Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வசாவிளான் கிழக்குப் பகுதிக்குள் நுழைய முதலமைச்சருக்கும் அனுமதி மறுப்பு! - படையினரின் தடையால் திரும்பினார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
cm-vikki-block-220315-200-seithy.jpg

வசாவிளான் கிழக்குப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்பாதுகாப்பு வலய எல்லைக்குள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை உட்செல்ல விடாது இராணுவத்தினர், இன்று தடுத்து நிறுத்தினார்கள். 25 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து விடுவிக்கப்படவுள்ள வசாவிளான் கிழக்குப் பகுதியை பார்வையிடுவதற்காக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இன்று அங்கு சென்றார்.

   

ஒட்டகப்புலம் அமல உற்பவ அன்னை ஆலயத்தில் மீளக்குடியேறவுள்ள மக்களை சந்தித்தபின், விடுவிக்கப்பட்ட காணிகளை பார்வையிடுவதற்காக சென்றார். டுவிப்பதாகக்கூறப்பட்ட 197 ஏக்கர் காணிகளுக்கு பொதுமக்கள் செல்வதற்கு இராணுவத்தினர் வெள்ளிக்கிழமை கட்டுப்பாடு விதித்தனர். அதே கட்டுப்பாட்டை வடமாகாண முதலமைச்சருக்கும் இராணுவத்தினர் விதித்தனர். புதிய உயர்பாதுகாப்பு வலய வேலியை தாண்டி முதலமைச்சர் உள்ளே செல்ல இராணுவத்தினர் இடமளிக்கவில்லை. ஆனால், அந்த வேலி விடுவிக்கப்பட்ட காணிகளை உள்ளடக்கியதாகவே அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

cm-vikki-block-220315-seithy.jpg

 

http://seithy.com/breifNews.php?newsID=128827&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவின் சனநாயகம்.. இதுதான். மக்கள் பிரதிநிதிக்கு இல்லாத அதிகாரம்.. சிங்கள இராணுவத்துக்கு இருக்குது. இதனை சிறீலங்காவில் சனநாயம் திரும்பிட்டு என்று அறிக்கை விடும் அமெரிக்காவிடம் தான் விக்கி ஐயா அழகுற எடுத்துரைக்கனும். சிறீலங்காவின் சன நாய் அகம் எப்படி இருக்கென்று. :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுசரி உயர்பாதுகாப்பு வலயம் எண்டால் என்ன? அந்த வலயத்துக்கை என்னதான் நடக்குது? புலிப்படையும் இப்ப இல்லை...

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி உயர்பாதுகாப்பு வலயம் எண்டால் என்ன? அந்த வலயத்துக்கை என்னதான் நடக்குது? புலிப்படையும் இப்ப இல்லை...

 

சிங்க படைக்கு பாதுகாப்புக்குதான்......

சின்ன வகுப்பில படிச்ச முயல் சிங்கம் கதை தெரியும்தானே ....அப்படி ஒரு சம்பவம் நடக்காமல் தடுப்பதற்கு எடுக்கும் நட்வடிக்கையை உயர் பாதுகாப்பு வலயம் என்று சொல்லுவது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.