Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவிதை அந்தாதி

Featured Replies

சித்தரிக்கின்றாய்...

மீன்விழிகள்....

செரிப்பழ இதழ்....

அப்பிள் கன்னங்கள்...

வெண்டைக்காய் விரல்...

புடலங்காய் இடுப்பு...

என இவ்வாறு...

அடேய் பாவி

உனக்கு உண்பதை தவிர

வேறு ஒன்றும் தெரியாதா?

சரி அதைவிடு...

எனக்கு

புற்றுநோய் உள்ளவிடயமாவது

உனக்கு தெரியுமா?

  • Replies 1.9k
  • Views 182.1k
  • Created
  • Last Reply

தெரியுமா வா..

தெரியுமே..நீ

எதைத் தெரியுமா

எனக் கேட்டாயோ

அது தெரியாமலா

தெரியுமென்று சொன்னேன்..

அதைப்பொய் எனக்கு

தெரியாதென்று

சின்னப்பிள்ளைத்தனமாக

நினைத்துவிட்டாய்..

தெரியும்..தெரியும்

எனக்கு அது தெரியும்..

அது எனக்குத் தெரியும் என்பது

உனக்கும் தெரியும் என்பது

எனக்குத் தெரியும் அதுசரி

இது மற்றவர்களுக்குத் தெரியுமா.. :unsure:

மற்றவர்களுக்கு தெரியுமா?

நீங்கள் காதலின் பெயரில்

செய்யும் லீலைகள் எல்லாம்?:unsure:

எல்லாம் மாயை

எழுத்தறிவிததவன்..

இயக்கும் நாடகம்...

பலம் பலவீனமாகி

பலவீனம் பழிகளாகி..

பழிகள் சேர்ந்து

பாவமாகும்..வாழ்க்கை

நாடகங்கள்...

நாடகங்கள் பல

நான் நடித்து

நீண்டகாலமாகி விட்டது...

இதனால்...

மீண்டும்..

இப்போது...

கோயிலுக்கு

சாமி கும்பிடப்

போகத் தொடங்கியுள்ளேன்...

நாடகத்தில்...

சேர்ந்து நடிப்பதற்கு

நீயும் என்னுடன்

கோயிலுக்கு வரலாமே?

உனது வசதி எப்படி?

வசதி எப்படி என

வாய் தவறிக் கேட்டதற்கு

சாடை மாடையாக

அவள் தன்

கால் செருப்பைச்

செருப்பைக் காட்டினாள்..

ஓ..கோவிலுக்குள் செருப்பு

கூடாதெனக் கூறுகிறாள் Nபுhலும்

என நினைத்த எனக்கு..

எல்லாம் தெளிந்தது..

செருப்புக்கு வேறு

என்னமுடியுமென அறிந்தபோது..

அவளுடைய தோல் செருப்பு..

போட்டதால் தேய்ந்ததாய்

தெரியவேயில்லை.. :unsure:

தெரியவேயில்லை

அன்பனே உனக்கு..

பூமியில்

மாந்தரை

ஏமாற்றுதல்....

காலை வாருதல்....

முதுகில் குத்துதல்....

பொய் சொல்லுதல்...

காதலித்து கைவிடல்...

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுதல்...

உயிருடன் கொள்ளி வைத்தல்...

எனவே...

இதுவரை நீ அங்கு

வாழ்ந்தது போதும்...

விரைவில்

என்னிடம் வந்து சேர்ந்துவிடு!

இப்படிக்கு

அன்புடன்,

ஆண்டவன்

ஆண்டவன் யாரெனக்

கண்டேன்..நம்மை

ஆள்வதும் அவனெனக்

கொண்டேன்..

மாண்டவன் எல்லாம்

மீண்டான்...

வாழ்பவன் எல்லாம்

தொலைந்தான்

என்ற வாக்கினை

தானாயத் தெரிந்தான்..

இதுதானோ

சயன அசரீரீ

அசரீரி ஒன்று கேட்டது....

அடியேனை

ஆண்டவனின் தூதனாக

சேவைகள் செய்து

இந்த உலகை இரட்சிக்கும்படி....

அழுது விட்டேன்..

ஆஆஆஆ....

எனக்கு இவ்வளவு பெரிய பொறுப்பா?

ஆச்சரியம் தாங்க முடியவில்லை...

எனக்குள் இவ்வளவு ஆற்றல்களா???

நான்

உணர்ச்சிவசப்பட்ட போது...

அந்த இனிய...

கனவு கலைந்தது...

படுக்கையில் தலையணைக்கு

அருகில் கிடந்தது

பைபிள் வேதாகமம்!

வேதாகமம் படித்ததும்

பாதகம் செய்யும்..

அராஜக மதமடங்கள்

ஆசை துறந்த

முனிக்கெல்லாம்

அள்ளிக்கொடுக்கும்..

அறியாமைப் பக்தர்கள்..

மாயாஜாலம் காட்டி மனதை

வசப்படுத்தும்

கள்ளச்சாமியார் வசியங்கள்..

எல்லாம்

ஏமாந்து போகும்

மாந்தரால் ஆகும்

மடமைகள்.

மடமைகள் உள்ளது இந்த உலகம்

நீயாவது அறிவாளியாக இரு...

இவ்வாறு அடிக்கடி சொன்ன

எனது குருநாதன் ஒருநாள்...

என்னிடம் வந்து தனது

முதுகு சொறியச் சொல்லியபின்

கேள்வியொன்று கேட்டான்....

நான் இறந்துவிட்டால்

நீ என்ன செய்வாய்?

ம்ம்ம்ம்ம்ம்ம்......

இன்னொருவன் மூலம்

எனது முதுகை

சொறிய வைத்துக் கொண்டிருப்பேன்...

என் பதில் கேட்ட குருநாதன்

அக்கணமே பரலோகம்

போய்விட்டான்....

பரலோகம் போய்விட்டான் அவன்

போனவன் தனியே போகவில்லை

துணைக்கு பலரையும் கூட்டிச்

சென்றுவிட்டான்,

யாரவன்.........?

அவன்தான் அரசியல் வாதி

வாதிட

முடியவில்லை

அன்பே

உன்னுடன்

எனக்கு...

நான் வார்த்தை...

நீ மொழி..

நான் பற்கள்...

நீ சொற்கள்...

ஆதனிலால்..

நம் குடும்பத்தில்

இனியும்

என்னுடன் நீ

சண்டைபிடிக்க

விரும்பினால்..

முதலில்

எனக்கு

விவாகரத்து தா!

தா என்னிடம்

வாங்கிய

கடனைத்

திருப்பி தா

இல்லை

உன்னை

எனக்கு தா

தா

என

அடம்பிடித்து

கேட்கின்றாய்...

தருவதற்கு முன்

ஒரேயொரு நிபந்தனை....

உன்னிடம்

ஒப்படைத்த

என் உயிருக்கு

ஏதாவது ஒன்றென்றால்...

உன்னை நான்..

சும்மா விடமாட்டேன்...

போலிசீல் பிடித்துக்கொடுத்து விடுவேன்...

உனக்கெதிராக நீதிமன்றத்தில்

வழக்குத் தாக்கலும் செய்வேன்...

Edited by கலைஞன்

செய்வேண் ஆயிரம்

திருவிளையாடல்கள்

உன்னை நான் அடைய

அதுவே என் வாழ்க்கை

வாழ்க்கை

ஒன்றும்

புதிரில்லை

நாளைய ஏக்கம்

நேற்றை கவலை

பலருக்கு...

இன்று, இந்த நிமிஷம்

நாமிருப்பதே

நிஜம்..

இன்றையப் பொழுதைக்

கொண்டாடுங்கள்

சந்தோஷங்களை

ஒத்தி வைக்க

இது ஒன்றும்

கூட்டத் தொடரில்லை!

வாருங்கள்

நண்பர்களே

வசந்தங்கள்

காத்திருப்பதில்லை

வசந்தாக்களும்

கூடத் தான்!!! :P

Edited by kavi_ruban

கூடத் தான்

ஆசை

என் அன்பே

உன் நெஞ்சமெனும்

கூட்டில்

உன்னோடு

கூடத் தான்

ஆசை

ஆனாலும்

கூடத் தான்

ஆசை!!!

ஆசைகள் நீ

உரைத்தாய்

கண்ணே - என்

மீசை துடிக்குதடி

பாஷைகள்

தேவையில்லை

பார்வைகள்

போதமடி

ரோஜாக்கள்

அழைப்பு விடுத்தால்

ராஜாக்கள்

மறுப்பாரோ?

தேனுண்ண

பூக்கள்

அழைப்பு விடுத்தால்

வண்டுகள்

மயங்காதோ?

வருவேனடி

கண்ணே நானும்

வாசலிலே

காத்திருப்பாய்

வாய் முத்தம்

தந்தே என்னை

மச்சத்துக்கு

அழைப்பாயா?

Edited by kavi_ruban

அழைப்பாயா என்று

கேட்டபின்

முறைப்போடு

முறுவலா?

தமிழோடு விளையாடி

கவிதையால்

எனைச் சாடாமல்

மெளனியாகிப்

போனாயோ

பெண்ணே?

கற்பனையது ரசிக்க!

அது கண்டு நீ

தெளிந்தால்

மயக்கங்கள்

வாரா!

தயக்கங்கள்

வேண்டாம்

தடையிலாது

தமிழோடு

விளையாடு

பூனையென்றே

பிடிக்க வந்தால்

புலியாகி

அவர்தம்

உயிரோடு

விளையாடு!!!

விளையாடுங் காலம்...

வினையான கோலம்...

மரண ஓலம்...

மடியினில் தோழன்...

குண்டு

அடிபட்டு

உயிர்விட்ட

நேரம்...

உருவான கோபம்...

என்றென்றும் என்நெஞ்சில்

தீ யாக கக்கும்...

தீயவனை

சுட்டு எரிக்கும்...

சுட்டு எரிக்கும் சூரியனிடம்

ஆறு கேள்விகள்....

ஒன்று

உனக்கு ஏன்

இத்தனை கோபம்?

இரண்டு

நீ ஆணா

அல்லது பெண்ணா?

மூன்று

உன்னை ஏமாற்றிய

காதலி/லன் யார்?

நான்கு

உனக்கு திருமணமாகிவிட்டதா?

ஐந்து

நீ தேனிலவு கழிப்பதற்கு

போகுமிடம் எது?

ஆறு

நீ மரணமடைந்தால்

உன்னை எங்கே போட்டு எரிப்பது?

விரைவில்

விடைபகர்வாய்

பகலவா!

பகலவா உன்

வருகைக்காய்

எந்தனை பூக்கள்

தவம்கிடக்கின்றன

அதிகாலை நீ

வருடும் போது

அந்த மெல்லிய

வெப்பத்தில் எந்தனை

அழகாய் துயிலெழுந்து

சிரிக்கின்றது பூக்கள்

அந்த

பனித்துளியை

உதறிக்கொண்டு

சிரித்திடும்

அழகை நீ

எப்போதாவது

ரசித்ததுண்டா?

நீ

ரசித்திருந்தால்

மதியவேளையில்

அவைகளை வாட்டி

வதைக்கமாட்டாய் எனியாவது

ரசித்துப்பாரேன்

ரசித்துப்பாரேன்

என்னை உனக்கு

விருப்பமென்றால்....

வாயினுள்

நான்கு சூத்தைப்

பற்கள் இருக்கின்றது...

முதுகில் தேமல் இருக்கின்றது...

தலையில் மொட்டை

விழுந்துவிட்டது...

நிறம்

பார்ப்பதற்கு

சுமாரான கறுப்பு..

அடிக்கடி எனக்கு

காக்காய் வலிப்பு வரும்..

இதைவிட

நீரிழிவு வியாதியும் உண்டு...

ரசித்துப்பாரேன்

என்னை உனக்கு

விருப்பமென்றால்....

  • கருத்துக்கள உறவுகள்

விருப்ப மென் றால்

அது மிக நன் றால்

ஒரு கையால் பற்றி

மறு கையால் நோண்டி

தண்ணீரில் முழுக்காட்டி

மஞ்சளுடன் மற்றும்

மசாலாக்களுடன் வதக்கி

நாவ+ற வாயூற

நல்ல பிட்டுடன் பிரட்டி

பசியாறவே என் மனம் நாடுதே!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.