Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவிதை அந்தாதி

Featured Replies

வண்ண விமானங்கள் புலத்து

வானில் பறக்கக்கண்டு - எம்

எண்ணம் பறப்பதோ - தாயகத்தில்

குண்டுகள் போட்டு குடிகளை

கொன்று குவித்திடும் கொடும்

சிங்களத்து விமானங்களின் நினைவினில்.

ஆண்டுகள் பல இங்கு தாண்டின

நாம் புலம் வந்து - ஆனாலும், போரினால்

புண்பட்ட எம் நெஞ்சு ஆறிடுமோ?

குண்டு போட்ட விமானங்கள்

வெண்புறாக்களாகி ஈழத்தில் பறந்திடுமோ?

  • Replies 1.9k
  • Views 182.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் பறந்திடும் புலிக்கொடி

இதை எண்ணிடு நீ அடிக்கடி

உனக்கொரு நீதி இருக்கடி

தமிழ் தாயே துடைப்பாய் கண்ணீர்

கரை தாண்டும் தமிழக வெள்ளம்

துயர் துடைக்கும் உலகம் திண்ணம்

சிங்கப் படை புற முதுகிடும் நிச்சயம்

நீயும் நானும் ஈழம் காண்பது சத்தியம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சத்தியம் என்னும் மருந்து புரிந்தவர்க்கு வேதம்

காசினியில் அதன் மேன்மை ஏமாற்றமட்டும் தான்

கள்ளமில்லா அன்பையும் கேவலமாக

சதி பண்ண சத்தியம் பேசும் கண்கள்

பேசும் கண்கள் வீசும் பார்வை

சொல்லும் சேதி என்ன கண்ணே?

பூசு மஞ்சள் பூசிய முகத்தில்

படரும் நாணம் ஏனோ பெண்ணே?

ஆசைகள் நூறு எனக்கும் சொல்ல

பாசைகள் இல்லை உன்னிடம் விளக்க.

மீசை முளைத்த காளையின் மனதில்

ஓசையின்றி நீ எப்போ வந்தாய்? - உன்னில்

நேசம் கொண்ட வாலிப நெஞ்சம்

ஆகாசம் செல்லும் உன் சம்மதம் தந்தால்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தந்தால் என் வாழ்க்கை மலரும் உனிதயம்

தருவாயா என் அன்பே உன்னை என்னிடம்

என் உயிர் உருகும் வலி உனக்கு புரிகிறதா

புரிந்தால் என் வாழ்வில் ஒளி தீபம் ஏற்று

நீ வரும் பாதை எல்லாம் என் மனவாசல் பூ

  • கருத்துக்கள உறவுகள்

மனவாசல் பூவுதிர

மலர் வனம் பூச் சொரிய

மார்கழியின் முன் மாதம்

மா வீரர் எழுவருடன்

மாலை கொன்ட தமிழ்ச்செல்வ

மலை மலையாய்

மலர் குவிய கண்கள்

மாலை மாலையாய் நீர் சொரிய

மண்மீதில் விதையாகி எம்

மனங்களிலே துளிரானாய்!!!

துளிரானாய்

பின் மலரானாய்

என் மனதின்

நினைவெல்லாம்

நீயே ஆனாய்!

கனவானாய்

கனவில் வரும்

காட்சி நீயானாய்!

துணையானாய்

துவளும் போதெல்லாம்

எனைத் தாங்கும்

சுமை கல்லானாய்!

அழும் போதெல்லாம்

கண்ணீர் துடைக்கும

கையானாய்

விழும் போதெல்லாம்

மார்பில் தாங்கி

தாயானாய்!

தேவ தேவா

ஒரு போதும்

பிரிவு வாராத

வரம் தாராய்!

வரம் தாராய் வளமாக நாம் வாழ - நெஞ்சில்

உரம் தாராய் வாழ்வில் தடைகள் பல கடக்க - ஆதரவுக்

கரம் தாராய் நான் தடுமாறி வீழ்ந்திடும் போதினிலே.

பரம்பொருளே கருணைக் கண் கொண்டு எனைப் பாராய்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாராய் உயர்ந்த பரம் பொருளே உன் பதமலர்

பாராய் கதறும் உன் மக்கள் படும் துயரம் தீராயா

பாராய் இந்த பரிதாபம் ஏன் இந்த பாரமுகம்

பாராய் மக்கிய மனிதநேயம் உன்படைப்பில் எங்கே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கே உள்ளது எம் மக்களின் நிம்மதி

ஜனநாயகம் இறந்தததே கொலைகள் தொடருதே

பொறுத்த தமிழன் பொங்கிட வேண்டாமா

எம் குருதி மண் சேர்ந்தால் பெருமை எமக்கல்லவா

கேட்டு கிடைக்காதது அடித்தால் கிடைக்கும் எழுந்திரு

புலிச்சேனை அணிவகுக்கிறது எம் கனவிற்கு பலம் சேர்க்க

இணைந்திரு அவர்களோடு ஈழம் தருவார் எம் தலைவன்

  • கருத்துக்கள உறவுகள்

எம் தலைவன் இவன் என்று எல்லோரும் போற்ற

தன் தலைவனை நோகின்றாள் இத் தலைவி !

நேற்றுப் போட்ட நல்ல விஸ்கி!

இரவு பூராவும் தலை சுத்தி !

இன்று முழுதும் ஒரே சத்தி !

இவர் உடலில் இல்லையே சக்தி!

எந்த பிரான்ட் ஆனால் என்ன போதை போதைதான்!

உடையும் களைந்து தரையில் உருண்டு வாதை வாதைதான்!

தேசிப் புளியை புகட்டி விக்சை தேய்த்தாள் பேதை பேதைதான்!

மடியில் கிடத்தி மயக்கம் தெளித்தாள் கோதை கோதைதான்!

இது இனிய மாலை நேரம்!

அது போட்டால் தொலையும் தலை பாரம்!

நன்பன் வீடும் வெகு தூரம்

பர்சை ஒளித்து விட்டாள் இவன் தாரம்!

பறித்து எடுக்க இல்லை அதிகாரம்!

இவன் சீட்டில் ஆடும் ஸ்பேட் ராஜா!

தூக்க யாருமில்லை இங்கு கூஜா!

நாள் முழுதும் வீட்டில் ஒரே பேஜார்!

இனி றோட்டில் தொடங்கும் இவன் தர்பார்!

தொடங்கும் இவன் தர்பார்

தை பிறந்த கையோடு.

தை பிறக்க வழி பிறக்கும் - என

நம்பிக்கையோடு காத்திருக்கும்

வையத்து மாந்தரின் வாழ்வு,

அமைதியும், வளமுமுறச் செய்வானா

உலகின் வருங்கால தலைவனவன்?

வெள்ளைமாளிகையின் வரலாற்றை

திருத்தித்தான் எழுதிடுவானா

கறுப்பினத்து அறிஞன் இவன்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவன் யாரோ இவன் முற்பகல் ஏதோ யாரால்

இவன் அனாதையானான் நம்பினவள் செய்த உபகாரமா

இவன் விழிகளின் ஓரம் கசியும் கண்ணீத்திவலைகள்

இவன் உணவில் உப்பாக அவள் நினைவின் சாட்சியாக வழிகிறதே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாட்சியாக வழிகிறது

என் கண்ணில் நீர் துளிகள்

காயம் தந்து விட்டாய்

என் நெஞ்சில் பலவலிகள்

உனை காணத் துடிக்கின்றேன்

என் கனவெல்லாம்

உன் குரலொலிகள்

நீ என்னை காண

மறுத்து விட்டால்

நீ கேட்பாய்

என் மரணத்தில்

பலபேரின் அழுகுரல்கள்......

இளங்கவி

அழுகுரல்கள் தொடுவதேன் ஆகாயம்..

விக்கி விக்கி அழுவதேன் விண்மேகம்..

தொட்டுவிட்டு தேம்புதே தூவானம்..

உனக்கு கேட்குதா.. தமிழ்த்தாய் ஓலம்..

உனக்கு கேட்குதா..அந்த தாய் ஓலம்!

  • கருத்துக்கள உறவுகள்

அழுகுரல்கள் கேட்கிறது

அது உனக்கு புரிகிறதா ?

நல் மனம் கொண்ட மானிடரே

எம் இடர் கண்டு இரங்கிடுவீர்

திடம் கொண்ட நம் ஈழம்

மலர்ந்திடும் புத்தாண்டில்

மலர்ந்து விட்ட ஈழமதில்

மகிழ்வு கூத்தாடிடுமே

மனம உள்ள மாந்தர் எலாம்

மனமுவந்து கொடுத்திடுவீர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொடுத்திடுவீர் உங்கள்

கரங்களை நம்

விடுதலைக்காய்....

சேர்ந்திடுவோம் நாமெல்லாம்

நம் மண்மீட்க

ஒற்றுமையாய்.....

அதில் எதிரியின்

படையோடும்.....

அங்கே நம் வீரமும்

விழா காணும்.....

அந்த விழாவின்

மகிழ்சியிலே......

நம் விடியலும்

நம் கண்ணில் வரும்.....

இளங்கவி

வரும் காலம் நமதாகும்..தனி

ஈழம் மலர்ந்துவிடும்..

சுதந்திர காற்றின் சுகந்தத்தில்

அங்கே..சங்கீதமும் தமிழ் பாடும்..

ஆயுதமறியாக் குழந்தை வளரும்

அன்பினை மறவா உறவு மலரும்..

பள்ளியில் பதட்டம் மாயமாகும்..

உள்ளத்;தில் உயிர்பயம் விட்டுப்போகும்..

திறமைகள் உலகுக்கு வெளிச்சமாகும்..

தனிஒழுக்கங்கள் உலகுக்கே பாடமாகும்.

தலைவனின் பார்வையில் தான் புலரும்..

தமிழ் இனத்;தின் விடியல் பேரானந்தமாகும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடியல் பேரானந்தமாகும்

அதில் எங்கள் தமிழினத்தின்

விழுப்புண்கள் மறைந்து போகும்

கலாச்சார விழுமியங்கள்

இறுமாப்புடனே

எழுந்து நிற்கும்

பச்சிளம் குழந்தைகள்

பாலாற்றில் நீந்தி நிற்கும்

பட்டினியென்னும் சொல்

எங்கள் அகராதியில்

அகன்று விடும்

பால்தரும் பசு கூட

பயமின்றி உலாக்கள் வரும்

அங்கே பயமேதுமில்லை

பசியேதும் இல்லை

பார்த்திருந்த சுதந்திரத்தின்

பசுமை நினைவுகள்தான்

அங்கு இருக்கும்...............

  • கருத்துக்கள உறவுகள்

அங்கு இருக்கும் அவன் அடிச்சுவடு

அகற்றுவதற்கு அயராது போராடு!

பாலாவியில் பதிந்த சுவடு

பசுந் நிலத்தை விட்டு நீங்க வேண்டும்!

பூநகரியில் புகுந்த சுவடு

புதை மணலில் கரைய வேண்டும்!

மாங்குளத்தில் மேய்ந்த சுவடு

மரணவாசல் நாடி நடக்க வேண்டும்!

குமுளமுனையில் கோலமிடும் சுவடு

குழியிலே விழுந்து தொலைய வேண்டும்!

குரல்வளையை மிதிக்கும் பேய்கள்

கூக்குரலிட்டு ஓடவேண்டும்!

தான்தோன்றீஸ்வரனே தஞ்சம்

தாமதமின்றி காக்க வேண்டும்!!!

  • 2 weeks later...

வேண்டும் சுதந்திரம் எமக்கு சீக்கிரம்.

ஆண்டாண்டு காலம் ஆண்ட தமிழினம் - தம்

மண்ணில் மாண்புற வாழ்ந்திட வேண்டும்.

கண் போல எம்மண்ணை காத்திட அங்கே

விண்ணுற்ற சகோதரரின் தியாகங்கள் தான் என்னே!

அன்னை தாய் மண்ணை விட்டு நீங்கிய நாமும்

எண்ணியே செய்வோம் உதவிகள் பலவும், அங்கே மனப்

புண்ணுற்ற எம் உறவுகளின் மனங்களுக்கு மருந்தாக.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மருந்தாக நின்றவர்

வெளியேறிச் சென்றாலும்...

மருந்துண்டு எம்மவர்க்கு

மானந்தன்னில்...!

தமிழ் தந்த மூச்சு

நிற்கும் வரை....

தலை கொய்ய

முனைபவர் வேரறுப்போம்...!

கொண்ட கொள்கை

வென்றெடுத்து...

தண்காற்று உண்ணும் வரை

ஓயாது எங்கரங்கள்...!

ஓயாது எங்கரங்கள்

துடுப்புப் போடட்டும்

காயாத ஈழ வேட்கை

எனும் கரையை

எங்கள் ஓடம்

ஒரு நாள்

முத்தமிடும்...!

Edited by kavi_ruban

முத்தமிடும் இதழ்கள்

மேல் ஒட்டிக்கொள்ளும்..

ஈரமண்..இது தண்ணீர்

ஓடிய நிலமல்ல..-ஈழ

மகள் கண்ணீரோடிய நிலம்

என் சகோதரர்கள் செந்நீரில்ச்

சிவந்த நிலம்..

மண் காக்க முன்நின்ற

மங்கையர்தம் மலர்ப்பாதம்

முற்கள் மடித்த நிலம்..

எனக்கும் என் தாய்க்கும்..

மறு வாழ்வு தந்த நிலம்..

எங்கள் வீரநிலம் தமிழ்

ஈழநிலம்..விடியலின் வெளிச்சத்திற்கு

விண்காட்டும் செந்நிலம்.

நிலம்

அநாதையாகிப் போய்

அழுதது...

யார் யாரோ

மிதித்துச் செல்கின்ற

வலி தாங்கி

வேறெதற்கோ

நிலம் அழுதது...!

நிலத்தைப் பிரிவது

மனிதர்களுக்கு மட்டும்

துக்கமல்ல...

பரம்பரையாய் வாழ்ந்த

மனிதர்களைப் பிரிவது

கண்டு நிலமும்

துக்கப்பட்டது...

வயலாகி

வடலி முளைத்த

வளவாகி

பூ மணத்த தோட்டமாகி

எம் வாழ்வோடு

கைகோர்த்த நிலம்

இப்போதெல்லாம்

மெட்டந்தலையோடு முணுமுணுக்கும்

மரங்களின் சோகம் கேட்டு

தானும் அழுதது...!

பல இடங்களில்

நிலத்தில் ஈரமிருப்பது

அதன் கண்ணீரை

அடையாளப்படுத்துகிறது!

சில இடங்கிளில்

காய்ந்து போய்

நிலம் இருப்பது

அழுது அழுது

அதன் கண்ணீர் வற்றியதை

அடையாளப்படுத்துகிறது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.