Jump to content

ஆட்டு மூளை குழம்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
தேவையான பொருட்கள்:
 
ஆட்டு மூளை 
மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
தேங்காய் - 2 பத்தை
உடைத்த கடலை - ஒரு கைப்பிடி
சீரகம், பட்டை, சோம்பு - அரை தேக்கரண்டி
வெங்காயம் - 2
பூண்டு - 10 பல்
புளி - எலுமிச்சை அளவு
தயிர் - 1 தேக்கரண்டி
தேங்காய்ப்பால் - 1 மூடி
எண்ணெய் - தேவையான அளவு
கொத்துமல்லி, கறிவேப்பிலை
 
செய்யும் முறை:
 
முதலில் மூளையை தண்ணீர் விட்டு கழுவி அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும். பின்னர் மூளை வெந்ததும் அதன் மேல் ஜவ்வை எடுத்துவிட்டு பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
 
கடாயில் எண்ணெய் ஊற்றி மிளகு, பட்டை, சோம்பு, போன்றவற்றை வறுத்து, அதனுடன் நறுக்கிய தேங்காய், மிளகாய் தூள், உடைத்த கடலை ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மூளை துண்டுகள், அரைத்த மசாலா, நறுக்கிய வெங்காயத்தில் பாதி, பூண்டு, உப்பு, தயிர், தேங்காய் பால் கல‌ந்து வைத்துக் கொள்ளவும். 
 
பின்னர் குழம்பு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும். பின்னர் குழம்பை அதில் ஊற்றி மசாலா வாசனை போகும் வரை கொதிக்க விடவும். கொத்துமல்லி, கறிவேப்பிலை போட்டு இறக்கவும்.
 
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

lamm_kopf.jpg

 

ஆட்டின், மூளையை... எப்படி அதன் தலையிலிருந்து.... வெளியே எடுப்பது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் சின்ன வேலை, ஆட்டு மூளையை எடுக்க மனித மூளையைப் பயன்படுத்த வேண்டும்...!  :)

 

 

நல்ல கட்டையில் தலையை வைத்து (ஆட்டின்)  தலையில் அதன் பொருத்துப் பார்த்து பெரிய கத்தியால் அடிக்க கபாலம் பிளந்து மூளை விடுதலையடையும்...! :o:)

Link to comment
Share on other sites

ஆட்டு மூளை சாப்பிடுபவர்கள்.. காலில் அடிபட்டால் "மே.." எண்டு கத்துவினமா??! :o:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டின், மூளையை... எப்படி அதன் தலையிலிருந்து.... வெளியே எடுப்பது?

 

279_th1.jpg 

 

தமிழ்சிறீ, காட்டுக் கருவேல இலைக் கொப்பை தறித்துக் கொண்டுவந்து ஆட்டின் வாயருகே வையுங்கள்.. மூளை தானாக வெளியே வந்து விழும்! :icon_idea::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

279_th1.jpg

 

தமிழ்சிறீ, காட்டுக் கருவேல இலைக் கொப்பை தறித்துக் கொண்டுவந்து ஆட்டின் வாயருகே வையுங்கள்.. மூளை தானாக வெளியே வந்து விழும்! :icon_idea::lol:

 

மனிதருக்கு... அல்வா சாப்பிடும் நினைப்பு வரும் போது... மூளை வெளியெ... வருவது போல்..

ஆட்டுக்கு.... கருவேலம் இலை, பிடித்த உணவு போலுள்ளது வன்னியன். :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.