Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனியபாரதிக்கு எதிராக மக்கள் போராட்டம்! வீதிக்கு வந்தது கருணா கும்பல்!! Photo in

Featured Replies

கருணாவின் வலது கரங்களில் ஒன்றாக இருந்து பல கொலைகளை அரங்கேற்றிய இனியபாரதிக்கெதிராக மக்கள் போராட்டங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. அவ்வகையில் கடந்த மஹிந்த ஆட்சிக்காலங்களில் அம்பாறை மாவட்டங்களில் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களின் உறவினர்கள் இன்று போராட்டமொன்றை நடத்தியுள்ளனர்.

amparai_demo_iniyabarathi_against_02.png

அரசுகளுடன் ஒத்துழைத்து செயற்பட்ட கருணா மற்றும் பிள்ளையான் போன்ற ஒட்டுக்குழுக்களினாலேயே கடத்தல்களும், காணாமல் போதல்களும் நடந்ததாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

amparai_demo_iniyabarathi_against_01.png

திருக்கோவில் மத்திய சந்தைக்கு அண்மையில் இந்த போராட்டம் நடந்தது. போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அம்பாறை இணைப்பாளர் இனியபாரதிக்கு எதிராக சுலோக அட்டைகளை தாங்கியிருந்ததுடன், அவரிற்கு எதிராக கோசமுமிட்டனர்.

முன்னதாக இனியபாரதி தேர்தல் முடிவின் பின்னராக மக்களால் அடித்த விரட்டப்பட்ட நிலையில் மீள சொந்த இடம் திரும்ப முற்பட்ட நிலையில் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.

 

http://www.pathivu.com/news/37905/57//d,article_full.aspx

 

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தப் பட்டவர் தான் குடியிருந்த வீட்டிலேயே தற்போதும் வசித்து வருகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

 மாறி மாறி போராட்டம் நடத்துவதே எங்கள் மக்களின் அன்றாட வாழ்வாகிப்போச்சு

 மாறி மாறி போராட்டம் நடத்துவதே எங்கள் மக்களின் அன்றாட வாழ்வாகிப்போச்சு

என்ன செய்வது . அவர்கள் வாக்குகளை பெற்று பாராளுமன்றம் செல்பவர்கள் இணக்க அரசியல் செய்து கொண்டிருந்தால் மக்கள் தான் போராட வேண்டும் தமது உரிமைகளுக்காகவும் உறவுகளுக்காகவும். 

புதைக்கப்பட்டவர்களின் எச்சங்களை தோண்டி விசாரணை நடத்துங்கள்: இனிய பாரதியின் வீட்டை முற்றுகையிட்ட மக்கள்
[ புதன்கிழமை, 18 பெப்ரவரி 2015, 08:39.45 AM GMT ]
arapadam_ampara_001.jpg

கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியுமான இனியபாரதிக்கு எதிராக இன்று காணாமால் போனோர், கடத்தப்பட்டோரின் உறவினர்கள் திருக்கோயிலில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றினை நடத்தியிருந்தனர்.

இப்பேரணியானது இன்று காலையில் திருக்கோயில் மக்களின் ஏற்பாட்டில் நடைபெற்றிருந்தது. இவ்வார்ப்பாட்டத்தில் த.தே.கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் மற்றும் த.தே.கூட்டமைப்பின் பிரதேசசபை உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அங்கு கூடியிருந்த மக்கள் இனியபாரதியை உடன் கைது செய்யுங்கள், இதுவரை காலமும் பாரதியும் அவரோடு சேர்ந்து இயங்கிய இராணுவப் புலனாய்வாளர்களும் செய்த அட்டூழியங்களுக்கு தீர்வைப் பெற்றுத்தாருங்கள் என்றும் கடந்த காலங்களில் தங்களது உறவுகள் கொன்று குவித்த அனைத்திற்கும் பாரதியே பொறுப்பானவர் என்றும் இவருக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறானவர்களுக்கு உரிய தண்டனையை பெற்றுக் கொடுக்க வேண்டுமென்றும் மக்கள் ஆர்ப்பாட்டத்தின்போது கோசமிட்டிருந்தார்கள்.

இதுவரை காலமும் எங்களது பிரச்சனைகளை வெளியே கொண்டு வரமுடியாமல் இருந்தது. ஆனால் இந்த நாட்டிலே ஓரளவு சுமூக நிலை இருப்பதன் காரணமாக இவரையும் இவருடன் சேர்ந்து இயங்கிய ஒட்டுக் குழுக்களையும் உடனடியாக கைது செய்து அவர்களுக்கான தண்டனையை வழங்க வேண்டும் எனவும் வீதியை மறித்து போராட்டம் நடத்தினார்கள்.

இதன்போது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன், அக்கரைப்பற்று, திருக்கோவில், பொத்துவில் பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.கே.கேமந்த டிக்கோவிட்டவிடம் மகஜரொன்றை கையளித்தார்.

அம்மகஜரில்,

மட்டக்களப்பு பிரதேசத்தில் பிறந்தவரும் தற்போது திருக்கோவில் வசிப்பவரும் முன்னாள் ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கே.புஸ்பகுமார் என்ற இனியபாரதி,

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தில் அம்பாறை மாவட்டத்தின் பொறுப்பாளராக இருந்த காலத்திலும் பின்னர், முன்னாள் ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளராக இருந்த காலத்திலும் விசாரணைக்கு என அழைத்துச் செல்லப்பட்ட மற்றும் கடத்திச் செல்லப்பட்ட எங்களது உறவுகளை மீட்டுத்தருங்கள்,

அவரால் பலவந்தமாக ஏழைகளிடமிருந்து அபகரிக்கப்பட்ட உடமைகள், சொத்துக்களை மீட்டுத்தாருங்கள், அவர் இருந்த காரியாலயம் அமைந்துள்ள வளாகத்தில் புதைக்கப்பட்டவர்களின் எச்சங்களையும் அங்கு புதைக்கப்பட்டுள்ள ஆயுதங்களையும் தோண்டி எடுத்து நீதி விசாரணைகள் நடத்துங்கள்.

தற்போது அவர் வசிக்கின்ற திருக்கோவில் தம்பிலுவில் மத்திய சந்தைக்கு அருகிலுள்ள வீட்டில் பதுங்கு குழியில் மறைத்து வைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் மற்றும் நகைகள் பற்றிய விசாரணைகளை நடத்துங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ampara_arpaddam_002.jpg

ampara_arpaddam_003.jpg

ampara_arpaddam_004.jpg

ampara_arpaddam_005.jpg

ampara_arpaddam_006.jpg

ampara_arpaddam_007.jpg

ampara_arpaddam_008.jpg

ampara_arpaddam_009.jpg

ampara_arpaddam_010.jpg

ampara_arpaddam_011.jpg

ampara_arpaddam_012.jpg

ampara_arpaddam_013.jpg

ampara_arpaddam_014.jpg

 

இனியபாரதி   ஈ பி ஆர் எல் எப்  இயக்கமா ?

இனியபாரதி   ஈ பி ஆர் எல் எப்  இயக்கமா ?

 
இனியபாரதி ஈபி ஆர் எல் எப் இல்லை. அவர் சட்சாத் புளொட் இயக்கம் அல்லவா?  :D
இது கூட தெரியாதா அர்ஜுன்?. ரொம்ப சின்ன பிள்ளைதனமா இருக்கு.  :lol:

 

 
இனியபாரதி ஈபி ஆர் எல் எப் இல்லை. அவர் சட்சாத் புளொட் இயக்கம் அல்லவா?  :D
இது கூட தெரியாதா அர்ஜுன்?. ரொம்ப சின்ன பிள்ளைதனமா இருக்கு.  :lol:

 

புளொட் என்றால் பெயர் கொஞ்சம் இடிக்குது .போராட்டாவிட்டாலும் பெயர்களாவது கொஞ்சம் முற்போக்காக இருக்கும். சீமான் என்று எல்லாம் கடைசிவரை எவர் பெயரும் இருக்கவில்லை இருக்கவும் மாட்டாது . :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.