Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவிதை அந்தாதி

Featured Replies

உனக்கு என் மேல்

ஏனிந்த கோபம்?

அனோனிமஸ் ஆக வருகின்றாய்...

அனோனிமஸ் ஆக போகின்றாய்...

ஆனால்..

என் மீது மட்டும்

நேரடித்தாக்குதல் செய்கின்றாய்...

நீ யார்?

எனக்கும் உனக்கும் என்ன உறவு?

கொடுக்கல் வாங்கல்கள் எவை?

முதுகுப் புறமாக தாக்கும்

கோழை நீ

துணிவிருந்தால்...

நேரடியாக வந்துபார்...

அப்புறம் தெரியும்...

நான் யார் என உனக்கு...

நீ யார் என எனக்கு...

  • Replies 1.9k
  • Views 182.1k
  • Created
  • Last Reply

எனக்கு என்ன என்று

இருக்க முடியவில்லை

தம்பிகாள்...

அதுவென்ன காதல் விட்டு

வேறெதுவும் உங்கள்

கற்பனைக் குதிரைக்குத்

தெரியாதோ?

கொஞ்சம் குதிரையை

அவிட்டுக் காலாற

ஓட விடுங்கள்

பிறகு பாருங்கள்

பிரமிக்கும் கவிதை

நாம் படிக்கத் தருவீர்

செய்வீர்களா?

செய்வீர்களா செய்வீர்களா

தெரியாமல் செய்வீர்களா...?

காதலரே காதலரே- போலி

காதலதை செய்வீர்களா...??

தூய்மை கொண்ட காதலதை

தூக்கியே எறிவீரா..?

பாவங்களை செய்து விட்டு

பாதியிலே விடுவீரா..?

யார் மனசு தவிக்குமென்று

யாருமதில் நினைப்பதுவோ...??

போலி கொண்ட வேடுவரே- உங்கள்

போலிகளை களைவீரா...??

களைவீரா கருணா..நீ

ஓர் களை வீரா..

நெல்லிடை புல்லுக்கென்ன வேலை..

புலிகளுக்குள் புல்லுறுவி உனக்கென்ன வேலை..

காசுக்காக கட்டியவள்

கட்டிலில் நீ பிறனைத்

தூங்க விட்டால்...

பெற்றவளே உனைப்

பிள்ளையெனச் சொல்லமாட்டாள்..

பிள்ளையானை நம்பித்தான்

பிரிந்து போனாயோ..

அடித்தானய்யா ஆப்பு..

இறங்கி இருக்குமேப்பு மப்பு...

உல்லாசத்துக்காய் உன்னதத்தை

தொலைத்த பிணமே..

உன்னால்.. நம்பிக்கையை

மட்டுமல்ல..மனிதத்தையும்

சாகடிக்கமுடியுமெனக் காட்டிவிட்டாய்..

களை நாய் உனக்கு

புலநாய் என்று யாரும்

புறப்பட்டு வந்தால்..அவன்..

புலி வாழும் தேசத்து

எலி கடித்தே காலியாவான்..

நினைவில் நிறுத்து

உன் காலித்தனம் நிறுத்து

பாவத்திற்கு பரிகாரமாய்

தயவு செய்து நீயே

தூக்கில் தொங்கிவிடு

தொங்கவிடு தொங்கவிடு

தூக்கினிலே தொங்கவிடு

காட்டியே கொடுக்கின்ற

கயவனிவனை தொங்கவிடு...

எச்சத்தை உண்கின்ற

எளியோர் கூட்டமிதை

தூக்கியே வந்தவனை

தூக்கிலே தொங்கவிடு...

கோழையே உந்தனுக்கு

கொள்கை வேறுண்டோ

அன்னை தமிழினத்தை

அழிப்பதுவோ உன் கனவு....???

விபச்சார கொட்டகையில்

விடுதலை நெருப்புண்டோ...?

வீரமது உனக்கிருந்தால்

வீராப்பாய் வா வெளியே...

கோழையே நீயின்று

கொக்கரித்தேன் கத்துகிறாய்...?

வீரமுள்ளாய் நீயென்றால்

வீரர் முன்னே வாடா...

வாடா வாடா என் தோழா..

விடிகாலை நமதாகும்...

வாளை எடடா என் தோழா

வீரம் நம் உதிரம்

தமிழ்ப்பெண்ணைத்

தொட்ட கயவன் கையைத்

துண்டாட...

நம் தந்தையை

மிதித்தவன் காலை

கழுகுக்கு இரையாக்கு

வாடா வாடா என் தோழா..

விடிகாலை நமதாகும்...

நமதாகும்..நமதாகும்

நாளையது நமதாகும்

எங்கள் ஈழ தேசம்

எங்கள் கையிலாகும்...

முப்படையும் வந்திருக்கு

மூத்த கூடி தமிழருக்கு

அச்சமில்லை நாங்களினி

ஆடி பாடலாம்...

சிங்களத்து கோட்டை யெல்லாம்

சிதறடிக்குமே- எங்கள் புலி

வானமது பறந்தடிக்குமே...

ஆடி பாடடா தமிழா

ஆடி..பாடடா

அச்சமில்லை உந்தனுக்கு

ஆடிப்..பாடடா...

அரகரோகரா..இனி...அரகரோகரா

சிங்களங்கள் வாங்குமினி அரகரோகரா....

அரகரோகரா சாமி! அரகரோகரா!

கவர்மெண்ட் தந்த லோனுக்கு அரகரோகரா!

ஓசியில் கிடைத்த கிரடிட் கார்ட்டிற்கு அரகரோகரா!

சீட்டுக் கட்டிய நண்பருக்கு அரகரோகரா!

மொபைல் போன் கம்பனிக்கு அரகரோகரா!

கேபிள் கனக்சன் கம்பனிக்கு அரகரோகரா!

இண்டர்நெட் புரவைடருக்கு அரகரோகரா!

கடந்தந்த அனைவருக்கும் அரகரோகரா!

கண்டம் விட்டுக் கண்டம் பாய்ந்தேன்...

அரகரோகரா!

இயலும் என்றால்

என்னைக் கண்டுபிடி

அரகரோகரா!

அரகரோகரா.. முருகா அரகரோகரா..

ஆளைப் பார்த்து காலை விட்டேன் அரகரோகரா..

பெண்மன ஆழம் காண மறந்துவிட்டேன் அரகரோகரா..

அரகரோகரா.. முருகா அரகரோகரா..

கோவிலில் தவம் கிடந்தேன் அரகரோகரா..

அம்மன் கண்டுக்காம கழண்டுகிட்டா அரகரோகரா..

அரகரோகரா.. முருகா அரகரோகரா..

பள்ளிக்கூடம் மட்டம் போட்டேன் அரகரோகரா..

பரீட்சையில் நான் கோட்டை விட்டேன் அரகரோகரா..

அரகரோகரா.. முருகா அரகரோகரா..

என்னைப் பார்த்து காதல் சொன்னா அரகரோகரா..

நான் திரும்பிப் பார்த்தேன் ஆளைக்காணோம் அரகரோகரா..

அரகரோகரா.. முருகா அரகரோகரா..

பரிசு பரிசா வாங்கிகிட்டா அரகரோகரா..

என்னை பைத்தியமா ஆக்கிட்டாடா அரகரோகரா..

அரகரோகரா.. முருகா அரகரோகரா..

ஆயுள்வரை வாறதெண்டா அரகரோகரா..

அவ அமெரிக்காவில் அம்மாவாயிட்டா அரகரோகரா..

அரகரோகரா.. முருகா அரகரோகரா..

ஆண்டிப்பட்டி அம்மன் கோவில் அரகரோகரா..

அதில் நான் அழகான பிச்சைக்காரன் அரகரோகரா..

அரகரோக அமமா அரகரோகர- நான்

அசதியாக தூஙகிப்புடடேன் அரகரோகரா

அநத நேரம் களளன் வநதன் அரகரோகரா...

வெண்ணிலாவும் வந்துவிட்டா அரகரோகரா- என்னை

வெளியினிலே பிடித்து விட்டா அரகரோகரா

துண்டில்லா நான் கிடந்தேன் அரகரோகரா- என்னை

துரத்தி வந்தது நாய்தானே அரகரோகரா....

பல்லெடுத்து சிரிச்சாங்களே அரகரோகரா- நான்

பாலடைஞ்சு போனானே அரகரோகரா

அரகரோகரா...பாடி...

ஆடினோமடா காவடி..

நம்ம ஊருக்கோவில்..

நினைவே இனிமை

நெஞ்சில்..

இரவெல்லாம் வர்ணவெளிச்சங்கள் இருக்கும்..

இதயமெல்லாம்..திருவிழாவில் திளைக்கும்..

கோவில் பிறவீதி மணல் கால் நனைய நிம்மதி..

நண்பர்கள் கூட்டம்..

நாம் போடும் ஆட்டம்..

இழந்தோமே எல்லாம் நீரோட்டம்

நினைக்கின்றேன் நெஞ்செல்லாம் வாட்டம்..

தாவணிபோட்டு பெண்கள்

தாண்டிப்போகையில்

திரும்பிப் பார்த்த பெண்ணை வட்டம்..

போடும் சிறுவனாய் நான்

பார்த்த திருவிழா..

மீண்டும் மலருமா..

வாழ்வில் மீண்டும் மலருமா..

தோழி

மீண்டும் மலருமா.. :lol:

மீண்டு மலருமா

எந்தன் தாய்நாட்டில்

மலர்ந்த வசந்தங்கள்.........?

நாங்கள் பண்ணிய

நக்கல்கள் கிண்டல்கள்

எல்லாம் மீண்டும்

மலருமா.........?

மலருமா..

என்றால்

மலர்கள்

என்ன

பேசுமா?..

பேசும்

மலர்கள்

வாசமாய்

வீசுமா?

வாசம் வீசும்

மலர்கள்

வாடாமல்

வாழ்ந்திடுமா?

வாழ்ந்தாலும்

மலரே

மனசுக்கு

பிடித்த கூந்தலில்

குடியேறுமா? :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குடியேறுமா?

என்றால்

மனம்

என்ன

வாடகை வீடா

மனச்சிறையில்

மாய்ந்து போன

நினைவுகள் எல்லாம்

சிலுவை

சுமந்த

நினைவுகள்

நினைவுகளாய் நெஞ்சத்தில்

நீதானடி உன் நினைவுகள்

என் நெஞ்சத்திலிருந்து

மறைவதுமில்லை

மறப்பதுமில்லை

உன் நினைவுகளுடந்தான்

எனது வாழ்க்கை பயணம்

போகின்றது இணையாத

தண்டவாளமாய்.....!

குடியேறுமா?

அவள் இழந்து

விட்ட மலர்கள்

மீண்டும் இவள்

கூந்தலில்

வழிவிடுமா?

துடிக்க மறந்த

இவள் இதயம்

எப்போதாவது

வசந்த காலத்தின்

கார்முகிலாய்

இருள் கொண்ட

இவள் வாழ்கை

ஏந்திடுமா ஒளிதனை

யார் சொல்லியும்

கேட்காத இவள்

மனசு எப்போது

மாறிடும்?

Edited by கஜந்தி

குடியேறுமா?

அவள் இழந்து

விட்ட மலர்கள்

மீண்டும் இவள்

கூந்தலில்

வழிவிடுமா?

துடிக்க மறந்த

இவள் இதயம்

எப்போதாவது

வசந்த காலத்தின்

கார்முகிலாய்

இருள் கொண்ட

இவள் வாழ்கை

ஏந்திடுமா ஒளிதனை

யார் சொல்லியும்

கேட்காத இவள்

மனசு எப்போது

மாறிடும்?

கஜந்தி அதன் பின்னர் 2 கவிதை பதியப்பட்டு விட்டது

எப்போது மாறும் இந்த பூமி

அடுத்தவன் மனையை கவருதல்

முன் பக்கத்து வீட்டுக்காரண்

கூட எல்லை பிரச்சினை

முன் வீட்டுக்காரன் கூட

குப்பைத்தொட்டி பிரச்சினை

இதெல்லாம் சிக்கல்களா....?

கோடி மக்கள் சொந்தம்

கொண்டாட ஒரு தேசமில்லை

அப்படி பிரச்சினைகளிருக்கும் போது

இது எல்லாம் ஒரு பிரசினையா....?

எப்போது மாதும்

இவர்கள் பிரச்சினை...? :lol:

கஜந்தி அதன் பின்னர் 2 கவிதை பதியப்பட்டு விட்டது

எப்போது மாறும் இந்த பூமி

அடுத்தவன் மனையை கவருதல்

முன் பக்கத்து வீட்டுக்காரண்

கூட எல்லை பிரச்சினை

முன் வீட்டுக்காரன் கூட

குப்பைத்தொட்டி பிரச்சினை

இதெல்லாம் சிக்கல்களா....?

கோடி மக்கள் சொந்தம்

கொண்டாட ஒரு தேசமில்லை

அப்படி பிரச்சினைகளிருக்கும் போது

இது எல்லாம் ஒரு பிரசினையா....?

எப்போது மாதும்

இவர்கள் பிரச்சினை...? <_<

மன்னித்துக்கொள்ளவும் இடையில் தவறிவந்துவிட்டேன்போல்

  • கருத்துக்கள உறவுகள்

பிரச்சனையுடன் பலர் வந்து

உறவாடும் கூடு!

கண்கானாமல் கருத்தாடும்

யாழ்களமென்னும் காடு!

பல தகவல்கள் சேர்ந்திங்கு

திருவிழா காணும்!

சில கருத்துக்கள் முரன்பட்டு

முகத்தோடு மோதும்!!!

பிரச்சனையுடன் பலர் வந்து

உறவாடும் கூடு!

கண்கானாமல் கருத்தாடும்

யாழ் களமென்னும் காடு..... . ;

யாழ் களமென்னும் காடு

எமை ஒன்றாக்கும் வீடு

எம் துயர்தனை மறக்க

யாழ் ஒர் மருந்து

எம் மனதின் வலிதனை

பொறித்திடும் கல்வெட்டு

எங்கிருந்தோ வந்து

யாழ்களத்தில் ஒன்றாகி

எம் எண்ணம்தனை பகிர்ந்து

எம்மை நாமே வளர்க்கின்றோம்

வளர்க்கின்றோம் நாளுமே

வன்முறை ஏனிங்கே...?

யுத்த களமாக இங்கு

சத்தம் கேட்குது...

திட்டமிட்ட தாக்குதல்கள்

திடமாய் நடக்குது

அதை எண்ணையிலே என்மனசு

ஜயோ பதறுது...

நல்ல நல்ல நேயர்களை

நாளும் இழக்குது

நாளடைவில் சாக்கடையாய்

யாழும் மிதக்குமோ...???

கூட வந்த உறவுகளும்

கூடு மாறுது- இதை

கூட்டி வந்த உறவுகளும்

கூடு தாவுது...

திரட்டி வந்த செய்தியெல்லாம்

திண்ணையிலே கிடக்குது- அதை

புரட்டி புரட்டி பார்த்து மனம்

புரண்டு அழுகுது....

ஜயோ ஜயோ அழுங்குரலின்

அவலம் கேட்குது- அந்த

அழும் பிள்ளையை அடக்கிவிட

இங்கு யாரு இருக்குது....???

Edited by vanni mainthan

வளர்க்கின்றோம் நாளுமே

வன்முறை ஏனிங்கே...?

யுத்த களமாக இங்கு

சத்தம் கேட்குது...

திட்டமிட்ட தாக்குதல்கள்

திடமாய் நடக்குது

அதை எண்ணையிலே என்மனசு

ஜயோ பதறுது...

நல்ல நல்ல நேயர்களை

நாளும் இழக்குது

நாளடைவில் சாக்கடையாய்

யாழும் மிதக்குமோ...???

கூட வந்த உறவுகளும்

கூடு மாறுது- இதை

கூட்டி வந்த உறவுகளும்

கூடு தாவுது...

திரட்டி வந்த செய்தியெல்லாம்

திண்ணையிலே கிடக்குது- அதை

புரட்டி புரட்டி பார்த்து மனம்

புரண்டு அழுகுது....

ஜயோ ஜயோ அழுங்குரலின்

அவலம் கேட்குது- அந்த

அழும் பிள்ளையை அடக்கிவிட

இங்கு யாரு இருக்குது....??

யார் இருக்குதென்று

எட்டுத்திசை தேடாமல்

அழுத பிள்ளை அரவணைக்க

''நான் இருக்கேன்'' என்று

துணிந்துவிடு தோழா...

ஏன் இருக்கோம்

நாமெல்லாம் - வையத்துள்

வாழ்வாங்கு வாழாமல்>>>>> <_<

யார் இருக்கார் ...?

நம் துயர் துடைத்துவிட

என்று - எதிர்பாராமல்...

நம் கையைக் கொண்டே

நாமே துடைப்போம்

நமது கண்ணீரை...

துடைத்த கை கொண்டு

ஆக்கிடுவோம்- புது உலகம்....!

புது உலகம்

படைக்க நீ

புறப்பட்டாயா தோழா?

உணர்வுகளை மறுத்து...

உறவுகளை வெறுத்து...

உண்மை தேடவென்று..

சாமியார் கோலத்தில்?

உன்னைப்போலவே

நானும்..

புது உலகம்

படைக்கவே

முன்பு

புறப்பட்டு வந்தேன்..

ஆனால்..

இப்போது

பச்சையாக

அறிந்துகொண்டேன்..

இக்கரைக்கு அக்கரை!

இதற்கு நான்

செலவளித்த நாட்கள்?

இல்லை...

சொல்லமாட்டேன்...

இதை நீயே

அறிந்துகொள்!

அறிந்து கொள்

எம் உறவே

காடுகள் வீடாகி

வீடுகள்சுடுகாடாய்

வாழ்ந்திடும் அவலங்கள்

எம் மண்ணில்தானுடு

கொட்டும் மழையும்

நடுங்கும் குளரும்

சுடும் வெயிலும்

வாட்ட மரத்தை

வீடாக்கி வாழ்ந்திடும்

அவலங்கள்

எம் மண்ணில் தான்

உண்டு

கண்டபோதும்

திரும்பிக்கொள்ளும்

இதயங்கள் வாழும்

உலகில்எத்தனை

ஆர்ப்பாட்டம் செய்தாலும்

புரியாத அவலங்கள்

எம் மண்ணின்

காட்டுக்குள் அங்கே

மிருகங்கள் பரவாய்யில்லை

மிருகங்கள் பரவாய்யில்லை...

என்னைவிட உனக்கு அவை!

உன்னைவிட எனக்கு இவை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.