Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யார் கவி இது கண்டுபிடி சபேசன்....!!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முகமூடிதான் தலைக்கு முகமாக இருப்பது. அதுவில்லாவிட்டால் இருப்பது வெறுமை. அதாவது சொந்தமுகம் என்று ஒன்று இல்லை. தேவைக்கேற்ப முகமூகடிகளை அணிந்துகொள்கின்றோம். B)

  • Replies 78
  • Views 7.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஆடிய கூத்து

ஓய்ந்து

ஒப்பனை கலைந்தது.

மீந்தது

முகமில்லாத் தலை!"

இதில் இதற்கு என்ன அர்த்தம்...???

எவ்வாறு இப்படி வரும்...அதை தான் கேட்டேன்..உங்களை கிண்டலடிக்கவல்ல...தோழரே....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உணர்வுகளை தொட்டுச்செல்லாத வெறும் சொற்களை ஒவ்வொன்றாக அடுக்குவதையே வன்னி மைந்தன் செய்கின்றார்.

சொல்லடுக்கு கொத்தனார்..

கிருபன்.. விழு விழு.. எழு எழு அழு அழு தொழு தொழு கொழு மொழு என்றவாறான சொற்கூட்டங்களை எழுதுபவரிடம் கவிதைகளை காட்டுகிறீர்கள். கஸ்ரம் தான்..

வன்னி மைந்தன் நீங்கள் செய்திகளை ஒரு வித சந்த அடுக்கில் ஒன்று சேர்த்து கோர்க்கின்றீர்கள். அவற்றை உரைச் சித்திரம் எனலாம். கவிதைக்குரிய எந்த உணர்வும் அற்று வெறும் நிர்வாணமாய் சொற்கள் அடுக்கி நிற்கின்றன. நல்ல கவிதைகளை வாசிக்கவும்.. நானும் நல்ல கவிதைகளை வாசிக்க விரும்புகிறேன்.. எங்கை முடியுது..

  • தொடங்கியவர்

சரி எனக்கு கவிதை எழுத தெரியாது என வைத்துக்கொள்வோம்...

வசனம் எழுதுகிறதாய் நீங்கள் சொல்டகிறீர்கள் எங்கே...தற்போது யாழில் இறுதியாய் வந்த ஒரு செய்தி பற்றி...

உடனே இங்கே எழுதி காட்டுங்கள் பார்க்கலாம்..

காத்திருக்கிறேன்...கவிக்கோ...க

  • தொடங்கியவர்

பரிதாப மரணம்....

உண்ண

உணவின்றி

ஒரு சொட்டு

நீர் இறங்கா

ஒட்ட வயிரொட்டி

ஓலமாய் இறந்தாயோ....???

குழுமி வந்து குளிர்

கூட அடிக்கையிலே

குறண்டி நடுங்கி - நீ

குமுறி இறந்தாயோ....???

அக்கம் பக்கத்திலே

ஆளுதவி யாருமின்றி

ஜயா பாவி -நீ

அநாதையாய் இறந்தாயோ...??

தூங்கியெழ கூட

துண்டு நிலமின்றி

ஊரார் கோடியினுள்ளே -நிதம்

உறங்கியெழுந்தாயோ....??

சத்துணவின்றி

சக்தி நீ இpழந்து

சாவை நீ ஏற்றாயோ....???

கடமையாக நீ

கதிரை பின்னி யே

தினம் காலம் கழித்தாயே...

வந்த யுத்தமதால்

வருமானம்

நீ இழந்து

வறுமை உனையாழ

வாடி இறந்தாயே....

ஒத்தாசைக்கு

ஒருத்தரும்

உனக்கில்லா

அட..பாவி ஜயா நீ

பரிதாபமாய் இறந்தாயே....!!!

-வன்னி மைந்தன் -

எங்கே காவடி இதை செய்தியாக்கும்....???

இதை செய்தியாக்கி...

யாழில் உள்ள இறுதியாக வந்த செய்தியை இவ்வாறு தாங';கள்

மாற்றுங்கள் பார்கலாம்..இந்த வடிவில்...

கவிக்கோ கவி மணி...சவாலை ஏற்க தயரா....???

தொடர்வோமா...???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் எழுதுவது கவிதையே அல்ல எனச் சொல்வதற்கு எனக்கு கவித எழுத தெரிய வேணும் எண்ட அவசியம் எதுவும் கிடையாது. ஒரு சமையல் நல்லா இல்லை எண்டு சொல்வதற்கு சமைக்கத்தெரிந்திருக்க வேண்டுமென்பதல்லை. ருசிக்கத் தெரிந்தால் போதும்.. அது போல ரசிக்க தெரிந்தால் போதும்.. கவித பற்றி சொல்ல.. உங்களுடைய எழுத்துக்கள் வெறும் வார்த்தை கூட்டங்களே தவிர கவிதைகள் இல்லை. உங்களுடைய சொற்கூட்டங்களை படிக்கும் போது ஒரு வித அழகுணர்ச்சி உருவாகிறதே தவிர.. (அதுவும் இப்ப எரிச்சலை தருது.. ராசேந்தரின் அடுக்கு மொழிச் சவாடல்களை கேட்கையில் எப்படி எரிச்சல் வருமோ அப்படி..) உங்கள் சொற்கூட்டங்களும் வார்த்தையடுக்குகளும் மனதில் எந்த ஒரு அதிர்வலையையோ ஒரு தாக்கத்தையோ கவிதைக்குப் பின்னும் மனதில் தேங்கி நிற்கும் உணர்ச்சி கொந்தளிப்பையோ உணர்த்த வில்லை.

உங்கள் சொல்லடுக்குகள் வெறும் வார்த்தைக் கூட்டங்கள்தான்.

வெறும் ஒப்புச் சொல்லியழும் எழுத்துக்கள் அவை. இந்தச் செய்தியை புதினத்தில் வாசித்தபோது மனதின் ஓரத்தில் உண்டாகிய வலி கூட உங்களின் சொற்கூட்டத்தை வாசித்த போது வரவில்லை.

அது சரி ஏனய்யா செய்தியை கவிதையாக்கு எண்டு அடம் பிடிக்கிறீர்..

இப்ப உம்மோடை அலட்டிற இந்த நிமிசம் வாசிச்சது இந்த கவிதை.. உமக்கேதாவது விளங்குதா எண்டு பாரும்..

பெருமாள் கோவில்

சிற்பங்களைக் கழுவிக்

கொண்டிருக்கிறது மழை

நிர்வாணப்பெண்கள்

மறுபடியும் நனைய

மரங்களினிடையே

மறையும் கண்ணன்.

என்

காலகளினடியில் மறுபடியும்

நழுவி ஓடிக்கொண்டிருக்கிறது

பூமி

நீரின் மீது

முடிவிலிக்கோடுகளை

ஒற்றைப்புள்ளியில் இருந்து

வரைந்து கொண்டிருக்கிறது

இலையிருந்து நழுவும்

ஒற்றைத் துளி.

குழந்தைகள்

கொப்பிகளைக்கிழிக்கின்றன

எனக்குள்

மிதக்கத்தொடங்கின கப்பல்கள்

இப்போது

நீரினிலாகிறது

குழந்தைகளின் உலகு

யாரேனும் அதை

மறுக்கையில்

மழை

இடம்பெயர்கிறது

குழந்தைகளின்

கண்களிற்குள்..

எனக்குள்

மூழ்கத் தொடங்கின

கப்பல்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

சரி எனக்கு கவிதை எழுத தெரியாது என வைத்துக்கொள்வோம்...

வசனம் எழுதுகிறதாய் நீங்கள் சொல்டகிறீர்கள் எங்கே...தற்போது யாழில் இறுதியாய் வந்த ஒரு செய்தி பற்றி...

உடனே இங்கே எழுதி காட்டுங்கள் பார்க்கலாம்..

காத்திருக்கிறேன்...கவிக்கோ...க

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

சரி அவ்வாறே வைத்து கொள்வோம்...

எங்கே இறுதியாக வந்த செய்தியில் ஒன்றை இவ்வாறு சொற் கூட்டங்களாய்

அமையுங்கள் பார்கலாம்....

அதையாவது செய்யுங்கள்....இவ்வாறு உரைக்கின்ற உங்களுக்கு

ஏன் அவ்வாறு முடியாது....???

கட்டாயம் தாங்கள் எழுதி காட்ட வேண்டும்..

நீங்கள் சொன்ன சமையல் வேறு இது வேறு....

2 டையும் இதனுடன் ஒப்பிடாதீர்கள்...

சரி சவாலை ஏற்று வாருங்கள்...இல்லை எனின் இந்த வாக்கியத்தை அழியுங்கள்....

யாழ் கவிமணிஇ யாழ் பாக்கோ... கவிஞர் காவடி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு படைப்பை நல்லாயிருக்கெண்டால் உமக்கு கவிதை எழுத தெரியுமோ எண்டு ஆரும் கேட்பதில்லை. ஆனா சரியில்லையெண்டால் மட்டும் வரிஞ்சு கட்டி கிளம்புவினம். உனக்கு தெரியுமோ எழுதுவியோ எண்டு..

  • தொடங்கியவர்

தக்க நேரத்தில் வந்து தக்க கருத்தை உரைத்த தங்களிற்கு எனது நன்றிகள்....

இவர்களின் இவ்வாறான நோக்கத்தை கண்ட சில உறவுகள் தொடராய்

சில மின் அஞ்சல் அனுப்பி இருந்தார்கள் தங்கள் கருத்தை போன்றே.

யாழ் வந்து தனக்கென பல படைப்பாளிகளை வைத்துள்ளது...அதில் குறிப்பாக

கவிகளை...தற்போது பலர் மிக வேகமாக எழுதுவதை

பார்க்கும் போது எனக்கே வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது...

அதில் குறிபிடப்பட்டவர்கள் இளையோர்கள் மிகவும் வயது குறைந்தவர்கள்....

எனவே தங்களது இந்த ஊhக்க மாத்திரை அவர்களை இன்னும் மேம்படுத்தும் என நம்புகிறேன்

எனவெ மீண்டும் எனது நன்றிகள்...( நெடுக்கல போவன்;)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த சொற்கூட்டங்களே தேவையில்லையெண்டுறன்.. பிறகு என்னையே அதை செய்ய சொல்லுறியள்..

கொலை செய்யிறதை நிறுத்துங்கோ எண்டால்.. முடிஞ்சால் நீயொரு கொலை செய்து காட்டு எண்டு கேட்கிற மாதிரி இருக்கு..

ரசனையென்று வரும்போது எல்லாம் ஒண்டுதான். எனக்கு கவிதை எழுத தெரியாது. சொற்கூட்டங்கள் எழுத விரும்புவதில்லை.. ஆனால் ரசிக்கத்தெரியும்.. எது கவிதை எது சொற்கூட்டம் எண்டு தெரியும்..

உங்கடை சொற்கூட்டம் தான்.. அதை சொல்ல எனக்கு எந்த சபலமும் இல்லை.. திரும்பவும் சொல்லுறன்..

கொலை செய்யிறதை நிறுத்துங்கோ எண்டால்.. முடிஞ்சால் நீயொரு கொலை செய்து காட்டு எண்டு கேட்காதேயுங்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு படைப்பை நல்லாயிருக்கெண்டால் உமக்கு கவிதை எழுத தெரியுமோ எண்டு ஆரும் கேட்பதில்லை. ஆனா சரியில்லையெண்டால் மட்டும் வரிஞ்சு கட்டி கிளம்புவினம். உனக்கு தெரியுமோ எழுதுவியோ எண்டு..

சரியில்லை என்றால் அவரின் கவிதை ஒன்றை எடுத்து எந்தந்த இடத்தில் என்னென்ன வகையில் சரியில்லை. என்னென்ன கவி விதிகளுக்கு முரணாக இருக்கிறது என்று சொல்லுவதே அவரின் தவறுகளை உணர்த்தவும் திருத்தவும் உதவும். அதைவிடுத்து அநாவசியமான வகையில் போலித்தனமான குற்றச்சாட்டுக்களை வைப்பதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

வளர்ந்து வரும் கவிதை புனைவோரை முடக்காதீர்கள். அவர்களா தங்களின் தவறுகளை உணர அனுமதியுங்கள். அல்லது தகுந்த உதாரணங்களூடு விளக்குங்கள். சில கவிதைகளைக் காட்டி இதுதான் புதுக்கவிதை வடிவம் என்று உங்களின் தனிப்பட்ட விருப்பங்களை அடுத்தவர்கள் மீது திணிக்க முயலாதீர்கள். அது இக்களத்தில் எனிமேலும் சாத்தியப்படப் போவதில்லை. இங்குள்ள அநேகரிக்கு சுயமாக சிந்திக்க கூடிய படைக்கும் ஆற்றல் உண்டு. :P

வன்னி மைந்தனின் கவிதைகள் பல திறமைமிக்க கவிஞர்களின் படைப்புகளோடு இங்கும் மிளிர்கிறது...

http://www.eelasongs.com/content/category/8/16/33/

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

ஒரு படைப்பை நல்லாயிருக்கெண்டால் உமக்கு கவிதை எழுத தெரியுமோ எண்டு ஆரும் கேட்பதில்லை. ஆனா சரியில்லையெண்டால் மட்டும் வரிஞ்சு கட்டி கிளம்புவினம். உனக்கு தெரியுமோ எழுதுவியோ எண்டு..

ஒரு விடயத்தை நாங்கள் விமர்சிக்க முன் அதை அறிந்தே செய்ய வேண்டும்

அதுவே என் வாதம்...அதில் மாற்று கருத்துக்கு இடமில்லை....

அதை அறியாமால் தெரியாமால் எப்படி சொல்ல முடியும்....???

தெரியாத ஒன்றை தெரிந்ததாக எவ்வாறு சொல்ல முடியும்....??ஃ

விமர்சனம் என்பது பல வகைப்படும்..ஆனால்

இங்கு வருபவர்களின் நோக்கம் அதுவல்ல....

ஒருவனை அடியோடு அழிப்பது என்பதே..அதற்கு

என்னால் இடமளிக்க முடியாது......

நான் அது பிழை என கூறவில்லை...தாங்கள் அந்த பணியை செய்யுங்கள் என்றே கேட்கிறேன்

ஏன் தங்களிற்கு சீற்றம் வர வேண்டும்....???

எனவே மீண்டும் கேட்கிறேன் எழுதி வாருங்கள்...இல்லை எனின் எழுதுகிற

அந்த உறவுகளிற்கு தட்டி ஊக்கம் கொடுங்கள்....அதுவே சிறந்தது....

நெடுக்கால போவனின் கருத்தை வாசியுங்கள் அதில் இருக்கின்ற உள் நோக்கம் புரியும்....

அது தங்களிற்கு பொருந்தும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

///சரியில்லை என்றால் அவரின் கவிதை ஒன்றை எடுத்து எந்தந்த இடத்தில் என்னென்ன வகையில் சரியில்லை. என்னென்ன கவி விதிகளுக்கு முரணாக இருக்கிறது என்று சொல்லுவதே அவரின் தவறுகளை உணர்த்தவும் திருத்தவும் உதவும்.///

உங்களுடைய எழுத்துக்கள் வெறும் வார்த்தை கூட்டங்களே தவிர கவிதைகள் இல்லை. உங்களுடைய சொற்கூட்டங்களை படிக்கும் போது ஒரு வித அழகுணர்ச்சி உருவாகிறதே தவிர.. (அதுவும் இப்ப எரிச்சலை தருது.. ராசேந்தரின் அடுக்கு மொழிச் சவாடல்களை கேட்கையில் எப்படி எரிச்சல் வருமோ அப்படி..) உங்கள் சொற்கூட்டங்களும் வார்த்தையடுக்குகளும் மனதில் எந்த ஒரு அதிர்வலையையோ ஒரு தாக்கத்தையோ கவிதைக்குப் பின்னும் மனதில் தேங்கி நிற்கும் உணர்ச்சி கொந்தளிப்பையோ உணர்த்த வில்லை.

உங்கள் சொல்லடுக்குகள் வெறும் வார்த்தைக் கூட்டங்கள்தான்.

ஒரு கவிதை நன்றாயிருக்கிறது என்று சொல்வதும் ஒரு விமர்சனம் தான். அப்படியானால் அதைச் சொல்லவும் கவிதை எழுத தெரிந்திருக்க வேணுமோ..

அப்படி உங்கள் கவிதை நன்றாயிருக்கிறது என விமர்சனம் செய்தவர்களிடமும் எங்கெ இந்த செய்தியை கவிதையாக்குங்கள் என கேட்கலாமே.. ஏனெனில் அவர்களும் விமர்சனம் தானே செய்கிறார்கள்..

எனக்கு கவிதை எழுத தெரியாது. ஆனால் உங்கள் வார்த்தை கோர்ப்புகளை கவிதை என ஏற்க மாட்டேன்.

சரி.. எதற்காக கவிதை.. ? என நினைக்கிறீர்கள்..

நீங்கள் பாராட்டு மழையில் மட்டுமே நனைவேன் என அடம் பிடித்தால் நானொன்றும் செய்ய முடியா..

  • கருத்துக்கள உறவுகள்

உலகத் தமிழினமே! முழக்கம் இங்காகட்டும். முரசு உனதாகட்டும்.

வெளியில் வராத குரல்களாக

விழுங்கப்படுகிறது எம் வாழ்வு.

மருத்துவர்களால் கைவிடப்பட்ட தீராப்பிணியனின்

சிரிப்பு போலாச்சு எம் இருப்பு

யாரோடு நோகலாம்?

யார்க்கெடுத்துரைக்கலாம்?

எத் தெய்வம் சபித்தது எம் தலையில்?

தீவொன்றில் தனித்து விடப்பட்டவர்களாக நாங்கள்.

எவரெம் குரல்களை உலகுக்குச் சொல்வரோ?

எம்மை நோக்கி வையக விழிகள் எப்போ திறக்கும்?

இருபத்தோராம் நூற்றாண்டுக்கு

தாலி கட்டத் தயாராகிறது உலகம்.

பதினாறாம் நூற்றாண்டிற் படுத்துக் கிடக்கின்றோம் நாம்.

நிரவ முடியாத அகழி.

நினைக்க முடியாத தொலைவு.

குறுக்கு வெட்டாக துண்டிக்கப்பட்டவனே உயிர்க்கும் போது

நெருப்புச் சுட்ட புண்ணுக்கே எங்களுக்கு மருந்து கிடையாது.

உலகெங்கும் அடித்து விரட்டப்பட்ட மலேரியா கூட

ஓடிவந்து இங்கே தான் ஒதுங்கிகொண்டது

தடிமல் மருந்துக்கே தட்டுப்பாடு.

இங்கு மருத்துவர்கள் கைபிடிப்பது

வைத்தியம் செய்யவல்ல.

வெறும் மன நிறைவுக்கே.

சுக்கும், மிளகும், சுடுநீருமே உயிரைத் தாங்கிக்கொள்கிறது.

எத்தனைக்கென்று தான் அழுவது?

ஊற்றடைத்துக் கொண்டது விழிக்கிணறு.

உலகமேன் ஊமையானது?

பூமிப்பந்தின் பரப்பெங்கும் தமிழன் இருக்கின்றான்.

எம் குரல்கள் மட்டும் ஏன் கேட்கவில்லை?

உறக்கம் கலைக உலகமே.

இங்கே சேடமிழுத்துக் கிடக்கிறது மனிதப் பிண்டம்.

எமக்காகவும் எவரெனினும் பேசுங்களேன்.

உரிமைக் குரல் கொடுக்கும் ஒரு இனத்துக்கு

இதுதானா கதி?

ஆரோகணித்திருக்கச் சிம்மாசனமா கேட்டோம்?

கால் மடித்திருக்கக் கதிரை தானே கேட்கின்றோம்.

இதற்காகவா இந்தப் பாரச்சிலுவை?

இயக்கர்களாக அவர்களும்...

நாகர்களாக நாங்களும்..

இல்லையெனில்...

அவர்களாக அவர்களும்.....

நாங்களாக நாங்களும்

இதுவும் இல்லையெனில்

ஏதோ ஒரு வழியில்

ஒன்றாய் இருந்த வீட்டிற்தானே உரிமை கேட்கின்றோம்.

பாதிவீட்டை தந்தால் போதும்

மீதிவீடு அவர்களுக்குத்தானே

இந்தப் பிரிவிடுதலுக்கேன் இத்தனை கொதிப்பு?

மிஞ்சிய சோறுவாங்கிக் கும்பிடுபோடுவதற்கு

நாங்கள் இராப்பிச்சைகாரர்கள் அல்ல.

தாம்பத்தியம் தள்ளாடும் போது

விவாகரத்துத்தான் விமோசனம் அளிக்கும்.

சமாதானத் தூதர்கள் தோற்றுப்போனபோதும்,

பேச்சுவார்த்தை மேசையின் பூச்சழிந்த பின்னருமே

நாங்கள் போருக்கெழுந்தோம்.

இடிக்க வந்தது மாடு.

அடித்தோம்.

மாட்டுக்கு அடித்தல் பாவமென மனுப்போடுபவர்களே!

எங்கள் கூட்டையே குலைத்தது குரங்கு.

குரங்கையேன் நீங்கள் குற்றங் காணவில்லை?

யானை வந்தழிக்கிறது எங்கள் புலவை.

வெடிகொழித்திப் போடுகின்றோம்.

மிதிக்கும் போது ஊமையான வாய்கள்.

கலைக்கும் போது மட்டும் கண்டிக்கின்றன.

எருமைத்தோல் உடுத்தவனா தமிழன்?

சுரணையற்று கிடப்பதற்கு

உதைத்த காலுக்கு முத்தமிட்டுக் கிடந்த

ஒரு இனத்தின் ஓரத்தில்

நெருப்பு பொறியொன்று நீறுபூத்துக் கிடந்தது.

அது....... பிரபாகரன்.

கோபம் உரசிய போது தீக்குச்சி பற்றிக்கொண்டது.

இன்று தீச்சுவாலை முளாசி எறிகிறது.

தர்மயுத்தமென்பதே தமிழீழப்போரானது.

பாய்ச்சல் நடக்கும் போது

பாவ புண்ணியக் கணக்கு கொஞ்சம் கூடும், குறையும்.

அதற்கேன் இத்தனை ஒப்பாரி?

மரங்களை தறிக்காதே,

சூழலை மாசு செய்யாதே,

மிருகங்களை வதையாதே,

பூக்களை கிள்ளாதே என்று

குரல்கள் கேட்கின்றனவே.

ஈழத்தமிழனை எறித்து முடிக்காதேயென்று

உலக முகடையிடிக்கும் குரல்கள் எப்போது எழும்?

அவலக்குரலை எப்போது உலகமறியும்?

எல்லைகளை,

வேலிகளை,

வரம்புகளை கடந்து

ஈழத்தமிழரைத்தாங்க நீளும் கரங்கள்

எப்போது கிட்டும்?

அழியும் வரை போராடுவோம் என்பதில் அர்த்தம் கிடையாது.

கிட்டும் வரை எட்டுவோம்.

உயிரெனப்படுவது மானம்.

அதையிழந்து வாழ்வதென்பது சாவுக்குச் சமம்.

பெரும்புயலில் அல்லாடுகிறது எம் போர்ப்படகு.

கரையேறக் கயிறெறியுங்கள்

உலகத் தமிழனமே!

உன்போர் இது... உனக்கான போரிது.

முழக்கம் இங்காகட்டும்.

முரசு உனதாகட்டும்

எம்மை காசுக்கு யாசிக்கவிடாதே.

வாரிவழங்கு.

தாங்கும் தோள்களிலொன்று உந்தோளுமாகட்டும்.

மூட்டம் போட்ட மேகத்தைக் கலைத்து

உரிமைப் போருக்கு ஊட்டம் கொடு.

வாழ்ந்தான் தமிழனென வரலாறு எழுதப்படும் போது

முன்னுரையில் உன் பெயர் இருக்கட்டும்.

பரணிக்கு நாயகர்களைப் பாட

உலகெங்கும் உள்ள புலவர்களே எழுக.

பொய்மைத்திரி அணைந்து போக

உண்மையை வாயால் ஊதுங்கள்.

சத்தியம் ஜெயம்.

புதுவை இரத்தினதுரை

புதுவை இரத்தினதுரை அவர்களின் கவிதையிது. இதை எம்மால் முழு வசனமாகக் கூட எழுதி ஓரிரு பந்தியில் தர முடியும். ஆனால்..இது கவிதையாகத்தான் படிக்கப்பட வேண்டும்...

அது வாசகனின் பொறுப்பு.....கவிதை வாசிக்கத் தெரியவில்லையா..அடக்கி வாசியுங்கள்...! அநாவசியமா படைப்பாளிகள் மீது அவதூறுகளை கட்டவிழ்த்துவிடாதீர்கள்.

http://www.eelasongs.com/content/view/140/33/

  • தொடங்கியவர்

உங்களுக்கு கவி எழுத தெரியாதென்றால் ஏன் அந்த அடை மொழி

சொல்லை காவி திரிகிறீர்கள் உடனே அழியுங்கள்...

அது உங்கள் கருத்து..என் கருத்தாகுமா....???

முடியாதென்று ஏன் சொல்கிறீர்கள் முடியும் என்று தொடங்குங்கள்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புதுவையின்ர உலைக்களம் புத்தகம் வாசித்தனியளோ.. விடுதலைப்புலிகள் பத்திரிகையில வியாசன் என்ற பெயரில அவர் எழுதின எழுத்துக்களின் தொகுப்பது. அதில் ஒன்றைத்தான் நீங்க போட்டிருக்கிறியள்.

அந்த புத்தக முன்னுரையில புதுவை என்ன சொல்லுறார் தெரியுமோ.. இது கவிதைகளா என எனக்கு தெரியாது. தற்கால ஒழுங்கில் கவிதைகள் இல்லையென்கிறார்கள். இருக்கலாம். இவற்றை உரைச் சித்திரங்கள் எனலாம். என்கிறார். இதை நினைவில் இருத்தியே வன்னி மைந்தன் எழுதுபவற்றை உரைச் சித்திரங்கள் என முன்னர் சொன்னேன்..

அட.. புலிகளின் கவிதைகளை போட்டு உவர் உதை கவிதை இல்லையெண்டுறார். உவர் ஒரு துரோகி.. உவர் அரசாங்கத்திடம் காசு வாங்கிறார் என்ற வாற

று தொடர்வதற்கான கடைசி ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறியள்..

நெடுக்கால போனவரே!

முழுமையான விடயம் அறிந்துதான் இங்கு கருத்தெழுதுகிறீர்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலைக்களத்தில் வெளியான புதுவையின் உரைச் சித்திரங்கள் சிலிர்ப்புடன் கூடிய வாசிப்பனுபவத்தை தருபவை.. வன்னி மைந்தனின் உரைச்சித்திரங்களில் அவை கிடையாது.. அவற்றை மேலோட்ட வாசிப்பக்கு மட்டுமே உட்படுத்தலாம்.

  • தொடங்கியவர்

வன்னி மைந்தனின் உரைச்சித்திரங்களில் அவை கிடையாது..

சரி..அப்படி என்றால் எதுவென்பதை ஒன்ரொன்றாய்..இங்கே...அடுக்குங்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுக்கிறதெல்லாம் உங்கடை வேலை.. தெளிவா மறுபடியும் சொல்லுறன்..

உங்களுடைய சொற்கூட்டங்களை படிக்கும் போது ஒரு வித அழகுணர்ச்சி உருவாகிறதே தவிர.. (அதுவும் இப்ப எரிச்சலை தருது.. ராசேந்தரின் அடுக்கு மொழிச் சவாடல்களை கேட்கையில் எப்படி எரிச்சல் வருமோ அப்படி..) உங்கள் சொற்கூட்டங்களும் வார்த்தையடுக்குகளும் மனதில் எந்த ஒரு அதிர்வலையையோ ஒரு தாக்கத்தையோ கவிதைக்குப் பின்னும் மனதில் தேங்கி நிற்கும் உணர்ச்சி கொந்தளிப்பையோ உணர்த்த வில்லை..

இதில ஏதாவது ஒண்டை உங்கடை கவிதை உணர்த்துதோ..

வேணுமெண்டால் செய்தியள் படிக்கலாம் உங்கடை எழுத்தில..

  • கருத்துக்கள உறவுகள்

புதுவையின்ர உலைக்களம் புத்தகம் வாசித்தனியளோ.. விடுதலைப்புலிகள் பத்திரிகையில வியாசன் என்ற பெயரில அவர் எழுதின எழுத்துக்களின் தொகுப்பது. அதில் ஒன்றைத்தான் நீங்க போட்டிருக்கிறியள்.

அந்த புத்தக முன்னுரையில புதுவை என்ன சொல்லுறார் தெரியுமோ.. இது கவிதைகளா என எனக்கு தெரியாது. தற்கால ஒழுங்கில் கவிதைகள் இல்லையென்கிறார்கள். இருக்கலாம். இவற்றை உரைச் சித்திரங்கள் எனலாம். என்கிறார். இதை நினைவில் இருத்தியே வன்னி மைந்தன் எழுதுபவற்றை உரைச் சித்திரங்கள் என முன்னர் சொன்னேன்..

புதுக்கவிதைகள் பலவும் உரை நடைக்கவிதைகள் தான். அந்த வகையில் வன்னி மைந்தன் ஒன்றும் தவறான பாதையில் செல்லவில்லை. புதுவையின் உரைநடைக் கவிதைகள் எப்படியோ அப்படிப் வன்னி மைந்தனும் எழுதலாம்..அல்லது அதைவிட மேம்பட்ட ஒழுங்கோடு அவருடைய கவிதைகள் அமைந்திருக்கலாம். ஆக ஏதோ ஒரு வடிவில் அவை புதுக்கவிதைகளாகின்றன.

அட.. புலிகளின் கவிதைகளை போட்டு உவர் உதை கவிதை இல்லையெண்டுறார். உவர் ஒரு துரோகி.. உவர் அரசாங்கத்திடம் காசு வாங்கிறார் என்ற வாற

று தொடர்வதற்கான கடைசி ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறியள்..

இயலாமைகள் தான் இவற்றை உச்சரிப்பது. புதுவை கவிஞன் என்றுதான் வரையறுக்கப்படுகிறார். அந்த வகையில் அவரது கவிதை உரைநடைக் கவிதைப்பாணியாக இருக்கட்டும். கவிஞன் என்ற கோணத்தில் புதுவையின் கவிதைகள் விமர்சிக்கப்படத்தான் வேண்டும். வன்னி மைந்தனும் விமர்சிக்கப்படட்டும். விமர்சனம் என்பதாக இங்கு நடப்பது தென்படவில்லை. கோர்வை சொற்சிலம்பு என்று சொல்கின்றீர்களே தவிர கவிதையைப் புனைந்தவரின் ஒரு ஆக்கத்தை உதாரணமாகக் கையாண்டு உங்களின் விளக்கங்களை அல்லது விமர்சனங்களை வைக்கும் போது அவரே அதற்கு தனது பார்வை என்ன என்று வைப்பார். இதற்குள் பலர் அநாவசியமாக புகுந்து டி ராஜேந்தர் சிம்பு நயனதாரா என்று இழுக்க வேண்டிய தேவையென்ன. இப்போ டி ராஜேந்தரின் கவிதை வடிவத்தையா வன்னி மைந்தன் பின்பற்றுகிறேன் என்று சொன்னார் இல்லையே? பிறகெதற்கு இந்த அநாவசிய அலம்பல்கள்...???!

இது வேண்டும் என்றே ஒரு படைப்பாளியை முடக்கும் வகையிலான செயல். ஏற்கனவே இக்களத்தை அவதானித்ததில் இருந்து ஒரு சிலரின் செயற்பாடுகள் சந்தேகத்துக்கிடமான வகையிலேயே இருந்து வருகின்றன. காரணம் எடுத்ததுக்கெல்லாம் பிரச்சனைகளை உருவாக்கி தங்களின் கருத்துக்களைத் திணிப்பதாக அமைகிறது. விமர்சனமாக அன்றி. விமர்சனம் என்றால் எழுதுங்கள் அந்த இடத்தில் இருந்து விலகிடுங்கள். சீர்தூக்கிப் பார்க்க வேண்டியது படைப்பாளியின் பொறுப்பு. அதை அவர் தவிர்க்கலாம் அல்லது செய்யலாம். அது அவரிம் சுதந்திரம். அதன் மீது அழுத்தங்களை தேவையற்ற கருத்துக்களை திணிக்க முயல்வது மிகவும் கண்டிக்கத்தக்கதோடு கவிதை புனைவோரை அச்சுறுத்தும் பாணியிலான செயலும் கூட.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்க அச்சுறுத்தல் எதுவும் விடுக்கவில்லை.. சிம்புவின் ராசேந்தரின் திறமைகளை பட்டியலிட்டது நானல்ல.. வன்னி மைந்தனே அவர்கள் சீரிய கருத்துக்களை சொல்வதாக சொல்லியிருந்தார்..

புதுவை அற்புதமான ஒரு பாடலாசிரியர். அவரே உரைச்சித்திரங்கள் எனச் சொல்லி விட்ட எழுத்துக்கள் ஒரு வித சிலிர்ப்புடன் கூடிய வாசிப்பனுவம் தரக் கூடியவை.

வன்னி மைந்தனின் ஒரு கவிதையை எடுத்து விமர்சிக்க சொல்லுகிறீர்கள். எதை எடுக்க எதை விட.. எனது விமர்சனம் அவரது எல்லா எழுத்துக்களுக்கும் பொருந்தும்.

ஒரு கவிதை தரவேண்டிய எந்த ஒரு அனுபவத்தையும் அவரது எழுத்துக்கள் தரவில்லை. அடியடா பிடியடா கொல்லுடா தூக்குடா சுடடா என்பது வெறும் எழுத்துக்களை படிப்பது போல இருக்கிறது.

நீங்கள் கூட வ.மைந்தனின் ஒரு கவிதையை இட்டு அது எந்த வகையில் கவிதையாகிறது என சொல்லலாமே..

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கூட வ.மைந்தனின் ஒரு கவிதையை இட்டு அது எந்த வகையில் கவிதையாகிறது என சொல்லலாமே..

எழுந்து வா.....

எவர் வந்தால்

எமெக்கென்ன

எழுந்தோடி வா தமிழா

எம் மண்ணை மீட்போம்....

அஞ்சாத தமிழினமே

அஞ்சி நிற்பதுவோ....??

அறபோரில் நாம் வெல்ல

அணிதிரளாயோ....???

அடிமை தான் வாழ்வென்று

அடிமைக்குள் அடிமையாய்

ஆண்டாண்டாய் கிடப்பதுவோ....???

அட தமிழா வெட்கமில்லையா

எழுந்துவா....

மாற்றான் காலடியில்

மறத்தழிழன் கிடப்பதுவோ...???

மானம் உண்டென்றால்

மறத்தமிழா எழுந்து வா....

கூன் விழுந்த வயதென்ன

குமரா நீயென்ன

யாராய் இருந்தாலென்ன

நம் ஈழம் நாம் காண்போம்

நம்பியே எழுந்து வா....

-வன்னி மைந்தன் -

மேலே உள்ளது கவிதை என்றே சொல்லலாம்.

கூன் விழுந்த வயதென்ன

குமரா நீயென்ன

யாராய் இருந்தாலென்ன

நம் ஈழம் நாம் காண்போம்

நம்பியே எழுந்து வா...

இந்த வரிகள் உங்களில் எந்தத் தாக்கத்தையும் தரவே இல்லையா?

இல்லை என்றால் நீங்கள் வெறுப்போடு இவ்வாக்கங்களைப் பார்க்கிறீர்கள். அந்த இடத்தில் உங்களுக்கு அவற்றை விமர்சிக்க அருகதையே கிடையாது..!

நெடுக்கால போனவரே!

முழுமையான விடயம் அறிந்துதான் இங்கு கருத்தெழுதுகிறீர்களா?

ஆதிவாசி பழைய சிங்கங்கள் ரெண்டும் நேருக்கு நேர் சந்தித்து இருக்கிறது, புதிதாக வந்ததால், புரியாத புதிராக இருக்கும் பொறுத்திருந்து வேடிக்கையைபாரும், இந்தபகுதி ஒரு பத்து, பதினைந்து பக்கத்தை தாண்டும். B) B) B)

Edited by Birundan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.