Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜபக்ஷவிற்கு விஜயகாந்த் கடும் கண்டனம்

Featured Replies

சென்னை: தமிழர்களை அழித்து வரும் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் அட்டூழியத்தை இந்திய அரசு தட்டிக் கேட்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

சொந்த நாட்டு மக்களையே வதைக்கும் வகையில், யாழ்ப்பாணத்தில் இலங்கை அரசு முற்றுகையிட்டு நெடுஞ்சாலையை மூடியுள்ளது வேதனைக்குரியது.

யாழ்ப்பாணத்தில் வசிக்கும் மக்கள் உணவு, மருந்து கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். தமிழர் பகுதிகளில் முப்படைத் தாக்குதலை நடத்தி வருகிறது இலங்கை அரசு. இதனால் உணவுப் பொருட்களை செல்ல விடாமல் தடுப்பதாலும், இலங்கை அரசு தமிழ் இனப் படுகொலையை செய்து வருகிறது.

இச் சூழ்நிலையில் ராஜபக்ஷே இந்தியா வருகிறார். பிரதமரை அவர் சந்திக்கும்போது இலங்கை அரசு செய்து வரும் இனப் படுகொலையை தட்டிக் கேட்க வேண்டும். ராஜபக்ஷேவிடம் தனது கண்டனத்தை இந்தியா தெரிவிக்க வேண்டும்.

இலங்கை அரசின் செயல் காட்டுமிராண்டித்தனமான போக்கு ஆகும். இதைத் தடுத்து நிறுத்த இந்திய அரசு மனிதாபிமான அடிப்படையில் உதவ வேண்டும்.

தமிழர் வாழும் பகுதிகளான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து இலங்கை அரசு ராணுவத்தைத் திரும்பப் பெற இந்தியா வற்புறுத்த வேண்டும். தமிழர்கள் பகுதிகளில் அமைதி நிலவ வேண்டும். அதைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தரத் தீர்வுக்கு முயற்சிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் விஜயகாந்

http://thatstamil.oneindia.in/news/2006/11...vijaykanth.html

இலங்கை அரசின் மனிதப் படுகொலைகளையும் மனிதாபிமான மீறல்களையும் கண்டிக்கும் பின்லாந்தின் ஐனா தீர்மானத்தை இந்திய அரசே தடுத்து வருகிறது.தமிழ் நாட்டு உறவுகள் இந்திய அரசின் இந்த கபடத்தனத்தை அம்பலப் படுத்தும் வண்ணம் கண்டனங்களை வெளியிட வேண்டும்.தமிழ்த் தலைவர்களும் இதனை அம்பலப்படுத்தி தமிழ் நாட்டவரின் கவனதிற்குக்கொண்டு வர வேண்டும்.எமது ஊடகங்களும் இந்தத் தருணத்தை பயன் படுத்தி இந்திய அரசின் இரட்டைத்தனமான அணுகுமுறையை செய்தியாக்க வேண்டும்.இது இப்போதைய உடனடித் தேவை.

தமிழனல்லாதவன் தமிழ்நாட்டை ஆளக்கூடாது என்று அட்டகாசம் பண்ணும் 'தமிழினத் தலைவர்' என்று தன்னைத் தானே சொல்லிக் கொள்பவரே,

இந்தத் 'தமிழனல்லாதவருக்கு' இருக்கின்ற தமிழுணர்வும் தமிழன் அழிவது கண்டு கொதிக்கும் குணமும் உங்களுக்கு இல்லையே.

இதைப் பற்றிச் செய்தியாளர்கள் கேட்டால் A9 பாதை எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. உலகப் படத்தில் பார்த்து விட்டுக் கருத்துச் சொல்வதாக 'அரசியல் சாணக்கியம்' நிறைந்த கருத்தை நீங்கள் தரக்கூடும்

உங்களைத் தமிழுலகம் ஒருநாளும் மன்னிக்காது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் கண்டிக்கிறன்! அப்புறம்? இப்டியே வாறவன் போறவன் எல்லாம் கண்டியுங்கோ. ஆனா உங்கட பவரை பாவிச்சு உருப்படியா ஒன்டும் பண்ணிடாதேங்கோ. நல்லா காட்டுறாங்கய்யா பிலிமு....

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவர்கள் போல இல்லாமல், விஜயகாந்த் இவ்வாறு கதைக்கின்ற போது ஆதரிக்க வேண்டும். அவருக்கு உண்மையில் நன்றியுணர்வோடு கடமைப்பட்டுள்ளோம்.

வடிவேல் 007 அவர்களே!

அவர் கண்டிக்கின்றார் என்ற கடப்பாட்;டைக் கொண்டிருக்கவில்லை. அவர் இவ்விடயத்தில் பேசாமல் கூட இருக்கலாம். ஆனால் தமிழ் உணர்வோடு கதைக்கின்றவர்களை வரவேற்கத் தான் வேண்டும். ஆனால் இன்னும் அவர்களிடம் இருந்து எமக்கு உதவி வேண்டியது தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடிகர் சத்தியராய்:

தமிழர்களிற்கு ஈழம் கிடைக்கும் வரை எந்த ஒரு பண்டிகையும் கொண்டாட மாட்டேன்!!

மனிசன் எங்கயோ ஒரு தெரியாமல் பஞ் டயலாக் அடிச்சிட்டு இப்ப யோசிச்சுக்கொண்டிருக்கிறார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திய திரை,அரசியல் வாழ்கையில் இந்த தியாக,ஆவேச,உணர்ச்சி பூர்வமான அறிக்கைகள் வரும் போகும்.இதல்லாம் சர்வசாதாரணமப்பா.ஆனால் யாரும் தங்களுடைய பதவியை,பலத்தை பிரயோகித்து எதுவும் செய்ய மாட்டார்கள்.(சிலவேளை பயப்படுகிறார்களோ) :roll:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு முதலமைச்சராக, அல்லது செல்வாக்குள்ள தலைவராக ஒருவர் இருந்து செய்வது வேறு. ஆனால் வெறுமனே ஒரு சட்டசபை உறுப்பினராகக் கதைப்பது வேறு.

இப்படி வசை பாடுவதன் மூலம் நீங்கள் சாதிப்பது என்ன? நாளைக்கு அவரிடம் இருந்து வரும் ஆதரவுக் குரலைக் கூட நிப்பாட்டுவதைத் தவிர.

சத்தியராஜ் இவ்வளவு காலமும் எங்கே இருந்தவர் என்று கேள்வி கேட்டால், நான் உங்களின் கருத்துக்கு, ஒத்துப் போவது போல இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.