Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மருதங்கேணி கடலிலிருந்து விரைவில் யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் விநியோகம்! வட மாகாண முதலமைச்சர்

Featured Replies

cv%20wiki%20994d.jpg

 

வெகு விரைவில் மருதங்கேணியில் இருந்து யாழ்ப்பாண மக்களுக்கு குடிநீர் வழங்கப்படவுள்ளது என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வவுனியா பொது வைத்தியசாலையில் 37 லட்சம் ரூபா பெறுமதியில் தீயாகி அறக்கட்டளை அமைப்பால் உருவாக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தினை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
 
சுமார் 50 அல்லது 60 வருடங்களுக்கு முன்னர் ஒரு ஆங்கில சஞ்சிகையில் வாசித்த ஞாபகம் இன்னுமொரு 60 இல்லது 70 வருடங்களில் நீர் பற்றாக்குறை உலகத்தை பாதிக்கும். மாசடைந்த நீரால் மக்களுக்கு மருத்தவ சிகிச்சையளிக்க வேண்டிய கடப்பாட்டை உண்டாக்கும். நீரற்ற நிலை ஒரு புறம். நீரிருந்தும் மாசுற்ற நிலை மறுபுறம் என்று இருந்தது அந்தக் கட்டுரை. மாசடைந்த நீரை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் தான் நாம் இருந்து கொண்டிருக்கிறோம்.
 
குழாய்களில் வரும் குளோரின் இடப்பட்ட நீரை கொழும்பில் குடித்துப் பழகிவிட்ட என்னைப் போன்றவர்கள் வட மாகாணத்தில் சுமார் 60 அல்லது 70 வருடங்களுக்கு முன் எமது இளமைப் பருவத்தில் வந்த போது இங்கிருந்த கிணறுகளின் நீரை அந்தக் காலத்தில் குடித்த போது புளகாங்கிதமடைந்தோம். அந்த நீர் சுவையாக இருந்தது - நீர் சுத்தமாக இருந்தது. அப்போதைய கிணற்று நீர் சூழல் மாசடையாமல் சுத்தமாக இருந்தது.
 
இப்பொழுது அப்படியல்ல. மாசடைவதை தடுக்க மாபெரும் இயந்திரங்களை நாடவேண்டிய சூழ்நிலை இங்கு உதயமாகியுள்ளது. அன்று சஞ்சிகையில் குறிப்பிட்ட கருத்து உண்மையில் இங்கு உருவாகியுள்ளது. நிலத்தடி நீர் போதாது என்பது ஒருபுறம் போதும் என்றால் கூட நீர் மாசடைந்திருப்பது இன்னொரு புறம். இதனால் தான் மேலும் மேலும் இயந்திரங்களின் உதவியை நாடவேண்டிய நிலமை உதயமாகியுள்ளது.
 
வெகு விரைவில் யாழ் மக்களுக்கு நீரானது கடலில் இருந்து மருதங்கேணியூடாக பளைக்கு கொண்டு வந்து அங்கிருந்த குழாய்களின் மூலமாக யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்படவிருக்கின்றது. கடல் நீரை நன்நீராக்க மருதங்கேணியிலும் பளையிலும் இயந்திரங்கள் பொருத்தப்படவிருக்கின்றன.
 
எனவே இயந்திர யுகம் இப்பொழுது அண்டியுள்ளது. அப்பேற்பட்ட இயந்திர யுகத்தை பிரதிபலிப்பதாய் அமைந்துள்ளது இன்றைய திறப்புவிழா. 35 இலட்சம் ரூபா செலவில் 5 வருட பராமரிப்பு பொறுப்பையும் ஏற்று தியாகி அறக்கட்டளை நிறுவனம் இந்த கைகாரியத்தில் ஈடபட்டுள்ளது.
 
வறுமையுற்ற மாணவர்களின் கல்விக்கு உதவி வளமுள்ள குடிமக்களாக மாற்றவும், நாதியற்று வாழும் குடும்பங்களுக்கு நன்மைகளைப் பெற்றுத்தரவும் ஊனமுற்றோரைப் பராமரித்து உதவிகளைச் செய்யவும் பாதிப்புற்றோரை வைத்தியம் மூலம் வளமுடையவர்களாக மாற்றி வாழ்க்கையில் வளம் பெற ஆவண செய்யவும் வேறுபல கைகரியங்களில் ஈடுபடவும் தியாகி அறக்கட்டளை நிறுவனத்தார் முயன்று வருகின்றனர்.
 
அவர்களின் சேவைகளை பாராட்டுகின்றோம். வாழ்க்கையில் வசதி படைத்த எமது சகோதர சகோதரிகள் அவர்கள் போன்று மேலும் மேலும் பாதிப்புற்ற எமது மக்களுக்கு உதவ முன்வரவேண்டும் என்று கேட்டுகொள்ளுகின்றேன். இன்றைய காலகட்டத்தில் ஒரு நாட்டின் குடிமக்கள் வாழ்க்கையை வளமாக்கும் நிறுவனங்கள் மூன்று என்று கூறுவார்கள்.
 
அரசாங்கம், தனியார் துறை, மேலும் அரசசார்பற்ற நிறுவனங்கள் என மூன்றும். தியாகி அறக்கட்டளை நிறுவனங்கள் போன்றவை மூன்றாம் வர்க்கத்தை சேர்ந்தவை அரச சார்பற்று, ஆனால் ஆக்கபூர்வமாக கைகரியங்களில் ஈடுபட்டு மக்கள் வாழ்வை மலரச்செய்யும் இந்த அரசார்பற்ற நிறுவனங்கள். மக்கள் சேவைக்காக பாடுபடும் அவர்களை நாங்கள் மனமுவந்து வரவேற்கின்றோம் வாழத்துகின்றோம்.
 
எமது மக்களின் வருங்காலம் வசந்தமாக உருவாக அவர்கள் மூலமான உதவிகள் தேவையாக உள்ளன. மக்களின் தேவைகளை அறிந்து செய்யும் அவர்களின் சேவைகள் பாராட்டக்குரியன 2015 ஆம் ஆண்டுக்கு அவர்கள் திட்டமிட்டிருக்கும் பல செயல்திட்டங்களில் இதுவும் ஒன்று எங்கள் சேவைகள் மேலும் மேலும் எம்மக்களுக்கு தொடர்ந்து கிடைக்க வேண்டும் எனத் தெரிவித்தார். -
 
http://www.malarum.com/article/tam/2015/02/25/8815/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D.html#sthash.p9x0jVkU.dpuf
 
 

அடேங்கப்பா எங்கட மருது அண்ணா ஒரு பெருங்கடல் என்பது இப்ப தான் தெரியும்.

Edited by Dash

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னது... கடலில் இருந்து நீர் எடுத்து யாழ்ப்பாணத்துக்கு கொடுக்கவுள்ளாரா நம்ம யாழ் கள நண்பர் மருதங்கேணி? ..அவர் சொல்லவே இல்லையே! :(

Edited by sabesan36

நல்ல திட்டம் , வினைத்திறனாக நிறைவேற்றுவதில் தான் வெற்றி தங்கி இருக்கிறது .

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி 

மருதங்கேணி 
  • கருத்துக்கள உறவுகள்
எப்ப பார்த்தாலும் ....
சும்மா தண்ணி தண்ணி என்று சத்தம் போட்டுகொண்டு இருக்கிறார்கள்.
முதல்வருக்கு ஒரு ஈமெயில் போட்டேன் தேவையான தண்ணி இருக்கு முடிஞ்சா பைப் வைச்சு இறைச்சு பாருங்க என்று.
சும்மா சொன்னதிற்கு இவர் அறிக்கை வேற விடுறார்.
 
அதே கடல்தானே காரைநகரில் இருக்கு ....?
ஏன் சுத்தி வளைகிறார்கள் என்பதுதான் புரியவில்லை. 
  • கருத்துக்கள உறவுகள்
மருதங்கேணி கடலிலிருந்து விரைவில் யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் விநியோகம்! வட மாகாண முதலமைச்சர்

 

கடல் நீரை நன் நீராக்கும் திட்டம் இருந்தால் ஏன் மருதங்கேணி கடலில் இருந்து நீர் எடுக்கவேண்டும் யாழ் குடாநாட்டை சுற்றி கடல் உள்ளதே  .....  :rolleyes:  :blink:

மருதங்கேணி கடலில் முருகை கல் இல்ல . இலகுவாக தண்ணீர் பெற்று கொள்ளலாம் . இந்த பிரதேசத்தில் இருந்து கொண்டு செல்லும் போது அதிகமான இடங்களுக்கு போகிற வழிகளில் விநியோகம் செய்யலாம் . மருதம்கேணி - மாசார் - புதுக்காடு - பளை-முகமாலை -சாவகசேரி - கொடிகாமம் - ..........

2- மற்றைய பிரதேசங்களில் ஒண்டில் ஆழ்கடல் இல்ல, அல்லது முருகை கல் கொண்டிருக்கும் , மக்கள் தொகை செறிவாக இருக்கும்

3- மற்றயது ஆணையிரவு ஊடக வன்னி பிரதேசத்துக்கும் விஸ்தரிக்கும் திட்டம் எதிர்காலத்தில் இருக்கலாம் . ஏனெனில் கோடைகாலங்களில் தட்டுவான் கொட்டி , உமையாள் புரம், பரந்தன் போன்ற பிரதேசங்கள் தண்ணீர் பற்றாகுறை உடைய பிரதேசங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
முருகை கல்லிற்கும் தண்ணிக்கும் என்ன பிரச்சனை ?
கடலில் உள்ள தண்ணீர் ஒன்றுதானே ? 

தண்ணீர் ஒண்டுதான் ஆனால் முருகை கல் பகுதியில் இருக்கும் கடல் ஆழம் குறைந்தது .அங்கு கடல் உள்வாங்கும் தன்மை கொண்டது .தண்ணீரின் தன்மையில் வித்தியாசம் இருக்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தண்ணீர் ஒண்டுதான் ஆனால் முருகை கல் பகுதியில் இருக்கும் கடல் ஆழம் குறைந்தது .அங்கு கடல் உள்வாங்கும் தன்மை கொண்டது .தண்ணீரின் தன்மையில் வித்தியாசம் இருக்கு

அகத்தியன்,

 

இந்த புரொஜெக்ட் பற்றிய நல்ல விளக்கம் உங்களிடம் உள்ளது.

 

தற்போது யாழ்ப்பாண தண்ணியில் கடுமையான கல்சியம் இருப்பது போன்ற ஒரு பிரச்னையை இந்த முருகை கல் பகுதியில் இருக்கும் கடல் ஏற்படுத்துமா?

 

இப்போது இங்கு தண்ணீர் பைப்புகளில்கூட கல்சியம் படிகிறது. எலக்ட்ரிக் கெட்டில்களில் கேட்கவே வேண்டாம்.. படைபடையாக பெரிய படிவுகள். யாழ். மக்களுக்கு ஏற்படும் சிறுநீரக கல் வியாதியின் பேசிக் இதுதான். அப்படியொரு பிரச்னை இதிலும் வருமா? 

Edited by sabesan36

37 இலட்சம் ரூபாவில் கடல் நீர் சுத்திகரித்தால் கல்சியம் மாத்திரம் இல்லை முருகைக்கல்லே வர்ந்தாலும் ஆச்சரியப்பட முடியாது. 

 

தரமான (desalination) கடல் நீர் சுத்திகரிப்பு இயந்திர தொகுதி இதை விட பலமடங்கு அதிகம். 37 இலட்சத்துக்கு ஒரு புது லொறியே வாங்கேலாது அதுக்குள்ளே இந்த இயந்தரம் எப்படி வாங்க முடியும்? 

  • கருத்துக்கள உறவுகள்

தண்ணீர் ஒண்டுதான் ஆனால் முருகை கல் பகுதியில் இருக்கும் கடல் ஆழம் குறைந்தது .அங்கு கடல் உள்வாங்கும் தன்மை கொண்டது .தண்ணீரின் தன்மையில் வித்தியாசம் இருக்கு

முருகை கல் பகுதியில் இருக்கும் கடல் ஆழம் குறைந்தது சரிதான். தண்ணீரின் தன்மையில் வித்தியாசம் இருக்கு அதுவும் சரிதான்.  கடல் உள்வாங்கும் தன்மை கொண்டது .... இது பொதுவாக எல்லா கரையோரங்களிலும் உள்வாங்கும் தன்மை இருக்கின்றதுதானே என்பதினால் கடல் உள்வாங்குவது என்பதில் ஒரு வித்தியாசமும் இல்லை .....  :D  :)    

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

37 இலட்சம் ரூபாவில் கடல் நீர் சுத்திகரித்தால் கல்சியம் மாத்திரம் இல்லை முருகைக்கல்லே வர்ந்தாலும் ஆச்சரியப்பட முடியாது. 

 

தரமான (desalination) கடல் நீர் சுத்திகரிப்பு இயந்திர தொகுதி இதை விட பலமடங்கு அதிகம். 37 இலட்சத்துக்கு ஒரு புது லொறியே வாங்கேலாது அதுக்குள்ளே இந்த இயந்தரம் எப்படி வாங்க முடியும்? 

“35 இலட்சம் ரூபா செலவில் 5 வருட பராமரிப்பு பொறுப்பையும் ஏற்று தியாகி அறக்கட்டளை நிறுவனம் இந்த கைகாரியத்தில் ஈடபட்டுள்ளது” என்கிறார் தமிழ் முதலமைச்சர்.

 

அவரும், இருப்பதை வைத்துத்தானே திட்டம் போட முடியும்.

 

ஏதோ ஒரு நிறுவனத்தின் கிட்டத்தட்ட 30,000 டொலர் இதில் முதலீடு செய்யப்படுகிறதாம். அது மட்டும்தான் கிடைத்துள்ளது

 

30,000 டொலர், வெத்து சவுண்டை விட அதிகமல்லவா?

 

வெளிநாட்டு dB, decibel அளவுக்கு நிதி ஒத்துழைப்பு கிடைத்திருந்தால், ஏன் புது லொறி திட்டத்துக்கு போகிறார் முதல்வர்?

 

கதைதான் கைலாசம் பிலோசபியை விளங்கிக்கொண்டு விட்டாரோ என்னவோ! இருப்பதை வைத்து ஏதாவது செய்து பார்க்கலாம். 

Edited by sabesan36

தமிழரசு அண்ணா,வடமராச்சியில் கற்கோவளம் பகுதியில் இருந்து திருமலை வரையும் முருகை கல் இல்ல . அதோட கடல் உள் வாங்கும் பிரச்சனையும் . வடமராச்சியில் உள்ளது போல வாறது இல்ல.

சபேசன் அண்ணா. வடபகுதியில் எங்களின் குடிநீர் பெரும்பாலும் கிணறுதான் . கிணற்றில் இருந்து வரும் தண்ணீரில் கனியுப்பு தாது பொருட்களின் அளவு நிர்ணயம் செய்து வருவதில்ல .இனி வரும் காலங்களில் ஒவ்வொரு வீடுக்கும் வடிகட்டி வேண்டும் . சுடவைத்து ஆறவைத்து குடிகக்கலாம் .கடல் நீரில் உப்பின் அளவு மிகவும் அதிகம் அது உரிய

வடிபானால் வடிகட்டி தான் குடிநீர் தரத்துக்கு கொண்டுவரப்படும் . சிறுநீரக பிரச்சனைக்கு கனியுப்பு கரணம் அதோட அதீத களை நாசினி , பீடை நாசினி , செயற்கை உரப்பாவனையும் காரணம் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.