Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

............. மரம்

............ சொன்னது –

விதையாக இருந்த காலத்திலிருந்தே

நான் தான் உன்னை

ளர்த்து வருகிறேன்.

2

மட்டமான அரிசியில்

ஏழைகளின் பெயர்களையும்

பாசுமதி அரிசியில்

பணக்காரன் பெயரையும்

ஆண்டவனே எழுதும்போது

நாமென்ன செய்யமுடியும் நடுவே

 

congratulations 

 

 

சிதறிக்கிடக்கும் என் கவிதைக் குவியல்களுக்கிடையே சிறந்த வரிகளை மிக எளிதாக அடையாளம் கண்டு சுட்டும், உங்களின் நுண்ணிய வாசிப்புக்கு என் நன்றியும், வாழ்த்துகளும்!

சேயோன் யாழ்வேந்தன்

  • Replies 228
  • Views 34k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 71

மக்கு

 

காகிதங்களாயேனாலும்

பச்சைக் கூடையிலும்

சிவப்ப்புக் கூடையிலும்

நான் பிரித்துப் போட்டதை

குப்பை சேகரிப்பவன்

வியப்புடன் பார்த்தான்

மக்கும் குப்பையில்

எனது கவிதைகளும்

மக்காத குப்பையில்

உனது கடிதங்களும்
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 72

(ஹைகூ-4)

 

சிலந்தி வலையில்

சிக்கியது

பனித்துளி

 

 

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 73

(ஹைகூ-5)

 

மலைப்பாதையில் செடிகள்

மலர்சூடி நிற்கின்றன

கொண்டை ஊசி வளைவுகளில்

Edited by seyon yazhvaendhan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 74

(ஹைகூ-6)

 

பள்ளி வாகன ஓட்டியிடம்

சொல்லுங்கள்

“பூக்களைப் பறிக்காதே”

 

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 75

(ஹைகூ-7)

 

 

இருட்டறைக்குள் தள்ளி அடைத்தேன்

இருட்டையே விரட்டிவிட்டது

தீபம்

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் சேயோன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடர்கிறேன், தொடர்ந்து வாசித்து, கருத்துகளைப் பதியுங்கள். உங்கள் அன்புக்கு நன்றி.


ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 76

இருளென்பதால் தெரிவதில்லையோ?

 

நேற்று நீ என்

கனவில் வந்ததையே

ஒப்புக்கொள்ள மறுக்கிறாய்,

இன்று நான் உன்

கனவில் வந்ததையா

ஒப்புக்கொள்ளப் போகிறாய்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 77

என்ன வளம் இல்லை இந்த திருவோட்டில்?

 

வெற்றிலை குதப்பித்

துப்பிய எச்சிலில்

சிவந்த இந்தியா

 

நட்ட நடுச்சாலையில்

பறவையிட்ட எச்சத்தில்

அகண்ட பாரதம்

 

விந்தைச் சுமந்து

வெளிநாட்டினர் வந்தனர்

மேக் இன் இந்தியா.

 

 

(பி.கு.   நாகரிகமற்றிருப்பதாக எண்ண வேண்டாம்.  "மேக் இன் இந்தியா" என்று வெளி நாடுகளுக்கு அழைப்பு விடுக்கும் மோடியின் மோசடித் திட்டத்தை சாடுவதற்காக இந்தக் கவிதை.)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 78

மழையென்பது யாதென 

 

ஒரு பச்சைப் பூத்துவாலையால்

நீ தலை துவட்டிக் கொண்டிருக்கும்

அழகைப் பார்த்தால்

சிரிப்புத்தான் வருகிறது,

உன் கூந்தல் மேகம்

சுமந்த நீரையெல்லாம்

போயும் போயும்

ஒரு பூத்துவாலைக்கா பொழிவது?

 

பார்ப்பவர்களையெல்லாம்

பார்வையாளர்களாக்கி

விழிகளால் நீ நடத்திய

வீதி நாடகங்களின்

கடைசிப் பார்வையாளனாய் வந்து

உன் காதல் நாடகத்தில்

ஒரு பாத்திரமாகிப்போனவன் நான்

 

ஓர விழிப்பார்வையால்

என்னருகே இருக்கும்

யாரையோ நீ

பார்த்துப் போகும்போது

சாரலடிப்பது போல்

சிலிர்த்துக் கொள்ளும்

சாதாரணன் நான்

 

உன் காதலர் சிலர் உளரேல்

அவர் பொருட்டுப் பெய்யும்

உன் காதல் மழையில்

நானும் கொஞ்சம்

நனைந்துவிட்டுப் போகிறேன்

 

நனையக் கூடாதென

நான் குடைபிடித்தால்

அது கோழைத்தனம்

நான் நனையக்கூடாதென்று

நீ இமைக்குடை சாய்ப்பது

நரித்தனம்

 

உன்னிடமான

காதலைச் சொல்வதற்கு

கடைசி முயற்சியாகத்தான்

உன்னிடம் நான்

காதலைச் சொல்கிறேன்

 

உன்னைவிட்டு நான் விலமாட்டேனென்ற

உன் நம்பிக்கையின் அடித்தளத்தின் மேல்

உன் பிடிவாதம் என்னும் சிகரமும்

என் விடாமுயற்சி என்னும் சிகரத்தின்

அடித்தளத்தில்

நீ என்னைவிட்டு விலகிவிடுவாயோ என்ற

என் பயமும்

நிலைகொள்கின்றன

 

சொல்லாமல் சொல்வது

புரியவில்லை என்பதால்

சொல்கிறேன்

சொல்லாவது புரிகிறதா சொல்.

 

நான் உன்னை விரும்புவது

உன்னதமான அழகு

எனக்குக் கிடைக்கவேண்டும்

என்பதற்காக அல்ல

உன்னதமான அன்பு

உனக்குக் கிடைக்கவேண்டும்

என்பதற்காகவே.

 

ஒரு குடைக்குள்

நனையாமல்

உரசிச் செல்லும்

போலிக் காதலர்கள்

போலில்லாமல்.

வானமென்ற

ஒரு குடைக்குள்

நனைகின்ற

உண்மைக் காதலர்கள்

ஆவோம் நாம், வா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 79

மழையென்பது யாதென (2) –சேயோன் யாழ்வேந்தன்

 

மழையென்பது யாதெனக் கேட்கும்

மகவுக்குச் சொல்வேன்

நீ எனக்கு

நான் உனக்கு

 

மழையென்பது யாதென

சின்ன வயது சேயோனிடம் கேட்டால்

அம்மா வடை சுடுவதற்கு

சற்று முன் வருவதென்பான்

 

மழையென்பது யாதெனக் கேட்கும்

மனைவிக்குச் சொல்வேன்

வெறுத்துக் கெடுக்கும்

விரும்பியும் கெடுக்கும்

உன்னைப் போல்தான் அதுவும்

பொய்த்துக் கெடுக்கும்

பெய்தும் கெடுக்கும்

 

மழையென்பது யாதென

என்னை நான் கேட்பேன்

இறுகிக் கிடக்கும்

மனித மனங்களில்

கொஞ்சமாவது

ஈரம் தோன்ற

நனைத்து விடவேண்டுமென்ற

பிரபஞ்சத்தின் விடாமுயற்சியென்று

சொல்லிக்கொள்வேன்

 

ஒழுகும் இடங்களில்

அலுமினியக் குண்டான்களை வைத்துவிட்டு

ஈர விறகு அடுப்புக்கு

ஓய்வு கொடுத்து விட்டு

அழும் பிள்ளைகளை

அணைத்தபடி நிற்கும்

அதோ அவளிடம்

மழையென்பது யாதெனக் கேட்டால்

சனியன் என்பாள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 80

மழையென்பது யாதென (3) –சேயோன் யாழ்வேந்தன்

 

நாய்க்குடைக்கடியில்

அதிகாலை மழையில்

நனையாத புற்கள்

*

மரங்களை வெட்டினால்தான்

மழை பொழியும்

மரத்தடிப் புற்கள் பேசிக்கொண்டன

*

தூறல் விழுந்ததும்

ஓடிப் போய்

துணிகளை

எடுப்பதன் காரணம்

துணிக்கொடி கட்டும்

மழைத்துளி தோரணம்

*

காதல் மழையில்

நனைவது பெரிதில்லை

சேறிலும் சகதியிலும்

நடக்கப் பழகணும்

*

பற்றி எரிகிறது வயிறு

குமைந்து புகைகிறது மனது

முரண்டு பிடிகிறது ஈரவிறகு

ரசிக்க முடியவில்லை மழையை.

பசித்த ஏழைகளின்

சாபம் தான்

பெரும்பாலும்

பொய்யெனப் பொய்க்கும் மழை.

*

அடைமழையென்பது

நான்கைந்து நாள்

வேலையில்லாமல்

வீட்டுக்குள் அவனை

முடக்கிவிடுவதோடு,

பின்பொரு பொழுது

நான்கைந்து மாதம்

வேலைக்குச் செல்லமுடியாமல்

அவளையும் முடக்கிவிடும்

*

நீர்க்குடையின்

மழைக்கம்பி பிடித்து

நனைந்து கொண்டிருக்கும்

குழந்தைகளின் மேல்

பட்டுத்தெறிக்கிறது

பிரபஞ்சத் துளிகள்

 

குழந்தை நனையாமலிருக்க

குடை பிடிக்கும்

அம்மாவுக்குச் சொல்லுங்கள்

ரோஜாச்செடி

நனையக்கூடாதென்று

யாரும்

குடைபிடிக்கமாட்டார்கள் என்று.
***

  • கருத்துக்கள உறவுகள்
சேயோன் யாழ்வேந்தனுக்கு மழைமீது அப்படி என்ன கோபம்? கோபம் புரிகிறது..! :unsure:
வேந்தனின் வீட்டுக் கூரைவேய ஓலைதரும் பனை, தென்னைகளையும் தெற்கிலிருந்து வந்தகொடியோன் அழித்துவிட்டது, இந்த மழைக்குத் தெரியாதா.?? :huh:  :(  
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

சேயோன் யாழ்வேந்தனுக்கு மழைமீது அப்படி என்ன கோபம்? கோபம் புரிகிறது..! :unsure:
வேந்தனின் வீட்டுக் கூரைவேய ஓலைதரும் பனை, தென்னைகளையும் தெற்கிலிருந்து வந்தகொடியோன் அழித்துவிட்டது, இந்த மழைக்குத் தெரியாதா.?? :huh:  :(  

 

தோழர் பாஞ்ச்சின் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!  ரொம்ப நாள்களாக என் கவிதைக்குள் உங்களைப் பார்க்காத ஏக்கத்தை மழையாகப் பொழிந்து, ஒதுங்குவதற்கு என் கவிதைக் குடிசைக்குள் உங்களை அழைத்திருக்கிறது.

 

 

தெற்கிலிருந்து வந்த கொடியோன் அழித்துவிட்டதும் உண்மைதான்.

 

இணைந்திருப்போம்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 81

மழையென்பது யாதென (4)

 

சோடியம் வேபர்

விளக்குக் கம்ப ஷவரில்

நனைந்து கொண்டிருக்கிறது

தெருநாய் ஒன்று

சுருக்கி வைத்த

குடைபோலிருந்த

அசோகமரங்களைத் தவிர்த்து

குடைவிரித்த

கொன்றை மரத்தடியில்

ஒதுங்கியிருக்கின்றன ஆடுகள்

குடிசை வீட்டுப்

பொடிசுகளின்

மழைக்கப்பல்கள்

மாடிவீட்டு

மழைநீர்க்குழாயின்

சுழலில் சிக்கி

மூழ்கிக்கொண்டிருக்கின்றன

ஈரக்காற்றில்

படபடத்துக்கொண்டிருக்கிறது

என் வாசற்கதவு

ஈரத்தால் இறுகி

திறக்க இடம்கொடுக்க

மாட்டேனென்கிறது

உன்வீட்டு ஜன்னல்

விவஸ்தைகெட்ட மழை

இப்படிப் பெய்கிறதே

எப்படி நீ வருவாய்

என் வீட்டுக்கு

என்ற கலக்கத்தில் நான்.

எப்படியோ

நனைந்தபடி

ஓடிவந்துவிட்டாய்.

இனி இந்த மழை

இப்படியே

கொட்டட்டும்.

விவஸ்தைகெட்ட மனசு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 82

அவையும்

ஒரு கோட்டைக்குள்

உன்னைச் சிறை வைத்து

வட்டக் கோட்டைக் கிழித்து

அதில் பெருந்தீ வளர்த்து

வேட்டை நாய்களை

மதில்மேல் உலவவிட்டு

ஆழக்குழி வெட்டி

அகழி செய்து

அதில் முதலைகளை

உலவவிட்டிருக்கும்

உன் அப்பாவிடம் சொல்

அவையும் காதல் செய்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

சுருக்கி வைத்த

குடைபோலிருந்த

அசோகமரங்களைத் தவிர்த்து

 

தொடருங்கள் சேயோன்

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுருக்கி வைத்த

குடைபோலிருந்த

அசோகமரங்களைத் தவிர்த்து

 

தொடருங்கள் சேயோன்

வாசிப்புக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி தோழமையே!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 83

 

மே தினம்

 

 

மேதினியில் எங்கும் உழைக்கும் தொழிலாளியின

மே தினம் எழுப்புமே உரிமைக்குரல் அவருடன்

மோதினம் எனில் மூக்குடையும் முதலாளியினமென

மேதினம் உணர்த்துமே தினம்.

 

 

(பி.கு. வெண்பா இலக்கணம் தெரியாத என்பா)

  • கருத்துக்கள உறவுகள்

இரத்தினச் சுருக்கமான சிறிய கவிதைகள்,  அதுசரி  இரத்தினமே சிறியதுதானே ...!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தோழரே, உங்கள் கருத்தை கவிதை மகுடத்தில் பதித்த ரத்தினமாகக் கருதுகிறேன். நன்றி.


ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 84

ஒரு துளி கடல்

 

என் ஆடைகளை அவிழ்க்க விருப்பமில்லை

என் ஒப்பனைகள் கலைவதை விரும்பவில்லை

என் சுமைகளை இறக்கிட சம்மதமில்லை

உண்மையின் ஆழத்தைக் காணும் உத்தேசம் ஏதுமில்லை

உண்மை மாபெரும் கடல் போன்றதில்லை

அது ஒரு துளி நீர்தான்

என்றுனக்குப் புரியும்போது

நான் பருகிக்கொள்வேன்


இரத்தினச் சுருக்கமான சிறிய கவிதைகள்,  அதுசரி  இரத்தினமே சிறியதுதானே ...!!

 

தோழரே, உங்கள் கருத்தை கவிதை மகுடத்தில் பதித்த ரத்தினமாகக் கருதுகிறேன். நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 85

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு

 

செத்துப்போன ஒரு மாட்டைத் தோலுரித்ததற்காக

ஐந்து தலித்துகளை

தோலுரித்துக் கொன்றவர்களே,

மனித வதையைத் தடை செய்யும்

சட்டம் எதுவும்

உங்கள் மனுநீதியில் இல்லையோ?

மனிதனின் உயிரைவிட

பசுவின் உயிர் மேலானதென்று

சொல்லும் உன் வேதம்,

நீ எப்போதும் குறி வைக்கும்

அந்த இனமும் இந்து என்று

சொல்லவில்லையோ?

 

தன் கன்றுக்காய்

சுரந்த பாலை

நீ தின்று கொழுப்பது

பசுவை மிகவும் வதைக்கிறது.
 

பசுவையும் கன்றையும் பிரித்துக்கட்டி

மார்பில் குழந்தையுடன்

பால்காரி அமர்வதும்தான்

பசுவை வதைக்கிறது.

 

உங்கள்

பசு வதைத் தடைச் சட்டத்தில்

பால் கறப்பது தடை செய்யப்படுமா?

 

 

 

(செய்தி: 1.இந்திய நாடு முழுவதும் பசு வதைத் தடைச் சட்டம் கொண்டு வர உத்தேசம்.  செய்தி 2. 15.10.2002 அன்று ஹரியானா மாநிலத்தில் ஒரு இறந்த பசுவின் தோலுரித்துக் கொண்டிருந்த 5 தலித் இளைஞர்கள் (வயது 16 முதல் 20) இந்துத்வா வெறியர்களால் தோலுரித்துக் கொல்லப்பட்டனர்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 86

ஏதாவது செய்

 

நாங்களும்

ஏதாவது

செய்யவேண்டுமென்றுதான்

ஆசைப்படுகிறோம் -

வேசி மகனென்று

பட்டம் கொடுத்து

நாதியற்று

நடுத்தெருவில்

எம்மை நிற்க வைத்திருக்கும்

நாட்டுக்கு.

 

Edited by seyon yazhvaendhan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 87

முத்துடைத்து முத்துதிர்த்து

 

பல் துலக்க வெளியே வந்தபோது

பனி முத்துக்களைச்

சேகரித்துக்கொண்டிருந்தாய்.

சும்மாதானே இருக்கிறாய்

சற்று என் கிண்ணத்தைப்

பற்றிக்கொள் என்றாய்.

சில ரோஜாக்களின் மீது

வளர ஆரம்பித்திருந்த

முத்துக்குட்டிகளைத் தவிர்த்து

மற்றெல்லா முத்துக்களையும்

ஒவ்வொன்றாய் இட்ட பின்பு,

என் உள்ளங்கையால்

மூடி வைத்திருந்த கிண்ணத்தை

ஆவலுடன் எட்டிப் பார்த்தாய்.

முத்துக்களைக் காணாமல்

முகஞ்சிவந்தாய்

முதன்முதலாய்

முத்தெடுக்கும்போது

போயும் போயும்

உன்னிடம் தந்தேன் பார்

உன்னத முத்துக்களை

உடைத்துத் தொலைத்திருக்கிறாய் என்று

கண்ணீர் முத்துதிர்த்தாய்

என்ன சொல்லித் தேற்ற முடியும்

நாளை வரை நான்

காத்திருக்கத்தான் வேண்டும்

குற்றம் நடந்தது

என்னவென்று

உனக்குணர்த்த.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 88

சாவு விருந்து

 

பழத்தில்

ஊதுபத்தி

மணத்துப் புகைகிறது

வாழையிலையில்

கோழிக்குழம்பு

மணத்துக் கிடக்கிறது

பந்தலில் முறுக்கும்

பிஸ்கட்டும்

முறுக்கிக்கொண்டு ஆடுகின்றன

இவற்றில்

ஒன்று கிடைத்திருந்தாலும்

செத்திருக்கமாட்டான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 89

என்ன ஜென்மமோ

இப்படியாக

ஒரேயொரு மனையாளின்

மனதாள முடியாத

ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி

மண்ணாளும் அதிசயத்தை

கோடானு கோடி பக்தர்களின்

மனதாளும் மகத்துவத்தை

வாய்பொத்தி வேடிக்கை பார்த்தனர்

அயோத்தி தேசத்தின்

அயோக்கியக் குடிகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 90

திருடன்

 

பரம ஏழை

இவன் திருடியிருப்பான்

பரம்பரைப் பணக்காரன்

எதுக்குத் திருடுவான்?

வெள்ளையாய் இருப்பவன்

பொய் சொல்ல மாட்டான்

என்பது போல்

கொள்ளையடிப்பதிலும்

நம்பிக்கைகள்

திருடியதால் தான்

அவன் பணக்காரனாய் இருப்பதையும்

திருடத் தெரியாததால்

இவன் ஏழையாய் இருப்பதையும்

தெரிந்துகொள்ளாமல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.