Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரட்டைப் பிரஜாவுரிமை பெற 6 நிபந்தனைகள் விதிக்கும் அரசு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலில் வாக்களிக்கும் உரிமை உண்டு.

அரசியலில் ஈடுபடும் உரிமையும் உண்டு.

ஆனால் விரைவில் இரட்டை குடியுரிமைக் காரர் பாராளுமன்றம் செல்வதை தடை செய்யப்போகிறார்களாம்.

எனக்கு நியாயமாய் படுது.

உங்களுடைய எண்ணம் 
கொஞ்சம் புத்திசாலித்தனமா தெரிகிறது.
 
(நீங்க நல்லவரா கெட்டவரா ?  உண்மையிலேயே தமிழருக்கு நல்லம்  என்று கருதிதான் சொல்கிறீர்களா ? அல்லது சுறா பிடிக்க இறாலை காட்டுகிறீர்களா ?)
  • Replies 157
  • Views 8.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நம்புங்க ஸார் நான் ரொம்ப நல்லவன் :)

ஆனால் புலி சார்பு அரசியல்.... அது வேண்டாம் காணாமல் போனோரை தேடுதல் போன்ற விடயங்களையே கையில் எடுத்தால் -

நான் சொல்லவேண்டியதில்லை.

பெருமாள் சொன்ன மாரி உங்கள் மற்ற நாட்டு தூதரகமும் உதவ முடியாமல் போகும்.

இலங்கையில் அரசியல் அதுவும் தமிழ் சார்பு அரசியல் என்பது கத்திமேல் நடை.

புலத்தில் இருந்து கருத்தெழுதுவது போலாகாது :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மைதான் கிழவி,

எனக்குத்தான் விளக்கம் பத்தவில்லை.

இந்த கதிர்காமம் வரை நீளும் நாட்டுக்கு பிரஜா உரிமை எடுக்கும் முறையை ஒருக்கா சொல்லித்தாங்கோவன்.

சொறிலங்காவுடன் நிண்டு மாரடியாம நாங்களும் பிரஜா உரிமை எடுப்பம்.

அப்படியே செவ்வாய் கிரகம், யுரேனசிலும் எடுத்து வையுங்கோ, காணி நல்ல மலிவா போகுதாம் :)

ஊருக்கு ஊர் தெருவுக்கு தெரு கோயில்கள் உள்ளது. ஆனால், கடவுளை இன்னும் ஒருவரும் நேரடியாய் தரிசனம் செய்யவில்லை. அகக்கண்ணில்  மட்டும் கடவுளை உணர்கின்றார்கள். ஈழமும் இப்படித்தான். உலகு எங்கும் இல்லாத கடவுளை உருவாக்கி இல்லாத கடவுளின் அடிப்படையில் வாழ்க்கையை அமைத்தால், மனக்கண்ணில் தெரிகின்ற ஈழத்தின் அடியொற்றி வாழ்வதில் தவறு இல்லை.

நான் ஏற்கனவே கூறியுள்ளேன். உண்மையான பிரஜாவுரிமை அடுத்தவன் தந்து வாங்குவது அல்ல. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படியும் யோசிக்கலாமே? வடக்கு கிழக்கில் இருக்கும் தமிழர்களுக்கு உதவ வருடத்தில் சில நாட்களாவது அவர்களிடையே வாழ வேண்டியிருக்கும். நீங்கள் வெளிநாட்டுப் பிரஜையாக இருந்தால் விசாக் கெடுபிடி மட்டுமன்றி பணியாற்றக் கூடத் தடைகள் வரலாம்! இரட்டைப் பிரஜாவுரிமை இருந்தால் பயணிப்பதும் பணியாற்றுவதும் சுலபம். எனவே தனிப் பட்ட காரணங்கள் மட்டுமன்றி தமிழர் நலம் பேணும் காரணங்களுக்காகவும் இதைப் பயன் படுத்திக் கொள்வதில் தவறில்லை!

வடக்கு, கிழக்கு மக்களுக்கு உதவுவதற்கு சுலபமான வழி ஒன்று உள்ளது. சொறி லங்காவில் 25 இலட்சம் வைப்பில் இடாமல், உங்களது சொத்துக்கள் நில, புலங்களை ஏதிலிகள், வசதி குறைந்த தமிழர்களுக்கு தானமாகவோ, தற்காலிகமாகவோ வழங்கலாமே? சொறி லங்காவின் வங்கியில் வைப்பிலிடும் 25 இலட்சம் பணத்தை வசதியற்ற தமிழர் வியாபாரம் செய்வதற்கு மூலதனமாக வழங்கலாமே.

இரட்டைப்பிரஜாவுரிமை அடுத்தவருக்கு உதவுவதற்கு தேவையானத எனும் வாதம் நகைச்சுவையானது. உலகில் எத்தனை மில்லியன் தொண்டர்கள், மனிதநேயம் மிக்கவர்கள் இருக்கின்றார்கள். இவர்கள் ஆசியா தொடக்கம் ஆபிரிக்கா வரை உலகில் வெவ்வேறு நாடுகளில் வாழும் முன்பின் தெரியாத எத்தனை எத்தனை கோடி மக்களுக்கு உதவி செய்கின்றார்கள். உலகெங்கும் மனிதநேயம் மிக்கவர்களால் பில்லியன் கணக்கில் உதவி கொடுக்கப்படுகின்றது. இவர்கள் எல்லோரும் இரட்டைப்பிரஜாவுரிமை வைத்துக்கொண்டா இவற்றையெல்லாம் செய்கின்றார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் எனக்கு கடவுளிலும் நம்பிக்கை இல்லை. :)

தமிழ் ஈழம் அமைந்தாலும் - வெளிநாட்டு பிரஜைகள் அந்த அரசிடம் இரந்துதான் இரட்டை பிரஜா உரிமை பெற வேண்டும்.

கேளாமல் கிடைக்கும் பிரஜா உரிமை பிறப்பில் வந்தது மட்டுமே. அதை இழக்கும் வரை.

புலிகளின் சட்டக்கோவையில் புலம்பெயர் மக்களின் காணி உரிமைக்கு என்ன நிலை - என்பதை அறிவீர்கள் என நம்புகிறேன்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊருக்கு ஊர் தெருவுக்கு தெரு கோயில்கள் உள்ளது. ஆனால், கடவுளை இன்னும் ஒருவரும் நேரடியாய் தரிசனம் செய்யவில்லை. அகக்கண்ணில்  மட்டும் கடவுளை உணர்கின்றார்கள். ஈழமும் இப்படித்தான். உலகு எங்கும் இல்லாத கடவுளை உருவாக்கி இல்லாத கடவுளின் அடிப்படையில் வாழ்க்கையை அமைத்தால், மனக்கண்ணில் தெரிகின்ற ஈழத்தின் அடியொற்றி வாழ்வதில் தவறு இல்லை.

நான் ஏற்கனவே கூறியுள்ளேன். உண்மையான பிரஜாவுரிமை அடுத்தவன் தந்து வாங்குவது அல்ல. 

“உண்மையான பிரஜாவுரிமை அடுத்தவன் தந்து வாங்குவது அல்ல”

அருமை! உண்மையான பிரஜாவுரிமையை மற்றொன்றுக்காக தொலைத்தால், தொலைத்ததை அடுத்தவனிடம் அப்ளை பண்ணி வாங்க வேண்டியிருக்கு!

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு, கிழக்கு மக்களுக்கு உதவுவதற்கு சுலபமான வழி ஒன்று உள்ளது. சொறி லங்காவில் 25 இலட்சம் வைப்பில் இடாமல், உங்களது சொத்துக்கள் நில, புலங்களை ஏதிலிகள், வசதி குறைந்த தமிழர்களுக்கு தானமாகவோ, தற்காலிகமாகவோ வழங்கலாமே? சொறி லங்காவின் வங்கியில் வைப்பிலிடும் 25 இலட்சம் பணத்தை வசதியற்ற தமிழர் வியாபாரம் செய்வதற்கு மூலதனமாக வழங்கலாமே.

இரட்டைப்பிரஜாவுரிமை அடுத்தவருக்கு உதவுவதற்கு தேவையானத எனும் வாதம் நகைச்சுவையானது. உலகில் எத்தனை மில்லியன் தொண்டர்கள், மனிதநேயம் மிக்கவர்கள் இருக்கின்றார்கள். இவர்கள் ஆசியா தொடக்கம் ஆபிரிக்கா வரை உலகில் வெவ்வேறு நாடுகளில் வாழும் முன்பின் தெரியாத எத்தனை எத்தனை கோடி மக்களுக்கு உதவி செய்கின்றார்கள். உலகெங்கும் மனிதநேயம் மிக்கவர்களால் பில்லியன் கணக்கில் உதவி கொடுக்கப்படுகின்றது. இவர்கள் எல்லோரும் இரட்டைப்பிரஜாவுரிமை வைத்துக்கொண்டா இவற்றையெல்லாம் செய்கின்றார்கள்?

அதே ..............................................விளங்குபவர்களுக்கு  விளங்கினால் சரி .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லண்டனில் இருக்கும் எனது சில நண்பர்கள் இரட்டை குடியுரிமை வைத்திருக்கின்றார்கள் .அடிக்கடி நாட்டிற்கு போய் வருபவர்கள் தமிழ் மக்களுக்கு நல்ல விடயங்கள் பல செய்தும் வருகின்றார்கள் .இதுதான் உண்மையான யதார்த்த வாழ்க்கை. :o

நான் தமிழ் ஈழம் பிரஜையாக அங்கு போனாலும் போவேனே ஒழிய சொறிலங்காவிற்கு போகமாட்டன்  இது இணையத்தில் பச்சைக்கான வாழ்க்கை . :icon_mrgreen:

எனக்கு தெரிந்த தமிழர்களில் பெரும்பாலானோர் ஒரு குடியுரிமை மட்டும் வைத்துள்ளார்கள். சொறி லங்காவில் குடியுரிமை வைத்திருக்கவில்லை. ஆனாலும், மக்களுக்கு உதவியும் செய்கின்றார்கள். தமிழீழத்திலேயே இரட்டை குடியுரிமை பெறுவோம் என்று இவர்கள் நினைக்கவில்லை. மாறாக, சொறி லங்காவின் இரட்டை பிரஜாவுரிமை தேவையற்றது என்று வாழ்கின்றார்கள். இவர்களில் பலருக்கு யாழ் இணையம் என்று ஒன்று இருப்பதே தெரியாது. அப்படி என்றால் இவர்களுக்கு பச்சை எப்படி கிடைக்கின்றது? யதார்த்தத்துடன் வாழ்பவர்கள் சொறி லங்காவில் இரட்டைக்குடியுரிமை பெறுவது பற்றி அதிகம் அக்கறை காட்டுவது இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் எனக்கு கடவுளிலும் நம்பிக்கை இல்லை. :)

தமிழ் ஈழம் அமைந்தாலும் - வெளிநாட்டு பிரஜைகள் அந்த அரசிடம் இரந்துதான் இரட்டை பிரஜா உரிமை பெற வேண்டும்.

கேளாமல் கிடைக்கும் பிரஜா உரிமை பிறப்பில் வந்தது மட்டுமே. அதை இழக்கும் வரை.

புலிகளின் சட்டக்கோவையில் புலம்பெயர் மக்களின் காணி உரிமைக்கு என்ன நிலை - என்பதை அறிவீர்கள் என நம்புகிறேன்.

கருத்துக்கள் பின்வாங்கினால் ஒவ்வொரு முறையும் புலியிடம் தஞ்சம் கோருவது உங்கள் வாடிக்கையாக்கும்  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

உதவி செய்ய பிரஜா உரிமை தேவை எண்டு யாரும் சொல்லவில்லை. பிரஜா உரிமை சிலவற்றை இலகுவாக்கும்.

உதாரணத்துக்கு இலங்கையில் ஒரு NGO தொடங்கவோ not for profit அமைப்பையோ இலகுவில் தாபிக்கலாம்.

இது ஒரு நடைமுறை அனுகூலம்.

இதில் நகைக்க ஒன்றுமில்லை.

தன் தாய் நிலத்தில் தம் இருப்பை நிலநாட்ட, இஸ்ரேல் உருவாக முன்பே நாடுதிரும்பி தம் இருப்பை உறுதி செய்தனர் யூதர்கள்.

நாங்களோ போகமாட்டம், போறவையை விடவும் மாட்டோம், ஆனால் சிங்கள மயமாகுது என்று மாய்மாலம் மட்டும் போடுவோம்.

எமது மண்ணை நாம் நிரப்பாவுடின் வேறு யாரோ தான் நிரப்புவார்கள்.

பெருமாள் கருத்து வறுமையில் குசேலன் நீங்கள். என்னைப் பார்த்து கூவுவது செம காமெடி. நல்லா போற திரிக்குள் ஏனையா உங்கள் ஈபிடிபி குழப்பங்காசி வேலை?

இங்கு யூதனையும் எங்களையும் வச்சு குழப்பவேண்டாம் நாடே இல்லமால் வந்தவன் யூதன் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கே நான் புலிகள் பற்றி கதைக்கவில்லை. ஈழம் என்றால் புலிகள், போர், போராட்டம் எனும் அடிப்படையில் நீங்கள் விளங்கிக்கொண்டால் அது உங்கள் அறியாமை. புலிகளின் தோற்றம் 1970களில். ஆனால், ஈழம் என்பது அதற்கும் முன்பு உள்ளது. அது இலங்கையில் போர்த்துக்கேயர், ஆங்கிலேயர், ஒல்லாந்தரின் வருகைக்கு முன்பு இருந்தது. பிரித்தானியர்கள் நிர்வாக முறையில் மாற்றங்களை ஏற்படுத்தி சொறி லங்காவை உருவாக்கினார்கள். அதற்காக, ஈழம் என்பது அழிந்துவிட்டதாய் இல்லை. ஈழம் என்பது தொன்றுதொட்டு உள்ளது. நான் ஒரு ஈழத்தவன். எனது அப்பன், பாட்டன், முப்பாட்டன் ஈழத்தவர்கள். அவர்கள் சொறி லங்கர்கள் இல்லை. உங்கள் பாட்டன், முப்பாட்டனும் அவ்வாறே என்று நினைக்கின்றேன். உங்கள் முப்பாட்டன் இப்போது உயிருடன் இருந்தால் தான் ஒரு ஈழத்தவன் என்று தன்னை அடையாளப்படுத்துவாரா அல்லது தன்னை ஒரு சொறி லங்கன் என்று அடையாளப்படுத்துவாரா? பிரித்தானியன், சிங்களவன் தமது நன்மைகளுக்காக மாற்றங்களை செய்யும்போது அம்மாற்றங்களுடன் நாமும் உடன்படவேண்டும் என்று இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

நாடில்லாமல் வந்தவனில்லை, நாடில்லாமல் (எம்மைபோல்) ஆக்கப்பட்டவன் யூதன்.

பேரரசர் டேவிட் காலம் முதல், மோசஸ் காலத்திலிருந்து, ஆபிரகாம் தொட்டு இஸ்ரேலின் பூர்வ குடிகள் யூதர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ இப்போ இந்தியா என்று ஒரு நாடில்லை?

பாகிஸ்தான் இல்லை. பங்களத்கேசம் இல்லை?

அவுஸ்ர்ரெலியா இல்லை, நியூசிலாந்து இல்லை அப்படித்தானே?

ஏன் 300 வருடங்களோடு நின்று விட்டீர்கள்?

20000 வருடங்கள் பின் போனால் நாமெல்லாம் லெமூரியாவின் பிரசைகள் என்று சொல்லலாமே?

வரலாறு எம்மை இப்படித்தான் இப்போதைக்கு வகை செய்துளது. இன்னும் 100 வருடத்தில் ஈழம் மலரலாம். அப்போ ஓகே.

இப்போ இது வெறும் கற்பனை.

நீங்கள் போட்டிருப்பது emperor's clothes.

உங்கள் கண்மூடிதனமான கொள்கை பற்றை பார்த்து வியக்கலாம். ஆனால் இந்த imaginary virtual உலகில் சாதாரணத்களால் வாழ முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

நாடில்லாமல் வந்தவனில்லை, நாடில்லாமல் (எம்மைபோல்) ஆக்கப்பட்டவன் யூதன்.

பேரரசர் டேவிட் காலம் முதல், மோசஸ் காலத்திலிருந்து, ஆபிரகாம் தொட்டு இஸ்ரேலின் பூர்வ குடிகள் யூதர்கள்.

இப்ப யார் பழைய கதை கேட்பவங்கள் என்ன ஆதாரம் சும்மா கதை விடுவாங்கள் ................................

அதிகம் வேண்டாம் 400வருடங்களுக்கு முன் எங்கடை வாழ்க்கை அந்த புள்ளிக்கு போவதுக்கு திரணி அற்ற தற்போதைய  சமூக தலைமைகள் அதுக்கு வால் பிடியென உங்களின் வாதங்கள் . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு வக்கணையயாய் கதைக்கும் நீங்கள் ஊரில் தேசிய அடையாள அட்டை எடுக்காமல்லா இருந்தீர்கள்?

எந்த பாஸ்போர்டை பாவித்து நாட்டை விட்டு வெளியேற்னீர்கள்?

இப்போ forms இல் previous nationality எனும் இடத்தில் தமிழ் ஈழம் எண்டா எழுதுறியள்? எழுதினாலும் உலகம் ஏற்குமா?

ஏன் இந்தப் பொய்ப் பித்தலாட்டம் ?

  • கருத்துக்கள உறவுகள்

400 வருடங்களுக்கு முன் ஈழம் இருந்தது ஆனால் அது ஒரு geographic description.

இருந்த தமிழ் அரசுகள் யாழ்ப்பாண அரசு. வன்னி குறு நில அரசு. அப்போ உங்களுக்கு தேவைப்படுவது யாழ்ப்பாண அரசின் பிரஜா உரிமையா? தமிழ் ஈழத்தின் பிரஜா உரிமையா ?

ஒன்று பட்டு யாழ் முதல் கதிர்காமம் வரையான தமிழ் அரசு எல்லாலனுக்கு பின் இருக்கவில்லை.

அப்போ எல்லாளன் காலத்தில் இருந்து துவங்குவோமா?

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்கெல்லாம் பொலன்னறுவை அரசின் பிரஜா உரிமை வேண்டும்.

தயவு செய்து வரிசையில் வரவும் :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாருக்கெல்லாம் பொலன்னறுவை அரசின் பிரஜா உரிமை வேண்டும்.

தயவு செய்து வரிசையில் வரவும் :)

நான் சொறி லங்காவில் பிறந்தவன். எனது தந்தையும் அப்படியே... கனடாவில் பிரஜாவுரிமை பெற்றபோது Former Nationality என்ற கேள்விக்கு சொறி லங்கா.. sorry.. ஸ்ரீலங்கா என்று எழுத வேண்டியதாக போச்சு. ஈழம் என்று எழுத கனடாவில் முடியாதாம்.  

இந்த அடிப்படையில் இந்த சொறியனுக்கு பொலன்னறுவை சிட்டிசன்ஷிப் தர முடியுமா? எனக்கு தந்தால் பல முன்னாள் சொறியர்களும் வாங்க தயாராக உள்ளனர். 

Edited by sabesan36

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு வக்கணையயாய் கதைக்கும் நீங்கள் ஊரில் தேசிய அடையாள அட்டை எடுக்காமல்லா இருந்தீர்கள்?

எந்த பாஸ்போர்டை பாவித்து நாட்டை விட்டு வெளியேற்னீர்கள்?

இப்போ forms இல் previous nationality எனும் இடத்தில் தமிழ் ஈழம் எண்டா எழுதுறியள்? எழுதினாலும் உலகம் ஏற்குமா?

ஏன் இந்தப் பொய்ப் பித்தலாட்டம் ?

 கொழும்பு 4மாடியில் வேலை செய்த அனுபவ கேள்விகள் போல் உள்ளது  :D
 
ஆனாலும் uk விசாவில் தான் உள்ளே வந்தனான் uk citizenship எடுக்கும்போது திருக்குறள் புத்தகம் கையுடன் கொண்டு போய் அதன்மீது சத்திய பிரமானம் காணுமா  :)
  • கருத்துக்கள உறவுகள்

எல்லாள மஹாராஜா

பிரஜா உரிமை பிரிவு

அரச மாளிகை

ஜனநாதபுரம்

பொலன்னறுவை

என்ற முகவரிக்கு ஒரு விண்ணப்பத்தை புறாவின் காலில் கட்டி அனுப்பவும்.

மூன்று சுய ஓவியங்கள் கட்டாயம்

:)

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் இருக்கும் வரை தேசிய அடையாள அட்டை என்பது முக்கியமற்றது பன்சிகாவதையில் 100க்கும் 200க்கும் சோரம் போன சொறிலங்காவின் அரச இயன்திரம் .

  • கருத்துக்கள உறவுகள்

எந்த விசாவில் வந்ததெண்டதில்லை கேள்வி?

எந்த பாஸ்போர்டை காட்டி யூகே விசா எடுத்தனிங்கள்?

யூகே விசா அப்ளிகேசனில் நேசனாலிட்டி எனும் கேள்விக்கு என்ன பதில் போட்டனிங்கள்?

ஓல்/ஏல் பரீட்சைக்கு எந்த அடையாள அட்டையை காட்டின்னீங்கள்?

இப்படி யூகே நசுரலைசேசன் செய்யும் வரைக்கும் உங்கள் தமிழ் ஈழ பிரஜா உரிமையை மறந்து சிறீலங்கா பிரஜா உரிமையை ஏன் பயன்படுத்தினீர்கள்?

நம்மை அடக்கி ஆண்ட, சிங்களவன் கையில் எம் நாட்டை கொடுத்துப்போன மகராணிக்கு விசுவாசமாய் இருப்பேன் என்று ஒரு ஈழப் பிரஜை திருக்குறளில் அடித்து சத்தியம் செய்யலாமா ?

இது ராஜதுரோகம் இல்லையா? :)

உங்களின் ஒட்டு மொத்த கேள்விக்கும் எம் தேசத்தை இன்னொரு தேசம் அடிமைபடுத்தியுள்ளது அது சொறிலங்கா 

  • கருத்துக்கள உறவுகள்

நம்மை அடக்கி ஆண்ட, சிங்களவன் கையில் எம் நாட்டை கொடுத்துப்போன மகராணிக்கு விசுவாசமாய் இருப்பேன் என்று ஒரு ஈழப் பிரஜை திருக்குறளில் அடித்து சத்தியம் செய்யலாமா ?

இது ராஜதுரோகம் இல்லையா? :)

கடவுளா? ராணிய?கடவுள் எனில் பகவத் கீதை புத்தகம் என்னுடையது அதுவல்லவே திருக்குறள் தானே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.