Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவிதை அந்தாதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு முடிவின் ஆரம்பம் ,கொடியவனுக்கு

வன்னியிலே தயாரிக்கபட்ட வீர மழை

தீப்பொறியாக பொழிய வேண்டும்

கூலிக்கு மாரடிபோர் வீழ்ந்து மடிய வேண்டும்

வேடுவ கூட்டம் காடு போய் சேர வேண்டும்

பஞ்சம் பசி எல்லாம் தீர வேண்டும் ,சுதந்திர

காற்று வீசவேண்டும் , துன்ப பட்டோர்

மனம், மகிழ வேண்டும் , முடிவின் ஆரம்பம்

தொடரட்டும் ,தலைவன் ஆணையில் .........

  • Replies 1.9k
  • Views 182.1k
  • Created
  • Last Reply

தலைவன் ஆணையில் - நம்

தாய் மண்ணை காத்திடவே

உம் உயிரையும் துச்சமாக்க

துணிந்தீரே கரு வேங்கைகளே?

உமக்கும் உறவுகள் உண்டு - பாச

உணர்வும் உண்டு அவர் மேலே. - அந்த

உறவை எல்லாம் துறந்துவிட்டு

உம் தாயகமே பெரிதென்று வெடித்தீரே

நாளை நம் மண் விடிந்த பின்னே

நாம் சுவாசிப்போம் சுதந்திர காற்று - புது

நாட்டின் தியாக தீபாங்களே - உமை

நினைவு கூர்வோம் நாளெல்லாம் நன்றியுடனே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றியுடனே நான் நினைக்கும் காலம் இது

உன்னுடன் மனதில்வாழ்ந்த காலங்கள்

நலமாய் என்று வாழமட்டும் நேசிக்கும்

இதயம் எப்போதும் உனக்காவே துடிக்கும்

துடிக்கும் இதயங்களே...

இடர் பட்டும்..இன்னல் பட்டும்..

ஏராளம் குழந்தைகள்..

பெற்றவளும் இன்றி...உற்றவருமின்றி..

ஆதரவில்லாமல்..

கவலையையும் ஏக்கங்களையும் மட்டும். தாங்கி..

ஒட்டிய வயிரோடு

கட்டிடத் துணியின்றி...

பல பிஞ்சுக்குழந்தைகள்..

ஈரமுள்ள நெஞ்சங்களே...

ஒரு குழந்தையை ஒருவர் ஏற்க..

தெய்வக்குழந்தையதன் எதிர்காலம் இனிக்க

முன்வருவோமா..பத்து வயதுக்குள்ளேயே..

கண்ணீரில் காயும்..

சோர்ந்து போய் சாய்ந்திருக்கும்..

மண்கிடங்கினுள்..

முடங்கிப் பயந்து துவண்டுகொண்டிருக்கும்..

மழலை யாருக்கு என்ன

தீங்கு செய்தது?...

மனித தெய்வங்களாக மாற அல்ல

மனிதர்களாக மாற...

ஒரு கணம் சிந்தியுங்கள்!

சிந்தியுங்கள் தினமும்!

சிதறும் கற்பனை

சிதறாது இருக்க

சிந்தியுங்கள் தினமும்!

சிதறும் மனதநேயம்

சிதறாது இருக்க

சிந்தியுங்கள் தினமும்!

சிதறும் நம் வாழ்வு

சிதறாது இருக்க

சிந்தியுங்கள் தினமும்!

சிதறும் நம் தமிழன்

ஒன்று சேர்ந்து இருக்க

Edited by கஜந்தி

  • கருத்துக்கள உறவுகள்

ஆடும் வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம்

கூடும் வரை கூட்டம் ,மகிந்துவின் கூட்டம்

கொள்ளி வரை சுற்று வட்டம் வருமா ?

போடுவது திட்டம் ,தடையுடைப்பது சட்டம்

வன்னியிலே சிங்க கொடி பறக்குமாம்

கூடி உள்ள கூட்டம் கூத்து பார்க்கும்

வானில் வரும் கழுகு பட்டம் செய்யும்

தரைமட்டம் அடங்கும் உன் கொட்டம் ..........

உன் கொட்டம்

எப்போது அடங்கும்

தாயே...

அது வரை

பொறுத்திருப்பேன்

எல்லாம்...!

சும்மாட்டில்

குடம் வைத்து

அதன் பாரம்

பொறுக்கலாம்...!

என் மன வீட்டில்

சுமையெனில்

உன் தலை மாட்டில்

தலை வைத்துப்

படுப்பதல்லால்

வேறு வழியில்லை!

விம்மட்டும் மக்கள்

என்று விலகி

இருத்தல் ஆகாது!

விண் முட்டும்

அருள் சோதியே...

என் விரல்

தொட்டுவிடும்

தூரத்தில் வா...!

உன் கால்

தொட்டு வணங்குவேன்...

உன் விழி பட்டு

கவலையெல்லாம்

போகும் பட்டு!

சிட்டுப் போல்

பறக்கும் வரம்

தா அம்மா

விட்டு விட்டுப்

போகும் உயிர்

தாங்கி - ஒரு

கூட்டுக்குள் எத்தனை

காலம் சுற்றிச் சுற்றி

வருவேன்...?

பதில் சொல்

தாயே...

இம்மட்டில் நிற்பாட்டி

உன் பாட்டு அறிந்து

மீண்டும் தொடரும்

இவன் பாட்டு!

  • கருத்துக்கள உறவுகள்

தொடரும் இவன் பாட்டு

தொடர்ந்து வரும் இனிய பாராட்டு

மாட்டுவது கோட்டு சூட்டு

மனம் முனுமுனுக்கும் இசைப் பாட்டு

காலை வேளையில் குயில் பாட்டு

மாலைவரை வியர்வைக் குளிப்பாட்டு

கொஞ்ச நேரம் வானொலி கேட்டு

உறங்கும் நேரம் கத்தரிக் கூட்டு.

கத்தரிக் கூட்டு வாங்கி வந்தேன்

பக்கத்து கடையிலே.

எண்ணைக்கடலில் மிதக்கும் கறியை

உண்டேன் பசியிலே. - அது

எந்தன் உடலில் இருந்து ஆறாய் பாய்ந்தது

மறு நாள் காலையிலே.

கடல் ஆறாய் மாறிய அற்புதம் கண்டு

ரசித்தேன்.. மறந்தேன் என் வேதனையை :)

Edited by Mallikai Vaasam

  • கருத்துக்கள உறவுகள்

வேதனை தீரவில்லை

சொல்லி அழ யாருமில்லை

துயர் துடைப்பார் யாருமில்லை

சொல்லுங்கள் சொல்லுங்கள்

உரத்து உரத்து ...சொல்லுங்கள்

புலத்தில் உறவுகளே சொல்லுங்கள்

படம் போட்டு காட்டுங்கள்

தெளிவாக காட்டுங்கள்

உலகம் முழுக்க காட்டுங்கள்

பொய் பிரசாரங்களை,

போதாது போதாது உங்கள்

ஊக்கமும் ஆக்கமும்

தாகதுக்குதவா தண்ணீர்ர்

ஆபத்துககுதவா , மானிடப்பிறப்பு ............. ,

வாழும் போது அறிந்திடாப்

பிறப்பு

பிரிவு வந்தால் துடிக்கும்

பிறப்பு

கோவத்தால் அழியும்

பிறப்பு

அடிமையாக்கி ரசிக்கும்

பிறப்பு

ஏழையை ஏழனம்

செய்யும் பிறப்பு

இறப்பை கண்டும் மாறரிடா

பிறப்பு

இறப்புக்குள் மட்டும் அடங்கும்

பிறப்பு

இறந்து இறந்து வாழுது

பிறப்பாய்.................

பிறப்பாய்..மீண்டும்..தமிழ்மகன

தமிழனத் தோனை

கூட்டி

தமிழ் எனும் தேனை

ஊட்டி

நெஞ்சு நிமிர்த்துவாய்

பாரதியாய் இல்லாவிடினும்

நினைத்திருப்போம் உன்னை

தமிழுக்கு கிடைத்தவொரு

சாரதியாய்...!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழுக்கு கிடைத்தவொரு சாரதியாய்

தரணியெங்கும் தமிழுக்காய்

தமக்காய் வாழாது

தமிழுக்காய் வாழ்ந்த மாமனிதர்கள்

தாயை விட தம் மொழியை

நேசிக்கும் உத்தமர்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உத்தமர்களின் வரிவடிவங்கள்

கேட்கும் எந்தோழா

நமக்காய் என்று வாழாமல் நானிலத்துக்கும்

நாட்டுக்கும் என்று வாழும்

நலமில்லா உடலிலும் நறுக்காய்

முறுக்குடன் திகழும் இதயம்

சுயநலமில்லா மனிதன் எவனோ

அவன் ஒருவன் தான் மேற் கோள் உனக்கு

  • கருத்துக்கள உறவுகள்

சுயநலமில்லா மனிதன் தான் மேற்கோள் உனக்கு ,

இன்றும் தான் வாழ்கிறார்கள் ,சுயநல மனிதர்கள்.

தம் நாடு தமது ,ஊர் தமது தாய் மண் என்று

சற்றேனும் ,உணர்வு ,இல்லாமல் வாழும் பிறவிகள்

பசியால் துடிக்கும் குழந்தைகள் துன்பத்தால் துவளும்

மனித உயிர்கள் .இரக்கமில்லா அரக்க சாதிக்கும்

இவர்களுக்கும் என்ன வேறுபாடு நீ கூறு ?

கொடுத்து சிவந்தது தான் தமிழர் மரபு ,இவர்கள்

எந்த மரபு ,அள்ளி தர வேண்டாம் கிள்ளியாவது

கொடுத்தார்களா ,? பிறரை சிந்தித்தார்களா ? ,

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிந்தித்தார்களா வந்ததனால் சிந்தித்தார்களா

வரும்போது பார்த்தார்களா

வராதபோது எதிர்பார்த்தார்களா

சிந்தனைகள் தேரோடும்போது

விழியெல்லாம் செண்பகப்பூமலரும்

சினம் கடலாகும்போது மனக்கடல்

அசூசையாகும் விழித்திரு போதும்

  • கருத்துக்கள உறவுகள்

விழித்திரு போதும் ,வென்று விடுவாய்

சுவருக்கும் கேட்கும் காது இருக்கும்

இருளுக்கும் பார்க்கிற விழி இருக்கும்

பழிச்சொல் சொல்லாமல் காத்திருக்கும்

தக்க சமயத்திலே உன்னை எய்து விடும்

அணைப்பது போல சிலர் இருப்பார்

பின்னால் எப்படி விழுத்த என கனவு காண்பார்

கூட்டாக சேர்ந்திருப்பார் பின் கூடி கழுத்தறுப்பார்

விழித்திரு என்றும் வாழ்விலே நிலைப்பாய் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிலைப்பாய் ஒர் நினைவு என் கனவில் போகிறதே

நிலைப்பாய் என் மனப்படகில் ஒரு வலி புரியாமலே

நிலைப்பாய் போகும் காலம் என்னை கொல்லும்

நிலைப்பாய் உன் உருவம் என் இதயத்தில் இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

என் இதயத்தில் இருக்கும் நிலையான உருவம்

மறைந்தாலும் மங்காத தாயேனும் ஓவியம்

இருந்தபோது அருமை ,புரிந்தும் புரியவில்லை

பிரிந்த போதும் வருந்தியும் வரவில்லை

படுக்கவில்லை ஒரு தலையிடி வருத்தமென்று

காலனவன் ,கொண்டு சென்றான் செல்வடிவில்

தீரவில்லை ,ஆறாத சோகம் மாறாத பாசம்

காணவில்லை உயிரற்ற உடலை தானும்

வருவேன் ,மலர்கொண்டு ,மலரும் தமிழ் ஈழம்

  • கருத்துக்கள உறவுகள்

ஈழம் மலரும் நேரமிது!

இதனினும் இனியொரு காலமேது!!

விண்ணைப் பார்த்து நிலத்திலே

திடமாய் நாம் நிற்கின்றோம்! --இனி

விழுவதற்கு கீழேயும் இடமேயில்லை!!

உப்பரிகையில் மிதக்கும்-- எம்

தமிழ் அக சகோதரனே! -- நீ

நிற்பது உப்பரிகையா? அன்றி

உப்பங்கழியில் அறையா?

சுய பரிசோதனை செய்யும் காலமிது!!

கங்கை முதல் கடாரம்வரை கொண்டவன்

கண்ணீரைத் தவிர வேறெதையும் கண்டிலன்!!

அன்று! அடிவயிறு கலங்க யாழிலே!

அலறிய ஆமிகள் பல்லாயிரம்!!

முற்றுக்கையிட்டு முன்னேறி நின்று!

முழங்கிய வேங்கைகள் சில ஆயிரம்!!

அந்தோ! அலறியது சிங்களம்! அவர்களை

ஆபத் பாந்தவனாய் ஆதரித்தது பாரதம்!!

இன்று! ஏதிலிகளாய் தமிழர்கள்! தாங்கி

ஏந்திட நீளுது தமிழகக் கரங்கள்!! நன்றி!

கட்சி பேதங்கள் மறந்தனர்!

குறுகிய கொள்கைகள் துறந்தனர்!!

எவர் எறிவார் முதல்கல் என

எதிர்பார்த்தன ஏராளம் ஈர விழிகள்!!

எறிந்தாள் முதற்கல்லை முதல்வர் கண்மணி!

துறந்தாள் தன் பதவியைத் தாய் கணிமொழி!!

அறிக்கை விட்டு வெருட்டுது ஐரோப்பிய ஒன்றியம்!

அலட்சியப் படுத்திச் சிரிக்குது அன்டைச் சிங்களம்!!

மத்திய அரசை மன்றாடுது மாநில அரசு!

மறுக்கிறது இது தப்பென மன்மோகன் அரசு!!

வங்கத்தைப் பிரித்து வாழ வைத்த தங்கம் இந்திரா!

தமிழீழம் எரிய எண்ணை தந்து வேடிக்கை பார்ப்பதேன் தாயே சோனியா!!

இலங்கை இறையான்மை உள்ள நாடாம்!

இரானுவம் தமிழரைக் கொல்வதை

தடுக்கக் கூடாதாம் தமிழகம்!!

தரையிலே ஈழத் தமிழனையும்!

கடலிலே தமிழகத் தமிழனையும்!

சமமாய் கருதி சடுதியாய்க் கொன்று

சமதர்மம் பேணுது கெட்ட சிங்களம்!!

கண்கட்டு வித்தையாய் காகிதப் போர் செய்து

கண்டும் காணாமல் காது குடையுது பாரதம்!!

மாடியில் நிற்கும் எம் தமிழ் அக சோதரனே! --நீ

நிற்பது மாடியா? அன்றி மண்ணுக்குள் நிலவறையா!!

உங்களிடம் இருப்பது நாற்பது!

இது எங்ஙனம் தோற்பது!!!

Edited by suvy

எங்ஙனம் தோற்பது நாங்கள்? வெற்றிச்

சிங்கங்கள் - வேங்கைகள் நீவிர்

வெஞ்சினம் கொண்டு, பொங்கி எழுந்து

சிங்களகூலிகளின் கொட்டமடக்கிட. - நெடுநாள்

ஏங்கி எதிர்பார்த்து நின்ற சுதந்திர தேசம்

உங்கள் வீரத் தியாகத்தின் அறுவடையாகும்.

அங்கே பூங்குயில் கூட உம் பெருமை பாடும்.

இங்கே தூங்கிய என் உள்ளம் என்னையெண்ணி நாணும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாணும் ஆம்பல் ஆதவனால் அதுவே மலரும் சந்திரனால்

நாணும் பெண்மை நாணத்தில் மனதில் அன்புடன்

நாணும் மதி தன் நலம் கெட்ட வார்த்தைகளால்

நாணும் உலகம் தன் முயற்சியற்ற வாழ்க்கையால்

முயற்சியற்ற வாழ்க்கையால் - நீ

உயர்ச்சி காண நினைத்தாயோ மானிடனே?

சூழ்ச்சிகளும், குறுக்கு வழிகளும்

எழுச்சிக்கு வழிகளல்ல.- மற்றோரின் பொய்

புகழ்ச்சிகளில் மகிழ்ச்சி கொண்டு

வீழ்ச்சிக்கான பாதையில் போகாதே.

'முயற்சியுடையார், இகழ்ச்சியடையார்' என்று

சாட்சி சொன்னார் சான்றோர் அன்றே.

  • கருத்துக்கள உறவுகள்

அன்றே யோர்நாள் அடிவானத்தில்

கார்முகில் லொன்று கர்ப்பமுற்றசைய!

வானம் நோக்கி தோகை யுயர்த்தி

மகிழ்ந்து நின்று மானம் காட்டி

நானம் விட்டு நடனமிடும் மயில் போல்!

புகைவிடும் தன்பின் புறம்காட்டி

சிகையினில் பனிமுகில் போர்த்தி!

ஓடுபாதை யோரத்தில் ஓயிலாய்

வரிசையாய் நிற்கின்றன வண்ண விமானங்கள்!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.