Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

8ஆவது ஐ.பி.எல். செய்திகளும் கருத்துகளும்

Featured Replies

  • தொடங்கியவர்

கோல்கட்டா அணி வெற்றி

 

கோல்கட்டா: டில்லி அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் கோல்கட்டா அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியாவில் எட்டாவது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. இன்று கோல்கட்டாவில் நடந்த லீக் போட்டியில் கோல்கட்டா, டில்லி அணிகள் மோதின. டாஸ் வென்ற கோல்கட்டா அணி கேப்டன் காம்பிர் பேட்டிங் தேர்வு செய்தார்.

 

கோல்கட்டா அணிக்கு காம்பிர் (12) ஏமாற்றினார். உத்தப்பா 32 ரன்கள் எடுத்தார். சாவ்லா, மனிஸ் பாண்டே தலா 22 ரன்களில் ஆட்டமிழந்தனர். யூசுப் பதான் (42) அதிரடி காட்டினார். கோல்கட்டா அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்தது. சூர்யகுமார் (7) அவுட்டாகாமல் இருந்தார்.

 

டில்லி அணிக்கு ஸ்ரேயாஸ் மட்டும் (40) ஆறுதல் தந்தார். கேப்டன் டுமினி (25), ஜாதவ் (10) நிலைக்கவில்லை. யுவராஜ் சிங் டக்-அவுட் ஆனார். மற்றவர்களும் சொதப்ப, டில்லி அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 158 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. சவுரப் திவாரி (24), ஆல்பி மார்கல் (5) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

http://www.dinamalar.com/ipl2015/detail.php?id=1246841

  • Replies 449
  • Views 23.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

onrtd.png

bayliss_2397916f.jpg
கொல்கத்தா பயிற்சியாளர்கள் பெய்லிஸ் மற்றும் வாசிம் அக்ரம். | படம்: பிடிஐ
 
ஐபிஎல் கிரிக்கெட் சர்வதேச தரத்தில் இல்லை என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர் டிரவர் பெய்லிஸ் தெரிவித்துள்ளார்.
 
சர்வதேச அணிகளைச் சேர்ந்த தரமான வீரர்கள் இதில் விளையாடலாம் ஆனால் கிரிக்கெட்டின் தரம் சர்வதேச மட்டத்துக்கு இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
 
“ஐபிஎல் சர்வதேச கிரிக்கெட் அல்ல, சில சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் விளையாடுகின்றனர் அவ்வளவே, சர்வதேச கிரிக்கெட் ஆட்டத்தின் தரத்துக்கு ஐபிஎல் கிரிக்கெட் இல்லை.
 
ஆனால், இதன் மீதுள்ள அந்த பிம்பம், பெரிய ரசிகர்கள் கும்பல் முன்னிலையில் ஆடும் போது, நன்றாக ஆட வேண்டும் என்று வீர்ர்களுக்கு உந்துதல் ஏற்படுத்துவது உண்மை. எங்கள் அணியில் மட்டுமல்ல, மற்ற அணி வீரர்கள் பலரும் மிகச்சிறப்பாக இந்தத் தொடரில் ஆடிவருகின்றனர்.”
 
 
  • தொடங்கியவர்

ஆஸ்திரேலியாவில் 'காணாமல்' போய் மும்பையில் அருள் பாலித்த "முருகன்"!

 

மும்பை: ஆஸ்திரேலியா - நியூசிலாந்தில் நடந்த உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் சரியாக ஆடாமல், சொதப்பி எடுத்த இங்கிலாந்து வீரர் இயான் மோர்கன், தற்போது ஐபிஎல் போட்டியில் கவனிக்கத்தக்க வகையில் ஆடி வருகிறார். நேற்று மும்பையில் நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் பட்டையைக் கிளப்பியிருந்தார் மோர்கன். ஆட்ட நாயகனாகவும் அவர் தேர்வானார்.

 

 உலகக் கோப்பைப் போட்டியில் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி கேவலமாக ஆடி முதல் சுற்றோடு மூட்டையைக் கட்டியது. இந்த நிலையில் தற்போது ஐபிஎல் போட்டியில் சில இங்கிலாந்து வீரர்கள் ஆடி வருகிறார்கள். ஆனால் இங்கும் அவர்கள் சரியாக ஆடாத நிலையே இருந்து வந்தது. இந்த நிலையில் இயான் மோர்கன் நேற்று திடீரென விஸ்வரூபம் எடுத்தார். நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தானின் பந்து வீச்சை சிதறடித்த அவர் அரை சதம் போட்டு அணியை கரை சேர்த்தார்.

 

28 பந்துகளில் 63 ரன்களைக் குவித்த அவரது அதிரடி ஆட்டத்தால் ஹைதராபாத் அணி வலுப்பெற்றது. அவர் மற்றும் ஷிகர் தவன் ஆட்டத்தால் அந்த அணி 20 ஓவர்களில் 201 ரன்களைக் குவித்தது. இந்த அதிரடி ஆட்டம் காரணமாக மோர்கனுக்கு ஆட்ட நாயகன் விருதும் கிடைத்தது. வலுவான ராஜஸ்தான் அணிக்கு மோர்கனின் திடீர் எழுச்சி பாதகமாக அமைந்து போனது. எப்படியோ ஆஸ்திரேலியாவில் விட்டதை மும்பையில் பிடித்தாரே மோர்கன்!

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/ipl-2015-morgan-finds-the-form-ipl-226335.html

  • தொடங்கியவர்

சென்னையை சமாளிக்குமா மும்பை அணி

 

சென்னை: ஐ.பி.எல்., தொடரில் இன்று நடக்கும் லீக் போட்டியில் சென்னை, மும்பை அணிகள் மோதுகின்றன. இதில் பலம் வாய்ந்த சென்னை அணியை சமாளித்து வெற்றி பெற வேண்டிய முனைப்பில் மும்பை அணி உள்ளது.

 

இந்தியாவில், 8வது ஐ.பி.எல்., ‘டுவென்டி–20’ தொடர் நடக்கிறது. சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்கும் 43வது லீக் போட்டியில், தோனி தலைமையிலான சென்னை அணி, ரோகித் சர்மா வழிநடத்தும் மும்பை அணியை எதிர்கொள்கிறது.

 

மெக்கலம் நம்பிக்கை:

சென்னை அணி, இதுவரை விளையாடிய 10 போட்டியில் 7 வெற்றி, 3 தோல்வி உட்பட 14 புள்ளிகளுடன் வலுவான நிலையில் உள்ளது. கோல்கட்டா, ஐதராபாத் அணிகளிடம் அடுத்தடுத்து ‘அடி’ வாங்கிய சென்னை அணி, பெங்களூருவை வீழ்த்தி வெற்றிப்பாதைக்கு திரும்பிய உற்சாகத்தில் உள்ளது. பெங்களூரு அணிக்கு எதிராக ‘டக்–அவுட்டான’ டுவைன் ஸ்மித், இன்றைய போட்டியில் எழுச்சி பெறலாம். ‘சூப்பர் பார்மில்’ உள்ள பிரண்டன் மெக்கலம் (315 ரன்) மீண்டும் நல்ல துவக்கம் தரலாம். ‘மிடில்–ஆர்டரில்’ கேப்டன் தோனி, ரெய்னா, டுபிளசி நம்பிக்கை தருகின்றனர். கடைசி நேரத்தில் டுவைன் பிராவோ, ரவிந்திர ஜடேஜா, பவான் நேகி அதிரடி காட்டினால் இமாலய ஸ்கோரை பெறலாம்.

வேகப்பந்துவீச்சில் ஆஷிஸ் நெஹ்ரா (17 விக்.,), டுவைன் பிராவோ (16) அசத்துகின்றனர். இவர்களுக்கு மோகித் சர்மா (8 விக்.,), ஈஷ்வர் பாண்டே (8) ஒத்துழைப்பு அளிப்பது கூடுதல் பலம். ‘சுழலில்’ ரவிந்திர ஜடேஜா எழுச்சி காண வேண்டும். காயத்தால் பாதிக்கப்பட்டுள்ள அஷ்வின் விளையாடுவது சந்தேகம்.

 

 

ரோகித் அசத்தல்:

மும்பை அணி, இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 5 வெற்றி, 5 தோல்வி என 10 புள்ளிகளுடன் உள்ளது. முன்னணி வீரர்களுக்கு ஏற்பட்ட காயத்தினால் துவக்கத்தில் சொதப்பிய மும்பை அணி, பின் எழுச்சி கண்டு தொடர்ச்சியாக 4 வெற்றிகளை பதிவு செய்தது. மீதமுள்ள போட்டிகளிலும் வெற்றிநடை தொடரும் பட்சத்தில் ‘பிளே–ஆப்’ சுற்றுக்கு சுலபமாக முன்னேறலாம்.

 

மும்பை அணியின் பேட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மா (343 ரன்), போலார்டு (259), சிம்மன்ஸ் (239) நம்பிக்கை அளிக்கின்றனர். சரியான நேரத்தில் அம்பதி ராயுடு, பார்த்திவ் படேல் எழுச்சி கண்டது பலம். உன்முக்த் சந்த், ஹர்பஜன் சிங் உள்ளிட்டோர் விரைவாக ரன் சேர்த்தால் நல்ல ஸ்கோரை பெறலாம்.

தமிழகத்தில் விளையாட இலங்கை வீரர்களுக்கு தடை உள்ளதால், வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கா களமிறங்க மாட்டார். இவருக்கு மெக்லீனகன் (9), வினய் குமார் (2) ஒத்துழைப்பு தந்தால் நல்லது. ‘சுழலில்’ அனுபவ ஹர்பஜன் சிங் (11) கைகொடுக்கிறார்.

 

இதுவரை...

ஐ.பி.எல்., அரங்கில் சென்னை, மும்பை அணிகள் 19 முறை மோதின. இதில் சென்னை 10, மும்பை 9 போட்டிகளில் வென்றன.

 

பதிலடி வாய்ப்பு

இம்முறை மும்பையில் நடந்த லீக் போட்டியில், மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியிடம் வீழ்ந்தது. இத்தோல்விக்கு பதிலடி கொடுக்க இன்றைய போட்டியின்மூலம் மும்பை அணிக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.

 

மழை வருமா

இன்றைய போட்டி நடக்கவுள்ள சென்னையில் வெப்பநிலை அதிகபட்மாக 37, குறைந்தபட்சம் 28 டிகிரி செல்சியசாக இருக்கும். வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மழை பெய்ய 10 சதவீதம் மட்டுமே வாய்ப்பு உள்ளது.

 

http://sports.dinamalar.com/2015/05/1431013038/dhoniipl.html

  • தொடங்கியவர்

மும்பைக்கு எதிரான போட்டியில் உலக சாதனை படைக்கப்போகிறது சென்னை சூப்பர் கிங்ஸ்!

 

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் இன்று மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ளும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, உலக சாதனையை படைக்க உள்ளது. 2008ம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடர்கள் இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அப்போது முதலே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் அனைத்து சீசன்களிலும் பங்கேற்று வருகிறது.

 

 முதல் சீசனில் தொடங்கி தற்போது 8வது சீசன் வரை சிஎஸ்கே அணியின் கேப்டனாக ஒரே வீரர்தான் உள்ளார். அவர்தான் சென்னை ரசிகர்களால் செல்லமாக தல என்று கூப்பிடப்படும் மகேந்திரசிங் டோணி. அனைத்து சீசன்களிலுமே, சென்னை, சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 2010 மற்றும் 2011ல் அடுத்தடுத்து ஐபிஎல் கோப்பைகளை சென்னை கைப்பற்றி அசத்தியது. பலமுறை, அரையிறுதி, பைனல்வரை சென்றுள்ளது. ஒரு சீசனிலுமே சொதப்பலாக ஆடியது இல்லை என்பதால், அதிகப்படியான போட்டிகளில் ஆடும் வாய்ப்பு சென்னைக்கு கிடைத்தது.

 

 

மும்பைக்கு எதிராக சென்னை அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில் மோத உள்ளபோட்டி, டோணி அணிக்கு 150வது டி20 போட்டியாகும். ஐபிஎல் தவிர்த்து, சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டிகளில் சிஎஸ்கே ஆடியதும் இந்த கணக்கில் வந்துள்ளது. உலக டி20 கிரிக்கெட் அணிகளிலேயே, 150 போட்டிகளில் ஆடும் முதல் அணி சென்னை சூப்பர் கிங்ஸ்தான்.

 

இதற்கு அடுத்தபடியாக 144 போட்டிகளுடன், இங்கிலாந்தின் சோமர்செட் டி20 அணி 2வது இடத்திலும், 142 போட்டிகளுடன், மும்பை இந்தியன்ஸ் அணி 3வது இடத்திலும் உள்ளது. சென்னை அணி ஆட்டம் ஒரு பார்வை: இதுவரை ஆடிய போட்டிகள்-149 வெற்றி பெற்றவை- 91 போட்டிகள் தோற்றவை- 57 போட்டிகள். அதில் 2 தோல்விகள் சூப்பர் ஓவரில் ஏற்பட்டவை. ஒரு போட்டியில் ரிசல்ட் கிடைக்கவில்லை.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/ipl-2015-chennai-super-kings-set-twenty20-world-record-226366.html

  • தொடங்கியவர்

மும்பைக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங்!

 

சென்னை: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாசில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் லீக் ஆட்டத்தில் டோணி தலைமையிலான, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று பலப் பரிட்சை நடத்தி வருகின்றன.

 

நடப்பு சீசனில் மும்பை, முதலில் தடுமாறிய போதிலும், கடைசியாக ஆடிய 4 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது. ஆனால், சென்னை தனது சொந்த ஊரில் ஆடுவது அந்த அணிக்கு பெரும் பலமாகும். 7 வெற்றிகளுடன் முதலிடத்திலுள்ள சென்னையும், 5 வெற்றிகளுடன் 6வது இடத்திலுள்ள மும்பையும் மோதும் இந்த போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்று நம்பலாம். இதனிடையே, டாசில் வெற்றி பெற்ற சென்னை அணி கேப்டன் டோணி தனது அணி முதலில் பேட் செய்யும் என்றார்.

 

சென்னை அணியில், வேகப்பந்து வீச்சாளர் ஈஸ்வர் பாண்டேக்கு பதிலாக, காயத்தில் இருந்து மீண்ட சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/ipl-2015-daily-guide-match-43-chennai-super-kings-vs-mumbai-indians-226327.html


Chennai Super Kings 44/0 (4.4/20 ov)

  • தொடங்கியவர்

சென்னை அணி 158 ரன்கள்
 

சென்னை: மும்பை அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் சென்னை அணி 158 ரன்கள் எடுத்தது. இந்தியாவில் எட்டாவது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. இன்று சென்னையில் நடக்கும் லீக் போட்டியில் சென்னை, மும்பை அணிகள் மோதுகின்றன.

 

சென்னை அணியில் ஈஷ்வர் பாண்டே நீக்கப்பட்டு காயத்திலிருந்து மீண்ட அஷ்வின் இடம்பிடித்தார்.

சென்னை அணிக்கு பிரண்டன் மெக்கலம், டுவைன் ஸ்மித் அதிரடி துவக்கம் தந்தது. மெக்கலம் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். ஹர்பஜன் பந்தில் ஸ்மித் (27) அவுட்டானார். ரெய்னா (10), டுபிளசி (17) நிலைக்கவில்லை. கடைசி கட்டத்தில் தோனி, நேகி ஜோடி அதிரடியாக ரன் சேர்த்தது. நேகி 36 ரன்களில் அவுட்டானார். சென்னை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்தது. தோனி (39) அவுட்டாகாமல் இருந்தார்.

 

http://www.dinamalar.com/ipl2015/detail.php?id=1247618

  • தொடங்கியவர்

கிரிக்கெட்: மும்பை அணி-86/3

  • தொடங்கியவர்

Chennai Super Kings 158/5 (20/20 ov)
Mumbai Indians 159/4 (19.2/20 ov)
Mumbai Indians won by 6 wickets (with 4 balls remaining)

  • தொடங்கியவர்

சென்னை அணி தோல்வி

 

சென்னை: மும்பை அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்துது.

 

இந்தியாவில் எட்டாவது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. இன்று சென்னையில் நடந்த லீக் போட்டியில் சென்னை, மும்பை அணிகள் மோதின.சென்னை அணியில் ஈஷ்வர் பாண்டே நீக்கப்பட்டு காயத்திலிருந்து மீண்ட அஷ்வின் இடம்பிடித்தார்.

 

சென்னை அணிக்கு பிரண்டன் மெக்கலம், டுவைன் ஸ்மித் ஜோடி அதிரடி துவக்கம் தந்தது. மெக்கலம் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். ஹர்பஜன் பந்தில் ஸ்மித் (27) அவுட்டானார். ரெய்னா (10), டுபிளசி (17) நிலைக்கவில்லை. கடைசி கட்டத்தில் தோனி, நேகி ஜோடி அதிரடியாக ரன் சேர்த்தது. நேகி 36 ரன்களில் அவுட்டானார். சென்னை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்தது. தோனி (39) அவுட்டாகாமல் இருந்தார்.

 

மும்பை அணிக்கு பார்த்திவ் படேல், சிம்மனஸ் சிறப்பான துவக்கம் தந்தனர். பார்த்திவ் அரை சத (45) வாய்ப்பை இழந்தார். சிம்மன்ஸ் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். ரோகித் (18), போலார்டு (1) ஏமாற்றினர். இருப்பினும் அதிரடியாக விளையாடிய ராயுடு வெற்றியை உறுதி செய்தார். மும்பை அணி 19.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ராயுடு (34), பாண்ட்யா (21) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

http://www.dinamalar.com/ipl2015/detail.php?id=1247618

  • தொடங்கியவர்

2im9l3l.png

  • கருத்துக்கள உறவுகள்

நூலிழையில் உயி்ர் தப்பிய ஐ.பி.எல். டெல்லி அணி வீரர்கள்
 
T
201505082251427939_Disaster-averted-narr
மும்பை, 

கொல்கத்தாவிலிருந்து ராய்ப்பூருக்கு செல்லும் இண்டிகோ தனியார் விமானம் 167 பயணிகளுடன் மும்பை விமான நிலையத்தின் 'ரன்வே'யிலிருந்து கிளம்ப தயாராக இருந்தது. அதில், ஐ.பி.எல். கிரிக்கெட் டெல்லி அணி வீரர்களும் இருந்தனர். இந்நிலையில், திடீரென ஒரு ஜெட் ஏர்வேஸ் விமானம் அதே ரன்வேயில் தரையிறங்கியது. இதனால், இரண்டு விமானங்களும் மோதிக் கொள்வதை தடுக்க இண்டிகோ விமானத்தை உடனடியாக வலது புறமாக திருப்ப ஏர் டிராபி்க் கண்ட்ரோலர் உத்தரவிட்டார். இதையடுத்து, பெரிய விமான விபத்து தவிர்க்கப்பட்டது. நூலிழையில் டெல்லி அணி வீரர்கள் உயிர்தப்பினர். 

இந்த பரபரப்பான சம்பவம் பற்றி டெல்லி அணியினர் தெரிவிக்கையில், 'எங்களது விமானம் டாக்ஸியிங்-ல் இருந்த போது மற்றொரு விமானம் ஒரே ரன்வேயில் வந்துவிட்டதால் திடீரென நாங்கள் ரைட் டர்ன் அடிக்க வேண்டியதாயிற்று. அவ்வளவுதான். அதில் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை' என்று தெரிவித்தனர். 

 

  • கருத்துக்கள உறவுகள்

220440jpg.jpeg

தரைக்கட்டுப்பாட்டு அதிகாரி தனது அலைபேசியில் விளையாடிப் பழக வேணும்.. :D

  • தொடங்கியவர்

சென்னை சூப்பர் கிங்சுக்கு குடும்பத்தோடு சேர்ந்து பெரிய விசில் போட்ட ஸ்டாலின்!

 

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் நடுவே நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தோடு கண்டு ரசித்தார்.

2im3z1u.jpg

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில், நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தோடு கண்டுகளித்தார்.

 

அவர் சிஎஸ்கே அணியின் சீருடையான மஞ்சள் நிற சட்டையை அணிந்து கொண்டு, மஞ்சள் கொடியை ஆட்டியபடி இருந்ததை நேரடி ஒளிபரப்பில் பல கோடி ரசிகர்கள் பார்த்தனர். ஸ்டேடியத்தில் இருந்த ரசிகர்கள், ஸ்டாலினையும், அவரது மனைவி துர்கா ஆகியோரையும் மைதானத்திலுள்ள பிரமாண்ட திரையில் பார்த்த ரசிகர்கள், விசிலடித்து ஆரவாரம் செய்தனர்.

 

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின்போது, இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை, தனது வீட்டில் குடும்பத்தோடு அமர்ந்து ஸ்டாலின் கண்டு ரசித்தார் என்பது நினைவிருக்கலாம்.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/stalin-watch-chennai-super-kings-mumbai-indians-match-at-mac-226388.html

  • கருத்துக்கள உறவுகள்

இளைஞரணித் தலைவர் இளையோரின் விளையாட்டைக் கண்டுகளிப்பது சாலப்பொருத்தமே!!

  • தொடங்கியவர்

'பலே' பாண்டியாவும், பரிதாப பவன் நெகியும்: சென்னையை வீழ்த்திய மும்பை

 

 

சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த தொடரில் சென்னை மைதானத்தில் முதல் தோல்வியைப் பெற்றது.

டாஸ் வென்ற எம்.எஸ்.தோனி முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார். தோனி அதிகபட்சமாக 32 பந்துகளில் 2 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் அடித்து 39 ரன்களை எடுக்க, கடைசியில் பவன் நெகி 17 பந்துகளில் 4 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 36 ரன்கள் விளாச சென்னை அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது.

 

 

இலக்கைத் துரத்திய மும்பை இண்டியன்ஸ் நல்ல தொடக்கம் கண்டாலும், நடுவில் சுணக்கம் கண்டு கடைசி 4 ஓவர்களில் 51 ரன்கள் வெற்றிக்குத் தேவை என்று தடுமாறியது. ஆனால், கடைசியில் பிராவோவின் ஓவரை சரியாகத் திட்டமிடாததாலும், நெஹ்ரா நேற்று சொதப்பியதாலும் தோனி பவன் நெகியிடம் 19-வது ஓவரை கொடுக்க, மும்பை இண்டியன்ஸின் பாண்டியா என்ற வீரர் ‘பலே’ பாண்டியாவாகி 19-வது ஓவரில் 3 சிச்கர்களையும், ராயுடு 1 சிக்சரையும் விளாச, 25 ரன்கள் வந்தது. இது மும்பை இண்டியன்ஸுக்கு தொடர்ச்சியாக 5-வது வெற்றியைப் பெற்றுத்தந்தது.

 

 

அஸ்வின் மிகச்சிறப்பாக வீசி 4 ஓவர்களில் 17 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சென்னை அணியை ஆட்டத்துக்குள் இழுத்து வந்தார். அவர் வீசிய 11-வது ஓவரில்தான் மும்பை தொடக்க வீரர்களான பார்த்தீவ் படேல் (45), சிம்மன்ஸ் (38) ஆகிய இருவரும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அதிரடி மன்னன் பொலார்ட் 1 ரன்னில் பிராவோவிடம் ரன் அவுட் ஆனார். 12வது ஓவரில் 86/3 என்று மும்பை தடுமாறத் தொடங்கியது. அதன் பிறகு ரோஹித் சர்மா (18), ராயுடு இணைந்து ஸ்கோரை 31 பந்துகளில் 86/3 என்பதிலிருந்து 125 ரன்களுக்கு உயர்த்தினர். ரோஹித் சர்மாவை, பிராவோ வீழ்த்தினார்.

 

 

17.1 ஓவர்களில் 125/4 என்று 17 பந்துகளில் வெற்றிக்கு 34 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. ஆட்டத்தின் 17-வது ஓவரை நெஹ்ரா வீச அம்பாத்தி ராயுடு காலை பரத்திக் கொண்டு லாங் ஆனில் ஒரு சிக்ஸையும் பிறகு அதே ஓவரில் புல்டாஸை லாங் ஆனில் மீண்டும் ஒரு சிக்சரையும் அடித்தார்.

 

அதன் பிறகே பவன் நெகியை வில்லனாக்கிய அந்த 19-வது ஓவர் வந்தது. நெகி அதுவரை 3 ஓவர்களில் 10 ரன்களையே விட்டுக் கொடுத்திருந்தார். அதனால் அவரை அந்த ஓவரில் தோனி ஏன் கொண்டு வர வேண்டும் என்ற கேள்வியை கேட்க முடியாது. ஆனால், பிராவோ ஓவர்களை தோனி கொஞ்சம் மேனேஜ் செய்திருந்தால் இதனைத் தவிர்த்திருக்க முடியும், மேலும் நெஹ்ரா 3 ஓவர்களில் 45 ரன்கள் கொடுத்திருந்தாலும், அவர் அந்த ஓவரை வீசியிருந்தால் 25 ரன்களையெல்லாம் அடித்திருக்க முடியாது என்று கூறலாம்.

 

ஆனால், தோனி ஒரு சின்ன விளையாட்டை முயன்று பார்த்தார். ஆனால் பாண்டியா வேறு மாதிரியாக யோசனை செய்தார். லாங் ஆன், லாங் ஆஃபில் 2 சிக்சர்கள். மேலும் ஒரு ஃபுல் லெந்த் பந்தும், சிறிய சென்னை மைதானத்தின் லாங் ஆன் பவுண்டரியில் ரசிகரக்ளிடையே போய் விழுந்தது. பிறகு பாண்டியா ஒரு ‘பை’ ரன் ஓடி ஸ்ட்ரைக்கை ராயுடுவுவிடம் கொடுக்க அவரும் நேராக ஒரு சிக்சர் விளாச, மொத்தம் 25 ரன்கள்! பவன் நெகி பேட்டிங்கில் 17 பந்துகளில் 36 ரன்கள் அடித்தார். ஆனால் பவுலிங்கில் ஒரே ஓவரில் 25 ரன்களை விட்டுக் கொடுத்தது துரதிர்ஷ்டவசமானது.

 

கடைசி ஓவரில் ரவீந்திர ஜடேஜா, பாண்டியாவுக்கு ஒரு எளிதான கேட்சை வேறு விட்டார்.

 

ராயுடு 19 பந்துகளில் 3 சிக்சர்களுடன் 34 ரன்களுடனும், பாண்டியா 8 பந்துகளில் 3 சிக்சர்களுடன் 21 ரன்கள் எடுத்தும் நாட் அவுட்டாகத் திகழ்ந்தனர். பாண்டியா இந்த ஒரு ஓவருக்காகவே ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

 

பாண்டியாவை சாதாரணமாக எடைபோட்டிருக்க கூடாது. காரணம் அவர் விளையாடிய 23 டி20 போட்டிகளில் 433 ரன்களை 116.71 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் எடுத்துள்ளார். அதைவிட முக்கியமானது இந்த 433 ரன்களில் பாதி ரன்களை சிக்சர்கள் மற்றும் பவுண்டரிகளிலேயே அடித்துள்ளார். பரோடாவைச் சேர்ந்த இந்த 21 வயது இளம் அதிரடி வீரர் பாண்டியா 26 பவுண்டரிகளையும், 21 சிக்சர்களையும் டி20-யில் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை நாட்டின் கேப்டனான அனுபவமிக்க தோனி அறிந்திருப்பது அவசியம். மேலும் முதல் தர கிரிக்கெட்டில் 6 போட்டிகளில் 285 ரன்களை எடுத்துள்ள பாண்டியா, அதில் 41 பவுண்டரிகளையும் 3 சிக்சர்களையும் அடித்துள்ளார். அதாவது 285 ரன்களில் 182 ரன்கள் பவுண்டரி சிக்சர்களிலேயே வந்துள்ளது.

 

ஆகையால், பவன் நெகியை வைத்து அவரை வீழ்த்திவிடலாம் என்று தோனி கருதியது பின்னடைவை ஏற்படுத்தியது. ஆனால், தோனி வேகப்பந்து வீச்சாளரை அந்த ஓவரில் கொண்டு வராததற்கு காரணம் இருந்தது. அதுவரை, வேகப்பந்து வீச்சாளர்கள் 5 ஓவர்களில் 64 ரன்களை கொடுத்திருந்தனர். ஸ்பின்னர்கள் 11 ஓவர்களில் 2 விக்கெட்டுகளுடன் 54 ரன்களையே விட்டுக் கொடுத்திருந்தனர். அதனால் தோனியின் முடிவு தர்க்க ரீதியாக சரியானதே. ஆனால், அவர் வேறு மாதிரியாக சாதுரியத்துடனும் கற்பனை வளத்துடனும் செயல்பட்டிருக்க வேண்டும்.

 

நெஹ்ராவையோ, அல்லது மோஹித் சர்மாவையோ கொண்டு வந்து பார்த்திருக்கலாம். நிச்சயம் 25 ரன்கள் கொடுத்திருக்கப் படமாட்டாது என்பதே சென்னை ரசிகர்களின் கருத்தாக நேற்று அமைந்தது.

 

பேட்டிங்கிலும் தோனி 32 பந்துகளைச் சந்தித்து பல ஷாட் முயற்சிகள் அவர் மட்டையில் சிக்கவில்லை. மொத்தம் 9 பந்துகளில் அவர் ரன் எதையும் எடுக்கவில்லை. இந்த 9 பந்துகளில் 10 அல்லது 12 ரன்களை எடுத்திருந்தால் கூட மும்பை அணி தோல்வியடைந்திருக்க வாய்ப்பிருந்தது.
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88/article7188208.ece

  • கருத்துக்கள உறவுகள்

19 வது ஓவர் மோகித் சர்மாவிடம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். தோனி ரிஸ்க் எடுத்து ரஸ்க் ஆகிட்டார்.

  • தொடங்கியவர்

பிரிமியர் கிரிக்கெட்: கோல்கட்டா அணி வெற்றி

 

கோல்கட்டா: பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின், இன்று நடந்த போட்டியில், ஒரு விக்கெட் வித்தியாசத்தில் கோல்கட்டா அணி வெற்றி பெற்றது. பிரிமியர் லீக் தொடர் நாட்டின் பல்வேறு நகரிங்களில் நடந்து வருகிறது. கோல்கட்டாவில் இன்று(சனிக்கிழமை) 44வது போட்டியில் கோல்கட்டா மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின.

 

 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய கோல்கட்டா அணி 19.5 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் கோல்கட்டா அணி ஒருவிக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1248980

  • தொடங்கியவர்

கிங்ஸ் லெவன் பஞ்சாபை வீழ்த்தி கொல்கத்தா முதலிடம்

 

கொல்கத்தாவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் சென்னையை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தது.

 

 

முதலில் பேட் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய கொல்கத்தா அணி 1 பந்து மீதமிருக்கையில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

 

இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் கொல்கத்தா முதலிடம் பிடித்துள்ளது.

 

18-வது ஓவர் முடிவில் 171/7 என்ற நிலையில் பியூஷ் சாவ்லா, பிராட் ஹாக் களத்தில் இருக்க 2 ஓவர்களில் 13 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவுகரியமான நிலையில் இருந்தது கொல்கத்தா.

 

19-வது ஓவரை சந்தீப் சர்மா மிகச்சிறப்பாக வீசி 5 ரன்களையே விட்டுக் கொடுத்தார்., இதனால் கடைசி ஓவரில் 8 ரன்கள் என்று சற்றே பரபரப்பு கூடியது.

20-வது ஓவர் முதல் பந்தில் பிராட் ஹாக் 1 ரன் எடுத்தார். அனுரீத் சிங் வீசிய இந்த கடைசி ஓவரின் 2-வது பந்தில் ஹாக் ரன் அவுட் ஆனார். அனுரீத் சிங்கே பந்தை எடுத்து ரன்னர் முனையில் அடித்தார்.

 

3-வது பந்து லெந்த்தில் விழ பியூஷ் சாவ்லா மிட்விக்கெட்டில் மிகப்பெரிய சிக்சர் அடித்து ஸ்கோரை சமன் செய்தார். ஆனால் அடுத்த பந்தே அனுரீத் சிங் வீசிய லெக் திசை பந்தைத் தொட்டு சஹாவிடம் கேட்ச் ஆகி வெளியேறினார் சாவ்லா.

 

ஆட்டம் சூப்பர் ஓவருக்குப் போகலாம் என்ற நிலையில் 5-வது பந்தில் லெக் பை ரன்னில் வெற்றி ரன் வந்தது.

அனுரீத் சிங் இன்று மிக மோசமாக வீசி 3.5 ஓவர்களில் 56 ரன்களை விட்டுக் கொடுத்தார். குறிப்பாக 5 ஓவர்களில் 48 ரன்கள் தேவை என்ற நிலையில் 16-வது ஓவரை வீசிய அனுரீத் சிங், ரவுண்ட் த விக்கெட்டில் வீசி புல்டாஸாக போட 2 சிக்சர்கள் 1 பவுண்டரி அடித்தார் ரசல், அந்த ஓவரில் 19 ரன்கள் வந்தது.

ஓவர் த விக்கெட்டில் வீசி யார்க்கர் விழாவிட்டால் கூட புல்டாஸ் பந்துகளில் பெரிய ஷாட்களை ஆடுவது கடினம், ஆனால் ரவுண்ட் த விக்கெட்டில் யார்க்கர் வீசுவதற்கெல்லாம் வாசிம் அக்ரம் போன்ற திறமை வேண்டும், வேகம் வேண்டும், இரண்டும் இல்லாத அனுரீத் சிங் ரவுண்ட் த விக்கெட்டில் வீசி வாரி வழங்கினார்.

 

 

ஆந்த்ரே ரசல் 21 பந்துகளில் 5 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 51 ரன்கள் எடுத்து அக்சர் படேல் பந்தில் சஹாவின் அருமையான ரிப்ளெக்ஸ் கேட்சிற்கு அவுட் ஆனார்.

முன்னதாக யூசுப் பத்தான் அக்சர் படேலை 14-வது ஓவரில் இரண்டு மிகப்பெரிய சிக்சர்களை அடித்தார். அவர் 19 பந்துகளில் 29 ரன்கள் எடுத்ததும் கொல்கத்தா வெற்றியில் பங்களிப்பு செய்தது.

 

முன்னதாக உத்தப்பா (17), கவுதம் கம்பீர் (24), மணீஷ் பாண்டே (22), சூரியகுமார் யாதவ் (9) ஆகியோர் ஆட்டமிழந்தாலும் 10.5 ஓவர்களில் ஸ்கோர் 83 ரன்கள் என்று இருந்தது.

அதன் பிறகே பதான், ரசல் ஜோடி ஆட்டத்தை திருப்பினர். குர்கீரத் சிங் மட்டுமே 3 ஓவர்களில் 17 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சிக்கனம் காட்டினார். மேக்ஸ்வெல் 1 ஓவர் வீசி 5 ரன்கள் மட்டுமே கொடுத்து பாண்டே விக்கெட்டை வீழ்த்தினார். ஆனால் அவரை மீண்டும் கொண்டு வரவில்லை என்பதன் மர்மம் ஜார்ஜ் பெய்லியையே சாரும்.

இன்று பந்து வீச்சில் 4 ஓவர்களில் 50 ரன்கள் கொடுத்த ரசல் பேட்டிங்கில் ஈடுகட்டி ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.

 

கொல்கத்தாவின் மட்டமான பீல்டிங்:

கொல்கத்தா பீல்டிங்கும், பவுலிங்கும் (சுனில் நரைன் நீங்கலாக) படு மோசமாக அமைந்தது. குறைந்தது 5 கேட்ச்கள் விடப்பட்டன.

முதலில் முரளி விஜய்க்கு கம்பீர் 2-வது ஓவரில் எக்ஸ்ட்ரா கவரில் சற்றே கடினமான வாய்ப்பை நழுவ விட்டார்.

அதனால் அதற்கு அடுத்த ஓவரை உமேஷ் யாதவ் வீச, முரளி விஜய்யின் மட்டைக்கு ஆவேசம் பிடித்தது. முதலில் லெக் திசை பவுண்டரி. பிறகு ஒரு ஷார்ட் பிட்ச் வைடு பந்தை கவர் திசையில் மாட்டடி அடித்து சிக்சர் விளாசினார். பிறகு ஃபைன் லெக்கில் ஒரு பவுண்டரி, மீண்டும் மிட் விக்கெட், மிட் ஆன் இடையே ஒரு அற்புதமான பவுண்டரி என்று அந்த ஓவரில் 18 ரன்களை விளாசித்தள்ளினார் விஜய், ஆனால் அத்தனையும் முறையான கிரிக்கேட் ஷாட்கள்.

4-வது ஓவரில் நரைன் வீச வர, விஜய்க்கு ஸ்கொயர் லெக்கில் பிராட் ஹாக் ஒரு வாய்ப்பை நழுவ விட்டார்.

மீண்டும் 6-வது ஓவரில் அதே நரைனுக்கு, ஷார்ட் பைன் லெக் திசையில் முரளி விஜய் கொடுத்த கேட்சை உமேஷ் யாதவ் கோட்டை விட்டார். ஆனால் அதே ஓவரில் விஜய் 28 ரன்களில் அவுட் ஆனார்.

 

 

மனன் வோரா தனது பார்முக்காக தேடிக் கொண்டிருக்கும் போது 19 ரன்களில் அவருக்கு கீப்பர் உத்தப்பா வாய்ப்பு ஒன்றை நழுவ விட்டார். பாதிக்கபப்ட்ட பவுலர் ரசல்.

அதே ஓவரில் வோரா ஒரு சிக்சர் அடிக்க, மீண்டும் கடைசி பந்து லீடிங் எட்ஜ் எடுக்க மிட் ஆனில் யூசுப் பத்தான் மந்தமாக வினையாற்றி மற்றுமொரு வாய்ப்பை கோட்டை விட்டார். ஒரே ஓவரில் இரண்டு கேட்ச் வாய்ப்புகள் கோட்டை விடப்பட்டன. வோரா 39 ரன்களில் ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல் இறங்கி பிராட் ஹாகை ஒரே ஓவரில் 2 சிக்ஸ் 2 பவுண்டரிகளுடன் 21 ரன்கள் விளாசினார். 22 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிக்சர் அடித்த மேக்ஸ்வெல் 43 ரன்களில் நரைன் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதே ஓவரில் 33 ரன்கள் எடுத்த சஹாவையும் நரேன் வீழ்த்தி 4 விக்கெட்டுகளை 19 ரன்களுக்கு கைப்பற்றினார்.

 

கடைசி ஓவரில் டேவிட் மில்லர், ஆந்த்ரே ரசலை 2 சிக்ஸ், 2 பவுண்டரிகளுடன் 21 ரன்கள் எடுத்து 11 பந்துகளில் 27 ரன்களுடன் நாட் அவுட்டாக திகழ்ந்தார்.

கிங்ஸ் லெவன் 183 ரன்கள் எடுத்தது. பிற்பாடு தனது மோசமான பந்து வீச்சினால் தோல்வி தழுவியது கிங்ஸ் லெவன்.

இந்த வெற்றியின் மூலம் 12 போட்டிகளில் 7 வெற்றி, 4 தோல்விகளுடன் 15 புள்ளிகள் பெற்று சென்னையை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தது கம்பீர் தலைமை கொல்கத்தா.
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/article7188603.ece?homepage=true

  • தொடங்கியவர்

Sunrisers Hyderabad 163/4 (20/20 ov)
Delhi Daredevils 157/4 (20/20 ov)
Sunrisers Hyderabad won by 6 runs

  • தொடங்கியவர்

பிரிமியர் கிரிக்கெட்: டில்லி அணி தோல்வி

 

ராய்ப்பூர்: பிரிமியர் லீக் தொடரின், ராய்ப்பூரில் நடக்கும் 45வது லீக் போட்டியில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது.அந்த அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. இதன் பின்னர் களமிறங்கிய டில்லி அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஐதராபாத் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1249023

  • தொடங்கியவர்

29gllxy.png

  • தொடங்கியவர்

பழி தீர்க்குமா சென்னை அணி: இன்று ராஜஸ்தானுடன் மோதல்

 

சென்னை: சென்னையில் இன்று நடக்கும் எட்டாவது ஐ.பி.எல்., தொடரின் லீக் போட்டியில் ராஜஸ்தான், சென்னை அணிகள் மோதுகின்றன. இதில் சென்னை அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ராஜஸ்தானிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

         

இந்தியாவில் 8வது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்கும் லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணி, வாட்சன் வழிநடத்தும் ராஜஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. சென்னை அணியை பொறுத்தவரை கடந்த போட்டியில் மும்பையிடம் தோற்ற சோகத்தில் உள்ளது. துவக்க வீரர்கள் டுவைன் ஸ்மித், பிரண்டன் மெக்கலம் மீண்டும் அதிரடி துவக்கம் தர வேண்டும். ரெய்னா, டுபிளசி எழுச்சி கண்டால் நல்லது. கடைசி கட்டத்தில் கைகொடுக்க கேப்டன் தோனி உள்ளார். மும்பைக்கு எதிராக 17 பந்தில் 36 ரன்கள் விளாசிய நேகியும் அசத்தினால் வலுவான இலக்கை எட்டலாம். டுவைன் பிராவோ, ஜடேஜா அதிவிரைவாக ரன் சேர்க்க வேண்டும்.                        

 

 

அஷ்வின் அசத்தல்: ‘சுழல்’ வீரர் அஷ்வின் ஜொலிக்கிறார். நெஹ்ரா, மோகித் சர்மா ரன்களை வாரி வழங்குவதை கட்டுப்படுத்த வேண்டும். கடந்த போட்டியில் தவறான நேரத்தில் நேகியை பந்துவீச அழைத்தார் தோனி. இது தோல்விக்கு வழிவகுத்தது. இன்று சரியாக திட்டமிட்டால், இத்தொடரில் ஏற்கனவே ராஜஸ்தானிடம் சந்தித்த தோல்விக்கு சென்னை அணி பழி தீர்க்கலாம்.

 

ரகானே சவால்: ராஜஸ்தான் அணிக்கு துவக்கத்தில் ரகானே, வாட்சன் அசத்துகின்றனர். ‘மிடில் ஆர்டரில்’ மிரட்ட ஸ்டீவ் ஸ்மித் உள்ளார். கருண் நாயர் கைகொடுத்தாலும், ஹூடாவின் ஏமாற்றம் தொடர்கிறது. சாம்சன், பால்க்னர் கைகொடுத்தால், சென்னைக்கு தொல்லை ஏற்படும்.

 

டாம்பே ‘சுழல்’: வாட்சன், குல்கர்னி, மோரிஸ், பால்க்னர் உள்ளிட்ட ‘வேகங்களுடன்’ சேர்ந்து பிரவீண் டாம்பே ‘சுழல்’ வலை வீசத்தயாராக உள்ளார்.

 

இதுவரை...           

ஐ.பி.எல்., அரங்கில் இரு அணிகளும் 16 போட்டிகளில் மோதின. இதில் சென்னை 10, ராஜஸ்தான் 6ல் வெற்றி பெற்றன.      

 

மழை வருமா     

போட்டி நடக்கும் சென்னையின் இன்றைய வானிலையை பொறுத்தவரை அதிகபட்சம் 36, குறைந்தபட்சம் 28 டிகிரி செல்சியாக இருக்கும். மழை வர வாய்ப்பு இல்லை.

 

http://sports.dinamalar.com/2015/05/1431186422/ChennaiRajasthanIPLCricketDhoni.html

  • தொடங்கியவர்

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் வாய்ப்பை தவற விட்டுவிட்டோம்: ஸ்டீபன் ஃபிளெம்மிங் ஆதங்கம்
 

 

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் எங்களுக்கு கிடைத்த வாய்ப்பை நாங்கள் பயன்படுத்திக்கொள்ள தவறிவிட்டோம். அதனால் வெற்றி வாய்ப்பை இழந்தோம் என சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெம்மிங் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை தோற்கடித்தது மும்பை இண்டியன்ஸ்.

 

 

இதனால் சூப்பர் கிங்ஸ் அணி யின் பயிற்சியாளரான ஸ்டீபன் ஃபிளெம்மிங் மிகுந்த ஏமாற்ற மடைந்தார். போட்டி முடிந்த பிறகு அவர் கூறியதாவது: கேட்சுகளை கோட்டைவிட்டது எங்கள் அணிக்கு சிக்கலை ஏற்படுத்தியது. வாய்ப்பு களை ஏற்படுத்தியபோதும் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளா ததால் தோல்வியடைந்தோம் என் றார்.

குறைவான ஸ்கோர் எடுத்திருந்த நிலையில் 19-வது ஓவரை வீச அனுபவ வீரரான ஜடேஜாவை அழைக்காமல் பவன் நெஹியை அழைத்தது தவறான முடிவாக இருந்திருக்கலாம் எனக்கூறிய ஸ்டீபன் ஃபிளெம்மிங், “நிச்சயமாக அதை தோனியும் சிந்தித்து இருப்பார். இன்றைய ஆட்டத்தில் இருந்து சில விஷயங்களை கற்றுக்கொண்டோம். இந்தத் தோல்வியால் மிகுந்த ஏமாற்ற மடைந்திருக்கிறோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒரு கட்டத்தில் நாங்கள் வெற்றிக்கு மிக அருகில் இருப்பதாக நினைத்தோம்” என்றார்.

 

சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் குறித்துப் பேசிய ஃபிளெம்மிங், “எங்கள் அணி 159 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அது சவாலான இலக்குதான். ஆனால் மும்பை அணியினர் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுவிட்டனர்” என்றார்.
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article7190326.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.