Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதி சக்திவாய்ந்த படகுகளை புலிகள் பயன்படுத்தினார்களா

Featured Replies

வடமராட்சி கடற்சமரில் அதி சக்திவாய்ந்த படகுகளை புலிகள் பயன்படுத்தினார்களா?

[12 - November - 2006] [Font Size - A - A - A]

வடமராட்சிக் கடற்பரப்பில் கடந்த வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற கடற்சமரில், கடற்புலிகள் மிகவும் சக்திவாய்ந்த படகுகளைப் பயன்படுத்தினார்களா என்ற கேள்வி படையினர் தரப்பில் எழுப்பப்பட்டுள்ளது.

இந்தக் கடற்சமரில் கடற்புலிகளால் பயன்படுத்தப்பட்ட படகுகள் அதி சக்திவாய்ந்தவையாக இருந்ததுடன் அவை நவீனரக ஆயுதங்களையும் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இத்தகைய படகுகளை கடற்புலிகள் இதற்கு முன்னர் நடைபெற்ற கடற்சமர்களில் பயன்படுத்தவில்லை எனவும் தெரிய வருகிறது.

இதேநேரம் இந்தச் சமரில் கடற்படையினருக்கு உதவ வந்த ஹெலிகொப்டர் மீதும் கிபிர் மீதும் கடற்புலிப் படகிலிருந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டுமுள்ளன.

இந்தக் கடற்சமரில் கடற்படையினரின் தீவிர பாதுகாப்பு மிக்க பகுதிகளிலும் கடுமையான தாக்குதல்களை நடத்தி விட்டு கடற்புலிகள் மிக லாவகமாகத் தப்பிச் சென்றுள்ளனர்.

இந்தச் சமரில் இரண்டு டோரா படகுகள் மூழ்கடிக்கப்பட்டதுடன் ஒரு டோரா பலத்த சேதமடைந்து செயலிழந்துள்ளது.

இதேவேளை, கடற்புலிகள் பயன்படுத்திய நவீன ரகப் படகுகளை தாமும் அவதானித்ததாகவும் இதற்கு முன்னர் இத்தகைய படகுகளை தாம் கண்டதில்லை எனவும் சம்பவத்தை நேரில் பார்த்த வடமராட்சி கரையோரப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

http://www.thinakkural.com/news/2006/11/12...s_page15038.htm

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளின் இராசதந்திரம் யாராலும் விளங்கிகமுடியாதது.. அதனால்தானே உலகநாடுகள் அனைத்தும் முக்கின் மேல் கையை வைக்கின்றன.!

உண்மை யுத்தகளத்திலும் சரி, அரசியற் களத்திலும் சரி விடுதலைப்புலிகளின் அசைவுகள் ஆய்வுகளினால் வரையறுக்கப்பட முடியாதவையாக உள்ளன. நமது ஆய்வாளர்கள் இணையங்களிலும், ஊடகங்களிலும் 'இராணுவ ஆய்வுப்" பினாத்தல்களைச் செய்து கொண்டிருக்கின்றனரே தவிர அவர்களால் விடுதலைப் புலிகளின் எவ்வித நிலைப்பாட்டையும் சரியாக விளக்கிக் கொள்ளமுடியவில்லi. முடியாது. இறுதி யுத்தம் ஒன்று நடைபெற்ற பி;ன்னரே தெளிவுகள் தென்படும். அதுவரையும் பொறுத்திருப்பதைத் தவிர வேறொன்றும் கூறமுடியாது.

கடற்படையும் புறமுதுகிடத் தொடங்கி விட்டது.

கிபிராலை என்ன செய்ய முடியும்? ஒரு முடியையும் புடுங்க முடியாது.

மாரி காலம் முடியும் பொழுது எல்லாம் முடிஞ்சு சுதந்திர தமிழீழ பிரகடனம்.

http://www.tamilnaatham.com/articles/2006/nov/arush/11.htm

:D

கிபிரால ஒண்டும் புலிகளிடம் செல்வாக்கு செலுத்தமுடியாது ஆனால் பொதுமக்கள் மீது குண்டு வீசி அழிப்பார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது நடப்பது சண்டையில்லையா? ரமணன், குஞ்சன், வீரமணி, மகேந்தி, அறிவு என்று பல அனுபவமிக்க போராளிகள் சண்டை நடைபெறாமலா வீரமரணங்களைத் தழுவிக் கொண்டனர்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அங்கே திரைமறைவில் வியக்கதக்க,பலம்மிக்க பல முன்னெடுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.அதாவது எம் ஈழமண்ணில்.ஆகவே அங்கே நடப்பது ஆமை முட்டை போட்ட கதை .ஆனால் நாங்கள் இங்கு விமர்ச்சிப்பது,வாதாடுவது,வித

வழக்கமாக வள்ளங்களிலும் தோணிகளிலும் வந்து தாக்குதல் நடத்தினார்கள் என்று அறிக்கை விடும் லங்கா பாதுகாப்புச் செயலகம் என்ன இப்படிப் பேசுகிறார்கள்?????????????

வழக்கத்துக்கு மாறாக உள்ளதே.

ஏனப்பா இங்கையாரோ சொல்லிச்சினம் இலங்கை விமானப்படையிட்ட ஏவுகணைகள் இருக்கு அவை அசையும் இலக்குகளை தாக்கும் எண்டு.... ஏன் இப்ப அதுகள் வேலை செய்யுது இல்லையே...??? ஏன் அந்த ஏவுகணைகளாலை கடற்புலிகளின் படகுகளை அளிக்க முடியாமல் போனதாம்...???

µÂ¡¾ «¨Ä-4 ¦¾¡¼íÌõ §À¡Ð ±øÄ¡ °¸í¸ÙìÌÁ¡É

Å¢¨¼¸¢¨¼ìÌõ....

ஊடகங்களிலையும் இங்கையும் எழுதுறவையின்ரை கதையை பாத்தா...

சிறீலங்கா படைகளிட்டை இருக்கிறது எல்லாம் பலவீனமான விமானங்கள் படகுகள், ஏவுகணைகள் ஆயுதங்கள்.

புலிகளிட்டை இருக்கிறது எல்லாம் பலம் வாய்ந்தது.

அதாவது ஆயுத தளபாடரீதியில் புலிகள் சிறீலங்காவை விட பலமாக இருக்கிறார்கள். ஆனால் அதை உருபடியாக புலிகளிற்கு பாவிக்க தெரியாததல் தான் உயிர் இழப்புகள் வருகுது போல.

:D

எவ்வளவு பலமான ஆயுத தளபாடங்கள் இருந்தாலும் உயிரி இழப்புகள் வருவதை தவிர்க்க முடியாது என்று ஏதாவது தத்துவங்கள் பேசப்போகினமோ :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பனே முருகா!

ஓயாத அலைகள்-4 தொடங்கி எப்பவோ முடிஞ்சுது. ஆறுவருசத்துக்கு முதல் நடந்து முடிஞ்ச சமரை இனித்தான் தொடங்கப்போகுது எண்டு சொல்லிறீர். அடுத்த கட்டத்துக்குத் "தாவும்".

குறுக்ஸ்,

அவசரப்படாதையும். எங்கட பிரபல இராணுவ, அரசியல் ஆய்வாளர் அரூஸ் அடுத்தகட்டமா அப்பிடித்தான் ஆய்வுக்கட்டுரை எழுதுவார்போல கிடக்கு.

சிங்களவனுக்கு மேல்வீடு காலி எண்டு சொல்லிச்சொல்லியே எங்களுக்கு எல்லாம் காலியாப் போகுது.

  • தொடங்கியவர்

அப்பனே முருகா!

ஓயாத அலைகள்-4 தொடங்கி எப்பவோ முடிஞ்சுது. ஆறுவருசத்துக்கு முதல் நடந்து முடிஞ்ச சமரை இனித்தான் தொடங்கப்போகுது எண்டு சொல்லிறீர். அடுத்த கட்டத்துக்குத் "தாவும்".

குறுக்ஸ்,

அவசரப்படாதையும். எங்கட பிரபல இராணுவ, அரசியல் ஆய்வாளர் அரூஸ் அடுத்தகட்டமா அப்பிடித்தான் ஆய்வுக்கட்டுரை எழுதுவார்போல கிடக்கு.

சிங்களவனுக்கு மேல்வீடு காலி எண்டு சொல்லிச்சொல்லியே எங்களுக்கு எல்லாம் காலியாப் போகுது.

À¨¼Â¢É¨Ã மேற்கோள் காட்டி தினக்குரலில் வந்த செய்திக்கு கருத்து எழுதுறதை விட்டுவிட்டு அவர் அது சொல்லுவார் இவர் சொல்லுவார் என்று மேல்வீடுகாலி கவுட்டுக்குள்ளே காலி என்று நக்கல் பன்னுவதை நிறுத்துமோய்,

ஆவு ஊவுனா வந்துடுவிங்கள் ஏதோ சொல்லனும் என்றதுக்காக நீர் சொன்ன கருத்துக்கும்

மேல இணைச்சு இருக்குற செய்திக்கும் என்ன தொடர்பு?

ஊடகங்களிலையும் இங்கையும் எழுதுறவையின்ரை கதையை பாத்தா...

சிறீலங்கா படைகளிட்டை இருக்கிறது எல்லாம் பலவீனமான விமானங்கள் படகுகள், ஏவுகணைகள் ஆயுதங்கள்.

புலிகளிட்டை இருக்கிறது எல்லாம் பலம் வாய்ந்தது.

ஆயுதங்கள் இருக்கிறது முக்கியம் இல்லை... அது யாரிட்ட இருக்கு எண்டுறதுதான் முக்கியமானது... :rolleyes:

அப்பிடியும் நீங்கள் சொல்லுறமாதிரிப்பாத்தாலும் ஆறுநாள் யுத்தத்திலை இஸ்ரேல் வெண்டு இருக்க முடியாது.... அதேபோல சேர்பியாவிலை அமெரிக்கனை அடிச்சு துரத்தியும் இருக்க ஏலாது... :P :P :P

குறுக்ஸ்,

அவசரப்படாதையும். எங்கட பிரபல இராணுவ, அரசியல் ஆய்வாளர் அரூஸ் அடுத்தகட்டமா அப்பிடித்தான் ஆய்வுக்கட்டுரை எழுதுவார்போல கிடக்கு.

சிங்களவனுக்கு மேல்வீடு காலி எண்டு சொல்லிச்சொல்லியே எங்களுக்கு எல்லாம் காலியாப் போகுது.

சும்மா ஒரு கதைக்கு கேக்கிறன் எங்கட் தலைவர் ஒருவேளை சிங்களவனுக்கு தலைவராக இருந்து இருந்தால் உங்கட ,எங்கட நிலமை எல்லாம் எப்பிடி இருக்கும் எண்டு ஒருக்கா கற்பனை செய்து பாருங்கோவன்

உண்மை என்ன எண்டு விளங்கிற மாதிரி இருகா இல்லையா...?? :D:D:D

ஓம் உண்மை என்னவென்று நல்லா விளங்கியிருக்கு என்று வடிவா தெரியுது... ஆய்வு செய்வதாக எழுதுறவையின்ரை நிலையே அப்படி எண்டா மற்றவைக்கு எந்தளவிற்கு உண்மை விளங்கியிருக்கும் என்று சொல்லாவா வேணும்.

இராணுவப் பேச்சாளர் இளந்திரயனை மேற்கோள் காட்டி கடந்த வாரம் வடமராட்சிக் கடலில் நடந்த சமர் பற்றி இந்துஸ்தான் ரைம்ஸ் இல எழுதப்பட்டது, புலிகள் டோவ்ரா படகிற்குள் ஏற முயற்சித்த வேளையில்தான் வீரச்சாவடைந்தனர் என்று. சண்டைக்களத்தில் ஆயுத தளபாடங்களை எடுப்பதற்கு எந்தளவு விலையை போராளிகள் குடுக்கிறார்கள் என்பது பற்றி கவனம் இல்லை. எதிரிக்கு தலையிடி வரப்போவது பற்றின மட்டம் தட்டலும் கிளு கிளு எழுத்துக்களும் தான் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.

இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் தொழில்நுட்ப பொருளாதார உதவிகள் உள்ள பின்னணியில் தான் உறுதியான படை வீரர்களோடு இஸ்ரோல் 6 நாட் போரில் வெற்றி பெற்றது. அந்த 6 நாட் போரில் இஸ்ரேலின் வான்படை அரபியர்களின் வான்படையை விட தொழில்நுட்பத்தில் உயர்நிலையில் இருந்ததால் தான் எண்ணிக்கையில் பலவீனமாகவும் மற்றும் தரைப்படை கடற்படையில் ஆயுதரீதீயில் ஒப்பிடக்கூடியரீதியில் இருந்த இஸ்ரேலால் வெற்றி கொள்ள முடிந்தது. அதாவது எதிரிகளால் சூழப்பட்டு எண்ணிக்கையில் குறைந்த தொகையை கொண்ட இஸ்ரோல் தொழில்நுட்பத்திற்கு முன்னுரிமை கொடுத்து அதன் மூலம் மேலாண்மை பொற்றுக் கொண்டது ஆரம்பகாலத்திலேயே. அதை தொடர்ந்து இன்றுவரை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது பல பில்லியன் டொலர் வருடாந்த பஜெட் மூலம்.

அத்தோடு இஸ்ரேலின் அனைத்து படைத்துறையினரும் எண்ணிக்கையில் குறைவு என்றாலும் உலகில் மிகவும் உறுதியான திடசங்கர்ப்பம் கொண்ட தந்திரமான படைகள் என்ற பெயர் பெற்றவர்கள். அவர்களது தந்திரங்களிற்கும் உறுதிக்கும் அர்பணிக்கும் மேலும் பல ஆயிரம் மடங்கு பலம் சேர்க்கும் வகையில் அவர்களிடம் உயர் தொழிநுட்பமும் உண்டு. அவர்களால் அவற்றை சொந்தமாக ஆய்வு செய்து தயாரிக்கும் பொருளாதார (மேலதிகமாக அமெரிக்க உதவி மாத்திரம் வருடத்திற்கு 2 பில்லியன் டொலர்களிற்கு மேற்பட்டது) தொழிநுட்ப பின்புலம் இருக்கு.

விடுதலைப் புலிகளின் தலமையிடம் சிறந்த தந்திரங்கள் இஸ்ரேலைவிட விட அர்பணிப்போடு போராடும் போராளிகள் இருக்கிறார்கள். ஆனால் ஆயுதங்கள் தொழிநுட்பங்கள் என்று வந்தால் பாரிய இடவெளி எதிரியோடு ஒப்பிடும் பொழுது. இதற்கு விலையாக போராளிகளின் உயிரும் அங்கங்களும் களத்தில் ஒவ்வொரு சமரிலும் போய்க் கொண்டிருக்கிறது என்பது மறுக்கப்படுகிறது மறைக்கப்படுகிறது எமது பன்னாடைகளால். மிகவும் சிறுபிள்ளைத்தனமாக கைப்பற்றிய 1...2 ஆயுதத்தை வைத்து எதிரிக்கு பாரிய தலையிடி என்ற முடிவுரைகள் எழுதுபவர்கள். நகச்சுவையாக இஸ்ரேலோடு பொருத்தமற்ற முறையில் கற்பனையில் ஒப்பீட்டு கொக்கரிப்பவர்கள்.

உதாரணத்திற்கு

மாவீரன் லெப் கேணல் அக்பர் எவ்வாறு வீரச்சாவு அடைந்தார் என்று விளங்கியிருந்த தால் எமது தொழில்நுட்ப பலவீனங்கள் புரியும். அவர் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவடைந்தது என்ன ஒரு விபத்தா இல்லை அவருடைய சாதகத்தின் படி கூடாத காலமா? அதைப்பற்றி எழுதி தொழிநுட்பரீதியில் நாங்க எந்தளவிற்கு பின்னுக்கு நிக்கிறம் அதாலை வாற இழப்புகளிற்கு புலம்பெயர்ந்தவர்கள் தொழிநுட்பரீதியில் உதவவேணும் என்ற கருத்தியலை உருவாக்கிப் போடாதேங்கோ. மாரிவரும் சிங்கள காலாற்படை பாவனை நிலையில் கவச வாகனங்களையும் டாங்கிகளையும் குடுக்கப் போகுது என்று அங்காலாயுங்கோ.

சிங்களவன் தந்திரமாக புலிகளிடம் வலுவான படகுகள் இருக்கு என்று சொல்லி தான் கடலில் மேலாதிக்கத்தை தொழில்நுட்பரீதியில் மேலும் வலுப்படுத்துவதற்கான கொள்வனவுகளில் ஈடுபடுவதற்கான நியாயப்பாட்டை உருவாக்க எழுதுகிறான். அதை தூக்கி வைத்து இவை கனவு காணீனம். எமது மோசமான தொழில்நுட்ப பற்றாக்குறையை தலமையின் தந்திரமும் போராளிகளின் அர்பணிப்பும் இலவசமாக ஈடுசெய்யவில்லை. பெறுமதிவாயந்த போராளிகளின் துணைப்படைகளின் மக்களின் உயிர்களும் அங்கங்களும் தினம் தினம் விலையாக கொடுக்கப்படுகிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எமது சனத்தொகையோடு ஒப்பிடும் பொழுது இவ்வாறு தொடர முடியாது தொழிநுட்பத்தின் மூலம் இஸ்ரேல் போல் ஈடு செய்யவேண்டும். அதாவது இன்று உள்ள எதிரியை விட பலவீனமான தொழில்நுட்ப நிலையில் இருந்து தொழிநுட்பரீதியில் முதலில் சமபலம் பெற வேண்டும். அத்தோடு நின்றுவிடாது அடுத்ததாக தொழில்நுட்பரீதியில் மேலாண்மை பெற முயற்சிக்க வேண்டும். அதுவே தமிழீழத்தினதும் எமதினத்தினதும் இருப்பை உறுதி செய்யும்.

எனவே அனாவசியமற்ற முறையில் புலிகள் தொழிநுட்பரீதியில் சிறீலங்கா படைகளைவிட பலமாக இருக்கிறார்கள் என்று ப+ச்சாண்டியை நிறுத்துங்கள். அதை அடைய வேண்டியதன் அவசரத்தை முக்கியத்தை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சியுங்கள். அது எமது கைகளில் தான் இருக்கிறது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா போல் எமக்கு ஒருவரும் இல்லை. அது தான் இன்றய கசப்பான உண்மை நிலை.

:D இதிலை ஒரு விசயம் நல்லா விளங்குது.. புலிகள் ஆயுதங்களுகாக பறக்கிறார்கள் எண்றால் அது ஒரு காலத்தில் உண்மையானதாக இருந்து இருக்கலாம்... தொழில் நுட்பங்கள் குறைபாடுகள் கூற ஒரு பங்கிற்கு சரியாக இருகலாம்... ஆனால் பன்னாடை தனமாய் கதைப்பவர்களுக்கு அது சரியாக எந்த அளவில் என்பது புரியாமல் இருப்பது ஆச்சரியமாக இல்லை...

புலிகளின் குறைபாடுகள் எண்று பலவீவங்களை ஊதிப்பெருதாக்கி அதையே எங்களின் தோல்வி எண்று ஒத்துக்கொள்ளும் மிகப்பலமான நிலையில் தமிழர்கள் இல்லை... முல்லைத்தீவு சண்டை என்பதோ அதுக்கு பின்னரான சண்டைகளில் இளப்புக்கள் குறைக்கப்பட்டு குறிப்பாக தோல்விகள் இல்லை என்னும் அளவுக்கு கொண்டு வரப்பட்டு காலம் பத்தாண்டுகள் ஆகிவிட்டது...

கடலில் டோறாவில் புலிகள் களட்ட எண்று ஏறிய 23மீமீ பீரங்கிதான் மிகப்பெரியது எண்றால் அதை புலிகள் முன்னர் கொண்டு இருக்கவில்லை இல்லை அதுகாக மட்டும்தான் அந்த படகில் ஏறி இருப்பார்கள் என்பது எல்லாம் இப்போதும் கிந்துஸ்தான் கதைகளில் ஒண்றுதான்... இதே 23மீமீ ரக ஒலிகண் வகை பீரங்கிகள் 1991ம் ஆண்டு ஆனையிறவு சண்டைகளில் புலிகளால் பயன் படுத்த பட்ட ஒண்று....

அதை பிடிக்க வேணும் என்பது நோக்கமாக இருக்கும் எண்டால் முல்லைத்தீவு சண்டைகளில் சங்காய் ரக கப்பலை தாட்டபின் சுழியோடிகளைவிட்டு களட்டியதுபோல புலிகளால் கைப்பற்றி இருக்க முடியும் என்பதை விளங்கிக்கொண்டால் சரியானதாக இருக்கும்

இதேவிட புலிகளால் டோறாப்படகு கைப்பற்ற முயண்ற வேளையில் தாக்கி அளிக்க பட்டு இருக்கலாம் என்பது சரியானதாக இருக்கும்...

இஸ்ரேல் பற்றியும் கேட்க்க வேண்டும் எண்று ஆவல் அமெரிக்க தொழில் நுட்டம் கொன்ட இஸ்ரேல் எப்படி கமாசிடம் லெபணாலில் தோற்றுப்போனது என்பதையும் இங்கை விளக்கமா சொல்லுங்கோவன் கேப்பம்....

புலிகளிடம் சிறீலங்காவை விட தொழில்நுட்ப மேலாண்மை இருப்பதான ஒரு மாயயை எற்படுத்துவது பற்றித்தான் எழுதப்படுகிறது. 1990களில் இருந்த புலிகளோடு ஒப்பிடும் பொழுது இன்றய புலிகள் தொழில்நுட்பரீதியில் பலமாக இருக்கிறார்கள் என்பது கன்றுக்குட்டித்தனமான வாதம். அன்றும் இன்றும் எதிரிக்கும் புலிகளிற்கும் இடையில் தொழில்நுட்பரீதியில் பாரிய இடை வெளி தொடர்கிறது என்பதற்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். அந்த இட வெளியை நிவர்த்தி செய்து வெற்றியை பெறுவதற்கும் களத்தில் எதிரியிடம் இருந்து ஆயுத தளபாடங்களை பெற்றுக் கொள்ளவும் போராளிகளின் அர்ப்பணிப்புகளும் தந்திரங்களும் தான் உதவுகிறது என்பது புலம்பெயர்ந்தவர்களிற்கு உறுத்தும் வகையில் தொடர்ச்சியாக சொல்லப்பட வேண்டும். எதிரி எப்பவும் தொழில்நுட்பத்தில் பல மடங்கு மேலோங்கித்தான் இருக்கிறான் என்பது தான் உண்மை. அன்று 50 கலிபருக்காக 1 போராளி வீரச்சாவடைந்தார் என்றால் இன்று 5 பேர் டோவ்ரா வையோ அதில் உள்ள உபகரணங்களையோ கைப்பற்ற முயன்று இறக்கிறார்கள் என்ற அவலம் தொடர்கிறது. புலிகளிடம் டோவ்ராவை விட சக்த்திவாய்ந்த படகுகள் இருந்தால் உயிரிழப்புகளை தவிர்த்து எதிரியின் வளங்களை அழிப்பார்களே அன்றி பல உயிர்களை கொடுத்து கைப்பற்றிக் கொள்ள முயற்சிக்க மாட்டார்கள்.

இந்துஸ்தான்ரைம்ஸ் எழுதியது புலிகள் டோவ்ரா படகில் ஏற முயன்ற பொழுது தான் இழப்புகள் வந்தது என்றே அன்றி அதில் உள்ள 23 மிமீ பீரங்கியை கழட்ட என்று பன்னாடைத்தனமாக எழுதவில்லை. அதை இங்கு நான் மேற்கோள் காட்டியதன் நோக்கம் போராளிகள் இன்றும் ஆயுத தளபாடங்களை எதிரியிடம் இருந்து கைப்பற்றுவதற்கு கொடுக்கும் விலைகளை உணருங்கள் என்று.

புலம் பெயர்ந்தவர்களை நோக்கி புலிகளிடம் தொழிநுட்ப மேலாண்மை இருக்கு என்று பூச்சாண்டி காட்டி எழுதி என்ன பயன்? அவர்களை நம்பிக்கையோடு போர்களத்திற்கு அனுப்ப தயார்படுத்துவதாக புருடா விடப்போறியளா? அல்லது எதிரிக்கு இந்த பன்னாடைகள் செய்யாத ஆய்வில இருந்து தான் புலிகளின் அப்பட்டமான தொழிநுட்ப பலவீனங்கள் தெரியவில்லை என்பது தீக்கோழிதனம். எமது அப்பட்டமான தொழில்நுட்ப பலவீனங்களால் வரும் போராளிகளின் இழப்புகள் பற்றி எழுதி புலம்பெயர்ந்தவர்களை தமது கடமையை உணர வைக்க வேண்டியது தான் இன்றய தேவை. நாம் பலமாக இருக்கிறோம் என்று கதை அளந்தால் அதையே ஆதாராமாக தூண்டுதலாக வைத்து தன்னை இன்னும் ஆயுத தளபாடரீதியில் தொழிநுட்பரீதியில் பலப்படுத்துவதற்குரிய வளங்கள் பின்புலங்கள் சிறீலங்காவிற்கு தாராளமாக உண்டு. சிறீலங்காவிற்கு எந்தளவு கடன் இருந்தாலும் எந்தளவு ஊழலில் இருந்தாலும் அவர்களால் செலவிடக் கூடிய பணத்தொகை பலமடங்கு அதிகம். மேலும் அரசாங்கங்களிற்கு இடையிலான உடன்பாடு மூலம் நியாவிலையில் உயர்தொழிநுட்ப ஆயுத தளபாடங்கள் பெற்றுக் கொள்ளுவார்கள்.

புலிகளின் நிலை அவ்வாறு இல்லை, எதிரியோடு ஒப்பிடும் போது மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட பொருளாதார வளங்கள், ஒரு அங்கீகரிக்கப்பட்ட நாடு போன்று நேரடியாக சந்தையில் வேண்ட முடியாத நிலை, அதாவது கறுப்புச்சந்தையில் மட்டுப்படுத்தப்பட்ட தெரிவுகள், அதை களத்திற்கு பாதுகாப்பாக கொண்டு சேர்ப்பது என்று ஏகப்பட்ட சிக்கல்கள். இன்று வெற்றிகள் போராளிகளின் இழப்புகளால் அர்பணிப்புகளால் உறுதி செய்யப்படுகிறது. ஆனால் அவ்வாறு தொழில்நுட்பங்களால் ஆயுத தளபாட வலுக்களால் தவிர்க்கக்கூடிய இழப்புகளை தொடர முடியாது. அந்த அவல நிலையில் உள்ள ஆபத்துகள் பற்றி ஒவ்வொருவரும் உணர்ந்து அதை நிவர்த்தி செய்ய முயற்சிக்க வேண்டியது அத்தியாவசியமான ஒன்று. எனவே புலிகள் தொழிநுட்பரீதியில் பலமாக இருக்கிறார்கள் என்ற வே* ஆட்டக் கதைகளை நிறுத்துங்கள்.

கமாஸ் ஒரு நாட்டின் தேசிய இராணுவமாக தனது கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களை காப்பாற்றுவதற்கான மரபுவழியுத்தத்தில் போராடி இஸ்ரேலை வெல்லவில்லை. கமாஸ் ஒரு resistance அமைப்பாக ஒரு கரந்தடி படையாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த முடியும் இழப்புகளை உருவாக்க முடியும் அங்குள்ள இயல்பு வாழ்கையை சீர்குலைக்க முடியும் என்று மட்டுமே காட்டியுள்ளது. அதை இஸ்ரேல் வென்ற 6 நாட் ஆக்கிரமிப்பு நோக்கு கொண்ட மரபுவழி யுத்தத்தோடு ஒப்பிடுவது நகச்சுவையானது. :D

புலிகளின் மிகப்பெரிய பலம் தமிழீழ கடற்படைதான் (கடற்புலிகள்) அவர்கள் இப்பொழுதுதான் களத்தில் இறங்கியுள்ளார்கள் எனிதான் தெரியும். ஒரு நிமிடத்திர்க்கு 330 எறிகணைகள் பொளிந்துதள்ளும் போது தெரியும்.....

கடலிலே காவியம் படைப்பவர்கள்

இண்றுவரைக்கும் புலிகள் தங்களை வளர்க்க வில்லை இப்போதுதான் இராணுவத்திடம் இருந்து ஆயுதங்களையும் தளவாடங்களையும் கைப்பற்றி இனித்தான் இறுதிப்போருக்கு போகப்போகிறார்களாம்... வேடிக்கை என்ன எண்றால் அதுக்கு இன்னும் இருபது வருசம் வேணும்...

இனிவருவது இறுதிப்போர் எண்று புலிகள் சும்மாங்காச்சும்தான் சொல்கிறார்கள் போல கிடக்கு...

23மீமீ பீரங்கையையோ இல்லை டோறாவயோ கைப்பற்றுவது என்பது இப்போது தங்களை பலப்படுத்த என்பது சரிதான் அது ஆயுதங்களுக்காக அல்ல எதிரிக்கு ஆற்றலை நிபிப்பதுக்காக எனபது விளங்கிக்கொள்ள கொஞ்சம் கூடுதலான அறிவு வேணும்... இதுவே எதிரிக்கு ஒரு பயத்தை குடுக்க வேணும் என்பதுதான் காரணி...

இதோடு இங்கை சொல்லவரும் விடயம் புலிகள் போராட்டம் என்பது கடந்தகாலங்களைப்போல சமாதானப்பேச்சுக்களும் பின்னர் ஆயுதங்களுக்காக சண்டையை பிடிச்சு ஆயுதங்களை எடுத்து பின்னர் ஒரு ஓய்வுக்காக இன்னும் ஒரு சமாதானம் வரும் பின்னர் தொழில் நுட்பத்துக்காகவும் ஆயுதத்துக்காகவும் மீண்டும் சண்டை எண்டு ஒரு சுழர்ச்சியில் வரும் எண்று இங்கை மறகளண்டுப்போய் சொல்லுறது தெரியுது... ஆனால் உண்மை இதைவிடவும் வேறாகத்தான் இருக்கு...

இலங்கை அரசாங்கத்தியும் விட சிறப்பாக நிறுவாக இயந்திரத்தை கட்டி எழுப்பி சிறப்பான செயற்திறனையும் நிறூபித்து வரும் புலிகள் தொழில் நுட்பத்தில் பிந்தங்கித்தான் போய் இருக்கிறார்கள்... என்பது சிரிப்பை மட்டும்தான் வரவளைக்கும்...

மற்றது மாஸ் ஒண்றும் கறந்தடித்தாக்குதல் மூலம் தென்லெபணானில் இஸ்ரேலுக்கு தலைவலியை குடுக்க வில்லை.... 22 நாள் கடும் போரிட்டுத்தான் இந்த தோல்வியை இஸ்ரேல் வசமாக்கினார்கள்...

ரொம்பதான் -சண்டைபோல..!!

இலங்கையின் பரப்பளவிற்கும்...

அதன் சனத்தொகைக்கும்....

அது சந்தித்து நிற்கும் - எதிர்ப்பு..

அதுதான் புலிகள் ...

எந்த ஒரு நாடும்

சந்திதிருக்க முடியாத - ஆபத்து!

இறமையுள்ள நாடு என்று - தம்மை தாமே..

சொல்லிக்கொள்பவர்களூக்கு - எதிராய்

அந்த நாட்டின் -மொத்த படை பலத்துடனொப்பிடுகையில்

எல்லோர்கணிப்பு படி..

20% வீதமானவர்கள் - எதிரிகளாய் இருப்பது!

மதும்படி தொழில் நுட்பம் எல்லாம்...

என்ன சொல்ல...

இன்னுவரை -

ரேடாரில் புலிகள் விமானம் புள்ளியாய்

தெரிந்தது - என்று அவர்கள் சொல்லுற நிலமைலதான்

இருக்கோ - என்னமோ!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.