Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விசாரணை எனும் மாயமான்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விசாரணை எனும் மாயமான்!

தமிழரின் தேசிய இனப்பிரச்சினை விவகாரத்தைத் தமது பௌத்த சிங்கள மேலாதிக்க ஆணவப் போக்கில் கையாண்டு, தமிழரை அடக்கி, ஒடுக்கித் "தீர்த்து"க் கொள்ளலாம் என்று அண்மைக்காலம் வரை மனப்பால் குடித்துக் கொண்டிருக்கும் தென்னிலங்கையின் நினைப்பில் கனவில் மண் விழுந்து விட்டது. ஒக்ரோபர் 11 ஆம் திகதி முகமாலையில் அரச படைகளுக்கு ஏற்பட்ட பின்னடைவுடன் காற்று தமிழர் தரப்புக்கு விடுதலைப் புலிகளுக்கு சார்பாக வீசத் தொடங்கிவிட்டது போலும்.

களமுனையில் தோல்வி அல்லது பின்னடைவு மற்றும் ஆங்காங்கே இடம்பெறும் அசம்பாவிதங்களினால் கெட்ட பெயர் என்று அரசுத் தரப்பின் "கீர்த்தி" உள்நாட்டிலும் சரி, சர்வதேச மட்டத்திலும் சரி சாய்ந்து கொண்டிருக்கின்றது.

கிளிநொச்சி வைத்தியசாலை மீது குண்டு வீசி ஐந்து அப்பாவிகளைக் கொன்றமை, வாகரையில் அப்பாவி அகதிகள் தஞ்சம் புகுந்திருந்த பாடசாலை மீது கண்மூடித்தனமாக ஷெல், பீரங்கி மற்றும் பல்குழல் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி ஐம்பதுக்கும் அதிகமானோரைக் கொன்றொழித்தமை, கடந்த வியாழனன்று வடக்குக் கடலில் பின்னடைவைச் சந்தித்தமை, கடந்த வெள்ளியன்று யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என். ரவிராஜ் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டமை....... என அரசுத் தரப்புக்கு "கீர்த்தியை" ஏற்படுத்திக் கொடுக்கும் பல்வேறு சம்பவங்கள் குறுகிய காலத்துக்குள் நடந்து முடிந்திருக்கின்றன.

வடக்கிலும், கிழக்கிலும் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் தினசரி நடக்கும் படுகொலைகள், ஆயுத அச்சுறுத்தல் செயற்பாடுகள் மற்றும் கொழும்பிலும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஏனைய இடங்களிலும் இடம்பெறும் ஆட்கடத்தல்கள், கப்பம் வசூலித்தல் போன்ற அராஜகங்களும் இவற்றுடன் சேர, கொழும்பு அரசின் "கௌரவம்" இப்போது கொடி கட்டிப் பறக்கிறது.

சட்டமும், ஒழுங்கும் சீர்குலைந்து வருகின்றன. அவற்றைக் கட்டுப்படுத்தும் உறுதியும், விருப்பும், திடசங்கற்பமும், இந்த அரசுக்கு இல்லை. அல்லது அதற்கான தகுதியும், திறமையும் அதற்கு இல்லை என்ற முடிவை எடுக்கும் நிலைக்குச் சர்வதேச சமூகம் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இந்தச் "சீத்துவத்தில்" நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலைச் சூத்திரதாரிகளை "ஸ்கொட்லண்ட் யார்ட்" புலனாய்வாளர்களின் உதவியுடன் கண்டுபிடிக்கப் போவதாக அரசுத் தரப்பில் பெரிதாகப் பீற்றிக் கொள்ளப்படுகின்றது. தென்னிலங்கை ஊடக ஊதுகுழல்களும் இந்தப் பிரசார நாடகங்களுக்கு நன்கு துணைபோகின்றன. ரவிராஜ் எம்.பி. சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு அடுத்த நாள் வெளியான இரண்டு பிரபல ஆங்கில நாளிதழ்கள், ரவிராஜ் கொலைச் சம்பவத்தை முன்னிலைப்படுத்தாமல் அதற்குப் பதிலாக "ரவிராஜ் கொலை தொடர்பாக ஸ்கொட்லாண்ட யார்ட் விசாரணை" என்றும் "ரவிராஜ் கொலை புலன்விசாரணையில் முக்கிய முன்னேற்றம்" என்றும் முன்பக்கத் தலைப்புச் செய்தி வெளியிட்டிருந்தன. ரவிராஜ் படுகொலைச் செய்தியைத் தருவதை விட அது விடயத்தில் அரசின் கீர்த்தியைக் காப்பாற்றுவதுதான் அவற்றின் துடிப்பாக இருந்தது.

இது போன்ற பல விசாரணை அறிவிப்புகளைத் தமிழர்கள் கண்டு களைத்து சளைத்து போய்விட்டார்கள். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசு பதவியேற்ற பின்னர் மாமனிதர் வி. விக்னேஸ்வரன் மற்றும் திருகோணமலையில் ஐந்து அப்பாவி மாணவர்கள் படுகொலை என்று தொடங்கி ரவிராஜ் எம்.பி. வரை அத்தகைய விசாரணை முஸ்தீபு பற்றிய ஆரவார அறி விப்புகள் சம்பந்தமான பட்டியல் நீளும்.

இத்தகைய குற்றங்களுக்கான விசாரணைகள் பயனுள்ளவையாக அமைய வேண்டுமானால் உண்மைக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, நீதி, நியாயப்படி விசாரிக்கப்பட்டு, உரிய வகையில் தண்டிக்கப்பட வேண்டுமானால் "மனமுண்டானால் இடமுண்டு" என்பது போல, அதற்கான திடசங்கற்பமும், பற்றுதியும் இந்த அரசுத் தலைமைக்கு இருக்க வேண்டும்.

ஆனால், இந்த அரசுக்கு அத்தகைய இதயசுத்தியுடன் கூடிய நோக்கம் உண்டா என்ற பலத்த சந்தேகம் தமிழர்களின் மனதில் ஆழ வேரூன்றியிருக்கும்போது, "ஸ்கொட்லண்ட் யார்ட்" புலனாய்வாளர்கள் மட்டுமல்ல, கடவுளே நேரில் வந்து விசாரணை நடத்த முற்பட்டாலும் கூட, இந்த இலங்கைத் தீவில் இத்தகைய குற்றங்கள் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படும் என்றோ, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என்றோ அல்லது இந்த அரசிடமிருந்து நியாயம் கிடைக்கும் என்றோ கிஞ்சித்தும் கூட எதிர்பார்க்க முடியாது.

திருகோணமலையில் ஐந்து அப்பாவி மாணவர்கள் கோரமாக கொடூரமாக தலைக்குப் பக்கத்தில் துப்பாக்கியை வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடங்கி, ஜோஸப் பரராஜசிங்கம் எம்.பி., ரவிராஜ் எம்.பி. படுகொலை வரை தமிழர்களுக்கு எதிராக ஆயுத வன்முறை கட்டவிழ்ந்த சம்பவங்கள் அனேகம். அல்லைப்பிட்டியில், வங்காலையில், செஞ்சோலையில், கிளிநொச்சியில், வாகரையில் என்று அப்பாவி மக்கள் கொத்துக் கொத்தாகக் கொன்றொழிக்கப்பட்ட கொடூரங்களாக இம்மண்ணில் அரங்கேறிய சம்பவங்கள் பலப்பல.

இவற்றில் எல்லாம் அல்லது பலவற்றில் நேரடிக் குற்றச்சாட்டு அரச ஆயுதப்படைகள் மீதும், அவற்றின் கண்காணிப்பு மற்றும் வழிகாட்டலில் இயங்கும் ஒட்டுப்படைகள் மீதும்தான் வீழ்ந்துள்ளன.

அவர்களில் யாராவது இதுவரை இக்குற்றச்சாட்டுகளுக்கான சட்ட, ஒழுங்கு விசாரணைகளில் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட்டனரா? குறைந்த பட்சம் விசாரணை முடியும் வரையாவது வேலையிலிருந்து இடைநிறுத்தும் நடவடிக்கையாவது ஒருவர் மீதேனும் எடுக்கப்பட்டதா? அவ்வளவும் ஏன், இத்தகைய சம்பங்கள் தொடர்பில் பிரதேசக் கடமைப் பொறுப்பின் அடிப்படையில் தன்னும் ஓர் அதிகாரிக்கேனும் குறைந்த பட்சம் கட்டாய இடமாற்றம் தன்னும் வழங்கப்பட்டதா?

வெலிகந்தையில் முஸ்லிம்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து அப்பிரதேச அதிரடிப்படை முகாம் அதிகாரியைக் கட்டாய இடமாற்றம் செய்ய முன்வந்த கொழும்பு அரசு, கடந்த ஓராண்டு காலத்தில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அனேக கொடூரங்களில் ஏதேனும் ஒன்றுக்காகவேனும் ஓர் அதிகாரியைத் தன்னும் இடமாற்றமேனும் செய்திருக்கின்றதா?

இந்தப் பின்னணியில்தான் வாகரையில் அப்பாவித் தமிழ் அகதிகள் கூட்டமாகக் கொன்றொழிக்கப்பட்ட சம்பவம் குறித்து விரைந்து விசாரணை நடத்தி, தவறிழைத்தோரை சட்டத்தின் முன் நிறுத்துமாறு இலங்கை அரசை அமெரிக்கா, பிரிட்டன், நோர்வே, ஐராப்பிய ஒன்றியம் மற்றும் ஐ.நா. ஆகியவற்றை உள்ளடக்கிய சர்வதேச சமூகம் கோரியிருக்கின்றது.

என்ன வேடிக்கை இது? போங்கள்!

-உதயன்

மாமனிதர் ரவிராஜ் மகிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட நண்பர் (personal friend) என்றும் கதை கட்டப்பட்டுள்ளது. அவர் moderate Tamil politician மற்றும் சிங்களம் போசுபவர் சிங்கள மக்களோடு நட்பை பேணியவர் என்பவை சரி. ஆனால் மகிந்தவின் தனிப்பட்ட நண்பர் என்ற புருடா ஏன்?

தனிப்பட்ட நண்பர் என்றால் ஏன் மரணவீட்டிற்கு போகவில்லை இதுவரை?

மகிந்த பழியில் இருந்து தப்பிக்க வெளிநாட்டு ஊடகங்களிற்கு திட்டமிட்டு புனைக்கதைகள் கசியவிடப்படுகிறது போலுள்ளது.

"His Tamil National Alliance party was regarded a proxy of the Tigers, but Raviraj was regarded a moderate who had never taken up arms.

He spoke Sinhalese and was a personal friend of President Mahinda Rajapakse, who has asked the foreign ministry to invite British police to help probe the killing."

http://news.yahoo.com/s/afp/20061112/wl_st...al_061112090222

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தனிப்பட்ட நண்பர் என்றால் ஏன் மரணவீட்டிற்கு போகவில்லை இதுவரை?

மகிந்த பழியில் இருந்து தப்பிக்க வெளிநாட்டு ஊடகங்களிற்கு திட்டமிட்டு புனைக்கதைகள் கசியவிடப்படுகிறது போலுள்ளது.

அரசியலுக்காகவும், பதவிக்காகவும் தனிப்பட்ட நண்பர்களையும் கொல்ல தயங்கமாட்டேன் என்று சொல்லவாறார் போல.!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.