Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதை அந்தாதி

Featured Replies

தள்ளிப்போகாதே நீ என

தடுக்குது உன் மனம்

நிம்மதியாக நீ இருக்க

நானே போகின்றேன்

சந்தோசமாக நீ இரு

சந்தேகம் எனக்கில்லை

உன் நிம்மதியைக் கலைக்க

நான் விரும்பவில்லை

என்ன கொண்டுவருவாய்

உன் மனம் வினாவுகையில்

விடையேதும் என்னிடமில்லை

விடைபெறுகின்றேன் உன்னிடமிருந்து

  • Replies 1.9k
  • Views 182.1k
  • Created
  • Last Reply

உன்னிடமிருந்து

பெரிதாக ஏதேனும்

நான் கேட்டேனா?

மூன்று இரவில்

மீண்டும் நீ வரும்போது

அன்பிற்குச் சான்றாக

தாஜ்மஹால் வேண்டாம்

அல்வாவேனும் கொண்டுவருவியா

என்று தானே கேட்டேன்?!

கைக் காசு செலவழிக்க

நீ விரும்பாது

மழுப்பலாக கதை ஏதோ

சொல்லிப் போவதென்ன?

இரு இதயம் இதமாக

கை குலுக்கும் போது

அன்பளிப்புகள் அன்பிற்கு

அடையாளமாகுமே!

இரு விழி உருட்டி

என்னைப் முறைக்காதே - நீ

வரும் வழி நோக்கி

விழித்திருப்பேன் நான்!

விழித்திருப்பேன் நான்

பாதையெங்கும் உன் விம்பம்

தேடி

எங்கே நீயென தேடித் தேடியே

நித்தம் முத்ததில் நானிருப்பேன்

உனக்காக காத்திருந்து என்

உயிர் பிரியுமென்றால் அதைவிட

வேறன்ன வேண்டும் சொல்லன்பே

நான் விட்டமூச்சுக்கும்

நான் விடும்மூச்சுகுமான

சுவாசமே நீதானே

எத்தனை இரவை என் விழி

பகலாக்கியிருக்கும் எல்லாம்

அன்பே நிலா உன்னை காணத்தானே

என்று புரிவாய் எனை என

என்றும் காத்திருக்கும் உன்

காதலன் நானல்லவா.....

நானல்லவா உன் காதலி

ஏனிந்த சந்தேகம் காதலனே

உனை நீங்கி சென்ற நான்

ஊனை மறந்து துடிக்கின்றேன்

மாசற்ற வெண்ணிலாவுக்கு

காசு பெரிதல்ல புரிந்திடு

தூசு பட்டும் கலங்காத கண்கள்

அழுகின்றன இன்று தனிமையில்

நிம்மதியாக நீ வாழ

உனை விட்டு நீங்கிய நான்

உன் கவிதை படித்த பின்

கவலையோடு நான் இன்று

அன்புக்கு அடையாளமான

அந்த தாஜ்மஹால் வேண்டாம்

அல்வாவும் உனக்கு வேண்டாம்

அன்பு முத்தங்கள் பல போதும்

அன்பானவனே வா என்னருகில்

அணைத்திடு ஒளியதனை

அணைத்திடு வெண்ணிலவை

அதரங்களைக் குவித்திடு

வருவேன் நாளை உனைத்தேடி

வடிப்பாயா கவிதைகள் பலநூறு

கவித்தென்றலே எனை நோக்கி

வீசு இதமான தென்றலை. :icon_mrgreen:

இதமான தென்றலை என்றும்

வீசுவேன் என்னருகே நீயிருந்தால்

உன் மடியில் நான் தூங்க

எங்கே நீ சென்றாலும் உன்னோடு

ஓடிவரும் நிழலாக நானிருப்பேன்

என்பதை நம்பிவிடு

ஆயிரம் சொன்னாலும் உலகம்

அன்பே உனை சேர அகிலமே

எதிர்த்தாலும் கோழையாய் நான்

முலையில் படுத்துறங்கமாட்டேன்

போராடியே போராளியாய்

உன் கை பிடிப்பேன் என்

உலகமே நீயாக வேண்டும்

என்பதே என் கொள்கை

எதிர்ப்பு இல்லாத வாழ்க்கை வேண்டாம்

எனக்காய் நீயும் ஓடி வரவேண்டாம்

விழுப்புண் அடைந்தாலும் வேங்கை நான்

உன்னைக் கேக்க வாசல் வருவேன்

அதுவரை பொறுத்திரு முடிந்தவரை

சமாதானமாய் பேசிப்பார்ப்போம்

சிறந்த வீரனுக்கு அழகு பொறுமையாம்

அழகு தேவதையே உன்னால் வீரனானேன்

உனக்கென பொறுக்க மாட்டேனோ

*னோனா

நீ யார் வீட்டு மானோ?

வீணே நீயும் ஏன்

எனைத் தேடுகின்றாய்!

யாரேனும் வந்து

வழக்குப் போடுவர்

கவனம்!

உயிர் உருகும் சத்தம்

உனக்கு மட்டும் கேட்டால்

அது காதல்!

களத்தில் வந்து கனபேர்

காது கொடுத்துக் கேட்கினம்

பார் இனி வரும்

பல மோதல்!

'தயிர் கடையும் மத்தாக

உயிர் கடைகின்றாள்

என்னத்தை மகளென்று'

கவிதை பல செய்தவன்

நான்...!

சோகம் சுமக்கும்

சில கவிதை

சொந்தக் கதை

உரைக்குமடி!

வேகமெடுக்கும் என் தமிழின்

அழகில் எல்லாம்

மறையும் காண்!

பாவம் பல பேர்

வந்து நம் கவிதைக்

கோலம்

கண்டு கொடுப்புக்குள்

சிரிப்பார்!

சாபம் ஏதும்

இட வேண்டாம்

சல சலத்து ஓடும்

நம் கவி ஓடையில்

நீந்தி மகிழட்டும்

இவர்கள்!

---------------------

குறிப்பு : *னோனா - சிங்கள வார்த்தை பெண், மனைவி ஏதேனும் பொருளில் வரலாம் (பொருள் தவறு இருப்பின் திருத்துங்கள்.)

Edited by kavi_ruban

இவர்கள் தன்னுடல்

தனை மறந்து

தனாக்காய் வாழாது

எமாக்காய் வாழும்

தியாக தீபங்கள் ஆனால்

இன்று

பூவுடலாய் பூமியில்

சரிந்த வேளை

இழிவின் மேல் இழிவு

செய்து ரசிக்கின்றான்

அரக்கன்...............

கொடுமைகளை ரசிக்கும்

இவனுக்கு மனித நேயம்

எப்படி புரியும்

எப்படிப் புரியும்

இவர்களுக்கு

உனக்கும் எனக்குமிடையில்

உருகாத மெழுகுவர்த்தியொன்று

ஒளி தருவது...!

எப்படிச் சரியும்

இத் தேகம்

உன் பஞ்சுத் தலையணை மீது

பிஞ்சு விரல்கள்

ஸ்பரிசம் தராமல்!

எப்படி அறியும்

இவ் உலகம்

உனக்கும் எனக்குமிடையில்

பொதுவான மொழி

அன்பு என்பதை!

எப்படி அறிவார்

நம் பெற்றோர்

நம்மிருவர் வாழ்விலும்

நலம் வரும் என்பதை!

உன் நலனில் நானும்

என் நலனில் நீயும்

மனசுக்குள் அழுகின்றவேளை

நம் நலனில்

நமையாளும் இறைவன்

கை தரானா?

தருவான் என்கின்ற

நேர் சிந்தனையோடு மட்டும்

வாழ்கின்றேன்!

Edited by kavi_ruban

வாழ்கின்றேன் நான்

உன்னில்

அல்ல உனக்காய்

யார் யாரோ வந்து

போன இதயத்தில்

யாவுமாய் நின்றவளே

நீயின்றி நான் வாழவும்

நீயே வேண்டுமடி

சீதனமா நான் கேட்டேன்

சீதனமாய்த்தானே உன்னைக்

கேட்டேன்

ஆயிரம் பிரச்சனைகளைத்

தாண்டிவர கூட இருந்த நீ

ஒரே ஒரு பிரச்சனையால்

தனியாய்ப் போக எப்படி

முடிந்தது உன்னால்........

உன்னால் முடியும்

என்னை மறக்க

அதைத்தானே செய்கிறாய்

இதையேன் இங்குரைக்கிறாய்

நீ எனக்காகவும்

நான் உனக்காகவும்

இயன்றவரை வாழ்வோம்

இறைவன் நம்பிக்கையோடு

என் உயிர் உருகுவது

உனக்கு கேட்கிறதா

என்னவனே பதில்சொல்

உனக்காக நான்

நான் நானாகவே

இருந்திருக்கலாம்

நீ நீயாகவே

இருந்திருக்கலாம்

எனக்கு நீயும்

உனக்கு நானும்

யாரோ என்றே

வாழ்ந்திருக்கலாம்

நீ என்னை

காதலோடு

பார்க்காமல்

போயிருந்தால்

நான்

உன்னிடம்

நேரம் கேக்காமல்

போயிருந்தால்

இப்பிடி சேர்ந்து

ஒன்றுக்குள் ஒன்றாக

வாழ்ந்துவிட்டு

ஒவ்வொன்றாக வலியோடு

பிரியாமல் போயிருப்போம்

பிரியாமல் போயிருப்போம்

பிரியத்தோடு பேசியிருப்பின்

காத்திருப்போம் நாமிருவரும்

காதலோடு கலந்திருப்பின்

அனுதினமும் கண்டேன்

அழகிய உன்வதனத்தை.

அயராது உழைப்பினும்

சலியாது உன் புலமை

ஓடிவா பாடிவா தேடிவா

பேடி இவளை நாடிவா

வா வா தொடர்ந்து வா

வானிலவை கவிபாட வா :D

Edited by வெண்ணிலா

கவி பாட வா

கண்மணியே உன்

கண்களில் தூங்கி

கனவு காணவா

கற்பனை உலகில்

மிதக்க வா கண்மணியே

உன் கவிதைகளில் பொருள்

சேரவா

காகித வானத்தை

கவிதையால் நிரப்ப வா

உன் கண்கள் இரண்டில்

இமையாக துடிக்கவா

கவி

பாட வா கண்ணே

கவி பாடவா காலம்

உள்ளவரை உனக்காக

கவிஞானாகவா

கவிஞனாகவா.. ?

உனக்காக நான்

கலைஞனாகவா.. ?

முன்னொரு பொழுது

சாவினுள் சீவியஞ்செய்த

எனக்கு என்னை - நீ

விரும்பும் வகையில்

மாற்றி அமைப்பது

ஒரு பெரிய

விடயமே அல்ல!

எனினும்..

எனக்காக நீ

ஒன்றும் செய்யத்

தேவை இல்லை!!

ஆனால்..

என்றும் என்

உண்மைக் காதலியாக

நீ இருப்பாயா?

அப்படியாயின்..

கவிஞன் என்ன..

கலைஞன் என்ன...

விரைவில் நான்

என்னை கடவுளாகவே

மாற்றிக் காட்டுகின்றேன்!

உனக்காக.. !!

உனக்காக

தருவதற்கு

என்னிடம் எதுவுமில்லை

உன் நினைவுகளைத்

தவிர...

தனக்காக

எதையும் சிந்திக்காது

காதல்...

நமக்காக என்ற

சிக்கன வார்த்தையில்

சிறைப்படுவதில்

தனிச் சுகம்!

உயிரையும்

தருவேன் என்று

உளறுவதெல்லாம்

மகா கிறுக்கு!

வாழ்கைப் புத்தகத்தை

புரட்டும் போது

கூடவே நானும்

இருப்பேன் என்பதில்

தான் சுகம் இருக்கு!

வார்த்தைகளில் ஜாலம்

காட்டிப் புரியவைப்பதில்

இல்லை அன்பு!

அன்புக்கு அர்த்தமேது

அடியேனுக்கு புரியவை

அன்று பார்த்த உன்னில்

அமைதியை பார்த்தேன்

இன்றுதான் புரிந்தேன்

இதமாக சிரிக்க தெரிந்த

இனியவனே உனக்குள்

இவ்வளவு கவிப்புலமையை!

உன் வலைத்தளத்தில்

புன்முறுவலைக் கண்டதும்

புரிந்தேன் நீதான் அவனென

பக்கத்தில் இருந்த போது

பார்வைகள் மட்டுமே மோதின

பேச்சுக்கள் வெளிவரவே இல்லை

மூச்சுக்கள் தொட்டதுமில்லை

ஆனால் இப்போ....

பாசமாக கதைக்க

பாவையென் நா துடிக்கின்றன

என்னவனே நீ வருவாயா

என்னருகில் மீண்டும்?

Edited by வெண்ணிலா

மீண்டும் அதிர்ந்தது

சிங்கள தேசம்

மீண்டு வந்தது

தமிழரின் தேசம்

நேற்று இருந்தவர் - இன்று

நினைவுகளாய்

நாளை அவர் கனவுகள்

நனவாகி நம்மை மகிழ்விக்கும்

நம்மை மகிழ்விக்கும்

நம் இனிய கனவுகள்

கலைந்து போகுமுன்

கைப்பிடித்திடு என்னை

கைப்பிடித்த என்னை

கண்களுக்குள் பொத்திவை

காமுகர்கள் பலவுளர்

கன்னியிவளைக் கடத்திட

ஆதலால் தான்

காதலனே உனைநான்

நெருங்குகிறேன் எனை

நீ காக்க வைக்காதே

வைக்காதே பெண்ணே..

வெள்ளைமனதில்

பாறாங்கல்லை...

இனியவன் எண்ணங்களை

இருட்டடிப்பு செய்யாதே...

தெளிந்த ஓடை நீரில்

திராவகம் ஊற்றாதே...

பாலொளி வீசிக்கொண்டே..

பாடையைக் காட்டாதே..

பாடலைப் பாடிக்கொண்டே..

படுகொலை செய்யாதே..

புன்னகை வீசிக்கொண்டே..

பெரும்பாவம் செய்யாதே..

முத்தங்கள் என்ற பேரில்..

இரத்ததை குடிக்காதே..

கட்டிலறைக் கதைகள் பேசி..

சுடுகாட்டில் திரியாதே..

மாலைகள் மாற்றியதும்

தேளாகிக் கொட்டாதே..

மஞ்சத்தில் வீழ்ந்தவனின்..

நெஞ்சத்தில் மிதிக்காதே..

வேண்டாம் பெண்ணே..

உன்னை நீயே..

உருமாற்றிக் கொள்ளாதே..

வேண்டாம் பெண்ணே..

உனக்கு நீயே..

குழி பறிக்காதே..

காதல் என்ற கடலில்..

குளிக்கிறேன்.. என்று..

மூழ்கிப் போனால்..

துளி கண்ணீரும் கிடைக்காதே..

துளி கண்ணீரும் கிடைக்காதே..

துளி கண்ணீரும் கிடைக்காதே

என்று கவி பாடும் கவியே

களி கொண்டு துள்ள வேண்டாமா?

கண்ணீர் இல்லாது சந்தோசப்

பன்னீர் தெளிக்கும்

காதல் வாழ்க்கை

சத்தல்லோ?

இதை மறந்தது

தப்பல்லோ?

பழி சொல்வதெந்தன்

ஆசை இல்லை

கிலி காட்டிக்

கவி சொல்லல் என்ன

நியாயம்?

நீயும் நானும்

வந்த கதை

தெரியுமா?

காதல் கொள்ளல்

என்ன பாவமா?

அன்னை அப்பன்

காதல் நமை ஈன்றது!

காதல் எனில்

கடலை கொறித்து

கடலலை ரசித்து

கட்டழகை அணைப்பது

மட்டுமா?

சொந்தச் சோகத்தின்

சுமை தாங்காது

வந்த கோபத்தில்

காதல் பழித்தீர்

கூதல் வந்தால்

தேடும் போர்வை போல்

காதல் வந்தால்

கைகள் கூடல்

பாவமா?

நயத்திற்காக

கவி ரசத்திற்காக

கவி செய்தால்

எல்லாம் நிஜத்தில்

எழுந்து நடக்குமா?

பயம் தெளிக

நயம் புரிக!

புரிக இளையவனே காதல்

மயக்கத்தில்

கட்டுண்டு கிடந்தவன்தான்..

காடு மேடெல்லாம்..

கற்புன்று களித்தவன்தான்..

காதல் இவளே என்று

கண்மூடிக்கிடந்தவன்தான்..

அவளே உயிரென்று

ஊதியத்தைக் கரைத்தவன்தான்..

மங்கை மடி சொர்க்கமென்றே..

மதியை இழந்தவன்தான்..

களிப்பு வரும்..

கல்யாண எல்லை வரை..

கல்யாண எல்லைக்கோட்டில்.

பெண் பெற்றோருக்கு

பொம்மை....நல்ல

காதலனுக்கு ஊமை..

சுடும்.. தீ

காதலென்றேன்..

விரலால் அணைப்பேன்..

இதழால் இனிப்பேன்..

வீரன் நானென நீ

வித்தகம் பேசினால்..

விட்டுவிடுகிறேன்..

பட்டு வா பாலகா..

கதை கேட்க அண்ணன்

யாழில்தான்.. இருப்பேன்.. :unsure:

இருப்பேன் நான்

இறுதிவரை உன்னோடு

இன்முகத்தோடு

இனிய காதலியாக! :unsure:

இளஞ்சிட்டுக்களின்

இளமைப்பருவமிது

இயற்கையை ரசிக்க

இணைந்தே வா! :lol:

இனியவனே வா

இளநிலா இவளின்

இதழில் கவிவடிக்க

இன்றே வா வா! :blink:

Edited by வெண்ணிலா

வா வா என்றே

வஞ்சி அழைத்தாள்...

வசந்தம் வருமோ....

பூவாய் அவள்

கொஞ்சி அழைத்தாள்..

பூமி வெட்கப்படுமோ...

வெட்கம்...என்ற

சொல்லுக்கிங்கே..

வேலையில்லையே..

வேகம் கொண்ட

காதல் கிளிகள்..

சேரவில்லையே..

முத்துப்போல

காதலையுள்ளே..

மூடிவைத்தல் பாவம்..

சிப்பி போல..

திறந்து கொண்டால்..

இன்ப ஒளியில் தேகம்.

முன்னும் பின்னும்..

நீயும் நானும்..

கட்டிக்கொள்ளவா..

மேலும் கீழும்

வானும் மண்ணும்

ஒட்டிக்கொள்ளுமா..

மாயை என்ற பேயையென்றும்

இளமை அறிவதில்லை..

அறியும் நிலை

அடையும் போது..

கரைகள் தெரிவதில்லை..

கரைகள் கண்ட மீனுக்கெல்லாம்..

நீந்த முடிவதில்லை..

நீந்த முடிந்த மீன்கள் கூட

கரையை அடைவதில்லை..

காலம் போல வாழ்க்கை என்று..

கரைத்து விடாதே..

கரையும் வாழ்வைப் பயனில்லாமல்..

குறைத்துவிடாதே..

இதுதான் பாதை.. இதுதான் பயணம்..

வெற்றி கிடைக்கும் மறந்து விடாதே..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விடாதே பிடி என்றாய்

விட்டுவிட்டேன் பிடியை

விட்டுப்பிடி என்றாய்

விட்டுப்பிடிக்கத் தெரியவில்லை

விலகிப்போ என்றாய்

விலகிட போக முடியவில்லை

விரும்பியே வந்தாய்

விருந்தோம்பல் தந்தேன்

விக்கல் வந்தது உனக்கு

விக்கித்து போனது எனக்கு

எனக்கு வலிக்கின்ற

கணங்களில்..

ரணங்களை நான்

உன்னிடம் காட்டிக்

கொண்டதில்லை..

உன்னைக் குற்றவுணர்ச்சிகள்..

உறுத்துவதைக் கூட

என்னால் தாங்கமுடியாது...

காதலுக்கு

கோட்டை கட்டுபவனும்..

காதலுக்கு கத்தி எடுப்பவனும்..

காதலர்கள் என்ற

வரையறையை உடைக்க..

என் மென்மையான காதலால்

முடியாமல்ப் போனதேன்.

Edited by vikadakavi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.