அன்பு கொண்டவர்களுக்கு

மிகக் கடினமாக இருக்கிறது. 

அருமையான கவிதைகள். 


அருமையான கவிதைகள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 40

வீடு

‘வாடகைக்கு’ என்றும்

‘விற்பனைக்கு’ என்றும்

அறிவிப்புகள் தொங்குகின்றன

ஒரு வீடு

தேடிக்கொண்டிருக்கிறேன்

வாழ்வதற்கு

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 40

வீடு

‘வாடகைக்கு’ என்றும்

‘விற்பனைக்கு’ என்றும்

அறிவிப்புகள் தொங்குகின்றன

ஒரு வீடு

தேடிக்கொண்டிருக்கிறேன்

வாழ்வதற்கு

சிறு துரும்பும் பல்குத்த உதவுவதை, முதுமொழியில் கண்டேன்.
சிறு விடயமும் கவிதையாக மலர்வதை, யாழ்வேந்தனிடம் கண்டேன். 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதைகளை வாசித்து மனதாரப் பாராட்டும் தாய்த்தமிழ் உறவுகள் Paanch மற்றும் கவிப்புயல் இனியவனுக்கு நன்றி.


ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 41

அற்புதம்

 

பாத்தி கட்டி

உரமிட்டு

நீர் பாய்ச்சி

நீ வளர்த்திருக்கும்

ரோஜாக்கூட்டத்திலிருந்து

சற்றே விலகி

உன் மண்வெட்டியிலிருந்து தப்பி

வேலியில் ஒளிந்திருந்து

எட்டிப் பார்க்கிறது

ஒரு காட்டுச் செடியின்

அற்புத மலர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 42

விரதம்  

 

சென்ற முறை

மௌனம் பழகலாமென்று

இந்த மலைச்சரிவுக்கு வந்திருந்தோம்

நீ ஓயாமல் பேசிக்கொண்டிருந்தாய்

இந்த முறை

பிரம்மச்சரியம் பேணலாம்

என்று வந்திருக்கிறோம்


 


ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 43

சூத்திரனின் பிறப்பு

 

வழக்கம் போல்

நகர் உலாச் சென்ற கடவுள்

தெரியாத்தனமாக

ஒரு வேசியின்

வீட்டுக் கதவைத் தட்டிவிட்டார்

 

ஏதுமறியாத வேசிக்கு

வந்திருப்பது கடவுளென்று

தெரியாவிட்டாலும்

யாவுமறிந்த கடவுளுக்கு

அவள் வேசியென்பது

தெரிந்துவிட்டது

உள்ளே வாருங்கள் என்றாள் வேசி.

கடவுள் தயங்கினார் –

இல்லை, நான் அதற்காக வரவில்லை.

வேசி சிரித்தாள் -

நேற்றுந்தான் ஒருவன்

கவிஞன் நான்

கவிதை எழுதத்தான் வந்தேன்

என்று சொல்லிக்கொண்டு

காகிதம் பேனாவோடு வந்தான்

காகிதத்தில் ஒரு வரியும் எழுதவில்லை

காலையில் தான் போனான் என்றாள்.

கடவுள் திக்கினார் -

நான் அப்.....

அதற்கு மேல்

கடவுளைப் பேசவிடவில்லை வேசி.

ஆட்கொல்லி ஆண்டவன்

ஆட்கொள்வதற்கு

வேசிகள் ஒன்றும்
விலக்கல்லவே.

சூத்திரனின்

பிறப்பை

வேதங்கள் அறிவித்தன,

பிரபஞ்சம் கொண்டாடியது.

Edited by seyon yazhvaendhan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகவும் வித்தியாசமான அருமையான கவிதைகள் .

நன்றாக இருக்கிறது . என் மனமார்ந்த பாராட்டுகள் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகவும் வித்தியாசமான அருமையான கவிதைகள் .

நன்றாக இருக்கிறது . என் மனமார்ந்த பாராட்டுகள் .

 

உங்கள் மனமார்ந்த பாராட்டுக்கு நன்றி.   பாராட்டுகள் கவிதைக்கு வித்துகள்.  தாய்த்தமிழால் இணைந்திருப்போம்.

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 44

வேறு ஆகமம் 

 

அடிவாங்கியே

புனிதராகிவிட்டீர்

அடித்தவனை

பாவியாக்கி

ஒரு கன்னத்தில்

அறைந்தவனை

மேலும் பாவியாக்க

யாம் விரும்பவில்லை

பிதாவே

 

வண்டி இழுத்து வந்த

குதிரை

வாய்ப்பூட்டோடு

வாசலிலே நிற்கிறது

பாவிகளை

உம்மிடம்

சுமந்து வரும்

பாரம் அழுத்துகிறது

பரம பிதாவே

உண்மையிலேயே

வருத்தப்பட்டு

பாரம் சுமப்பவர்களுக்கு

எப்போது

இளைப்பாறுதல் தரப்போகிறீர்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 45

இன்னும் அவகாசம் இருக்கிறது

 

யாரும்

அவசரப்பட்டு

எந்த முடிவுக்கும்

வந்துவிட வேண்டாம்

அவர்கள்

உங்களைக் கொல்வது கூட

உங்களைக் காப்பாற்றுவதற்காக இருக்கலாம்

மூன்றாம் நாள்

நீங்கள்

உயிர்த்தெழவில்லையெனில்

அவர்கள் மீது

வழக்குத் தொடுக்கலாம்

உங்களை அறிந்தவர்

எவரும்

உயிரோடிருந்தால்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 46

அவநம்பிக்கையின் மேல் நம்பிக்கை

வீட்டுக் கூரையினின்று 
காகம் கரைந்தால் 
விருந்து வருமென்று 
அம்மா சொல்வதை 
நான் நம்புவதேயில்லை 

இன்று ஞாயிற்றுக்கிழமை 
நீ வருவாய் என்ற 
நம்பிக்கை இருக்கிறது 

காகத்தின் மேல் ஏன் 
மூட நம்பிக்கை வைக்க வேண்டும்? 

பொழுது சாயச் சாய 
நம்பிக்கையும்... 

வேறு வழியறியாமல் 
வாசலில் காகத்துக்கு 
சோறு வைத்தேன் 

சோற்றைத் தின்ற காகம் 
கூரையில் அமர்ந்தது 
அமைதியாக 
 

நீ வரும் நேரம்

கடந்ததும்

காகம் பறந்தது


எனது நம்பிக்கையைப் பொய்யாக்கி 
நீ என்னை ஏமாற்றிவிட்டதாக 
நினைக்கவில்லை 

எனது அவநம்பிக்கையைப் பொய்யாக்கி 
இந்தக் காகம்தான் என்னை ஏமாற்றிவிட்டது.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 47

தேள் புராணம்

 

தெருவிளக்கடியில் படித்த

நான்காண்டுகளில்

தேள்களின் வாழ்க்கை முறையை

தெரிந்துகொண்டேன்

 

தேள்கள் சுவர்களில்

ஏறுவதில்லை என்பதால்

கால்வாய் சிமென்டுக் கட்டையில்

கால்களைத் தூக்கிக் கொண்டு

ஆபத்தின்றி உட்கார்ந்துகொள்வேன்

 

தேள்கள் மனிதர்களிடமிருந்து

விலகி இருக்கவே

விரும்புகின்றன

 

நள்ளிரவு வேளைகளில்

பெரும்பாலும் 

தனித் தனியாகவே

அவை வருகின்றன

 

 

இருளில் நடக்கும்போது

நிலவொளியை

முதுகில் சுமந்து செல்லும்

தேள்கள்

அழகுணர்ச்சி மிக்கவை

 

செந்தேள் கருந்தேள்

எருமைத்தேள் நட்டுவாக்கலி என்று

வகைகள் உண்டு அவற்றில்

 

புணர்ச்சி முடிந்தவுடன்

துணையைக்கொன்று தின்றால்

அது பெண்தேள் என்று

தெரிந்துகொள்ளலாம்

பெண்தேளை இனங்காண

வேறு அம்சங்களை

அந்த வயதில்

நான் அறிந்திருக்கவில்லை

 

 

உயிரியல் ரெக்கார்டு நோட்டில்

அச்சு அசலாக

தேள் வரைந்ததைப் பாராட்டி

லட்சுமி டீச்சர்

முதுகில் தட்டிக்கொடுத்தது

இன்னும் மெத்து மெத்தென்றிருக்கிறது

 

ஓவியப் போட்டியில்

இயற்கைக்காட்சி என்ற தலைப்பில்

தேள் வரைந்ததற்கு

பரிசு கிடைக்கவில்லை

 

தெருவிளக்கடியில் படித்ததால்

தேள்களைப்பற்றி அறிந்துகொண்டேன்

தேள்களன்னியில்

தெருவிளக்கடியில்

படித்தது எதுவும்

நினைவில் இல்லை.

-சேயோன் தேள்வேந்தன்-

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 48

பவனி

நானும் அவளும்

எத்தனை விதமான

உடைகளில் 

பவனி வந்தோம்

அந்த இறுதி நிர்வாணத்திற்காக

Edited by seyon yazhvaendhan

அற்புதம்

 

பாத்தி கட்டி

உரமிட்டு

நீர் பாய்ச்சி

நீ வளர்த்திருக்கும்

ரோஜாக்கூட்டத்திலிருந்து

சற்றே விலகி

உன் மண்வெட்டியிலிருந்து தப்பி

வேலியில் ஒளிந்திருந்து

எட்டிப் பார்க்கிறது

ஒரு காட்டுச் செடியின்

அற்புத மலர்

 

தலைப்பை போலவே மிக அற்புதமான கவிதை !!!.   

 

 பள்ளி, வீட்டுப்பாடம், இசை வகுப்பு, நடன வகுப்பு என நான்கு சுவற்றுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் பணக்கார வீட்டு குழந்தையை ரோஜாச்செடியும் , புழுதியில் புரண்டு விளையாடி, வாழ்கையை வாழ்ந்து, எந்த கட்டுப்பாடும் இல்லாது சுதந்திரமாய் சுற்றி தெரியும் ஏழை வீட்டு குழந்தையை காட்டுச்செடியின் அற்புத மலரும்  பிரதிபலிக்கிறது. 

 

- செந்தமிழன் அன்புச்செல்வன் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைப்பை போலவே மிக அற்புதமான கவிதை !!!.   

 

 பள்ளி, வீட்டுப்பாடம், இசை வகுப்பு, நடன வகுப்பு என நான்கு சுவற்றுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் பணக்கார வீட்டு குழந்தையை ரோஜாச்செடியும் , புழுதியில் புரண்டு விளையாடி, வாழ்கையை வாழ்ந்து, எந்த கட்டுப்பாடும் இல்லாது சுதந்திரமாய் சுற்றி தெரியும் ஏழை வீட்டு குழந்தையை காட்டுச்செடியின் அற்புத மலரும்  பிரதிபலிக்கிறது. 

 

- செந்தமிழன் அன்புச்செல்வன் 

 

செந்தமிழன் அன்புச்செல்வனின் நுண்ணிய வாசிப்புத் திறன் இன்னும் யோசிக்க வைக்கிறது.  தங்கள் கருத்துரைக்கு நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 49

ஒளி ஊடுருவும் முகங்கொண்ட எதிரியே 

 

நான் எல்லை மீறிவிட்டதாக

நிரூபிப்பதற்காக

சுவர் ஓவியங்களை

தலைகீழாக மாட்டியிருக்கிறாய்

கதவு நிலையை

கூரையில் தொங்கவிட்டிருக்கிறாய்

சிரசாசனம் செய்தபடி

பேசப்பழகியிருக்கிறாய்

உன் அறியாமையை எண்ணிச் சிரித்தபடி

இன்னொரு கோப்பையை நிறைக்கிறேன்

 

கடைசிக் கோப்பையின்

கடைசிச் சொட்டுக்குமுன்

உன் தோல்வியைப்

பொறுக்க முடியாமல்

விளக்கணைக்கிறாய்

  • கருத்துக்கள உறவுகள்

அருமையாக இருக்கின்றன கவிதைகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமையாக இருக்கின்றன கவிதைகள்

 

 

நன்றி கவிதாயினி. யாழ் இணையத்தில் இணைந்த பிறகு, உங்களைப் போன்ற கவிகளின் பாராட்டுகளால், என் எழுத்துத் திறன் கூடியிருப்பதாக உணர்கிறேன். நன்றி. யாழ் இணையத்துக்கும் தமிழ் உறவுகளுக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கவிதாயினி. யாழ் இணையத்தில் இணைந்த பிறகு, உங்களைப் போன்ற கவிகளின் பாராட்டுகளால், என் எழுத்துத் திறன் கூடியிருப்பதாக உணர்கிறேன். நன்றி. யாழ் இணையத்துக்கும் தமிழ் உறவுகளுக்கும்.

 

நக்கலுக்கும் ஒரு அளவு வேணும் சேயோன். உங்களைக் கவிஞன் என்று கூறலாம். நான் கவிதை எழுத இப்பதான் பயில்கிறேன். அதுகூட ஒழுங்காக வரமாட்டேன் என்று அடம் பிடிக்கிறது. நீங்கள் வேறு ...

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் உண்மையாகத் தான் சொன்னேன். 

 

எல்லோரிடமும் இருக்கிறது கவிதை

என்ன கழுதை

எழுதாமல் கிடக்கிறது

அவ்வளவுதான்.

 

உங்களிடம் இருக்கும் நல்ல கவிதைகள் ஒவ்வொன்றாக வெளிப்படும்,  அதற்கான காலமும் சூழலும் வாய்க்கும்போது.

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.