Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தனும் சுமந்திரனும் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு சென்றது அவர்கள் இருவரின் தனிபட்ட விடயம்-சுரேஷ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனும் சுமந்திரனும் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு சென்றது அவர்கள் இருவரின் தனிபட்ட விடயம்-சுரேஷ்

 


8fc349503f6878fcee18db59d5ae6f81

Edited by nunavilan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

8fc349503f6878fcee18db59d5ae6f81

Edited by sabesan36

கட்சியின் உத்தியோகபூர்வ பேச்சாளர் திரு.சுரேஸ். ஆகவே அவர் கூறுவதே உத்தியோகபூர்வ கருத்து. சம்பந்தனும,சுமந்திரனும் தங்களுடைய ஆசையை நிறைவேற்ற கட்சியை படுத்த கூடாது. அவர்களின் சின்ன சின்ன ஆசைகளை அவர்கள் தமது வீட்டில் வைத்துக்கொள்ளலாம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
நல்ல என்டர்டெயினிங் கட்சி. 

 

 

 

ம்ம் சம்பந்தனுக்கும் சுமந்திரனுக்கும் எதிராக கருத்து வந்தால் உங்களுக்கு  entertaining. நல்ல எஸ்கேப்.

சட்டப் புலியையும் கலைக்க பாக்கும் கட்டப்பிராய் நரி !


ஊரில வீரவசனம் பேசி மக்களை உசுப்பேத்திப்போட்டு அதுகள் கஞ்சிக்கும் வழியில்லாமல் கஷ்டப்பட தான் மட்டும் மகிந்த வச்ச விருந்தில எல்லாம் கலந்து வாய்கிழிய சிரிச்சு கூழை கும்புடு போட்டு முந்தி ஒண்டுக்கும் வழி இல்லாமை நிண்டபோது, தான்ஒரு தமிழ் கட்சியிண்ட செயலாளர் நாயகமாக இருந்தும் மகிந்தவின்ர மீன்பிடி அமைச்சில,மகிந்த சம்பளத்துக்கு வேலை கொடுத்த நன்றிக்கு வாலை ஆட்டி, திண்டு வண்டி வீங்கினவர் இப்ப சுமந்திரனை சீண்டுறார் .

பின்னணி தெரியாம பேசக் கூடாது. சட்டவாதி எண்டதால வார்த்தையள வைச்சு விளையாடுறார் எண்டவருக்கு தெரியும் , இரவோட இரவா கோத்தபாய கொழும்பில விடுதிகளில இருந்து சனத்த பஸ்சில ஏத்தி அனுப்பவிருக்க சுமந்திரன் தன்ர சட்ட மூளையால தான் அதுக்கு எதிராகஇடைக்கால தடை உத்தரவு எடுத்தவர் . அப்ப அவர் எம் பி இல்ல .ஆனா நீங்கள் எம் பி

நீங்கள் முட்டாள் இல்லை தான். எத்தனையோ பல்கலைகழக பொடியள் படிப்பை விட்டுப்போட்டு மண்ணில் நிண்டு போராட. நீங்கள் மட்ராசில படிச்சு பட்டம் வாங்கினதாய் பாராழுமன்ற பதிவில இருக்கு. நீங்கள் படிச்சு வாங்கினதோ இல்ல ஆரையும் பிடிச்சு வாங்கினதோ அது சிதம்பர ரகசியம். விசாரிச்சு பாத்தாதான் தெரியும். ஏனெண்ட அப்ப நீங்கள் படிப்பை விட அந்த பெட்டையின்ர பொடியனை வெருட்டி கலைச்சுபோட்டு அவவோட கோகிலம் பாடுறதில தான் படுபிசியா திரிஞ்சனியள். இடைக்கிடை இஞ்சவந்து அரசியல் துறை பொடியளை உசுப்பேத்தி போட்டு போட்டில இந்தியா திரும்பிபோய் களைப்பு தீர கோகிலம் பாடி திரிஞ்சனியள்.

உள்குத்து வேலை மன்னனான நீங்கள் நெருப்பு தினம் நடத்தி தோழர்களை உசுப்பேத்தி புலிகளுக்கு பலிகொடுத்து போட்டு பிறகு இந்தியன் அமைதி படையோட வந்து எங்கட சனத்தின்ர அமைதிய கெடுத்தியள்.

வரதர் படிச்சவர் கொஞ்ச காலம் விரிவுரையாளராய் இருந்தவர். அவரோட புடுங்கு பட்டியள். பாராளுமன்றத்தில மாகாண சபை அதிகாரம் பற்றி பேசாம ஊரில மண்டையன் குழு நடத்தி எல்லாரையும் திரும்பவும் இந்தியா ஓடவச்சியள்.

கட்சிய புனரமைக்க கேதீஸ்வரன் திட்டமிட நீங்கள் குடுத்த குடைச்சலாலா அவரையும் விலகி போகப் பண்ணினியள். கட்சி பணத்துக்கு கணக்கு கேட்டவை , சொத்துக்களை ஏன் உங்கட குடும்ப சொத்த வைச்சிருக்கிறியள் எண்டு கேட்டவைக்கு வில்சனும் நானும் முடிவெடுத்து தான் எல்லாம் செய்யிறம் எண்டு விறுக்கா பண்ண வெறுப்பில அவங்களை வெளியேற பண்ணினியள். வில்சனும் கனடாவில. சொத்தெல்லாம் யாரிட்ட சொல்லுங்கோ? சு பி .
திறமைசாலிகள் , மக்களை பற்றி சிந்திப்பவர்கள் , படித்தவர்கள் , சுயமாக சிந்திப்பவர்கள், ஒருத்தரையும் நீங்கள் வைச்சிருக்கமாட்டிள் . இருந்த ஒரே ஒரு சூழலியலாளரையும் தம்பிக்கு அந்த மந்திரி பதவிய தரேல்ல எண்டு கட்சியால கலைச்சு போட்டியள் . இப்ப உங்கட அடிமடியில கைவைக்க போகிறார் எண்ட பயத்தில சுமந்திரனோட மல்லுக்கு நிக்கிறியள். கூடமைப்பு என்ன உங்கட முதுசமோ ? அல்லது உங்கட மனிசி கொண்டுவந்த சீதனமோ ?
தராக்கி சிவராமிட்ட கெஞ்சி கரிகாலன்ர காலை பிடிச்சு புலிகளின்ர வாலில தொங்கி மாவையின்ர கடைக்கண் பார்வையால தான் சனம் உமக்கு வாக்கு போட்டது. ஆனா இனிப்போடது.நீங்கள் வடக்கில அரசுக்கு எதிரா கத்திறதும் பிறகு தெற்கில அவங்கள் வைக்கிற பாட்டியில போய் நிக்கிறதும் சனத்துக்கு தெரிஞ்சு போச்சுது.

நீங்கள் கட்டபிராயில கல்லு குத்துது எண்டு உங்கட வீடு மட்டும் காப்பற் றோட் போட்டு அதுக்கங்கால இருக்கிறசனம் சிங்கள சனம் எண்டே போடாம விடசொன்ன நீங்கள் எண்டு சனம் கேட்குது .

கனக்க ஈ பி ஆர் எல் எப் காரர் டக்ளசுக்கு பின்னால் போட்டங்கள் மிச்ச பேரையும் சுகு சுத்தி போட்டுது. நீங்களும் உங்கட தம்பியும் கொஞ்ச அல்லக்கைகளும் தான் இப்ப மிச்சம். உங்களுக்கு போடச்சொல்லி மற்றவை சொன்னாலும் சனம் போடாது அவையளும் கேட்கமாட்டினம். இந்த சீத்துவத்தில சுமந்திரனை தேசியபட்டியல் எண்டு ஏன் சீண்டுறீங்கள்.

முந்தி கிடைச்ச சந்தர்பத்தை எல்லாம் தவற விட்டிடம் இனியும் அந்த தவறை விட கூடாது எண்டு வவுனியாவில வைச்சு கூடமைப்பின்ர தலைவர் சம்மந்தன் ஐயா சொன்ன படிதான் சுமந்திரன் நடக்கிறார் . அனைவரும் அப்பிடித்தான் நடக்கவேணும். மணி கட்டின மாடு சொன்னா கேட்கவேணும் .
தலைமைக்கு கட்டுப்படாத பேச்சளார் தேவையோ எண்டு கூட்டமைப்புக்குள் குரல் கேட்குது. உங்களுக்கும் கெதியில கேட்கும். அடுத்த தேர்தல்வரை தாக்குபிடியுங்கோ. கட்டாயம் தோற்பியள். கோகிலத்தோட காசி ராமேஸ்வரம் எண்டு கடைசி காலத்தை கோவில் குளம் எண்டு போய் தோழர் நபாவுக்கும், நம்பிவந்த தோழர்களுக்கும், தமிழ் சனத்துக்கும் செய்த துரோகத்துக்கும் பிராயச்சித்தம் தேடுங்கோ.

காரியச்சித்தன்
 
email இல் கிடைக்கப்பெற்றது
 

Edited by Gari

  • கருத்துக்கள உறவுகள்

(மஹிந்தவின் பார்வை) அட பேய்க்காய்... கூட்டியந்தீட்டாய்!!  

:o

கடவுள் வந்து சம்பந்தன், சுமந்தரனுக்கு எதிராக ஏதாவது சொன்னால் கரி அன்றிலிருந்து நாஸ்தீகராகிவிடுவார். கடவுளை திட்டி கடவுள் மீது கூட இல்லாத்தும் பொல்லாத்தும் என தனது படு பொய்களை அடுக்க தொடங்கிவிடுவார். இவருக்கு உலகமே இந்த இரண்டு பேர்வழிகளிடம் தான். சிலவேளை இந்த இரு பேரவழிகளிடமும் கடன் பெற்றவரோ?

Edited by trinco

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம் சம்பந்தனுக்கும் சுமந்திரனுக்கும் எதிராக கருத்து வந்தால் உங்களுக்கு  entertaining. நல்ல எஸ்கேப்.

எஸ்கேப் இல்லை.. நிஜ entertainment. நான் கூட்டமைப்பு ஆதரவாளன் அல்ல, சம்பந்தன், சுமந்திரன் ஆதரவாளனும் அல்ல. அவர்களது சில கருத்துக்களில் உடன்பாடு உண்டு. பல நடவடிக்கைகளில் உடன்பாடு இல்லை.

Edited by sabesan36

 புரிந்துதா நுணா, அதாவது சம்பந்தனும் சுமந்திரனும் சிங்கள எஜமான்களை சந்தோசபடுத்தும், அவர்களின் காலில் விழும் கருத்துகளை தெரிவித்தால் அந்த சில கருத்துகளில் உடன்பாடு உண்டு. ஆனால் அவர்கள் நீதியான அரசியல் தீர்வு, எதிர்கால தமிழ் சந்ததியின் கெளரவமான வாழ்வு, சமஸ்டி என்று எனக்கு பிடிக்காத கெட்டவார்த்தைகள் கூறினால்  அது எனது எஜமானை சங்கடபடுத்தும் என்பதால் அதில் உடன்பாடு இல்லை என்பது சிலரின் நிலைப்பாடு நுணா.

இவரின் சாகும்வரை  உண்ணாவிரதம்  எந்த  மட்டில  இருக்கு  ஆள் தப்புமா  இல்லையா  :D

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் ஓட்டு போட்டு தான் இவர் MP ஆனவர்.

கடவுள் வந்து சம்பந்தன், சுமந்தரனுக்கு எதிராக ஏதாவது சொன்னால் கரி அன்றிலிருந்து நாஸ்தீகராகிவிடுவார். கடவுளை திட்டி கடவுள் மீது கூட இல்லாத்தும் பொல்லாத்தும் என தனது படு பொய்களை அடுக்க தொடங்கிவிடுவார். இவருக்கு உலகமே இந்த இரண்டு பேர்வழிகளிடம் தான். சிலவேளை இந்த இரு பேரவழிகளிடமும் கடன் பெற்றவரோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நச்சுப் பாம்புடனா குப்பை கொட்டப் போகிறது கூட்டமைப்பு?புகழேந்தி தங்கராஜ்

 
np-1315-02-620x406.png

இலங்கையில் நடந்தது இனப்படுகொலைதான் – என்கிற வட மாகாண சபை தீர்மானம், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே முதல் இன்றைய அதிபர் மைத்திரிபாலா சிறிசேனா வரை – அத்தனைப் பேர் வயிற்றிலும் புளியைக் கரைத்திருக்கிறது. போர்க்குற்றச்சாட்டுகளை இனப்படுகொலை என்று சொல்வது நியாயமா – என்று நம்மிடமே நீதி கேட்கிறார் மைத்திரிபாலா. ‘இனப்படுகொலையை போர்க்குற்றச்சாட்டு என்று சொல்வது மட்டும் நியாயமா’ – என்று எவரும் அவரைத் திருப்பிக் கேட்கவில்லை!

ராஜபக்சேவின் பரம வைரி ஒருவர், ராஜபக்சேவுக்கு வக்காலத்து போடுவதில் மைத்திரியைக் காட்டிலும் அதிதீவிர அக்கறை காட்டுகிறார். அவர், மைத்திரியின் வெளி விவகார அமைச்சர் மங்கள சமரவீர. ‘போர்க்குற்றம் நடப்பது இயல்பானதுதான்’ – என்பது சமரவீரவின் வாதம். 60 ஆண்டுகளாக எம் இனத்தைக் கொன்று குவிப்பதை ஒரு பொழுதுபோக்காகவே வைத்திருக்கும் கொலையாளிகளுக்கு வேண்டுமானால் கொலைகள் இயல்பானவையாகத் தெரியலாம்… கொல்லப்பட்டவர்களும் ‘இதெல்லாம் சகஜம்’ என்று எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறாரா?

இலங்கையை ஆண்ட அரசுகள் தொடர்ந்து இனப்படுகொலையில் ஈடுபட்டிருந்தால் வடகிழக்கில் தமிழர் என்றொரு இனம் இருந்திருக்குமா – என்பது ராஜபக்சேவின் கூட்டாளி ஒருவர் மனிதாபிமானம் பொங்கிவழிய வழியக் கேட்டிருக்கும் கேள்வி. இப்படிக் கேட்டிருப்பவர், சிங்கள இனவெறி அமைப்பான ஹெல உறுமய மைத்திரிக்கு ஆதரவான நிலையை எடுத்தபோது, அதிலிருந்து விலகி ராஜபக்சேவுடனேயே நின்ற உதய கம்மனபில. தொடர்ச்சியாக அல்ல….. விட்டுவிட்டுத்தான் இனப்படுகொலையில் ஈடுபட்டோம் – என்று ஒப்புக்கொள்கிற ஒப்புதல் வாக்குமூலம் இது.

விக்னேஸ்வரன் ‘இனப்படுகொலை’ என்கிற ஒற்றை வார்த்தையை அழுத்தந் திருத்தமாகப் பதிவு செய்தது இவர்கள் அத்தனைப் பேரையும் உலுக்கிவிட்டது. முன்பெல்லாம், தமிழீழ விடுதலைப் புலிகளைப் பார்த்து நடுங்கியவர்கள் இவர்கள். இப்போதோ, வாகரைக்கும் முள்ளிவாய்க்காலுக்கும் இடையே ரத்தச் சேற்றில் சிதறிக்கிடந்த ஒன்றரை லட்சம் தமிழ் மக்களின் உடல்களை நினைத்தாலே உதறலெடுக்கிறது இவர்களுக்கு!

எந்தக் குற்றச்சாட்டையும் தெளிவான ஆதாரங்களுடன் தெரிவிப்பதன் மூலம் சர்வதேசத்தின் நம்பிக்கையை முழுமையாகப் பெற்றுள்ளவர், மன்னார் பேராயர் ராயப்பு ஜோசப். இந்த வாரம் அவர் வெளியிட்டுள்ள தகவல், கொலையாளிகளின் உடலில் மேலதிக உதறலை ஏற்படுத்தியிருக்கிறது. விசுவமடு பகுதியிலேயே சுமார் 30 ஆயிரம் பொதுமக்களின் உடல்கள் புதைக்கப்பட்டு விட்டன என்பதை தகுந்த சாட்சியம் மூலம் அறிந்த அவர், பி.பி.சி.க்கு அளித்த பேட்டியில் அந்த அதிர்ச்சியூட்டும் உண்மையை வெளியிட்டிருக்கிறார்.

கொலை வெறியுடன் விரட்டிய ராணுவத்துக்கு அஞ்சி வாகரையிலிருந்து நகர்ந்த லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்கள், விசுவமடுவைக் கடந்தது அநேகமாக பிப்ரவரியாக இருக்கும். நோ பயர் சோன் – என்கிற மரண வலையில் தமிழ்மக்கள் தாமாகவே போய் விழுந்த கொடுமையெல்லாம் அரங்கேறிய காலகட்டம் அது. பிப்ரவரியிலேயே முப்பதாயிரம் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டு விட்டனர் என்றால், மே இடைப்பகுதி வரை கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை என்னவாக இருக்கும்? இதை அடிப்படையாக வைத்து அதைக் கணக்கிட்டுப் பார்க்கும்போது, காணாமல் போனதாகக் கூறப்படும் ஒன்றரை லட்சம் பேர் குறித்த அச்சத்தில் நம் ஈரக்குலை நடுங்குகிறது.

அப்பாவித் தமிழ் மக்களை இப்படியெல்லாம் சகட்டு மேனிக்குக் கொன்றுகுவித்துவிட்டு, ‘அப்பாவி மக்களில் எவர் மீதும் ஒரு துரும்பு கூட படவில்லை’ என்று மகிந்த ராஜபக்சே முதல் மைத்திரி வரை, சரத் பொன்சேகாவிலிருந்து சவரேந்திர சில்வா வரை அத்தனை வேதாளங்களும் சூடம் கொளுத்திச் சத்தியம் செய்வதுதான் ஆகப்பெரிய கொடுமை.

ஒரு பேச்சுக்கு – ‘நடந்தது போர்க்குற்றம்தான்’ என்கிற கொலையாளிகளின் வாதத்தை ஏற்றுக்கொள்வதாகவே வைத்துக் கொள்வோம். அப்படி வைத்துக்கொண்டான பிறகு, அந்தப் பேச்சுக்காவது மூச்சு இருக்க வேண்டுமா, வேண்டாமா? போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணை அறிக்கை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை முன் வைக்கப்பட்டு விடக் கூடாது என்று அடம்பிடிப்பது என்ன நியாயம்?

முதலில் ‘இது இனப்படுகொலை இல்லை, போர்க்குற்றம்’ – என்று முனகினார்கள். புலிகளும் போர்க்குற்றத்தில் ஈடுபட்டார்கள் – என்று கூசாமல் பேசினார்கள். ஐ.நா. விசாரணைக் குழு இலங்கைக்கு வந்துவிட முடியும்…. இங்கிருந்து திரும்பிப் போய்விட முடியுமா….. என்றெல்லாம் தெருப்பொறுக்கி மாதிரி உதார் விட்டார்கள். இப்போதோ, போர்க்குற்ற விசாரணை அறிக்கையை வெளியிடவே கூடாது என்று தலைகீழாய் நிற்கிறார்கள்.

கொலையாளிகள் எப்படி வேண்டுமானாலும் பேசலாம், எந்த பொசிஷனிலும் நிற்கலாம்…. அவர்களுடன் சேர்ந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுமந்திரனும் தலைகீழாய்த் தொங்குகிறாரே, ஏன்? எம் இனத்தை நரவேட்டையாடிய பௌத்த சிங்கள கொலையாளிகள் வாயைத்திறக்கும் போதெல்லாம், வெட்கமேயில்லாமல் பின்பாட்டு பாடுகிறாரே, ஏன்?

சர்வதேசத் தரத்திலான விசாரணைக்கு இலங்கை தயாராகிறதாம்… இலங்கையின் உள்நாட்டு விசாரணைகள் சர்வதேச விசாரணையை எந்த விதத்திலும் பாதித்துவிடாதாம்…

இப்படிச் சொல்கிறவர், மகிந்த ராஜபக்சேவின் மகனோ மைத்திரிபாலா சிறீசேனாவின் மச்சினனோ இல்லை. மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன். வேலிக்கு சாட்சி சொல்கிறதா ஓணான்?

சுமந்திரன் வெறும் அறிவாளி என்று, நண்பர்கள் சிலரைப்போல் நானும் தவறாக நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போதுதான் தெரிகிறது அவர் ஒரு அயோக்கிய அறிவாளி என்பது! இவரைப் போன்ற அயோக்கிய அறிவாளிகளை வைத்துக்கொண்டுதான் இனப்படுகொலையை மூடி மறைக்க முயல்கிறது இலங்கை.

என்னைப் பொறுத்தவரை, 2009 மே மாதத்துக்குப் பிறகு. உலகில் இரண்டே தரப்புதான் இருக்கிறது என்று நினைக்கிறேன். முதல் தரப்பு – நடந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்கிறது. இரண்டாவது தரப்பு, அந்த இனப்படுகொலையை மூடி மறைக்க முயல்கிறது.

நடந்த இனப்படுகொலையை மூடி மறைக்க முயல்பவர்கள், இனப்படுகொலை செய்தவர்களைவிடக் கொடூரமானவர்கள். இந்த மூடி மறைக்கும் வேலையில் இறங்குவது மோடியாகட்டும், சோனியா ஆகட்டும், சு.சு. ஆகட்டும், சுமந்திரன் ஆகட்டும்…. அது எவராக இருந்தாலும், ராஜபக்சேவைக் காட்டிலும் கொடூரமானவர்கள் அவர்கள்.

இனப்படுகொலை என்று குற்றஞ்சாட்டுவதன் மூலம் தமிழ்நாட்டில் சிலர் அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள் – என்று கொழும்பிலிருந்து குரல்கள் எழுந்ததுண்டு. இனப்படுகொலைக்கு நீதி கேட்பதால் கிடைக்கிற அரசியல் ஆதாயத்தைவிட, இனப்படுகொலையை மூடி மறைப்பதற்காகக் கிடைக்கிற ‘ஆதாயம்’ அதிகமாய் இருக்குமா இருக்காதா? .

சுமந்திரன் போன்றவர்கள் ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பின் பிறப்பார்கள் என்கிற தீர்க்க தரிசனத்துடன் எழுதப்பட்டது தான் இந்தக் குறள்…….

‘கேட்டினும் உண்டு ஓர் உறுதி கிளைஞரை

நீட்டி அளப்பதோர் கோல்’ என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.

கேடு வருகிற போது அதனுடன் சேர்ந்து ஒரு நன்மையும் வருகிறது…. நண்பன் யார் எதிரி யார் என்பதை அறிந்துகொள்ள அந்தக் கேடு தான் மிகச் சிறந்த அளவுகோலாயிருக்கும்… என்கிறது வள்ளுவம்.

இப்போது தமிழினத்தைக் கேடு சூழ்ந்திருக்கிற நிலையில்தான், சுமந்திரன் நம்முடைய நண்பனா பகைவனா – என்கிற ரகசியம் அம்பலமாகியிருக்கிறது.

சுமந்திரன் என்னைப்போல் தமிழ்நாட்டுக்காரரல்ல! வடமராட்சியைப் பூர்வீகமாகக் கொண்டவர். இனப்படுகொலையால் கடுமையாக பாதிக்கப்பட்ட எத்தனையோ பேர் அவருக்குச் சொந்தமாகவோ, நண்பராகவோ இருக்கக் கூடும். விரட்டி விரட்டிக் கொல்லப்பட்ட தன்னுடைய சுற்றத்தையும் நட்பையும் பற்றிய அக்கறை அவருக்கு அறவேயில்லை என்பதைக் கடலின் இக்கரையிலிருந்தே புரிந்துகொள்ள முடிகிறது எனக்கு! அவருக்கு அருகிலேயே இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நண்பர்களால் இன்னும் கூடவா அந்த இனத் துரோகியை அடையாளம் காண முடியவில்லை? இதுதான் எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக உள்ளது. உட்பகையை இனம் காணவே இயலாத அறியாமையிலா ஆழ்ந்திருக்கிறது தமிழரின் தாயகம்?

எங்கள் புலம்பெயர் உறவுகளின் – குறிப்பாக இளையோரின் முயற்சியால்தான் குற்றவாளிகளைக் கூண்டில் நிறுத்திவிட முடியும் என்கிற நம்பிக்கை வலுப்பட்டது. எந்தக் குற்றவாளிகளைக் கூண்டில் நிறுத்த எம் இளையோர் முயற்சித்தார்களோ முயற்சிக்கிறார்களோ, அந்தக் குற்றவாளிகளைக் காப்பாற்றும் முயற்சிகளை வெட்கமேயில்லாமல் வெளிப்படையாகச் செய்கிறார் சுமந்திரன்.

சர்வதேசத் தரத்திலான விசாரணைக்கு இலங்கை தயாராகிறது – என்று சத்தம் போடாமல் காய் நகர்த்துகிறார் சுமந்திரன். இது அந்த மனிதரின் அரசியல் எவ்வளவு கீழ்த்தரம் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. உள்நாட்டு விசாரணை – என்பது சர்வதேச விசாரணையைத் தள்ளிப்போட இலங்கை செய்கிற பித்தலாட்டம். ஆபிரகாம் சுமந்திரனுக்கு இது தெரியாதா என்ன? இதெல்லாம் தெரிந்தே, தன்னுடைய சிங்கள சிநேகிதர்களைக் காப்பாற்ற பச்சைத் துரோகத்தை கட்டவிழ்த்துவிடுகிறார்.

உள்நாட்டு விசாரணையால் சர்வதேச விசாரணை எந்த விதத்திலும் பாதிக்கப்படாதாம்… அறிவாளி சுமந்திரனின் அடுத்த கண்டுபிடிப்பு இது. சர்வதேச விசாரணை மட்டும் உள்நாட்டு விசாரணையைப் பாதித்துவிடுமாமா?

சுமந்திரன் பேசுகிற ஒவ்வொரு வார்த்தையும், சிங்கள சிநேகிதர்களுக்குத் துணை நிற்க அவர் தயங்கவே மாட்டார் என்பதை உறுதிப்படுத்துகின்றன. கொல்லப்பட்ட உறவுகளுக்கு நியாயம் கேட்காமல், சிங்கள நண்பர்களைக் காப்பாற்றுவதற்கு மெனக்கெடுகிற சுமந்திரனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து களையெடுப்பதை இனி ஒரே ஒரு நொடிகூட எவரும் தாமதப்படுத்தக் கூடாது. அப்படித் தாமதப்படுத்துவது, இனப்படுகொலைக்கு நீதிகேட்டு உலகின் மூலை முடுக்கிலெல்லாம் போராடி வருகிற எங்கள் இளையோரைச் சோர்வடைய வைத்துவிடும். கூட்டமைப்பிலிருந்து சுமந்திரனைக் களையெடுக்கும்போது, அவரைக் காப்பாற்ற யாரேனும் முயன்றால், அவர்களையும் அடித்து விரட்டத் தயங்கக் கூடாது.

சுமந்திரனுக்குக் கூட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்படுவதுதான் நல்லது. ஏற்கெனவே கொழும்பு வாசியான அவருக்கு, சிங்கள சிநேகிதர்கள் வட்டத்தில் நிச்சயமாக ‘தியாகி’ பட்டம் கிடைக்கும். அவர்கள் தயவில் நாடாளுமன்றத்துக்குள் எளிதாக நுழைய முடியும். தமிழினத்துக்குச் செய்கிற துரோகத்தை, சிங்கள நண்பர்களுடன் சேர்ந்து வெளிப்படையாகவே செய்வது தான் சுமந்திரனுக்கும் நல்லது, தமிழ் மக்களுக்கும் நல்லது.

உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்

பாம்பொடு உடன் உறைந்தற்று_______

என்கிறார் வள்ளுவர்.

மனத்தளவில் ஒத்துப் போகாத ஒருவருடன் கூடி வாழ்கிற வாழ்க்கைக்கும், ஒரு பாம்புடன் ஒரே குடிசையில் சேர்ந்து குடித்தனம் செய்வதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பது அதன் பொருள். நச்சுப் பாம்புடன் சேர்ந்து இன்னும் எத்தனை நாள் குப்பை கொட்டப் போகிறது கூட்டமைப்பு?

இலங்கை அரசு செய்த இனப்படுகொலையும் மனித உரிமை மீறல்களும் அம்பலமானவுடன், வேண்டுமென்றே விடுதலைப் புலிகள் மீது பொய்ப்புகார்களைச் சுமத்தியது இலங்கை. புலிகளும் அத்துமீறினர் என்று குற்றஞ்சாட்டியது. ஐ.நா. மனித உரிமை ஆணையர் அலுவலகம் நியமித்த சர்வதேசக் குழு, அரசு – புலிகள் என்று இரண்டு தரப்பு மீதான புகார்கள் குறித்தும் விசாரித்தது. இந்த அறிக்கைதான் இந்த மார்ச் மாதம் ஜெனிவாவில் வெளியிடப்பட இருந்தது. இப்போது இந்தியா மற்றும் அமெரிக்காவின் துரோகத்தால் அந்த அறிக்கை வெளியாவது 6 மாதகாலம் தள்ளிப்போடப்பட்டிருக்கிறது.

இப்படியொரு நிலையில்தான், இலங்கையின் உள்நாட்டு விசாரணை சர்வதேசத் தரத்தில் இருக்கும் என்று உத்தரவாதம் தருகிறார் சுமந்திரன். குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அரசும் விடுதலைப் புலிகளும்! இரண்டு தரப்பையும் ஒரு மூன்றாவது தரப்பு – அதாவது சர்வதேசத் தரப்பு விசாரிக்க வழிவிடாமல், ‘இலங்கை அரசு மீதான புகார்களையும், விடுதலைப் புலிகள் மீதான புகார்களையும் இலங்கை அரசே விசாரிக்கும் என்று சொல்வது என்ன நியாயம்?

இந்த அடிப்படை அறிவு சுமந்திரனுக்கு இல்லாது இருக்கலாம்….

நமக்குக் கூடவா இல்லாமல் போய்விட்டது அது?

http://eeladhesam.com/?p=23541

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.