Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதை அந்தாதி

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரக்கத்தனமானது அல்ல உன் முகம்

அன்பு கலந்த குறுநகைப்பார்வை உனது

வாய்ச்சொல்லில் வீரன் அல்ல ஆனால்

வாய்மை தவறாமல் பேசுவதில் வல்லவன் நீ

சினந்து கொள்வதில் மன்னன் நீ ஆனால்

சினக்காமல் கருமமாற்றுவதில் தொண்டன் நீ

கனவினை நிஜமாக்கி நனவினை கற்பனையாய்

கவி சொற்களுடனே கவிதையாக்குவதில் கவிஞன் நீ

  • Replies 1.9k
  • Views 182.2k
  • Created
  • Last Reply

நீ என்ன செய்கிறாய் அம்மா...

சாப்பிட்டாயா....

பேசும்போது இருமிக்கொண்டிருந்தாயாமே...

பெற்றவர் நால்வரையும்

நாடொன்றிற்காக அனுப்பிவைத்துவிட்டு..

ஆதரவிற்கும் பணிவிடைக்கும்..

ஆளில்லாமல் அல்லலுறுகிறாயா அம்மா...

எந்தத் துயரையும் தாங்கி...

எதிர்நீச்சல் போடும் என் தாயே..

உன்னையும் முதுமையின்

இயலாமை சூழ்ந்து கொண்டதா அம்மா...

வறுமை வாட்டிய காலங்களில்

உன் கடைசிக்குழந்தை எனக்காய்..

எங்காவது அலைந்து

ஏதாவது உணவு தேடி

என்னைக் காத்த அம்மா..

உன் வயோதிப எல்லையில்

உன்னைக் தாங்க முடியாமல்

ஆனானே அம்மா..

வருந்தாமல் இரு என்று

நீ சொன்னாலும்..

ஓடும் இரத்தம் உன்னதுதானே...

அது அழுகின்றது...

இங்கே துடிக்கும் இதயம் உன்னுதுதானே

அது தவிக்கின்றது..

என் எண்ணமும் நடத்தையின்

உன்போல்தானே...அன்பால் வாடுகிறது...

அம்மா.. உலகின் அன்பு தெய்வமே...

என்ன செய்கிறாய் அம்மா..

Edited by vikadakavi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்மா.. உலகின் அன்பு தெய்வமே...

என்ன செய்கிறாய் அம்மா..

சுமப்பேன் என்று சொன்னாலும்....

சுமந்தே நடந்து போகயில்..

வலிகள் முளைத்து வாட்ட...

நம்பிக்கையும் நெஞ்சுரமும்..

நடையின் வேகம் போல குறைந்து செல்ல...

சுரீரென விழுந்த பிரம்படியால்...

இறுகிய கால்களால்...அழுக்குத்துணியோட

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் புது வேகம்

இணைந்திருக்கும் பொழுதுகளிலும்

இதயத்துடிப்பிலும் வேகம்

சின்னதாய் காட்டும் அன்பிலும்

பின்னி பின்னி மெழுகாய் கரையும்

மனதிலும் வேகம்

வெறுமைகள் விழுங்கித்

தவிக்கும் மனதிலும் வேகம்

வேகமிங்கே தேடல்களாக

தேடல்களே தேவைகளாக

தேயாமல் இருக்கும்

இதயத்தின் எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

ஏதுமில்லை எனக்குள்

கண்ணே உன் கை விரல்

பிடித்து நடப்பதுவும்

கண்ணசைவில் காலங்கள்

மறப்பதுவுமல்லால்

வேறெந்த எதிர்பார்ப்பும்

இல்லை எனக்குள்!

புதிர்போல இவ்வாழ்க்கை

முடிச்சுக்கள் அவிழ்கின்ற போது

அர்த்தங்கள் புரியும்!

எதிர்படும் இடர் எல்லாம்

என் அருகில் நீ

இருந்தால் விரைந்தே

ஓடுமடி!

கண்ணே கடைசிவரை

காதலிப்போம்

கட்டிலறைப் போர்

தொடுப்போம்!

Edited by kavi_ruban

தொடுப்போம் எனத்

தோழியர்கள்

தொடுத்த விழியம்பில்

வீழ்ந்த காளைகளே...

விட்டில் பூச்சிபோல்...

விடலாமோ வாழ்வைப்

பெரும் பொய்யழகின்

காலடியில்..அது

மடமை மடமை

என பட்டவர்கள்

மாரடித்துச் செப்பினாலும்..

மாட்டாது மனம் ஏற்க...

மறக்காது மனசறுக்க..

கடலாக பொறுப்பிருக்கும்..

கல்வியிலே சிறப்பிருக்கும்..

பாட்டான் பெருமை

பட்iடாளி வீசிப்

பறந்திருக்கும்

தந்தை பெயருக்கு தரணியிலே..

மதிப்பிருக்கும்..எல்லாம் இருக்கும்..

பெண்பார்வை பின்

காளை மயங்கித்

திரியும் வரை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வரையறை ஏதும் இல்லை

வாழ்க்கையில் பிடிப்பும் இல்லை

வந்து விழும் வசைமாரிகள்

வாய்க்கு வந்தபடி எதிரொலிக்கையில்

வாழ்வதே ஒரு சுமையாய்

வாழ்ந்திட்டு விட்டுப் போகையில்

வாழ்வின் சுமைகள் சுகங்களாய்

வந்ததே வசந்தம் உன்னைக் கண்டபோது

வசம் இழந்தேன் நான் இங்கே

வாழ்வது ஒருமுறை என்றே

வசந்த காலத்தை தேடி

வசந்த காலத்தை தேடி

வானத்தில் இருந்து

மண்ணை நாடி வந்த

என் கண்களுக்கு

குளிர்ச்சியாக கிடைத்த

வாசமான முல்லைப்பூவே

நீ நலமா?

நீ நலமா என நீ கேட்க

நான் நலம் என வார்த்தையில்

உரைத்தை போதிலும்!!

நீயில்லாத உலகில்

நான் மட்டும் நலமா

இருப்பது எப்படி தோழி!! :unsure:

தோழி...ஆனாலும்..

தோளில் தூங்கமுடியாது நீ...

ஏனென்றால்....

நீ தூளி தூங்கும் தோழி அல்ல...

இரு சேலைகளை இணைத்துச்

சுற்றும் தோழி..

உனக்காக.. இளைக்கும்

கலைகளைக் கற்றுக் கற்று

நான் களைத்துவிட்டேன்..

நன்று இளைத்தும் விட்டேன்..

நீதான் நாளொரு கிலோவும்

பொழுதொரு இறாத்தலுமாக எடை

ஏறிக்கொண்டே போகிறாய்..

உணவைக் குறைக்கச்சொன்னால்..

உரக்ககுரைத்துவிட்டு..

என்னை முறைக்கிறாய்..

பத்திய உணவென்று..

பலர்பந்தியை.. எளிதாக

ஏப்பம் விடுகிறாய்..

ஏய்.. தோழி..

நீ ஏன் உண்ணாவிரதம் இருக்ககூடாது..

சாகும் வரை வேண்டாம்..

கொஞசம் உடல் குறையும் வரை

Edited by vikadakavi

உடல் குறையும் வரை உண்ணாவிரதம்

இருக்க சொல்லும் இந்த உலகம்!!

நீ கலங்காதடி!!

உடல் குறைந்தா வருத்தம் என்றும்

அதையும் ஏளனம் செய்யும் உலகம் அம்மா!!

உன் மனதை பார்க்க சொன்னா உடலை

பார்க்கும் உலகம்

ஆனால் என் கண்னுக்கு தெரிவதோ

உன் அழகிய மனதம்மா!! :unsure:

அப்ப நான் வரட்டா!!

அழகிய மனதம்மா உன்னது

அடுக்களை விறகாய் எரிவாய்

நிதம்... நிதம்.... எனக்கென

விதம் விதமாய் தீனிகள் செய்வாய்! :(

கொளு...கொளுவெனக் கொளுத்தும்

நான் - மக்டோனால்ஸ்

கென்ரக்கியெனத் திரிவேன்...!

கொடிதெனும் ஏழ்மையில் வீழ்ந்தும்

மடிந்திடும் மனிதரை பார்த்தும்

அவர் வாய்க் கரிசிக்காயேனும் ...

ஒரு பெனி கொடுத்திட மனம் வரா.....! :D

கூடிடும் நண்பர்களோடும்

கும்மாளம் கும்மிகள் போட்டு

கதையிலும் கவியிலும்

காட்டுவேன் நம் நாட்டினின் நிலமை!

கானங்கள் பாடுவேன்

காட்டுவேன் வித்தை

விடிந்திடும் பாரு ஈழம் நாளை....! :unsure:

Edited by gowrybalan

நாளை என்ற சிந்தனை

நம்மோடு...

பழி வாங்கும் எண்ணமேன்தானோ..

பின்போடு...

ஆறும்..வயலும்.. கோவிலும்..

ஊரோடு...

ஆறுகடல் தாண்டினும் போகாதே..

மனதோடு...

நீயும் நானும் வாழ்வோமே

நட்போடு..

நம் நிலைகளும் மாறிடுமென்ற

நினைப்போடு..

அன்பும் பண்பும் கொண்டால்..

உன்னோடு..

வாழ்வும் வளமும் சேரும்..

அழகோடு...

நீயா நானா போருக்கு

தடை போடு..

நியாயங்கள் வெல்லும்..நாளை

எம்மோடு...

எம்மோடு...

எம்மோடு...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எம்மோடு வாழ்ந்த காலம்

என்றும் குளிரவைத்த

சுகமான நினைவுகள்

சுற்றத்தாருடன் முத்தத்தில்

சூழ்ந்திருந்தே

சுகங்கள் புதினங்கள் பல பேசி

சுதந்திரமாய் மகிழ்ந்திருந்த

மாலைப் பொழுதுகள்

மாலைபபொழுதுகள்..

மயங்கும்வேளைகள்..

மடியில் விழிமலர்கள்..

மலரும் பொழுதுகள்.

இளவேனில் என்னவளே...

இவளழகில் முன்னவளே..

இளமான்போல்சின்னவளே...

இராத்தூக்கங்கள் தின்னவளே...

சிறிய நிலவென மிதக்கிறாள்..

சிற்றாடை கட்டியே...பறக்கிறாள்..

சிரிக்கும்போதெல்லாம்..கரைக்க

Edited by vikadakavi

மாலைப் பொழுதுகள்

தரும் மயக்கங்கள்...!

வானச் சிவப்பை

முகத்தில் பூசி

தேனொழுக

என்னென்னமோ பேசி

உன்னிரு கண்ணாலே

வலை வீசி

எனைச் சிறைப்பிடிப்பாயே

ஒரு கணம் யோசி

அவ் பொழுதுகளை!

விருப்பமாய் நானும்

சிறைப்பட்டு

கிறக்கமாய் கிடப்பேனே

உன் மடி மெத்தை மீது!

வருமா கண்ணே

அந்தப் பொழுதுகள்

மீண்டும்?

சாபமா வேண்டி

வந்தோம்

தமிழனாய் பிறப்பதற்கு?

திக்கெட்டும் சிதறினோம்

எம் காதல் நினைந்து

நெக்குருகி அழுகிறோம்!

விலகுமா இருள்?

விந்தைகள் ஏதும்

நடக்குமா?

கலங்காதிரு கண்ணே

கரிகாலன் ஆட்சியில்

ஈழம் விடியும்

எம் பிள்ளை

ஈழத் தெருக்களில்

ஓடித் திரியும்!

வராந்தாவில்

ஓடித்திரியும் உன் கால்கள்..

வெறுமையாக

இருக்கிறதென்றுதானே...

கொலுசு வாங்கி வந்தேன்..

மகளே...இப்போது..

குமரியாகி நீ..

பறக்க ஆசை கொண்டால்..

ஏழை தந்தை..

இறக்கைகளை வாங்க

எங்கே போவேன்?.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கே போவேன் உன்னை விட்டு

அன்பைத்தேடும் என் மனம் பட்டு

விடப்போகிறதே ஒரு நொடிக்குள்

துன்பத்தில் துடித்து துவண்டிடும் மனதினை

வார்த்தைகளால் பரிந்துரை செய்து

ஆற்றுவிக்கும் உன் தோழமையை விட்டு விட்டு

ம்.... ம்... ஒருபோதும் போகமாட்டேன்

போகமாட்டேன்..

உன்னைவிட்டு

எங்கேயும் என்று

சொன்னேனே அன்னையே...

அங்கு நீ..ஆதரவிழந்து

அல்லலுறுவதை...

யாரோ சொல்லி..

நானறிந்தும்...

ஏதும் செய்ய முடியாத

இயலாதவனாக...

வெறும்..பணம்

உன்னை தேற்றாதே...

அன்புக்கு அருகில்..

ஆளில்லாமல்..

வெற்று பூமியில்;..

வெளிரிய

வானம் நோக்கி..

மங்கிய பார்வையும்..

தளர்ந்த நாடியும்..

தாயே..

என் கடமைகள்

பாக்கி இருக்கிறது..

காலங்களை..

எனக்காக பாக்கி

வைத்திருக்க மாட்டாயா..

என் வரவுக்காக உன்

அன்பைத் தேக்கி

வைத்திருக்கமாட்டாயா..

விதி போட்ட வேலி

தாண்ட முடியாத பாவி..

அம்மா..உன் காதுக்கு

என் அழுகை சத்தம்

கேட்டிருக்கும்..

ஏனென்றால்..

என் நெஞ்சுக்குள்..

உன் மனக்குமுறல்

கேட்குதே....அம்மா..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அம்மா அம்மா

என்றழைத்தாலே

என் நாடி நரம்பெல்லாம்

துடிக்கின்றதே

என் மூச்சுக்காற்று

ஒவ்வொரு துடிப்பிலும்

அம்மா உன் நலம் வேண்டியே

என்னுயிர் துடித்திருக்கும்

அம்மா உன் முகம் காண

இத்தனை மைல்கள் தடுக்கின்றதே

தடுக்கின்ற சுவர்கள்

தரையோடு அழிழ

குறுக்கே விழும் கரங்கள்

குருதியுறைந்து கூனும்

அடுக்கடுக்காய் எதிரி வீழ

அண்ணனவன் படைதான்

வெல்லும் கதை சொல்லும்

கதை சொல்லும் பாட்டி

சாமியாய் போன பின்பும்

அவள் சொன்ன கதைகள்

இன்றும் என் நெஞ்சினில் நிற்கும்....!

காக்காவை ஏமாத்தும் குள்ளநரி

அசுரரை அழித்திட

கடவுள்கள் அவதாரம்...

இன்னும் எத்தனை எத்தனையோ....

கதைகளும் நொடிகளும்...

பாக்களும்.... பல பல

விளையாட்டுக்களும்...!

கதைகளின் கருவை அன்று

அறிந்திடேன் - கைதட்டி

அச்சாக் கதைகளென்று

ஆர்ப்பரிப்பேன்.....!

இன்று - எம் வாழ்வில்

நரிகள் போலவும்.... அசுரர் போலவும்....

இறைவன் அவதாரம் போலவும்...

மனிதர்கள் பார்ப்பேன்...!

:wub:

சாமியான உன் படத்தைப் பார்த்து

கையெடுத்துக் கும்பிடுவேன்...!

அன்று சங்கம் வைத்து

தமிழ் வழர்த்தார் உந்தன் மூதாதையர்...!

இன்றும் சங்கம் வைத்து

குழுப்பிரித்து சண்டை செய்வார்

எங்கள் தமிழர்..! :o

தமிழர்..தமிழர்..தமிழர்..

நாமா ஐயா.. தமிழர்

வேட்டி கட்டத் தெரியாது..

விட்டுத்தள்ளு...

தமிழுக்கு விளக்கம் சொல்லத்தெரியாது..

வேண்டாம் விடு...

பிள்ளையின் பெயர்.. ப்ரெட்டி.

பெரிய கொடுமை..

அன்னலட்சுமி பெயரிப்போ அனா..

கந்தசாமி இப்போது கண்டா..

வெள்ளையர் வாய்க்கு இலகுவாம்..

போகட்டும் பொறுத்துக்கொள்வோம்...

பிள்ளைக்கு தமிழ் தெரியாதாம்..

வைபவங்களில் அம்மாவின் பெருமை..

"ஐ கான்ட் ஸ்பீக் டமில்"

பிள்ளையின் பெருமை

கொடுமையிலும் கொடுமை..

தமிழர்..தமிழர்..தமிழர்..

நாமா ஐயா.. தமிழர்

எல்லாம் மாறினாலும்..

பலபல அரங்கேற்றங்கள்..

சந்தோசப்படலாம்..

அதற்கு போகாத வரை

அங்கே..பேச்சிலிருந்து..

மூச்சு வரை.. ஆங்கில அலட்டல்..

பெருமைக்கும்.. நாகரீகத்திற்கும்..

பெரிய வைபவம்...அரங்கேற்றம்..

ஒரு நாள் முன் வரிசையில்

இரு வெள்ளை ஆசாமிகள்..

என் போதாத காலம் பக்கத்தில்

நான்.. ஒரு பூ முடித்த பெண்..

"அன்ட் நௌ சிவா கெட்ஸ் ஆங்கிரி

ஒன் பார்வரி அன்ட் கீ இஸ் கோயிங் டு டான்ஸ்

கால்ட் ருட்ர டாண்டவம்"

இவ்வளவும் அவர்களுக்காகவாம்..

அரை மணி நேரத்தில்

ஒருவர் மற்றவரிடம்..

"இட்ஸ் குட்..இட்ஸ்ரஜயலஜ சூபர்ப்.

பட் மை பாக் பெயின் இஸ் கில்லிங் மீ..

ஐ நீட் டு கெட் ஓப் பிரம் திஸ் சீட்.."எனவும்.

மற்றவர் "மீ ரூ "

என்னை ஏதோ பிடுங்கித்தின்றது..

விருப்பமில்லாமல் விருந்து..

யாருக்காகவோ.. நாடகம்..

தமிழ் பேசத்தெரியாத பிள்ளை..

சங்கீத அரங்கேற்றம்..

தமிழ்ப்பாட்டை..

ஆங்கிலத்தில் எழுதிப் பாடும்.

மேலை நாட்டு வாழ்க்கை..

சுய அடையாளம் இழந்த

தமிழர்..தமிழர்..தமிழர்..

நாமா ஐயா.. தமிழர்

நாமா ஐயா.. தமிழர்

என்று கேட்ட

விகடகவி

கவி நன்று!

நாமம் மட்டும்

தமிழய்யா

வேறென்ன சொல்ல ?

வேட்டி கட்டினால்

குளிருக்காகாது என்று

வேட்டியை மறந்திருக்கலாம்...

தமிழில் பேசினால்

'இங்க வந்தும்

இங்கிலீஸ் தெரியாது போல'

என்று சனம் புறு புறுப்பினம் என்று

இங்கிலீஸில் பேசியிருக்கலாம்

மற்றது

அரகேற்றமெல்லாம்

சும்மா வீட்டிலிருக்கிற

சேலை நகையை காட்ட

ஒரு இடம் வேண்டாமோ?

இப்படித் தானய்யா

எங்கட சனம் சும்மா

வறட்டுக் கவுரத்தில

அடையாளம் தொலைக்குதுகள்...

வேறென்ன சொல்ல

விகடகவி

ஆனாலும்

உம் கவி பிடிச்சிருக்கு!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.