Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். குடா நாட்டின் சோகம் என்ன செய்யலாம்..

Featured Replies

சிந்தனை மடல்.

யாழ் குடாநாட்டின் பல பகுதிகளில் இருந்தும் எமக்கு வந்துள்ள கடிதங்கள் சொல்லும் செய்தி இன்றைய குடாநாட்டின் நிஜ நிலமைகளை எமக்கு விளக்குகிறது. அக்கடிதங்களில் மனதைத் தொட்ட இடங்களை முதலில் வரிசைப்படுத்துகிறோம்.

01. யாழ். குடாநாட்டில் இப்போது அனைவருமே திறந்தவெளி கைதிகளாகவே வாழ்ந்து வருகிறோம். எமது வாழ்வில் உள்ள அர்த்தங்கள் அனைத்துமே அடிபட்டுப் போய்விட்டன.

02. உள்ளி ஒரு கிலோ இரண்டாயிரம் ரூபா விலை போகிறது.

03. ஒரு தீக்குச்சியின் விலை இரண்டு ரூபா, அந்தக் குச்சி அணைந்துவிட்டால் இரண்டு ரூபா பறந்தது.

04. யார் எப்போது கொல்லப்படுவர் என்பது தெரியாது. எமது உயிர்களுக்கு எந்தவொரு உத்தரவாதமும் இல்லை.

05. தொலைபேசி எடுத்தால் பிரச்சனை வருமென அதிகமானவர் தொலைபேசிகளும் எடுப்பதில்லை.

06. பட்டினி ஒரு தினசரி அவலமாக உள்ளது. போரினால் அல்ல, பட்டினியால் நாம் மரணிக்கக் கூடிய நிலை உள்ளது. மேலும் மூன்று மாதங்கள் இதே நிலை தொடர்ந்தால் குடாநாடே மரண வீடாக மாறும்.

இவைகள் யாவும் அக்கடிதங்களில் இருந்து சேகரிக்க முடிந்த தகவல்களாகும். ஏ9 பாதையைத் திறந்தால் இந்த பட்டினி மரணங்களையும், மனித அவலங்களையும் தீர்க்க முடியும் என்று பல தடவைகள் கேட்டும் அதற்கு ஓர் உடன்பாடு இதுவரை காணப்படவில்லை.

இனி - இந்தக் கேள்விக்கு விடை காண வேண்டியது அந்தப் பிரச்சனையால் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்கள்தான்.

யாழ். குடாநாட்டு மக்கள் ஒரே நாளில் ஐந்து இலட்சம்பேர் வன்னிக்கு இடம் பெயர்ந்த சாதனை படைத்தவர்கள். இந்த அவலத்திற்கு எதிராக ஐந்து இலட்சம் பேரும் ஒரே நாளில் வீதியில் இறங்க ஏன் மறுக்கிறார்கள் என்பது வெளிநாடுகளில் உள்ள ஐரோப்பிய இன மக்களின் கேள்வியாக உள்ளது. மக்கள் மட்டும் தங்களுடைய நியாயமான உரிமை, உணவு, உயிர்வாழ்தல் ஆகிய கோரிக்கைகளுடன் வீதியில் ஏகோபித்து இறங்கினால் இலங்கைப் பிரச்சனைக்கு அதுவே நிரந்தரமான தீர்வை ஏற்படுத்தும்.

யுகோசுலாவியா, ரஸ்யா, செக் குடியரசு, கங்கேரி உள்ளிட்ட உலக நாடுகள் யாவும் இதே பிரச்சனையை சந்தித்தன அத்தருணம் மக்கள் இலட்சக் கணக்கில் வீதியில் இறங்கியிருக்கிறார்கள். அப்படியான நிகழ்வுகள் நடைபெற்ற போது ஐ.நா செயலர் உடனடியாக அந்த நாட்டுக்கு போயுள்ளார்;. சர்வதேச, பிராந்திய அழுத்தங்களை எல்லாம் தாண்டி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார். மக்கள் அரசியல் நலங்ககும், பிராந்திய நலங்களுக்கும், சர்வதேச விவகாரங்களுக்கும் அப்பாற்பட்டவர்கள் என்பதே இந்த நிகழ்வுகள் சொல்லும் பாடமாகும்.

இன்று பட்டினியில் இருந்து மக்களை மீட்டாலும், பட்டினியின் தாக்குதலுக்குள்ளான மக்கள் தொடர்ந்து வரும் ஆண்டுகளில் ஆரோக்கியமான வாழ்வுக்கு போராட வேண்டி வரும். இளைய தலைமுறையினரின் உடல்கள் கூட பல்வேறு நோய் எதிர்ப்பு சக்தியையும் தாங்க முடியாத நிலையை அடையும். வளமான எதிர்கால சந்ததியை இழந்த மண்ணாக அது மாறும். ஆகவே அங்குள்ள மக்கள் இந்தப் பிரச்சனையை மேலும் தொடர விடலாது.

தாயகத்தில் உள்ள ஒவ்வொரு ஊர் ஊராக மக்கள் திரண்டு வீதியில் இறங்கினால் நிலமை மாறும். ஆரம்பத்தில் சில இழப்புக்கள் நேரும் என்று அஞ்சும் மக்கள், அச்சத்தினால் தாமதித்தால் பட்டினியாலும், படுகொலையாலும் அதைவிட பேரிழப்புக்களை சந்திக்க நேரலாம்.

உலக சமுதாயம் ஏற்றுக் கொண்ட மனித உரிமைகளில் முக்கியமானது வாழ்தலுக்கான உரிமை. அது மறுக்கப்பட்ட மக்கள் பட்டினியிலும், அச்சத்திலும், உலக நாடுகளின் மீட்பர்கள் வருவார்கள் என எண்ணுவதும் அஞ்சி அஞ்சி வாழ்வதும் பட்டினியால் இறப்பதும,; தொடர்ந்து அனுமதிக்க இயலாத காரியமாகும்.

மக்கள் முன்வரவேண்டும். அதுவே இப்பிரச்சனைக்கான தீர்வாகும்.

The article was right. The time has come for our people to show where they stand. Time for "people power revolution". Ukraine to Lebanon to Nepal people have forced political changes in a week when such changes would have taken a generation or two to happen (Burmese people are good example of the latter group. By just sitting there and expecting others to drive change burmese have dug themselves a deep grave).

Now the question is will it happen in Jaffna. I seriously doubt it. If such a situation would have arisen in Palestine, they would have done some dramatic things by now. But our people are not palestinians are they!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.