Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவிதை அந்தாதி

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தடைசெய்க! லஞ்சம் வாங்குவதை தடைசெய்க

தடுத்து நிறுத்தாவிடின் வாங்கிடுவார் அரசியல் வாதி

தூங்கிப் போய்விடும் சமூகத்தின் நீதி

கொடுக்கலாம் பல அறிவுரைகள் நித்தம் ஆதியாய்

கலிகாலத்தில் பயன் தருமா

  • Replies 1.9k
  • Views 182k
  • Created
  • Last Reply

பயன் தருமா பனங்கள்ளு?

ஓலைப்பாயில் உட்கார்ந்து

சுருட்டடிக்கும் ஐயா குமாரசுவாமியே!

விரைந்து வந்தென் கேள்விக்கு

நீ விடை பகர்வாய்!

இன்டர்நெட்டில் இவ்வுலகை

வலம்வரும் எங்களையா

ஜட்டின்றி கோவணத்தை

விரும்பியதேனோ விளங்கவில்லை!

யாழ் களத்தில் நீ வந்து

பழந்தமிழன் பெருமை பேசும்

விதங்கண்டு மனம் மகிழ்ந்தோம்!

நிச்சயம் ஒருநாள் நமக்கு

நற்றமிழ் ஈழம் கிடைக்கும்!

அன்று நாமிருவரும் நல்லூர்

கந்தனுக்கு காவடி எடுப்போம்!

அதுவரை ஐயா குமாரசுவாமி

விமானச் சீட்டுடன் வீட்டில் நீ காத்திரு!

விவேகத்துடன் யாழ் களத்திலும் கருத்தெழுது!

கருத்தெழுது கண்மணியே..

உள்ளத்தொழிந்திருக்கும்

கறுப்பழிய..

பூமி பொறுத்ததால் தான் ஈழப்

பெண் கண் போன்ற

கற்பழிய..

கண்ணுறுதே கல்மன உலகு..

வீரமும் நம்மவர் விளைநிலம்..

என்றமை காவியப்பொய்யாய்..

கயமையும் காட்டுத்தனமும்..

களங்கப்படுத்திய வரலாறை எழுது..

செந்நீர்ச்சேற்றை கண்ணீரால்

கரைத்துவிடு..

கருத்தெழுது கண்மணியே..

உள்ளத்தொழிந்திருக்கும்

கறுப்பழிய..

பூமி பொறுத்ததால் தான் ஈழப்

பெண் கண் போன்ற

கற்பழிய..

கண்ணுறுதே கல்மன உலகு..

வீரமும் நம்மவர் விளைநிலம்..

என்றமை காவியப்பொய்யாய்..

கயமையும் காட்டுத்தனமும்..

களங்கப்படுத்திய வரலாறை எழுது..

செந்நீர்ச்சேற்றை கண்ணீரால்

கரைத்துவிடு..

கரைத்துவிடு கண்மணியே உனக்காக நான் எழுதிய காதல் கவிதைகளை

கரைத்துவிடு காதலியே உன் நெஞ்சில் எனக்காக இருந்த உணர்வுகளை

கரைத்துவிடு என் உயிரே என் மீது நீ கொண்ட காதலை

கரைத்துவிடு கையிலிருக்கும் மஞ்சளை நீ ்அவனை கணவனாக அடைந்ததாலே

அடைந்து என்று துவக்கலாம்.

large13.gif

அடைந்து சுதந்திரம் இன்றுடன் இலங்காவுக்கு

வயது ஐம்பத்து ஒன்பது ஆகிறது! ஐயா பெரியோரே

பாரினிற் சிறந்த படு பாதகர் தேசம்

இலங்காவென்பதை நீர் யாவரும் அறிவீர்!

முந்தைநாள் ஜே.ஆர் நேற்று சந்திரிகா இன்று மகிந்தன்

கோவணத் துண்டை கொடியில் காயப் போடுகின்றார்!

கண்டுகளிப்பதற்கு சிங்களக் குண்டர்கூட்டம்

தறுதலை நகர் கொழும்பில் கூடுகிறது!

கடனில் வாங்கிய விமானங்களின் வேடிக்கை

பழுதடைந்த கவசவாகனங்களின் அணிவகுப்பு

வீதித்தடைகள் அங்கவடையாளச் சோதனைகள்

விமரிசையாக நடக்கிறது இலங்காவின் பிறந்ததினம்!

நீளத்தாடியுடன் வீணைமீட்கும் சுவாமியார் ஒருபுறம்

ஓலைவிசிறிலால் உடம்புசொறியும் பிக்கு மறுபுறம்

குடுவடிக்கும் குண்டர்படை கொலைவெறியுடன் அணிவகுக்க

கொடுங்கோல் மன்னன் மகிந்தன் மகிழ்கின்றான்!

உண்பதற்கு ஒருபிடி சோறு இல்லை படுத்து

உறங்குவதற்கு பாதுகாப்பான இடமும் இல்லை

படிப்பில்லை தமிழர் இதயங்களில் துடிப்புமில்லை

விடிவுதேடி புறப்பட்ட வேங்கைகளைத் தேடுகின்றார்!

பணவீக்கம் ஊதிப்பெருத்து ஊழிக்கூத்து ஆட

ஊழல்கள் பெருகியரசு நிருவாகம் ஊசலாட

ஆட்கடத்தல் கொலை கொள்ளைகளும் மலிந்துவிட

இலங்காவின் இழவுகூறி இரைகிறது கிபீர்விமானம்!

Edited by மாப்பிளை

கிபீர்விமானத்து மலத் துவாரத்தூடு

பீச்சிக்கொண்டு பாயும் கழிவுகள்!

உடலை முறுக்கிவந்து வாந்தியெடுக்கும்

மிக்27இன் ஆகாயத் துப்பல்கள்!

கடுவன்நாய் போல் காலைத்தூக்கியடித்து

பெல்ஹெலி வானிலிருந்து பெய்கின்ற சிறுநீர்!

ஒரு புத்தனாக பறவை யாத்திரை செய்யும்

ஆளில்லா விமானத்தின் எழுந்தமானத் தும்மல்கள்!

ஆட்லறித்தளங்களில் இருந்து விழும் ஆட்டுப்புழுக்கைகள்!

மல்ட்டிபெரல் தொப்பெனத் தள்ளும் மாட்டுச் சாணங்கள்!

கவசவாகனங்கள் கரைந்து இடும் காக்காய்ப்பீய்கள்!

டோராப்படகுகள் கொக்கரித்து இறக்கும் கோழிஎச்சங்கள்!

நொருங்கி வீழ்ந்த விமானஓட்டியின் உருக்குழைந்த உடலம்!

சிறைப்பிடிக்கப்பட்ட காவல்துறையின் வியர்வை நாற்றம்!

மூழ்கும் கப்பலினூடு வரும் கடற்படையின் மரணஓலம்!

குண்டடிபட்ட இராணுவச் சிப்பாயின் குருதித் துளிகள்!

சூ தந்திர சிறீ லங்காவை வாழ்த்தும் வண்ணப்பூக்கள்!

Edited by மாப்பிளை

வண்ணப்பூக்கள் கலந்து

வார்த்த என் வாசதேவதை..-நீ

வாரந்தோறும் வந்தால்

என் வாழ்வே தேன்மழை..

உன் வட்டவிழிகள்

சுட்டு நெஞ்சு காயமானதே..

நான் கெட்டபையன்தானே..

மனக் கன்னம் வைக்கிறேன்..

பூவைப் போல பூவை -நீ

யார் செய்த பாவை..

பாவை பார்த்த பார்வை

நெஞ்சில் பள்ளமானதே..

மலரில் நடக்கும் மலரே..உன்

பாதம் கமலச்சுவடே..

அதை ஏந்த ஏங்கி..

ஏங்கி சாகிறேனே...

தென்றல் உரசும் தென்றல் -நீ

தேவலோக தென்றல்..

என்னைத் தீண்டிச்சென்றாய்

தேகம் எரியுதே..

வண்ணப்பூக்கள் கலந்து

வார்த்த என் வாசதேவதை..-நீ

வாரந்தோறும் வந்தால்

என் வாழ்வே தேன்மழை..

  • கருத்துக்கள உறவுகள்

தேன்மழை பெய்விக்கும் அது ஆரணை தேவதை :lol:

மீனென விழியுடை கருமேனி கவிக்கிளியோ

மானொரு நொடிமயங்கும் மதுக்காகும் பேரெழிலோ

நானொரு முறையறிந்தால் மகிழ்வேனே இத்தினம் :(

தினம் தினம் நிலாமுகம்

காட்டுவாள் -அவள்

வானில் வருவதில்லை..

போதும் போதும் என்றபோதும்

போதை தரும் -அவள் விழிகள்

கவிக்கான பொய்யில்லை

கூந்தல் வாசம் இயற்கையா..

செயற்கையா என்ற வாதம்-கூந்தல்

முகர்ந்தபின் எழுந்திரா எனக்கில்லை

அவள் கோடைகளை

குளிரவைத்தவளாம்-அதில்

எனக்கொன்றும்; வியப்பில்லை

அவள் குற்றாலத்தை

உரையவைத்தவளாம்-அட

நானே இன்னும் அசையவில்லை

அவள் நடக்கும்போது

அன்னங்களே முன்போகுமாம்-நடை

நான் பார்த்ததில்லை

அவள் செடியில் பூக்காத ரோஜா..

வாட்டம் அவளுக்கில்லை

அவள் நிழலகற்றும் தீபம்..

அணைவதில்லை சுடுவதில்லை..

யாரவள் என்ற சந்தேகங்கள்

எனக்கில்லை..

அவளை கேட்கவும் முடிவதில்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முடிவதில்லை மனதின் கண் படிந்த நினைவுகள்

அடி அழித்து மறக்கமுடியாமல் மனதுக்குள்

உன் பெயர் சொல்லத்துடிக்கின்ற பொழுதுகளில்

என் மனதில் இனம்புரியாது வலிக்கின்றது

வலிக்கின்ற பொழுதுகளிலில் கேட்டுவிடத்

துடிக்கின்ற வினாவொன்று என் நினைப்பு

உனக்குள்ளும் ரணவலியினை தந்து விட்டு

மறைதலுக்கும் ஒளிதலுக்கும் இடையில்

மரணித்து போகின்றதா

மரணித்து போகின்றதா மனிதம் சிறீ லங்காவில்?

குரங்குக் கூட்டங்கள் கொடிபிடித்து கூத்தாடி

கொழும்பில் ஒன்றுகூடி வேடிக்கை பார்ப்பதற்கு

பிடித்தடைத்தார் சிலநூறு தமிழர்களை சிறைகளில்!

மரணித்து போகின்றதா மனிதம் சிறீ லங்காவில்?

திறந்தவெளிக் காவலில் குடாநாட்டு தமிழர்

வருந்த வழிசெய்த எம்.பிகள் திருடும் கள்ளன்

நாயகனாகி நாட்டுக் கொடியை ஏற்றுகின்றான்!

மரணித்து போகின்றதா மனிதம் சிறீ லங்காவில்?

பள்ளிக் குழந்தைகளின் உயிர்குடித்த விமான

சாகசங்ககளை கண்டு கைதட்டி மகிழ்ந்து

ஆகாயத்தை நோக்குகுகின்ற புத்த பிக்குகள்!

மரணித்து போகின்றதா மனிதம் சிறீ லங்காவில்?

மன்னாரில் தாயைத் தந்தையைப் பிள்ளையை

மரஞ்சீவும் உளியால் உருக்குழைத்த கொலைகாரன்

மரியாதை அணிவகுப்பில் முதல்வனாய் செல்கின்றான்!

மரணித்து போகின்றதா மனிதம் சிறீ லங்காவில்?

தமிழீழக் கடற்பரப்பில் மீனவரைத் துன்புறுத்தும்

சிங்களக் குண்டர்கள் சீராக உடையுடுத்தி

அளங்கார பவணியில் அன்னம்போல் நடக்கின்றார்!

மரணித்து போகின்றதா மனிதம் சிறீ லங்காவில்?

ஊழல்களால் உடம்பு ஊதிப்பெருத்துப் பொய்

கையெழுத்தின் சாட்சியில் வழக்கெழுதும் காவல்துறை

பவ்வியமாய் தலைகுணிந்து மணவறைக்கு(?) போகின்றது!

மரணித்து போகின்றதா மனிதம் சிறீ லங்காவில்?

ஆட்கடத்தும் பணம்பறிக்கும் கொலைபுரியும் கும்பல்கள்

நாட்டுத் தலைவனுடன்முன் இருக்கையில் அமர்ந்து

ஒருமைபாட்டிற்கு புது அர்த்தம் கற்பிக்கிறார்!

மரணித்து போகின்றதா மனிதம் சிறீ லங்காவில்?

காவல்கடல் விமான இராணுவ படைகளின்

தளபதிகள் ஒன்றுசேர்ந்து தமிழர் வாழ்விடங்களை

சூரையாட சூழ்ச்சிகள் சூ தந்திரமாய்ச் செய்கின்றார்!

மரணித்து போகின்றதா மனிதம் சிறீ லங்காவில்?

சிறீ லங்கா நாட்டுச் சொறி நாய்களிற்கு

புரிகின்ற பாசையில் பாடம் கற்பிக்க

எரிகின்ற தமிழீழ வேள்விக் குண்டத்தில்

வரிப்புலியாக எழுந்த தீக் கொழுந்துகள்

குறிபார்த்து வெடிவைக்க விரைவில் வருவார்!

முடியாத காலத்தில் துணைநின்று கைகொடுத்து

அடியெடுத்து காதலன் கால்நடக்க காதலிகைத்

தடியாக உதவுதல் உத்தமம்! ஆனால்

குடியறுக்கும் கொலைகாரன் கருணாவின் கைபிடித்து

கொடிபிடிக்க பித்தாக பத்மினி அலைவதுவேன்?

சந்திரிக்கா சிங்களத்தி சீறிக்கொன்டு வந்தாள்!

சிந்தியது தமிழரின் குருதி சிலகாலம்! பின்புதன்

பொந்திலேயே இரண்டிலொரு கண்ணை இழந்தாள்!

வந்துள்ளாள் படங்காட்ட பெண்துரோகி பத்மினி!

குந்தியழ இவளது இழவுச்செய்தியும் இனிவரலாம்!

மந்திகள் அரசன் மகிந்துவின் கைக்கூலிகள்

சந்திக்குச் சந்திகட்டாக் காலிகளாகி கிழக்கில்

வெந்ததமிழர் வாழ்வை குதறவருகிறது! இந்தச்

சொந்த உடம்பையேநாற வைக்கும் சோம் பேறிகளை

விந்தைகள் செய்யும்வீரர்கள் விரைவில்வந்து கவனிப்பார்!

Edited by மாப்பிளை

கவனிப்பாரென்றதும்- உன்

கண்களில் தெரியுதே பயம்

சூழவிருக்கும் உன் படைகள்

துணைக்கு வரார் இனிமேலும்.

ஆழக் கடலலை போன்றெம்

அமைதியான தமிழ்படைகள்

ஆர்ப்பரிக்கத் தொடங்கிவிட்டால்

அது நாசமடா உந்தனுக்கு.

கூக்குரலிட்டு நீ அந்நியரைக்

கூவியழைத்தாலும் - புதுப்

போக்குக்காட்டி யுன்னைப்

புறந்தள்ளிடுவர். அப்போது

காயாத ரணமென்று அந்தக்

கறுப்பி சொன்ன துயருக்கு

ஒளடதம் தடவ எங்கள்

அன்புத் தலைவன் வருவான்.

rasputindk6.jpgsrilankanrasputinlm5.jpg

எதிரியின் செருப்பாகி செருக்காகப் பேசும் டக்கு!

தெருநாய்த் தேசத்துரோகிகள் குடிமனையுட் புகுந்து

பெருந்தொகையிற் சனங்களை கடித்துக் குதறுவதை

பொறுக்கி தேள்வானந்தன் வேடிக்கை பார்க்கிறான்!

தறுதலையன் தலையை யாரோ களுத்துறைச் சிறையில்

இரும்புக் கம்பியாற்பதம் பார்த்தும் இன்னும் திருந்தவில்லை!

குறுக்கு வழியிற் பணஞ்சேர்த்து வயிறுவளர்க்கும்

திருடன் டக்கு தேள்வானந்தா தமிழருக்கு அவமானம்!

கருணைக்கடவுள் உன் கொடுமைகளைப் பார்த்துவுன்

கருவம் அடக்குவதற்கு வரும்வரை டக்கு நீ காத்திரு!

டக்கு போல் உலகில் முன்பு வாழ்ந்த ஒருவனின் பைலாப் பாடலை கேட்பதற்கு இங்கே அழுத்தவும்!

Edited by மாப்பிளை

காத்திருந்தாய் தினந்தினமே

பகல்முடிந்து இருள் கவிழ

வானமெனும் மேலுலகில்

மின்மினிகள் கண்சிமிட்ட

சூரியனைக் கலைத்துவிட்டு

நிலவு மங்கை வீடுவர

காலடியில் கிடப்பதென்ன

துவண்டுவிட்ட தமிழினமா

உலையிலிடச் சோறற்று

உணர்விழந்த உடலங்களா

திறந்தவெளிச் சிறைச்சாலை-அது

மறந்துவிட்ட சவக்காலை

மழலைகள் பால் கேட்க

விடலைகள் நூல் தேட

பெற்றவர் தன் பாட்டியம்ப

மற்றவர் வடுச்சொல் விளம்ப

பூமித்தாய் நகையாட

பூத்திருந்தாய் வானத்திலே

கண்டாயா இக் காட்சி

விண் மதியே நீ சாட்சி

மாறுமா கொடுங்கோலாட்சி

பொறுத்திந்தோம் பொறுத்திருக்கக்

காலந் தான் போகிறது

போன நாள் மீளாது.

Edited by Norwegian

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மீளாது மரித்த உயிரென்றும் மீளா உறக்கத்தில்

மரணித்த பொழுதுகளில் நிசப்தமாகிப்போன

மனங்களின் வெறுமையாகிப்போன வெற்றிடம்

அவை மீளா துயரத்தின் மெளனங்கள்

மெளனங்கள் கலையும் விரைவில்

பேரினம் வீழ்ந்திடும் சமரில்

புதுயுகம் பிறக்கும் நாளில்

மௌனத்தை மரணமாய் உரைத்து

நகைத்திடும் குள்ள நரிகள்

இழந்திடும் பகைவன் உறவை

நெஞ்சுக்குள் நெருப்பை அடக்கி

உண்மையை கவசமாய் அணிந்து

புறப்படும் விடுதலைச் சேனை

வெற்றிக்கு வேண்டிடும் உரமாய்

எம்மினத்திற்கு பக்க பலமாய்

பொறுமையாய் ஆற்றுவோம் கடமையை

(இது எனது முதல் கவிதை. தவறிருந்தால் மன்னிக்கவும்)

மௌனங்கள் வேணாம் அது அந்திமத்தின் பாஷைகள்

கௌரவங்கள் போட்டிடுமே வாழ்க்கையிலை சாபங்கள்

பவுத்திரமாய் வாழ்ந்திடவே நாடெண்ணு வேணுமடி

நாதியத்து திரியிறனே நல்லவளே நீசொல்லு.

நெஞ்சளவு வளந்தவளே நெஞ்சுக்குள்ளே வந்தவளே

நாளையெண்ணி வாசலிலே ஏங்கி நின்னவளே

வேலிருந்த ரண்டுவிழி காலடியில் மேயவிட்டு

வேலியிடுக்காலை பாக்க துடிச்சதுமேன்.

சாணளவில் பாத்த ஜடை இடையளவு நீண்டிடுச்சே

ஆணழகன் எனைத் தானே சின்னவிரல் தீண்டிடுச்சே

வானவில் போலலையாய் பாவாடை போட்டிருந்தே

கானக் குயில் நீயே பூவாடை வீசினின்னே.

Edited by Norwegian

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பூவாடை வீசி நின்னேன் பூப்போல் மனசுடன்

பாவாடை கட்டிக்கொண்டு வந்து நின்று

பம்பரமாய் சுற்றி ஆடி காட்ட முனைகையில்

பாவாடை தடுக்கி கீழே விழுந்ததால்

தாடையில் பட்ட அடியின் வலி

தாங்காமலே ஐயோ மாமா என்றழைத்து

பொங்கும் கண்ணீரை கரைத்தேனே

கரையும் மனதுடன் கவி படைத்து

கரை புரள வந்திருக்கும் லிசா வை

இதயத்து வார்த்தை கொண்டு வரவேற்பதில்

இணையில்லா மகிழ்ச்சி எனக்குள்ளே

எனக்குள்ளே ஒழிந்து..

உனக்குள்ளே நுழைந்து

உயிரோடு கலந்து..

வரமாக பெற்றதை

சாபமென்றோ அன்பே..

உன் வீட்டார்..

கருக்கலைப்பு செய்தார்கள்..

நம் காதலை..

நம் காதலை யார் பார்த்தார்..?

உன்னை நான்பார்க்க

என்னை நீ பார்க்க

அதைப்பார்த்த எம்

இருவீட்டார் நம்

ஜாதகத்தை அவர் பார்த்தார்!

ஜாதகத்தில்....

ஏழாம் வீட்டில் செவ்வாய் நிற்க

அதை - எட்டி... எட்டி...

எங்கிருந்தோ சனிபார்க்க

ராகுவும் கேதுவும்

ஒன்றை ஒன்று தாம் பார்க்க

நம் காதலை யார் பார்த்தார்..?

ஆப்பிழுத்த ஆதிபோல்

ஆனதடி - நம் காதலே... :)

Pongu0930_38_45800_435.jpg

காதல் கடலில் மூழ்கி முத்தெடுக்கும்

யாழ்கள குயிற்கூட்டம் கவுரிபாலன், கறுப்பி,

விகடகவி, நோர்வேஜியன், இளங்கோ இன்னும்

அடர்ந்த காட்டில் வாழும் ஐயா ஆதிவாசி,

டங்குவர், இவன் மற்றும் அனைவருக்கும்,

உங்களிடம் ஓர் அன்பான வேண்டுகோள்!

சாவிலும் வாழ்வோமென கூவியழைத்த தமிழினம்

தாவிச் செல்லும் குரங்கினமாய் மனந்தினமும்

தடுமாறி எதிரிவலையுற் சிக்குவதை தடுக்க

எடுத்து விசுக்குங்கள் பாவைச் சாட்டையாக

படுவாவிகள் சிங்களக் குண்டர் உடம்பில்!

குடுவடித்து குழிபறிக்கும் ஒட்டுக்குழுக்களையும்

சூடுபறக்க ஒருகை பாருங்கள்! நீங்கள்

புனையும் பாக்களில் 50%மாவது தமிழ்

அன்னையின் மானத்தை காப்பதையுறுதி படுத்துங்கள்!

அன்புடன் மாப்பிளை! நன்றி! வணக்கம்!

Edited by மாப்பிளை

வணக்கம் மாப்பிள்ளை

வீரம் பாடிப் பாடி பாரம்தான் ஏறுது..

நம்பு நம்பு என்று சொல்லிச் சொல்லி

என் நம்பிக்கை நோகுது

வணக்கமும் அஞ்சலியும்

எனக்கே இன்று நெஞ்சுவலியானது..

எதிரியை இகழ்ந்து

என்னினத்தை புகழ்ந்தேன்

புலிக்குள்ளே நரி புகுந்து

நரவேட்டையாடுது..

என் நரம்பறுந்து ஆடுது..

என்ன பாட சொல்கிறீர்

எப்படி பாடச் சொல்கிறீர்..

16 மணிநேரம் வேலை செய்யும்

மனிதனுக்கு பாடம் சொல்லி

ஏன் வலிகள் செய்கிறீர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வலிகள் செய்கிறீர் சுமந்த வலிகள் தீருமுன்னே

தருகிறீர் புதுப்புது தாங்க முடியாத வலிகள்

உயிர்பறிப்புக்கள் அட்டூடியங்கள் அடாவடித்தனங்கள்

நித்தம் தந்து இதயத்தை கொதிக்கும் ரணமாக்கி

இரத்த நாளங்களையும் உணர்வாக்கி யிருப்பது

தமிழீழமே தமிழர்களுக்கு விடிவிற்காக

விடிவிற்காய் கவி எழுத

அழைக்கின்ற மாப்பு!

இடிபோல எழுந்து

ஈனரை பிளந்து

இனமானம் காக்கவே ஆசை

அடிமனதில் துடிக்கின்ற

ஆற்றாமை பொங்குது

ஆரறிவார் என் பாவை?

இழிகூட்டம் இன்று

ஈழத்தைத் தின்று

எமனுக்குப் போடுது என்னினத்தை

இவை

அழிகின்ற நாள் வரும்.

அதுவரை தமக்கே

குழிதோண்டிக் குழிதோண்டி

கும்மாளம் போடட்டும்

அன்னையை விற்றுண்ணும் பிறப்பு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.