Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலைவனத்தின் நடுவே ஓர் அதிசய நகரம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாலைவனத்தின் நடுவே ஓர் அதிசய நகரம்! (வீடியோ இணைப்பு) [ திங்கட்கிழமை, 02 மார்ச் 2015, 07:16.50 மு.ப GMT ] mystical_oasis_001.jpgபெரு நாட்டில் உள்ள பாலைவன பகுதியின் நடுவே Huacachina என்ற அழகிய சோலை அமைந்துள்ளது.

பாலைவனம் என்றாலே மணல்மேடுகள் மட்டும் தான் இருப்பதை பார்த்திருப்போம். ஆனால் அதிசயமாக பெருவில் உள்ள இந்த வறண்ட வெப்ப நிலை கொண்ட இடத்தில், செழிப்பான சோலை ஒன்று அமைந்துள்ளது.

இந்த அழகிய சோலையில் அழகிய ஏரி அமைந்துள்ளது. மேலும் பனை மரங்கள், பூக்கள் என பூத்துக் குலுங்குகின்றன.

Mystical_oasis_002.jpg

இந்த இயற்கை அதிசயத்தை காண விரும்பும் சாகச விரும்பிகள் பலர் ஆண்டு தோறும் இங்கு சுற்றுலாக்காக படையெடுக்கின்றனர்.

இந்த குட்டி நகரத்தில் 96 குடியிருப்பாளர்கள் வசித்து வருகின்றனர். இங்கு கிராமிய ஹொட்டல்கள், கடைகள் மற்றும் நூலகம் கூட இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த சோலையின் நடுவே அமைந்துள்ள ஏரி போன்ற நீர்நிலையில் உள்ள தண்ணீருக்கு நோய் தீர்க்கும் பண்புகள் உள்ளதாக பல்லாண்டு காலமாக மக்கள் நம்பி வருகின்றனர்.

Mystical_oasis_003.jpg

Mystical_oasis_006.jpg

Huacachina என அழைக்கப்படும் இந்த மந்திர நகர மக்கள் இங்குள்ள மணல் வளத்தை கொண்டே தொழில் செய்து வருகின்றனர்.

இந்த நகரத்தில் அமைந்துள்ள அந்த ஏரி இயற்கையாகவே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ஏரியில் உள்ள நீருக்கு குணப்படுத்தும் தன்மை உள்ளதாக கருதும் மக்கள் இதனை புனிதமாக கருதி வருகின்றனர்.

Mystical_oasis_005.jpg

Mystical_oasis_007.jpg

இந்த ஏரி உருவானதற்கு பல கதைகள் அங்குள்ள மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது.

இந்நிலையில், இந்த அதிசய நகரத்தினை கலாச்சார பாரம்பரிய தளமாக கலாச்சார தேசிய நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும், இந்த மந்திர நகரத்தின் ஏரியில் உள்ள நீரானது எந்த காரணத்தினாலும் கானல் நீராக மாறாது என்று மக்கள் மத்தியில் தீவிர நம்பிக்கை நிலவுகிறது!

Mystical_oasis_008.jpg

Mystical_oasis_009.jpg

newsonews.com/

 

  • கருத்துக்கள உறவுகள்

பாலைவனச் சோலை...! அழகாய் இருக்கின்றது.... இணைப்புக்கு நன்றி பாஞ்ச்...!! :)

  • கருத்துக்கள உறவுகள்

பாலைவனத்தில் மணற் காற்று ஏற்பட்டு கிராமத்தை ஒன்றும் செய்யாதா ???

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்விற்கு நன்றி பாஞ்ச்.

அபுதாபியிலிருந்து 180கி.மி தூரத்தில் லிவா - Liwa என்ற பகுதியில் செயற்கையாக உருவாக்கப்பட்ட  பாலைவனச் சோலையும் நட்சத்திர ஓட்டல்களும் உள்ளன.. அனந்தாரா என்ற இன்னொரு பகுதியில் 'காஸர் அல் சராப்' என்ற அருமையான பாலைவனச் சோலை ஓட்டலும் உள்ளது..

துபாய் பாலைவனத்தினுள்ளே 'பாப் அல் சாம்ஸ்' என்ற பாலைவனச் சோலை ஓட்டலும் உள்ளது.. மாலையில் சென்றால் வண்ண வண்ண விளக்கொளியில், பலவகைப்பட்ட உணவுகளுடன் மாத்ர்களின் பெல்லி நடனத்தையும் பார்த்து வரலாம்..குடும்பத்தோடு தங்கலாம்

காசு, பணம், துட்டு,  டப்பு மட்டும் இருந்தால், எண்ணை வளம் இருக்கும் வரையில், உலகின் அனைத்து கவர்ச்சிகரமான வசதிகள் கொண்ட 'அமீரகம்' சொர்க்கமே..! :)

 

 

REvised_QASRALSARAB.jpg

 

007187-01-royal-pavilion-sunset-desert-v

 

pot.jpg?__SQUARESPACE_CACHEVERSION=13407

 

 

 

UAE_Abu_Dhabi_Qasr_al_Sarab_595.jpg

 

2014_tentripsauh_1_gallery.jpg

 

bab-al-shams-desert-resort.jpg

 

%D8%A8%D8%A7%D8%A8%20%D8%A7%D9%84%D8%B4%

 

jumeirah-bab-al-shams-luxury-dream-hotel

 

cn_image_3.size.qasr-al-sarab-desert-res

  • கருத்துக்கள உறவுகள்

இது 'மதினத் ஜூமைய்ரா' மாலும். ஓட்டல்களும்..

 

mj.jpg

 

7421385.jpg

 

 

Al-Qasr-Exterior.jpg

 

1019-Dar-Al-Masyaf-Exterior.jpg

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த எண்ணையும் எங்களுக்கு எதிரியாகிவிட்டது. ஈழத்தில் ஊரை அழிக்கிறது. பாலைவனத்தில் ஊரை உருவாக்குகிறது. smiley3678.gif

  • கருத்துக்கள உறவுகள்

Mystical_oasis_002.jpg

 

படமும், செய்தியும்... அழகு பாஞ்ச்.
இபாடியான.... பாலைவனச் சோலைகளை பார்க்க அதிசயமாக இருக்கும்.
அருகில் பல நூற்றுக் கணக்கான... கிலோ மீற்றருக்கு ஒரே மணல் பிரதேசமாக இருக்கும் போது.... 
குறிப்பிட்ட சில இடங்களில்... மட்டும் இவை எப்படி தானாக தோன்றுகின்றன என நினைக்க....
இயற்கையால்... பாலைவனத்தில் வாழும் உயிரினங்களுக்கு, கொடுக்கப் பட்ட கொடையாக இருக்குமோ... என எண்ணத் தோன்றுகின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாலைவனத்தில் மணற் காற்று ஏற்பட்டு கிராமத்தை ஒன்றும் செய்யாதா ???

உங்கள் சந்தேகத்திற்குப் பதில் எழுதக் காத்திருந்தேன்.... இன்றுவரை அங்கு எதுவும் நடக்கவில்லையாம். smiley1120.gif

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.