Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பத்து இலட்சம் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துக : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மில்லியன் (பத்து இலட்சம்) கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது !
 
 
 
 மக்களை மையப்படுத்திய நீதிக்கான இயக்கம்
 சர்வதேசக் குற்றங்களைச் செய்தது சிறிலங்கா அரசே தான் 
• ஒரு உள்நாட்டு விசாரணை அமைப்புக்கான அரசியல் சூழல் இல்லை
 
 
இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை, மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள்  ஆகியவற்றைச் செய்துள்ளவர்களை, சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் மன்றத்தை வலியுறுத்தி நாடுகடந்த தமழீழ அரசாங்கம் ஒரு கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளது.
 
ஒரு மில்லியன் (பத்து இலட்சம்) கையெழுத்துக்களைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ள கையெழுத்து இயக்கமானது நியூ யோர்கில் ஐ.நா தலைமைகத்துக்கு முன்னாலும், ஜெனீவா ஐ.நா மனித உரிமைச்சபை முன்றலிலும் தொடங்கப்பட்டது.
 
நியூ யோர்க்கில் , முதற்கையெழுத்தினை அமெரிக்காவின்  முன்னாள் தலைமை அரசு வழக்கறிஞர் ராம்சே கிளார்க் அவர்கள் ஒப்பமிட்டு தொடக்கி வைத்திருந்தார். கையொப்ப மனுவினை நிவேதா ஜெயக்குமார், சூமியா கருணாகரன் ஆகிய இளந்தலைமுறையினர் வாசித்தனர்
 
'போர்க்குற்றங்கள், மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றுக்குப் முற்றிலும் எந்தப் பொறுப்பேற்பும் இல்லை என்பதால், சிறிலங்காவில் தற்போதைய சூழ்நிலை ஐ.நா.சாசனம் அத்தியாயம் 7 பிரிவு 39 இன் கீழ் 'அமைதிக்கான அச்சுறுத்தல்' தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையை உள்ளடக்கியதாக இருக்கிறது' என்று இந்த கையொப்ப மனுவில் தெரிவிக்கப்படுகிறது. 
 
இந்த மனு தமிழ், சிங்களம், ஆங்கிலம், இந்தி, பிரெஞ்சு, உட்பட 15 மொழிகளில் தொடங்கப்பட்டுள்ள இக்கையெழுத்து இயக்கத்தில் www.tgte-icc.org குறித்த இந்த இணையத்தளத்தின் வழியே உலகெங்கும் உள்ளவர்கள் ஒப்பமிட்டுக்  கொள்ளலாம். அத்தோடு
 
இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு எதிராக சர்வதேசக் குற்றங்களை, சர்வதேச மன்றங்களிலும் - அயல்நாடுகளில் உள்ள உள்நாட்டுத் தீர்ப்பாயங்களிலும் முன்னிறுத்துவதற்கும், வழக்குப்பணிகளுக்கான நிதியைத் திரட்டுவதற்கான வேண்டுகோளும் முன்வைக்கப்படுகிறது.
 
ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையால் குறிப்பிடப்பட்டுள்ளது போல தமிழர்களுக்கான நீதி கிடைக்க ஏதுவான அரசியல் சூழல் அங்கு இல்லை என்பதையும் இந்த மனு சுட்டிக்காட்டுகிறது. சிங்களர்கள் மேலாதிக்கம் பெற்றுள்ள ஒரு நீதித்துறை சிங்கள இராணுவ அதிகாரிகளை விசாரிக்க முயற்சி செய்வது நீதியைக் கொண்டுவராது என்றும், இது கடந்தகால விசாரணை ஆணையங்களின் சான்றால் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும்  இந்த மனு வாதிடுகிறது. 1983 இனப் படுகொலைகளைத் தொடர்ந்து நாங்கள் விசாரணை நடத்துவோம் என்று  ஐ.நா.விடம் சிரிலங்காத் தூதர் அளித்த வாக்குறுதியைக் குறிப்பிட்டு அந்த வாக்குறுதி ஒருபோதும் நிறைவேற்றப்படவில்லை என்பதும் கையொப்ப மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
சிறிலங்கா இராணுவத்தின் முன்னால் படைத் தலைவர் தற்போதைய அரசாங்கத்தின் ஓர் உறுப்பினராக இருக்கிறார் என்பதும், புதிய அதிபர் சிறிசேனாவின் உள்ளார்ந்த குற்றத்தன்மை நீதி வழங்கப்படுவதற்கு உகந்ததாக இருக்காது என்பதும் எந்த விதத்திலும், சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்துவது தவிர வேறு வழியில்லை எனபதும் இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
video : 
 
 
 
 
 
 
நாதம் ஊடகசேவை
 
 
ஐக்கிய நாடுகள் மன்றத்திற்கு அவசர  வேண்டுகோள்
சிறிலங்காவை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்துக

சிறிலங்கா அரசு தமிழ் மக்களுக்கு எதிராக இழைத்த போர்க்குற்றங்கள், மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், மற்றும் இனப்படுகொலை ஆகியன தொடர்பில் சிறிலங்காவை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்துமாறு, அல்லது அதுபோன்ற ஒரு நம்பகமான சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றினை நிறுவுமாறு, நாங்கள் வலியுறுத்துகிறோம்.

சிறிலங்கா குறித்த ஐ.நா. உள்ளக மதிப்பீட்டு அறிக்கையின்படி, 2009 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 70,000 தமிழ்மக்கள் உயிரிழந்ததாக 'நம்பகமான மதிப்பீடுகள்' இருந்தன.

முன்னாள் அமெரிக்க அரசுச் செயலர் ஹிலாரி கிளிண்டன் சுட்டிக்காட்டியுள்ளது போல, வன்புணர்ச்சியைச் ஒரு யுத்தச் செயல்தந்திரமாகப் பயன்படுத்திய போஸ்னியா, பர்மா, கொங்கோ ஜனநாயகக் குடியரசு, சூடான், மற்றும் பிற நாடுகளைப் போன்ற வரிசையில் குறிப்பிடத்தக்க நாடுகளில் ஒன்றாக சிறிலங்கா இருக்கிறது.

ஒரு உள்நாட்டு அமைப்போ அல்லது ஒரு சர்வதேசமும் சிறிலங்காவும் கொண்ட ஒரு மாறுபட்ட அமைப்போ தமிழ் மக்களுக்கு நீதியைக் கொண்டுவராது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். எந்த ஒரு சர்வதேச நீதிச் செயல்முறைக்கும் பதிலாக, புதிய சிறிலங்கா அரசாங்கம் ஒரு உள்நாட்டு அல்லது கலப்பு அமைப்பைக் கோருவது, சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு சிறிலங்கா அரசை நிறுத்தும் கோரிக்கையை திசைதிருப்புகிற, மற்றும் பொறுப்புடைமை குறித்த பிற அர்த்தமுள்ள நடவடிக்கைகளைத் தாமதப்படுத்துகிற முயற்சியாகும். ஒரு உள்நாட்டு உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையத்தை நிறுவும் முயற்சிகள் தமிழர்களுக்கு எதிரான தீவிரமான குற்றங்களைப் புரிந்துள்ளவர்களைப் பாதுகாக்கும் இன்னொரு திசைதிருப்பும் செய்லதந்திரம் ஆகும். 

போர்க்குற்றங்கள், மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றுக்கு முற்றிலும் எந்தப் பொறுப்பேதும் இல்லை என்பதால், சிறிலங்காவின் தற்போதைய சூழ்நிலை, ஐ.நா.சாசனம் அத்தியாயம் 7 பிரிவு 39 இன் கீழ், 'அமைதிக்கான அச்சுறுத்தல்' தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையை உள்ளடக்கியதாக இருக்கிறது.

 

எங்களுடைய வேண்டுகோளுக்கு ஆதரவாக பின்வரும் நிகழ்வுகளையும் காரணங்களையும் உங்கள் ஆழ்ந்த கவனத்திற்குக் கொண்டுவருகிறோம்.

1)சிறிலங்கா அரசு இனரீதியாக நடுநிலையாக இல்லை:
 
சிறிலங்கா அரசானது சிங்கள பௌத்த பெரும்பான்மை சமூகத்தின் கலாச்சார யுத்தத் தலைமையாக நடந்துகொண்டது. அரசின் அரசாங்கம், இந்த விடயத்தில் சிறிலங்கா, தமிழர்களுக்கு எதிராகச் சர்வதேசக் குற்றங்களைப்  புரிந்துள்ளது என்பதோடு மட்டுமின்றி, அது விடுதலையடைந்த 1948 இலிருந்து, அறுபது ஆண்டுகள் காலமாக அவர்களைப் பாதுகாக்கவும் தவறியுள்ளது. 
 
உண்மையில், பிரச்சனைக்குரிய தீவிரமான குற்றங்களில் பெரும்பாலானவை அரசு இயந்திரத்தினாலேயே இழைக்கப்பட்டவையாகும்.
'தனது குடிமக்களின் உரிமைகள் மீறப்பட்டபோது, தனது பாத்திரம் மற்றும் பொறுப்புக் குறித்து அதிகாரபூர்வமாக அரசால் ஒப்புக் கொள்ளப்படுவதும் பொறுப்புடைமைக்கு அவசியமானதாகும்.' சிறிலங்காவில் பொறுப்புடைமை குறித்த ஐ.நா.பொதுச் செயலாளரின் நிபுணர் குழு அறிக்கை (மார்ச் 31, 2011).
 
2) சிறிலங்கா நீதித்துறை இனரீதியாக நடுநிலையானதாக இல்லை:
 
தமிழர்களுக்கு எதிரான இழிசெயல்கள் என்று வரும்போது, சிறிலங்கா நீதித்துறை எப்போதும் அரசியல் தலைமைக்கு அடிபணிவதாகவே இருக்கிறது, இது கடந்தகால விசாரணை ஆணையங்கள் அனைத்திலும் சான்றாக இருக்கிறது. 1983 இல், சிறிலங்காவின் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதியரசாக ஒரு தமிழர் இருந்தும் கூட,  1983 ஆம் ஆண்டின் படுகொலையில் தமிழர்கள் பெருந்திரளாகக் கொல்லப்பட்டதற்கு எந்த ஒரு நபருக்கு எதிராகவும் எந்த ஒரு வழக்கு விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை. 
 
' ... (நீதி) அமைப்பின் கடந்தகாலச் செயல்பாடு மற்றும் தற்போதைய கட்டமைப்பு மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டு, தற்போதைய அரசியல் சூழலில் அது நீதி வழங்கும் என்பதில் சிறிதளவு கூட இந்தக் குழுவுக்கு நம்பிக்கையில்லை.' சிறிலங்காவில் பொறுப்புடைமை குறித்த ஐ.நா.பொதுச் செயலாளரின் நிபுணர் குழு அறிக்கை (மார்ச் 31, 2011).
 
1958 இல் தொடங்கி இன்று வரை, தமிழர்கள் பெருந்திரளாகக் கொல்லப்பட்டு வருவதற்கு, நீதி வழங்கப்படவேயில்லை. அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் சர்வதேச அழுத்தம் காரணமாக செயல்திறனற்ற விசாரணை அமைப்புக்களை நியமித்தன, அவை குற்றமிழைத்தவர்களுக்கு ஒருமுறைகூடத் தண்டனை வழங்குமளவுக்குச் செல்லவில்லை. (சர்வதேச பொதுமன்னிப்புச் சபை, 'இருபதாண்டுகாலப் பாசாங்கு : சிறிலங்காவின்  விசாரணை ஆணையங்கள்,' ஜூன் 11, 2009).
 
3) தமிழர்களுக்கு நீதி வழங்கும் அரசியல் உறுதிப்பாடு சிறிலங்காவில் இல்லை: 
 
முன்னாள் பாதுகாப்புத்துறைச் செயலர் கோத்தபயா ராஜபட்சே சிறிலங்காவில் இருக்கும் வரை பாதுகாப்பாக இருப்பார்: சிறிலங்கா நீதித்துறைத் துணை அமைச்சர்.
 
4) உள்நாட்டின் கற்றுக்கொண்ட படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணையம் 2010 (எல்.எல்.ஆர்.சி.) தமிழர்களுக்கு நீதி வழங்கவில்லை:
 
' ... எல்.எல்.ஆர்.சி. தீவிரமான குறைபாடுகள் உடையது, அது ஒரு செயலூக்கமுள்ள பொறுப்புடைமை அமைப்புக்கான சர்வதேசத் தரங்களைக் கொண்டதாக இல்லை.'  சிறிலங்காவில் பொறுப்புடைமை குறித்த ஐ.நா.பொதுச் செயலாளரின் நிபுணர் குழு அறிக்கை (மார்ச் 31, 2011).
மாண்புமிக்க மனிதர்களின் சர்வதேச சுயேச்சையான குழு 2008 மார்ச்சில் விலகிக்கொண்ட போது, உள்நாட்டு விசாரணையைக் கண்காணிப்பதில் சர்வதேச சமூகத்தின் ஈடுபாடும் தோல்வியிலேயே முடிந்தது. (மனித உரிமைகள் கண்காணிப்பகம் – சிறிலங்கா: இழிசெயல்கள் குறித்த உள்நாட்டு விசாரணை ஒரு மூடுதிரை –அக்டோபர் 27, 2009).
 
சிறிலங்காவின் அரசியலில் சிங்கள பௌத்த மேலாதிக்க நிறுவனங்களுடனான நீண்ட கால அனுபவத்தைக் கருத்தில் எடுத்துக்கொண்டால், சிறிலங்கா ஆயுதப்படைகளின் உறுப்பினர்கள் எந்தத் தவறான செயலுக்காகவும் எப்போதாவது வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. உள்நாட்டு அமைப்பின் மீதான சர்வதேசக் கண்காணிப்பு நேரத்தை வீணடிக்கவே பயன்படும். (யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் 2015 பிப்ரவரி 24 அன்று ஐ.நா.வுக்கு அளித்த மனுவில்). 
 
5) சிறிலங்காவில் ஆட்சி மாற்றம், நிறுவனமயமாக்கப்பட்ட, தண்டிக்கப்படுவதிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் நிலையில் மாற்றத்தைக் கொண்டுவராது:
 
அதிபர் மாற்றப்பட்டுவிட்டாலும் கூட, தமிழர்கள் தொடர்பான அரசியல் சூழல் மாறவில்லை. 
 
யுத்தத்தின் முடிவில் இராணுவப் படைத்தலைவராக இருந்த தளபதி சரத் பொன்சேகா  உள்ளிட்ட பல முன்னாள் இராணுவ அதிகாரிகள் தற்போதைய அரசாங்கத்தில் முதுநிலைப் பதவிகளில் இருக்கிறார்கள். 
 
அவசரநிலை ஒழுங்குவிதிகள் மற்றும் துணை இராணுவப்படை ஒட்டுக்குக்களை கூடியஅளவு பயன்படுத்துவது ஆகியன தவிர, அனைத்துக் காரணிகளும், குறிப்பாக பயங்கரவாதத் தடைச் சட்டம், கொழும்பில் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின்னரும் கூட இன்னும் நடப்பில் இருக்கின்றன. 
இராணுவ இயந்திரம் இன்னமும் அவ்வாறே உள்ளது, வடக்கு கிழக்கில் இராணுவமயமாக்கல்  தமிழர்களிடையே அச்சம் நீடிக்கச் செய்கிறது, மேலும் இவை அங்கு அன்றாட நடவடிக்கைகளில் ஆழமான தாக்கத்தை  ஏற்படுத்திவருகிறது.  ஆகவே பாதிக்கப்பட்டவர்களின் சாட்சிகள் உள்நாட்டு அல்லது 
கலப்புத் தீர்ப்பாயத்தின் முன்பு உண்மையில் சுதந்திரமாக இருப்பது சாத்தியமில்லை. 
 
6) புதிய அதிபர் சிறிசேனாவின்  சாத்தியப்பட்ட குற்றத்தன்மை உள்நாட்டு அல்லது கலப்பு அமைப்புக்கு உகந்ததாக இருக்காது:
 
போரின் முடிவில், ஏராளமான எண்ணிக்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட போது, அதிபர் சிரிசேனா தற்காலிக பாதுகாப்புத் துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார். 
 
'சிரிசேனா தமிழர்களுக்கு ஒரு நம்பிக்கை ஒளியாக இல்லை; போரின்போது கொடுங்கனவாக இருந்த இறுதிப் பதினைந்து நாட்கள், அவர் பாதுகாப்பு அமைச்சராகச் செயல்பட்டுக்கொண்டிருந்தார்.' – எகனாமிஸ்ட், ஜனவரி 3, 2015.
 
7) போர்க்குற்றங்கள், மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை  ஆகியவற்றுக்கான குற்றவியல் நடைமுறைவிதிகள் சிறிலங்காவிடம் இல்லை.
 
மனித இனத்திற்கெதிரான சில குற்றங்களுக்கு எதிராக நோர்வேயிடம் சட்டங்கள் இல்லாததால், ருவாண்டவுக்கான சர்வதேசத் தீர்ப்பாயம் பகரசகாவை என்பவரை நோர்வேவுக்கு மாற்றவில்லை, ஏனென்றால் பிரதிவாதியை ஒரு சாதாரண  குற்றவாளியாக   வழக்குவிசாரணைக்கு 
உட்படுத்துவது அவரது குற்றங்களை அற்பமானவையாக ஆக்கிவிடும்.
 
8) நீதியின் குறிக்கோளை சமாதானத்தின் குறிக்கோளுக்கு எதிராக நிறுத்துவது ஒரு தவறான தெரிவு ஆகும்:
 
'இரண்டாவது உலகப்போரின் போது இனப்படுகொலை புரிந்தவர்கள் இன்றும் கூடத் தேடிக்கண்டுபிடிக்கப்பட்டு, வழக்குவிசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். எந்த விதத்திலும் நீதி மறுக்கப்பட்டுவிடக் கூடாது எனபது உலகின் எதிர்பார்ப்பும் பிரதிபலிப்பும் ஆகும் என்பதை இது காட்டுகிறது.' – நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன், வட  மாகாணசபை முதலமைச்சர். 
 
நிறைவாக, சிறிலங்கா அரசு தமிழ் மக்களுக்கு எதிராக இழைத்த போர்க்குற்றங்கள், மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், மற்றும் இனப்படுகொலை ஆகியன தொடர்பில் சிறிலங்காவை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்துமாறு, அல்லது அதுபோன்ற ஒரு நம்பகமான சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றினை நிறுவுமாறு, நாங்கள் வலியுறுத்துகிறோம்.
 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி ஈழப்பிரியன்.

  • கருத்துக்கள உறவுகள்

உதயகுமாரின்..... முயற்சிக்கு, பாராட்டுக்கள்.
 

ஆனால்... இந்த, கையெழுத்து வேட்டை எல்லாம்.... கறிக்கு உதவாது.
 

சும்மா.... மனித விரயத்தையும், பணத்தையும் வீணாக்காமல்......
 

உருப்படியான.... வேலைகளை,  இனியாவது, செய்ய முயற்சியுங்கள்.
 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

உதயகுமாரின் முயற்சிக்கு, பாராட்டுக்கள்.

ஆனால்... இந்த, கையெழுத்து வேட்டை எல்லாம்.... கறிக்கு உதவாது.

சும்மா.... மனித விரயத்தையும், பணத்தையும் வீணாக்காமல்......

உருப்படியான.... வேலைகளை... இனியாவது, செய்ய முயற்சியுங்கள்.

உதயகுமாரா உருத்திரகுமாரா ? பாவம் அவரே கென்பூஸ் ஆயிட்டார்

  • கருத்துக்கள உறவுகள்

உதயகுமாரா உருத்திரகுமாரா ? பாவம் அவரே கென்பூஸ் ஆயிட்டார்

 

ரொம்ப... சாரி மீரா....

நாடுகடந்த அரசின் பிரதமர் பெயரையே.... மறந்து விட்டேன் என்றால்....

யார்... தப்பு?

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப... சாரி மீரா....

நாடுகடந்த அரசின் பிரதமர் பெயரையே.... மறந்து விட்டேன் என்றால்....

யார்... தப்பு?

இப்படி அறிக்கை விட்டுதான் அந்தாள் தான் இருக்கிறன் என்று வெளியில தெரியப்படுத்தம் போது நீங்க பெயரை மாறி சொல்லலாமா

  • 1 month later...

அது குற்றம், இது குற்றம் என்று கூறிக்கொண்டு, எதையுமே செய்யாமல் இருப்பதைவிட  எதையாவது செய்வது பாராட்டுக்குரியதுதானே.

உருப்படியான.... வேலைகள்  எவை,? இருந்த இடத்து வேலை என்றால் என்னையும் கூட்டிக்கொண்டு போங்கோ....சாமி...

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
சிறிலங்காவுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் செந்தமிழன் சீமான் இணைவு : தமிழகமெங்கும் நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் கையெழுத்து திரட்டல் !
 
சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியில் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் பத்து இலட்சம் கையெழுத்து இயக்கத்தில் நாம் தமிழர் கட்சியில் அமைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் இணைத்துள்ளார்.
 
தமிழ்மக்கள் மீது சிறிலங்கா அரசு இழைத்த எதிராக இழைத்த போர்க்குற்றங்கள், மானிடத்து எதிரான குற்றங்கள், மற்றும் இனப்படுகொலை ஆகியன தொடர்பில் சிறிலங்காவை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு பாரப்படுத்தியோ, அல்லது அதுபோன்ற ஒரு நம்பகமான சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றினை நிறுவவோ, ஐக்கிய நாடுகள் அவையினை வலியுறுத்தும் வகையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் பத்து இலட்சம் கையெழுத்துக்களை திரட்டும் இயக்கம் உலகெங்கும் முனைப்புடன் நடத்தப்பட்டு வருகின்றது.
 
 
இதனொரு அங்கமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கதின் தமிழக தோழமை மையத்தின் ஒருங்கிணைப்பில் தமிழ்நாட்டில் இக்கையெழுத்து இயக்கம் நடைபெற்றுவரும் நிலையில் தோழமை மையத்தின் அமைப்பாளர் பேராசிரியர் சரசுவதி அம்மையார் அவர்களது தலைமையில் தோழமை மையத்தினர், நாம் தமிழர் கட்சித்தலைவர் தோழர் சீமான் அவர்களை அவரது கட்சி அலுவலகத்தில் சந்தித்தனர்.
 
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கையெழுத்து இயக்கத்திற்கு நாம் தமிழர் கட்சித்தலைவர் தோழர் சீமான் அவர்கள் தனது ஆதரவினை தெரிவித்து படிவத்தில் கையெழுத்திட்டதோடு, நாம் தமிழர் கட்சியின் மூத்த வழக்கறிஞர் சந்திரசேகர், வழக்கறிஞர் இராவணன் மற்றும் நாம் தமிழர் கட்சித் தோழர்கள் பலர் கையெழுத்திட்டனர்.
 
இக்கையெழுத்து இயக்கத்தில் நாம் தமிழர் கட்சியின் பங்களிப்பாக தமிழகமெங்கும் நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் மூலம் பொதுமக்களிடம் கையெழுத்தினை திரட்டி,நாடுகடந்த தமிழீழ அரசாங்கத் தோழமை மையத்தின் அமைப்பாளர் பேராசிரியர் சரசுவதி அம்மையாரிடம் ஒப்படைப்பதாக தோழர் சீமான் தெரிவித்துள்ளார் என தோழமை மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இச்சந்திப்பில் தோழமை மையத்தினருடன் ஊடகவியலாளர் தோழர் T.S  மணி, ஊடகவியலாளர் எட்வின் ஆகியோரும் பங்கேற்றனர் என்பது இங்கு குறிப்பிடதக்கது.
 
நாதம் ஊடகசேவை
  • 2 weeks later...

11429693_10153460827089396_8718890900618

 

ஐ.நாவே, சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்து எனும் முழகத்துடன் நடைபெற்று வரும் கையெழுத்து இயக்கம் லட்சத்தினை எட்டியுள்ள நிலையில், இலக்கு பத்து இலட்சத்தினை எட்ட அனைவருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.

சிறிலங்காவில் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின் பின் தற்போதைய ஆட்சிக்கு உயிர் கொடுக்கும் முகமாக ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் அங்கத்துவ நாடுகள், ஒரு உள்நாட்டு பொறிமுறை அல்லது வெளிநாட்டுடன் இணைந்த ஒரு கலப்புப் பொறிமுறை மூலம் இவ் விசாரணையினை மேற்கொள்ளப் பரிந்துரைக்கும் ஆபத்து உள்ளதாக நாம் உணர்வதாக தெரிவித்துள்ள நா.தமிழீழ அரசாங்கம், இந் நிலை ஏற்படின் எமக்கான பரிகாரநீதியினை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் அருகி விடும் என நாம் அச்சத்தினை வெளிப்படுத்தியுள்ளது.

இதன் நிமித்தமாக ஐ.நா.மனித உரிமைகள் உயர் ஆணையாளரின் அறிக்கையில் நாம் விரும்பும் தாக்கத்தை ஏற்படுத்துமுகமாக சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்துமாறு கோரும் ஒரு மில்லியன் கையெழுத்துடன் பங்கெடுக்க பொது மக்கள், பொது அமைப்புக்கள், இளையோர்கள்,சமூக-அரசியல் ஆர்வலர்கள், கல்வியாளர்கள், கலைஞர்கள் என அனைவருக்கும் அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.

www.tgte-icc.org எனும் இணையத்மூலமும் கையெழுத்து இயக்கத்தில் பங்கெடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, இக் கையெழுத்து இயக்கத்துக்கான தொடர்பான படிவங்களை ஒப்பங்களுடன், ஜுலை 10 ம் திகதிக்கு முன்னராக குறித்த TGTE 875 Avenue of the Americas, Suite 906,New York, NY 10001, USA இந்த முகவரிக்கு கிடைக்குமாறு ஆவன செய்யுமாறும் வேண்டிக் கொள்ளப்பட்டுள்ளது.
 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.