Jump to content

ஆண்கள் ஏன் பாலியல் வல்லுறவில் ஈடுபடுகிறார்கள்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

துருக்கியில் 20 வயதான பல்கலைக் கழக மாணவி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகவிருந்து தப்பித்து, பின்னர் கொலையான சம்பவம் நாட்டில் கோப அலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக பாலியல் வல்லுறவு குற்றங்களுக்கு எதிராக பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

150217141425_why_do_men_rape_gch_protestபோராட்டத்தில் பங்கேற்ற துருக்கியப் பெண்

கொல்லப்பட்ட பெண்ணின் பெயரைக் கொண்ட ட்விட்டர் ஹேஷ்டாக்குகள் முப்பத்தி மூன்று லட்சம் முறை பயன்படுத்தப்பட்டுள்ளன. பலர், இந்த சமயத்தில் தாம் சந்தித்த பாலியல் வல்லுறவு போன்ற பாலியல் துஷ்பிரயோகங்களை சமூக வலைதளங்களின் வழியாக பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

பாலியல் சீண்டல்கள், பாலியல் தாக்குதல்கள் போன்றவற்றுக்கு எதிராக துருக்கியப் பெண்கள் வெளிப்படையாக பேச ஆரம்பித்துள்ள நிலையில், பாலியல் வல்லுறவைச் செய்கின்ற ஒரு ஆணின் மனம் எப்படி செயற்படுகின்றது என்று இஸ்தான்புல்லில் இருக்கும் ஒரு முன்னணி மனோதத்துவ நிபுணரான சாஹிகா யுக்சேலிடம் பிபிசி பேட்டி கண்டது:

கேள்வி: ஏன் ஒரு ஆண் பாலியல் வன்புணர்வில் ஈடுபடுகிறார்? அவருடைய நோக்கங்கள் என்ன?

பதில்: நீங்கள் பாலியல் வன்புணர்ச்சி என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்? உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக ஒரு ஆண் வன்புணர்ச்சியில் ஈடுபட்டார் என்று கருதுவது முற்றிலும் தவறு. தெருவில் இருக்கும் ஒரு மனிதன் ஒரு பெண்ணை திடுமென வன்புணர்ச்சி செய்துவிடுவதில்லை. அப்படி செய்வது தவறு என்ற எண்ணம் இருப்பதால்தான் இத்தகைய செயல்கள் மறைவாக, யார் கண்ணிலும் படாமல் செய்யப்படுகின்றன.

150217132907_why_do_men_rape_gch_sahika_சாஹியா யுக்சேல்

பாலியல் வன்புணர்ச்சி என்பது ஒரு பாலியல் இச்சை தொடர்பான செயல்பாடு கிடையாது. வன்புணர்ச்சி என்பது ஒரு தாக்குதல். வெற்றி என்பது இதன் நோக்கமாக இருக்கிறது. சக்தியைக் கொண்டு ஒரு பொருளை அபகரிக்க நடக்கும் நடவடிக்கை. இங்கு பெண் பொருளாக கருதப்படுகிறாள். ஒரு சிலர் இந்த செயலில் இன்பமடையலாம்.

வன்புணர்ச்சி என்பது மிக மோசமான குற்றமாகக் கருதப்படுகிறது. இருந்தும் ஆண்கள், வேறு பல தாக்குதல்களையும் செய்கின்றனர். மனரீதியான வன்முறைகள், உடல்ரீதியான வன்முறைகள், பொருளாதார வன்முறைகள், பெண்கள் உரிமைகள் புறக்கணிக்கப்படுவது போன்ற விடயங்கள் சாதாரணமான விடயங்களாக சமூகத்தால் ஏற்கப்படும்போது பாலியல் வல்லுறவுகள் நடக்கின்றன.

150217141258_why_do_men_rape_gch_protestதிருமண ஆடையைப் போன்ற ஆடைகளை அணிந்துபோராட்டத்தில் கலந்து கொண்ட சிறுமிகள்

கேள்வி: ஒருவர் வளர்க்கப்படும் விதம் அவர் பாலியல் வல்லுறவு போன்ற குற்றங்களைச் செய்ய வழிசெய்கிறதா?

பதில்: இங்கே இருக்கும் கலாச்சாரத்தில் ஆண்களின் ஆளுமை அதிகம் காணப்படுகிறது. அதிகாரத்தை போற்றும் போக்கு இருக்கிறது. ஒருபெண்ணுக்கு, தன்னுடைய கணவனை வேறுமாதிரி நடத்த வேண்டும் அவர் சொன்னதைக் கேட்டுக் கீழ்ப்படியவேண்டும் என்று ஆரம்பத்திலிருந்தே சொல்லிக் கொடுக்கப்படுகிறது.

அந்தப் பெண் இந்தப் படிப்பினையை தனது மகனிடமும், மகளிடமும் கொண்டு சேர்க்கிறார். வீட்டில் தம்முடைய தாய்மார்கள் வன்முறையை அனுபவிப்பதைக் கண்ட பெண்கள் பின்நாளில் தம்முடைய திருமண வாழ்க்கையில் வன்முறையை சந்திக்க அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன.

தன்னுடைய அப்பா, அம்மாவை அடிப்பதை பார்த்து வளர்ந்த ஆண்கள் தம்முடைய வாழக்கையிலும் தமது மனைவியிடம் வன்முறையை அதிகம் பயன்படுத்துகின்றனர். வீட்டில் அம்மா இரண்டாவது குடிமகளாக நடத்தப்படுவதை பார்க்கும் சிறுவர்களும், சிறுமிகளும் சமூகத்தில் அந்த எண்ணங்களை பிரதிபலிக்கின்றனர். துருக்கியில் ஆண்களை விட பெண்கள் குறைந்த அளவே கல்விபெறுகின்றனர். அரசியல்வாதிகளும் ஆண்களும் பெண்களும் சமம் கிடையாது என்று பேசுகின்றனர். இதுவும் இங்குள்ள பிரச்சனைகளுக்கு ஒரு காரணம்.

சிலர் பாலியல் குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும், அவர்களின் விரைப் பைகளை அகற்ற வேண்டும் என்றெல்லாம் கூறுகின்றனர். மரண தண்டனை என்பது மானுடத்துக்கு எதிரானது. அமெரிக்காவில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் மாநிலங்களுக்கும் அந்த தண்டனை இல்லாத மாநிலங்களுக்கும் இடையே குற்றச் செயல்களின் எண்ணிக்கையில் வேறுபாடு இல்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதிகாரத்தில் இருப்போர் மக்களின் கோபத்தை தணிக்க கடுமையான தண்டனைகள் பற்றி பேசுகின்றனர்.

நாம் இங்கே பழி வாங்குவதைப் பற்றிப் பேசவில்லை. பாலியல் குற்றங்களை சமூகத்தில் எவ்வளவு அதிகம் குறைக்க முடியும் என்பதே நமது நோக்கமாக இருக்க வேண்டும்.

150217140942_why_do_men_rape_gch_protestகொல்லப்பட்ட பெண்ணின் படத்தோடு பலர் போராட்டங்களில் பங்கேற்றனர்

கேள்வி: பாலியல் தாக்குதலுக்கு உள்ளான ஒரு பெண் என்ன செய்ய வேண்டும்? அவர் நடந்தது குறித்து தைரியமாக பேச வேண்டுமா?

பதில்: திருமணத்துக்கு முன் உடலுறவு கூடாது, பாலியல் விஷயத்தை மறைவாகத்தான் பேச வேண்டும் போன்ற கருத்துகள் நிலவும் சமூகங்களில் பாலியல் தாக்குதல்கள் மிகவும் குறைந்த அளவில்தான் பதிவு செய்யப்படுகின்றன. இந்த விடயங்களை பாலியல் தாக்குதலில் ஈடுபடும் நபர்களும் சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். இதைவைத்து பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டுகின்றனர். அப்பெண்ணை மேலும் மேலும் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில், நடந்த விடயத்தை நண்பர்களிடமும் மற்றவர்களிடமும் சொல்லிவிடப் போவதாக மிரட்டலாம்.

வன்புணர்ச்சிக்கு உள்ளான பெண் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், உளவியல்ரீதியான மற்றும் சமூகரீதியான உதவிகளையும் பெற்றுக் கொள்ளலாம். நடந்த சம்பவம் குறித்து நம்பிக்கை மிக்க நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசலாம். அமைதியாக இருப்பதன் மூலம் பாலியல் தாக்குதல் சம்பவம் ஏற்படுத்திய பாதிப்புகளில் இருந்து மீண்டுவிட முடியாது.

சில நேரங்களில், பாலியல் தாக்குதல்கள் காரணமாக உடல்ரீதியான உபாதைகள் ஏற்படலாம். உடல் உறவால் பரவும் நோய்களும், கர்ப்பம் தரிப்பதும் ஏற்படலாம். எனவே பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண் சீக்கிரம் மருத்துவரைப் பார்த்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

பாலியல் வன்முறைக்கு இலக்கான பெண்ணின் கணவன்மார்களுக்கும் இந்த விடயம் கடுமையான பாதிப்புக்களைக் கொடுக்கும். அவர்களுக்கும் உளவியல்ரீதியான ஆலோசனைகளும் சமூகரீதியான உதவிகளும் வழங்கப்பட வேண்டும்.

http://www.bbc.co.uk/tamil/global/2015/02/150217_whymenrape

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்படித்தான் பெண்களை பாலியல் வல்லுறவு கொள்ளினமோ..?! ஒன்று மட்டும் உறுதி.. பெண்களை பாலியல் வல்லுறவு கொள்ளும் ஆண்களுக்கு அசிங்க உணர்ச்சி செத்திருக்கும். :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்படித்தான் பெண்களை பாலியல் வல்லுறவு கொள்ளினமோ..?! ஒன்று மட்டும் உறுதி.. பெண்களை பாலியல் வல்லுறவு கொள்ளும் ஆண்களுக்கு அசிங்க உணர்ச்சி செத்திருக்கும். :lol::icon_idea:

ஒண்டு அல்லது ரெண்டுக்குப் போறது... கொஞ்சம் 'அசிங்கம்' எண்டதுக்காக ... போகாமல் இருக்கவா முடியும், நெடுக்கர்? :icon_idea:

 

உணவுண்ணுதல், கழிவகற்றல், இனம் பெருக்கல்.....????

 

உயிரியல் படித்த நீங்களுமா? :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒண்டு அல்லது ரெண்டுக்குப் போறது... கொஞ்சம் 'அசிங்கம்' எண்டதுக்காக ... போகாமல் இருக்கவா முடியும், நெடுக்கர்? :icon_idea:

 

உணவுண்ணுதல், கழிவகற்றல், இனம் பெருக்கல்.....????

 

உயிரியல் படித்த நீங்களுமா? :o

 

உயிரியலின் படி பார்த்துத் தான் அசிங்கம் என்று வரையறுக்கினம். காரணம்.. அவை பல நுண்ணுயிரிகளின் வாழ்விடமாக உள்ளமை தான். இதில் கூட அதையிட்ட எச்சரிக்கை உள்ளது. பாலியல் வல்லுறவுக்கு உள்ளான பெண் வைத்தியரை நாட வேண்டும் என்று அறிவுரை சொல்லப்படுகிறது. ஒன்று நோய் தொற்று சார்ந்து. இரண்டு கர்ப்பம் சார்ந்து. பாலியல் வன்முறை செய்த ஆண் மீண்டும் புறக்கணிக்கப்படுகிறார். அவர் என்ன நோய் வந்தாலும்.. எப்படின்னாலும் வாழட்டும் அல்லது தண்டிக்கப்படட்டும் என்ற சிந்தனையும் கூட பெண்களை பழிவாங்க தூண்டும் காரணிகளில் அடங்கலாம். :)

 

போர்களில் பாலியல் வன்முறையை ஆயுதமாக பாவிக்கும்... அரச படைகளை இதில் சேர்க்க முடியாது. அவை திட்டமிட்ட மனித குலத்துக்கு எதிரான வன்முறைகளாகும். :icon_idea:

Link to comment
Share on other sites

உயிரியலின் படி பார்த்துத் தான் அசிங்கம் என்று வரையறுக்கினம். காரணம்.. அவை பல நுண்ணுயிரிகளின் வாழ்விடமாக உள்ளமை தான். இதில் கூட அதையிட்ட எச்சரிக்கை உள்ளது. பாலியல் வல்லுறவுக்கு உள்ளான பெண் வைத்தியரை நாட வேண்டும் என்று அறிவுரை சொல்லப்படுகிறது. ஒன்று நோய் தொற்று சார்ந்து. இரண்டு கர்ப்பம் சார்ந்து. பாலியல் வன்முறை செய்த ஆண் மீண்டும் புறக்கணிக்கப்படுகிறார். அவர் என்ன நோய் வந்தாலும்.. எப்படின்னாலும் வாழட்டும் அல்லது தண்டிக்கப்படட்டும் என்ற சிந்தனையும் கூட பெண்களை பழிவாங்க தூண்டும் காரணிகளில் அடங்கலாம். :)

 

போர்களில் பாலியல் வன்முறையை ஆயுதமாக பாவிக்கும்... அரச படைகளை இதில் சேர்க்க முடியாது. அவை திட்டமிட்ட மனித குலத்துக்கு எதிரான வன்முறைகளாகும். :icon_idea:

 

 போரில் அரசபடைகள் மேற்கொள்ளும் பாலியல் வன்முறைகளை மனிதகுலத்திற்கெதிரான வன்முறை என்று வெறுக்கிறீர்கள். அதேவளை மனிதகுலத்தில் ஒரு அங்கமான பெண்களையும் வெறுக்கிறீர்கள். உங்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பூவை எட்ட நின்று அதன் அழகை ரசித்துப் பார்க்கலாம், தொன்றலிலே தழ்ந்து வரும் அதன் நறுமனத்தினை நுகர்ந்துபார்க்கலாம் தப்பில்லை. ஆனால் அந்தப் பூவை புடுங்கிப் பார்ப்பதும் கசக்கி முகர்ந்து பார்ப்பதும் தப்பு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாலியல் வல்லுறவுக்கு முக்கியமான காரணம் ஆணாதிக்க சிந்தனைதான் என்று நினைக்கிறேன். ஆண்கள் தாங்கள் வலியவர்கள் என்று நினைப்பதால்த்தான் பெண்களை பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்குகின்றனர்.

 

மேற்கத்தைய நாடுகளில் பாலியல் வன்புணர்வுகள் அவ்வபொபோது நடைபெற்றாலும் கூட, மூன்றாம் உலக நாடுகளைப்போல அதிகளவில் இடம்பெறுவதில்லை. இந்தியா, இலங்கை போன்ற ஆணாதிக்கச் சிந்தனை உள்ள நாடுகளில் இயல்பாகவே காணப்படும் பாலியல் சம்மந்தமான போதுமான அறிவின்மையும், பாலியல் ரீதியான கட்டுப்பாடுகளும் அவர்களை இப்படியான செயல்களைத் தூண்டுகின்றன. முஸ்லீம் நாடுகள் பற்றிக் கேட்கத் தேவையில்லை. நூற்றுக்கு நூறு வீதம் ஆணாதிக்க, மத அடிப்படைவாதிகளான இவர்கள் பெண்களி மனிதர்களாக மதிப்பதேயில்லை. அதனால் பெண்களை ஆண்களின் காம இச்சைகளைத் தீர்த்துக்கொள்ளும் ஒரு இயந்திரமாகப் பாவிப்பதால் இவ்வாறான வன்புணர்வுகள் அப்பட்டமாக நடக்கின்றன.மைதில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நியாயம் வழங்குவதற்கு மாறாக ஆணாதிக்க வெறிபிடித்த முட்டாள்த்தனமான மத அடிப்படைவாதிகள் அந்தப் பெண்ணை நடத்தை கெட்டவள் என்று கல்லெறிந்தும் கொன்று வருகின்றனர்.

 

மேற்குலகில் காணப்படும் தாராளமய பாலியல் காரணமாக பாலாத்காரங்களுக்கு தேவையில்லாமலிருப்பதும், தண்டனைகள் கடுமையாக இருப்பதும், பாலியல் ரீதியான மேன்பட்ட அறிவு காணப்படுவதுமே இவ்வாறான பலாத்காரங்கள் குறைவாக இருக்கக் காரணம் என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.