Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதை அந்தாதி

Featured Replies

வணக்கம்

இந்த கவிதை அந்தாதி என்பத விரும்பியவர்கள் அவர்களின் எண்ணச்சிதறல்களை பதியும் இடம். தயவுசெய்து அவர்களை புண்படுத்தாதீர்கள். உங்களிற்கு விருப்பம் இல்லையெனில் நீங்களக ஒரு தலைப்பை தொடங்கி அதில் உங்கள் எண்ணங்களை பதிந்துகொள்ளுங்கள். மற்றவர்களின் மனதை நோகடித்து அதில் சுகம் காண்பது ஒரு எழுத்தாளனிற்கு அழகல்ல

பல தடைகளைத்தாண்டி இந்த யாழ் இணையம் இன்று தட்டுத்தடுமாறி ஓரு நேரான பாதையில் பல எழுத்தூளர்களை சுமந்து ஒரு உறவுப்பாலமாக நீண்டு செல்ல நினைத்து அதிலும் வெற்றி கண்டுகொண்டிருக்கின்றுது. உங்களது கவிதை வரியில் காணப்படும் சில வார்த்தைப்பிரயோகங்கள் இங்கு பலரின் மனதை நோகடித்து இருக்கின்றது. இனி அவற்றை பிரயோகிக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன்.... தனிமடலில் தொடர்புகொண்டிருப்பேன் அதைவிட எந்த விடயமானாலும் அதை வெளிப்படையாக பேசித்தீர்வு காண்பதே நல்ல விடயம் என்பதால் இங்கு கூறுகின்றேன். சுட்டிக்காட்டவில்லை. பொதுப்படையாகவே சொல்கின்றேன். தவறென்றால் மன்னித்துக்கொள்ளவும்

நட்புடன் பரணீதரன்

இது என்ன

உங்கள் மனக் குப்பைகளை

இறக்கி வைக்கும்

இடமா?

மல்லாந்து படுத்து

காறி உமிழ்கின்றீர்

மள மளவென்று

கருத்து மூட்டைகளை

அவிழ்கின்றீர்

சிலர் இங்கு வந்து

சில்லறைச் சண்டைகள்

செய்கின்றார்

சிந்திக்க மறக்கின்றீர்

கணினிச் சாளரம்

திறந்து

கன சனம் பார்க்குதய்யா!

ஆகவே

கருத்துக்களில் கொஞ்சம்

கரிசனம் சேரும்

இல்லையெனில்

வந்தசனம் சோரும்!

பெண், காதல்

இவைகடந்து

ஏன் உங்கள்

கற்பனைக் குதிரைகள்

பயணிக்கவில்லை!

சுற்றி சொல்ல

பல சேதி இருக்கு

சும்மா சுழன்று

நானும் எழுதுவன்

கவிதையென்று

காதலாகிக் கசிந்துருகாமல்

பாடுபொருள் மாற்றும்

பல முத்தான

கவிதைகள் பிறக்கட்டும்!!!

  • Replies 1.9k
  • Views 182.1k
  • Created
  • Last Reply

உறவுகளின் முன்னால்

உதறிச்சென்றவனே

உழிந்து துப்பியவனே

கவிஎன்னும் நாமத்தை

கவசமாய் கொண்டவனே

படைப்பவனை தின்னாதே

படைப்புகளை மிதிக்காதே

சிற்பியின் கை சிக்கி

சிலையானவை போக

எஞ்சிய துண்டங்களும்

என்றோ காட்சிக்கு வரும்

சிதறல்களும் சிறுதுகள்களும்

என்றும் சீரழிந்து போவதில்லை

கலைக்கண்ணால் பார்த்தால்

கழிவும் ஓர்; ஓவியம்தான்

ஓவியம் தான் தீட்டுகிறேன்

உன் கண்க ளதை

கிறுக்க லென்று பார்க்கிறதே...?

கிறுக்கலும் ..

கிறுக்கியவன் தான்

அப்போது(ம்) அதே கண்கள்

ஓ வியமாய் பார்த்ததுவே...?

உள்மனதின் உணர்வுகளை

உன்னிடத்தில் எப்படித்தான்

எடுத்துரைப்பேன் ....?

கவிதை யென்றும்.. ஓ விய மென்றும்

ஏதேதோ வரைந்து போகும்

என்னை ...இப்போது....

கிறுக்கனென்று சொல்லுவதேன்...? :unsure: :P

சொல்லுவதேன்

சொல்லாமல் கொல்லுவதேன்

கொல்லாமல் தினம்

என்னை ஆளுவதேன்

கண்ணை இமைகாப்பதுபோல்

என்னை தினம் காத்த தேசம்

மண்ணை நாம் ஆள்வோமென

திண்ணையோரம் படுத்த கூட்டம்

வஞ்சகத்தின் வலையினால்

என்னை தள்ளி எறிந்ததேன்

அண்ணனவன் துணையுடனே

உன்னை ஓர் நாள் காண்பேன்

முட்டி முட்டி உன்தன் மடியில்

அமுதப்பாலும் அருந்தி நிற்பேன்

சொல்லுவதேன்

சொல்லாமல் கொல்லுவதேன்

கொல்லாமல் தினம்

என்னை ஆளுவதேன்

கண்ணை இமைகாப்பதுபோல்

என்னை தினம் காத்த தேசம்

மண்ணை நாம் ஆள்வோமென

திண்ணையோரம் படுத்த கூட்டம்

வஞ்சகத்தின் வலையினால்

என்னை தள்ளி எறிந்ததேன்

அண்ணனவன் துணையுடனே

உன்னை ஓர் நாள் காண்பேன்

முட்டி முட்டி உன்தன் மடியில்

அமுதப்பாலும் அருந்தி நிற்பேன்

நிற்பே னென் னினம் காத்து

கொடு பகை யழிந்திடும்

தமிழ் வீரம் பார்த்து....!

விண்ணே இடிந்து வீழும் போதும்

தமிழ் மண்ணே நமதென வாளை யேந்து!

முன்னே யாண்ட வினமிது -அது

என்றும் ஆழு மென வெழுந்திடு....!

Edited by gowrybalan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விகடகவி உங்க கவிதைகளை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம். அழகான வார்த்தைகள் கொண்டு நீங்க தரும் கவிதைகளை படிக்க பலர் இருக்கிறார்கள்.

வாங்க உங்கள் கவிதைகளை எதிர்பார்த்தபடியே நாம் இங்கே.............

எழுந்திடு தமிழா எழுந்திடு

உன் இனமொழி காக்க எழுந்திடு

கங்கை கொண்டு கடாரம் வென்று

சங்கம் வைத்து தமிழது வளர்த்து - அகல்

வங்கம் கடந்து வணிகம் செய்து

புலிக்கொடி பறக்க புகழ்கொடி பரப்பி

உயர்வென உயர்ந்த உலகினில் சிறந்த

உன் சரித்திரம் நீயும் நினைத்திடு

உயர் தமிழா மீண்டும் எழுந்திடு

உன் தாய் மண் காக்க எழுந்திடு

மறத்தமிழ் வீரம் மிகமிக கொண்ட

ஒரு பெரும் தலைவன் தோன்றினான்

அவன் புலிக்கொடி பிடித்து களப்பணி

செய்வாய் புதுத் தமிழீழம் எழுந்திடும்

Edited by vettri-vel

எழுந்திடும்

எட்டுத்திக்கும் விரவிடும்

புலிவீரம் கண்டு

வெருண்டிடும் உலகினம்

களப்பகை முடிக்க

கரும்புலியென களம்

குதித்த உறவே

சிங்கள சீற்றர்களை

சிதறடிக்க தினம்

விழி மூடா உறவே

வருவோம் நாம் துணையாக

துணையாக நீ வருவாயெனில்

துணைப்படையில் இணைந்து

துரோகியை அழித்தொழிக்க

துவக்கு ஏந்த நான் தயார்

வருவாயா நீயும்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

துணையாக நீ வருவாயெனில்

துணைப்படையில் இணைந்து

துரோகியை அழித்தொழிக்க

துவக்கு ஏந்த நான் தயார்

வருவாயா நீயும்?

நீயும் நானும் சேர்திருந்தால்

காலம் எங்கள் பக்கம்!

வெற்றிக் கனிகள் மாலையாக

எங்கள் தோள்கள் கிட்டும்!.

வெட்டிச்சாய்ப்போம் துரோகம்

தன்னை!.கைகள் தன்னைச் சேரு!

வெற்றிப்பாதை அண்ணன் கீதை

அந்த வழியில் நடை போடு!.

போடும் கருநிற ஆடை பொன்நிறமாய் மிளிர்கிறதே

உன் தியாகம் தனையே பாடும் என் கவி கூட சிலிர்க்கிறதே

வீரம் மிகுவுன் தியாகம் கரும்புலி போல எதை சொல்லுவேன்

ஈழம் எனும் எங்கள் தேசம் கண்ட காவல் தெய்வங்களே

தேசத்தின் விடிவதற்கென்றே எதிர்காலத்தின் சந்ததிக்கென்றே

வாழ்வே நாடென கொண்டே உயிர்பூவினை கொடையென தந்தே

நீ செல்கின்ற வழியது கண்டே தெய்வங்கள் தலை சாய்க்குமே

ஒரு காவியமே உன் வாழ்வென செந்தமிழே தன் சிரம் தாழ்த்துமே

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாழ்த்துமே தீயவை யாவினும் வீழ்த்துமே புலிப்படை!

வெற்றி வாகை சூடுமே களத்தினில்!.மோதியே

பார்த்திடினும் ஈழத்தின் வாசலைக்கீறியே

போட்டிடினும் விண்ணாளும் புலி என்று

புதுக்கவி படைத்தார்கள்! எங்கள் புலி

எங்கும் வரும் என எதிரியைக் கிலி

கொண்டோட வைத்தார்கள்!.சிங்களத்தின்

நெஞ்சில் வெடி தைத்தார்கள்!.

கரும்புலிகள் தினம் 5/07/2007

மேலே எழுதப்பட்டது கரும்புலிகளின் தியாகத்திற்கு இந்த பாமரனின் இதய அஞ்சலி

  • கருத்துக்கள உறவுகள்

வெடி தைத்தார்கள்!

வெடியாய் விதைந்தார்கள்--மீண்டும்

கொடியாய் விண்ணில் எழுவார்கள்!

தமிழீழம் கண்டு நிற்பார்கள்

தவழும் தென்றலில் அலையலையாய் அசைந்து.

அலையலையாய் அசைந்து...

நீலவானின் துகிலாய்..

நீள்விண்ணிலாடும் முகிலே

நில்லாயோ..ஒரு நொடி என்

சொல்கேட்டு நீயோட. ஓடும்.

பால் நிலவை நான் காண...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காண வந்தேன் நிலவினை

கண்டு விட்ட மகிழ்வில் அந்த

நிலவொலி தந்திடும் மகிழ்வில்

நிதமும் மனமும் சிறகினை

விரித்து பறந்திடுமே

Edited by கறுப்பி

விரித்து பறந்திடும்

எம் உலகின்

வீரர்களே........

உம் இரத்ததில்

முளைந்திட்ட

மரங்களெல்லாம்

உமக்காய் பூக்கள்

பூக்க- உம்

மரணத்தால்

உதிர்ந்திட்ட வெள்ளை

மலரெல்லாம்

சிகப்பாய் பூத்திட்டது

உன் கல்லறையின்

பக்கத்தில் உறங்கிட

அல்ல உன்

கனவுகளை மீட்க்க

விரித்து பறந்திடும்

எம் உலகின்

வீரர்களே........

உம் இரத்ததில்

முளைந்திட்ட

மரங்களெல்லாம்

உமக்காய் பூக்கள்

பூக்க- உம்

மரணத்தால்

உதிர்ந்திட்ட வெள்ளை

மலரெல்லாம்

சிகப்பாய் பூத்திட்டது

உன் கல்லறையின்

பக்கத்தில் உறங்கிட

அல்ல உன்

கனவுகளை மீட்க்க

கனவுகளை மீட்க

கண்களை மூடினேன்

நினைவுகளில் எல்லாம்

நீ யே வந்து நிற்கிறாய்..!

என் - இரவுகளில் தூக்கம்

இல்லாமல் போனதால் ....

இமைப் பொழுது மூடலிலும்

கணப்பொழுதில் கூட

உன் முகம் காட்டிச் சிரிக்கிறாய்....!

என் இரவுகளைத் திருப்பித் தா

இதமாய் என் விழி மூட!!

விழி மூடி நாளை நான்

பிணமாகப் போகின்றேன்!

என்னுடலம் சுமப்பதற்கு

எத்தனைபேர் வருவீர்கள்?

இழிவான உலக வாழ்க்கை

இனி எனக்கு தேவையில்லை!

இதமான தூக்கம் ஒன்றே

இறந்தபின் எனக்கு போதும்!

போதுமென்ற மனதுடன்

புலம் பெயர்ந்திருந்தால்

புலத்தில் எம் கொடி

புகழ்பரப்பியிருக்குமா ?

இருக்குமா..இருக்காதா..

அது

கனவாகத்தான்

இல்லை

அது கனவில்லை..என்றால்..

எங்கே

எனக்கு ஏற்பட்ட

விழுப்புண்..

வீரமாக விரைத்து

நின்று

வீணர்ககளை வெட்டி

வீழ்த்தியது

நானேதானா..

வீரம் கனவில்

மட்டுமா..

இல்லை நிஜத்திலும்தான்

என்றால்

எப்போது நிரூபிப்பது..

வேளைகள் தாண்டி வெகுதூரம்

வந்ததாக நினைத்தேன்..

இல்லை என்று..

இங்கிருந்து போய் போராளியாகி

என் நண்பன் மெய்யுரைத்தான்..

மனிதம் அரத்து..

வீரம் சோர்ந்து கிடப்பதா..

போதும் என்

சகோதரர்கள்

போன இடம் நானும் போகிறேன்..

இன்றே..இதோ.. இப்போதே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்போதே எழந்தி|டுவேன்

இன்றென்னால் முடியலயெ

கண்ணிரோடு அலைகையிலே

கையில் துப்பாக்கிது ஏந்துவேனோ...??

பாலகரை பிடித்ங்குகு

பலியதை இடுகையிலே

தப்பாக்கி தூக்குவேனா

தூ வேன துப்புவேனா...?

:huh::(:D:D :P :P ஃ

தூவெனத் துப்புவேனாவுன்த்

தொப்புள் தொங்கட்டான் பார்த்து..

உன் மானம் என் மானம்

ஒன்றான பின் உன் மனம் மாறி

குணம் மாறி மரந் தாவுதேன்..

ஆடை மோகமும்..அலங்கோல பாவமும்..

ஆகாதடி..தமிழச்சி உனக்கு சேராதடி..

வினை விட்டொழி..நம் மகவு

பெண் மகவு உனை நோக்குதடி..

பண்பாடு சொல்லு..என்பிள்ளை

பாதையில் சேறள்ளு. மீண்டு..

நல்ல பெண்ணாக நீ மாறடி

பெண்ணாக நீ மாறடி யென்

பைங்கிளியே யுன்

முன்னோர்கள் சொன்னார்கள்

அதை நீயும் கேளடி....!

பொழுதோட எழுந்து

எண்ணெய் வைத்து தலைமுழுகி

பின்னலிட்டு பூவும் வைச்சு

கண்டாங்கி சேலை கட்டி

களுத்து முட்ட நகையணிந்து ....

அண்ணாந்து பார்க்காமல்

அடி பார்த்து நடை நடந்து.... :D

இப்போது ...பெண்ணே நீ :)

தலை விரித்து.... கலரடித்து.....

எட்டாத சட்டைக்குள்

எப்படியோ உள் நுளைந்து.....

ஹைய் ஹீல்ஸ்சும் போட்டுக் கொண்டு

ஜம்முன்னு நடை நடந்து.....

எதிரே போகும் ஆணையெல்லாம்

எரிக்கும் - பார்வை யால் முறைத்து..... :P

என்னான்னு சொல்வது

அடி பெண்ணே நீ

நல்ல பெண்ணாக மாறிவிடு......!!!! :P :P

Edited by gowrybalan

நல்ல பெண்ணாக மாறிவிடு..

எனப்பெண் நிலை சாடும்..

ஆணே..உன் வழிமாறி..

திசைமாறி..வசை பாடும்

காலக்கோலந்தான் என்ன

உன் கோலந்தான் என்ன...

நழுவிப்போகும் கலுசான்...

நாய்ச்சங்கிலிகள் கழுத்தில்..

போதை கொண்ட கண்ணும்

பூச்சுக்கண்ட தலையும்..

கூட்டம் கூடும் உனக்கு

குடிகாரத் தோழமைகள் இருக்கு

பெண்ணைச் சீண்டும் உன்னை

தாய் அடித்தழுவாள்..

நொந்து பெற்ற வயிரை

வயிரை வளர்க்கும் நண்பா வுன்

அறிவை வளர்க்க வேன் மறந்தாய் ....

பெண் நிலை சாட வரவில்லை

இங்கு நான் அவ்வினத்தின் ..

பகையேதும் எனக்கில்லை...!

நகைச் சுவைக்காய் நாலுவரி

விகடமாய் சொன்னதுக்கா துடிக்கின்றாய்..

துவளுகின்றாய்...- இல்லைப் பெண்

அபிமானம் பெறுவதற்கா

நம்மினத்தைச் சாடுகின்றாய்...? :angry:

ஓ...

முகத்தைத் தொலைத்தவர் தானே

கண்ணாடி பார்க்கும் போது

மறக்காமல் முகமூடி களற்றிவிடு

உன் முகத்தை நீ யறிவாய்..... :)

என் முகத்தில் சுரண்டாதே

வலிக்கும் நான்

முக மூடி அணிவதில்லை...!

;)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.