Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவிதை அந்தாதி

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேடுவேன் உன் காலடிச் சுவடுகள் கண்டே

நாடுவேன் நிதமும் நிம்மதி தரும் என்றே

கண் இமைக்கும் நேரமதில் உன் உருவம்

கண நேரந்தான் அங்கே கனமாய் கணக்கின்றது

துடிக்கின்ற இதயம்

  • Replies 1.9k
  • Views 182.1k
  • Created
  • Last Reply

தேடுவேன் உன் காலடிச் சுவடுகள் கண்டே

நாடுவேன் நிதமும் நிம்மதி தரும் என்றே

கண் இமைக்கும் நேரமதில் உன் உருவம்

கண நேரந்தான் அங்கே கனமாய் கணக்கின்றது

துடிக்கின்ற இதயம்

கறுப்பீ..ஈ...ஈ...

தேடுவேன் என்றதொடக்கத்தில் ஒரு 15 நிமிடங்கள் வார்த்தைகள்தேடி கவிதையாய் கோர்த்துப் போடும்முன்பு நீங்கள் முந்திவிட்டீர்கள் ....சரி ...இனி துடிக்கிற இதயம் 5 நிமிடத்தில் யாரும் பதிவிடாதீங்க.... :mellow:

தேடுவேன் உன் காலடிச் சுவடுகள் கண்டே

நாடுவேன் நிதமும் நிம்மதி தரும் என்றே

கண் இமைக்கும் நேரமதில் உன் உருவம்

கண நேரந்தான் அங்கே கனமாய் கணக்கின்றது

துடிக்கின்ற இதயம்

துடிக்கின்ற இதயம்

இசைக்கும்-என்றும்

உன் நாமம் ..

கலங்காதே கண்மணியே

வாசல் திறந்து வை(யு)

நடக்கும் என் பாதம்

நாடிவரும் பாதை

உன் வாசல் சேரும்...! :mellow:

உன் வாசல் சேரும் வசந்தம்....

காலடியில் விழும் தென்றல்...

பரட்டைதலையில் மயங்கும் கூட்டம்...

சுட்டு விரலினுள் அடங்கும் அதிகாரம்....

தரிசனம்செய்ய பக்தர்கள்....

பாட்டிசைக்க கலைஞர்கள்...

உன்பற்றி புகழும் உலகம்...

இவ்வளவிற்கும் நீ யார்?

எதுவரை படித்துள்ளாய்?

உனது தகுதிகள் என்ன?

எனக்கும் கொஞ்சம் சொல்லித்தா....

சொல்லித்தா...

இளமையின் ரகசியம்...

இனிமையின் இருப்பிடம்...

இறைவனின் மறைவிடம்...

இன்பத்தின் உறைவிடம்...

இவை இப்புவிதனில்

எங்கே இருக்கின்றன?

என் ஆன்மாவே!

உன்னிடமே கேட்கின்றேன்..

விரைவில் விடை பகர்வாயா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விடை பகர்வாயா வீதியோரமாய் வழிமேல் விழிவைத்தவேளை

படை கொண்டு வந்தாய் அண்ணாக்களின் சகாக்களோடு

காடைத்தனம் புரியும் வலுவும் எனக்கில்லை பவித்திரமாய்

நடை கட்டினேன் வேண்டாம் இந்த பைங்கிளி

பைங்கிளி பார்ப்பதற்கு

அழகாகவே இருக்கின்றது...

நன்றாகவும் பேசுகின்றது...

எனக்கு கிடைத்த

நல்லதொரு

பிறந்தநாள் பரிசு!

ஆனால்..

கூண்டில் அல்லவா அது

அடைபட்டுக் கிடக்கின்றது?

இன்பத்தையே தந்தாலும்...

அது இன்னொரு உயிரை

அவலப்படுத்தி கிடைப்பதாய் இருந்தால்..

அந்த சுகங்கள் எனக்கு வேண்டாம் ....

பைங்கிளியை நீயே வைத்துக்கொள்!

  • கருத்துக்கள உறவுகள்

பைங்கிளி பார்ப்பதற்கு

அழகாகவே இருக்கின்றது...

நன்றாகவும் பேசுகின்றது...

எனக்கு கிடைத்த

நல்லதொரு

பிறந்தநாள் பரிசு!

ஆனால்..

கூண்டில் அல்லவா அது

அடைபட்டுக் கிடக்கின்றது?

இன்பத்தையே தந்தாலும்...

அது இன்னொரு உயிரை

அவலப்படுத்தி கிடைப்பதாய் இருந்தால்..

அந்த சுகங்கள் எனக்கு வேண்டாம் ....

பைங்கிளியை நீயே வைத்துக்கொள்!

வைத்துக்கொள் மனதினில் வலிமையை!

பெற்றுக்கொள் அனுபவத்தில் அறிவை!

முட்டிச்செல் மானிடர் பேதமையை!

வெட்டிக்கொள் முகஸ்துதி முழக்கரை!

பொறுத்துக்கொள் பண்பிலார் வசையை!

பேணிக்கொள் வாக்கினில் நேர்மையை!

பற்றிக்கொள் பற்றற்றான் பாதத்தை!!!

வைத்துக்கொள் மனதினில் வலிமையை!

பெற்றுக்கொள் அனுபவத்தில் அறிவை!

முட்டிச்செல் மானிடர் பேதமையை!

வெட்டிக்கொள் முகஸ்துதி முழக்கரை!

பொறுத்துக்கொள் பண்பிலார் வசையை!

பேணிக்கொள் வாக்கினில் நேர்மையை!

பற்றிக்கொள் பற்றற்றான் பாதத்தை!!!

பற்றற்றான் பாதத்தை

பற்றிக் கொள்ள

கால்கடுக்க நடந்தேன்...

முனிகளைப் போலவும்

துறவிகள் போலவும்

சிலரை- வழிகளில் கண்டேன்...!

எங்கே போகிறீர்கள்....

உங்களைப்போல் நானும்

துறவியாய் மாற வேணும்... :rolleyes:

ஆம் ...

அனைத்தையும்

இழந்தவன் நான்

ஆகாயக் குண்டினால்

வீட்டினை இழந்தேன்

ஆட்லறி குண்டினால்

சொந்த பந்தகள் இழந்தேன்...

அரசினை பிடிக்கவில்லை

பற்றென்று வைத்துக்கொள்ள

ஒன்றுமே - எனக்கில்லை..!

உங்களைப் போல்

அனைத்தும் இழ(துற)ந்தவன் நான்

பற்றற்றான் பாதத்தை

பற்றிக் கொண்டு

வீடு காண வேண்டும்

என்னையும் கூட்டிப் போங்கள்.......

வா..தம்பி ..வா...

ஜெய தேவன் அழைக்கின்றான்

யு.கே க்கு விசா எடுக்க

கொழும்புக்கு போகின்றோம்..

கோயிலென்றால் அங்கே

உண்டியல் தான் முதலிருக்கும்

ஏமாளிச் சனங்கள்

காசுபோட நிறைய இருக்கு....

ஒன்றல்ல இரண்டல்ல

பத்து வீடு வாங்கலாம்....!

வாழும்போதே...

மோட்சம் நாம் அடைய

சொர்க்கம் நாம் போக .....

இதை விட்டால்

வேறை வழி இல்லைத் தம்பி...!

வா...தம்பி...வா...

எம்மோடு சேர்ந்து- நீயும்

வீடுகாணலாம்....! :lol:

(வீடு காண்பது மோட்சம் அல்லது முக்தி அடைதலையும் குறிக்கும்...)

Edited by gowrybalan

வீடுகாணலாம்

எங்கள் தேசத்திற்க்கு சென்று

நாங்கள் தவண்டு வளர்ந்த

வீட்டை காணலாம்

அன்னியர்கள் தாக்கியழித்து

எச்சங்களய் எங்கள்

உறவுகள் பெயர்களை கூறும்

நம் வீட்டை பாக்கலாம்

எங்கள் உறவுகள்

எங்கள் கண்முன்னே

இரத்ததை சிந்தி

தங்கள் உயிர் நீத்த

எங்கள் வீட்டை பாக்கலாம்

சேர்த்து வைத்திருக்கும்

கண்ணீருக்கு

விடை கொடுக்க

எங்கள் தேசம் சென்று

வீடுகாணலாம்

Edited by வானவில்

வீடு காணலாம்!

பனி படர்ந்த கூரை கொண்டு

அயல் வீட்டுக்காரனையே அறியாமல்

நாம் வாழும்

வீட்டை காணலாம்!

விலை உயர்ந்த பிரிஜ்ஜோடு

குளிர் காய வைக்க ஏசியோடு

செல்வம் மட்டும் உலாவும்

நம் வீட்டை காணலாம்!

காலையில் அம்மா போக

கூடவே அப்பா போக

தனிமையில் நான் வாழும்

வீட்டை காணலாம்!

குருவிகள் கீச்சிடும்

மயானத்தை கூட

அமைதியால் வென்றிடும்

நம் வீட்டை காணலாம்!

செல்வம் மிஞ்சி

சொந்தம் கஞ்சி

இன்பம் தொஞ்சிய

வெளிநாட்டு மாளிகையதை

காண...

கண்கள் இரண்டு போதாது!

வாழ...

இதயம் ஒன்றும் தாங்காது!!

Edited by பிரியசகி

இதயம் ஒன்று தாங்காது

உந்தன் அன்பை தாங்க

எனக்கு ஓர் இதயம் போதாது

உந்தன் இதயத்தில்

எனக்கும் கொஞ்சம்

இடம் கொடு

ஆண்டுகள் நூறானாலும்

உந்தன் இதயத்தில்

உயிர் வாழ்வேண்

நீ மடியும் போது

உன்கூட நானும் மடிவேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மடிவேன் என்று தெரிந்தும் மெளனமாய்

மடி மீது தலைவைத்து உன் முகம் பார்த்தே

வடியும் கண்ணீரினை கரைக்கின்றேன்

வடிப்பது கண்ணீரல்ல இதயத்தின் சோகம்

படிந்த இரத்தத் துளிகள்

துளிகள் வீழ்ந்த

கமலத்திரு வதனமேந்திக்

கரையுதே மனம் ...

வண்டு விழிக்

குமிழுடையக் கண்டே

கரையுதே மனம்....

நெஞ்சோடணைந்து

விம்மிடும் பூவை நிலையினால்

கரையுதே மனம்..

மெல்லத் தீண்ட

வல்லியம் பேசும் விரல்கள்..கண்டே

கரையுதே மனம்..

என்னவாகிலும் அன்பால்

என்னிலை நாடிடக் கண்டு

கரையுதே என் மனம்..

கரையுதே என் மனம்

உன் புன்னகை என்னும்

புயலில் சிக்கி,

புயலில் சிக்கிய எனது

மத்தை காப்பாற்றா

தென்றலாக நீ வருவாயா?

:angry: நீ வருவாயா என்ற

நினைப்புக்கே வழியில்லை

எனக்குத் தெரியும்

நீ வர முடியாத

இடத்தில் இருக்கிறாய் என்று..

தொலைந்த பின்னும்

தொலையாத பந்தம் என் காதல்..

உரிமை இழந்த பின்னும்

உடையாத நினைவுகள்

என் காதல்..

நீ மட்டம்

எங்கிருந்தாலும் நல்லாயிரு

எங்கிருந்தாலும் நல்லாயிரு

எங்கள் விகடகவியின்

மனதை வென்றவளே

நீ எங்கு சென்றாலும்

நல்லாயிரு:rolleyes:

நல்லாயிரு என்று

நாக்கு மட்டும்

கூறலாமோ...

நலம் வாழ

வாழ்த்திவிட்டு

நாடகம் ஆடலாமோ..

காதல் காலங்களை

கவிதைகளாய் எழுதுகிறாய்..

என் கணவன்

கண்ணுற்றால்

கதை கந்தலென்று அவள்

கதறாமல் இருப்பதற்காய்..

காதல் கடிதங்கள் கூட

சாம்பல்ச் சமாதியாய்..

நீரோடு கரைந்தது

போனதே

என் காதல் அஸ்தி

என் காதல் அஸ்தியிலிருந்து

மீண்டும் எழும்புவேன்

பீனிக்ஸ் பறவை போல்

ஒரு தடவையில்லை

ஓராயிரம் தடவை

ஓராயிரம் தடவை

என் இதயத்தில்

பதிந்த உன்விம்பங்கள்

கற்பனைக்குள்

தொலைந்து கனவுக்குள்

வாழும் அற்புதம்

தான் என்ன

மனதோடு மகிழ்ந்த

நாட'கள் இங்கே

மரணித்து போனதால்

தோடித் தோடிப்

பார்க்கின்றேன் என்

இனியநாட்களை

புரியாத வாழ்கைப்

பயணத்தோடு

Edited by கஜந்தி

பயணத்தோடு என்

துக்கமும்

காலாவதியாகிப்

போனது...

'ம்...' பயணம்

நல்லது

பல முகங்களைப்

படிக்கின்ற

வாய்ப்பைத்

தருவதால்...

வேலையில்

களைத்துப் போன

மனசுக்கு

குஞ்சம் கட்டி

அழகு பார்க்க

பயணம் நல்லது

சிலருக்கு வாழ்க்கைத்

துணை கூட

கிடைக்கலாம்

பயணம் செய்வீர்

இடங்களை மட்டும்

கடக்காமல்

மனங்களைக்

கடந்தும்!

பயணங்கள்

உங்கள் கால்

தடத்தை

பதியாவிட்டாலும்

நினைவுத்

தடத்தை

அழுத்தமாகப்

பதிவு

செய்யும்

ஆகவே

பயணம்

செய்வீர் !!!

செய்வீர்..

பிறந்தநாள்...

சாமர்த்திய வீடு...

கலியாணம்...

செத்தவீடு....

அந்தியட்டி...

இன்னும் ஏதேதோ

நீர் எனக்கு!

ஆனால்...

உம்மிடம் நான்

ஒன்றை மட்டும் கேட்கின்றேன்....

நிச்சயம் செய்வீரா?

ம்...

அது...

வந்து....

நான்..

எனது...

ஆன்மாவை...

தொலைத்துவிட்டேன்...

கண்டுபிடித்து தருவீரா?

தருவீரா....?

தமிழ் துரோகிகளே

உங்களால் இழந்த

எங்கள் போராளிகளின்

வீரம் நிறைந்த உயிர்களை

நீங்கள் மீட்டு தருவீரா?

மீட்டு தருவீரா?

பாட்டு நான் பாடுவேன்..

வீணை நீர் மீட்கவேண்டும்...

நடனம் நான் ஆடுவேன்...

மத்தளம் நீர் கொட்டவேண்டும்...

கவிதை நான் வாசிப்பேன்...

கைகள் நீர் தட்டவேண்டும்...

இதற்காக

நீர் கேட்கும்

கூலி என்ன?

ஐயோ நான் ஏழை....

ரசிகன் என்ற பட்டம் மட்டுமே

உமக்கு என்னால் தரமுடியும்!

முடியும்வரை முடிக்கிடந்தாய்..

முடிந்தபின் முடி விரித்தாய்...

தப்புத்தாளங்கள் இருவரும்

போட்டதல்லவா..என்னை

மட்டும் குற்றவாளியாய்

ஏன் பெண்ணே சித்தரிக்கின்றாய்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.