Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Bakthagowri_1941.jpg

பக்த கௌரி 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். நோதானி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். டி. சுப்பையா, யு. ஆர். ஜீவரத்தினம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Pandhayam_(1967).jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Mani_Malai_poster.jpg

Directed by    Bomman Irani
Screenplay by    A. M. Somarajulu
S. Ramaiah
Based on    Manimekalai
by Chithalai Chathanar
Produced by    T. Krishnachand
Starring    K. B. Sundarambal
Cinematography    Bomman Irani
Music by    Papanasam Sivan
Papanasam Rajagoplan
Production
company
    
T. K. Productions
Release date
    

  23 November 1940

 

   
   
   
   
   
   
   
   
   
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அந்த கால சரோஜாதேவி ஒப்பனை ..☺️

Screenshot-2021-08-08-07-56-15-736-com-a

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Bhishma_(1936).jpg

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

1970'S புன்னகை அரசி ..👌

Screenshot-2021-09-03-11-35-16-990-com-a

K.R. விஜயா 70 களில் நம்பர் 1 நடிகையாக இருந்தார். சரோஜாதேவி சாவித்திரி ஜெயலலிதா போன்ற நடிகைகளுக்கு இல்லாத பெருமை KR.விஜயாவுக்கு உண்டு. K.R.விஜயா தனிப்பெரும் கதாநாயகியாக விளங்கினார். இவர் நடித்த திருடி, வாயாடி, ரோஷக்காரி, மேயர் மீனாட்சி, கியாஸ்லைட் மங்கம்மா, நம்ம வீட்டு தெய்வம் மற்றும் அம்மன் படங்களிலும் தனியாக ஜொலித்தார்.

அதிலும் மதுரை திருமாறன் இவரை கதாநாயகியாக வைத்து தொடர்ச்சியாக படம் எடுத்தார்.
நம்ம வீட்டு தெய்வம் படத்துக்கு பெண்களுக்கு தனிகாட்சி வைக்கும் அளவு தாய்மார்களின் கூட்டம் இருந்தது. சின்ன சின்ன ஊர்களில் கூட 50 நாட்களை தாண்டி ஓடியது.

ஜெய்சங்கர், ரவிச்சந்திரனை இரண்டாம் இடத்துக்கு தள்ளிவிட்டு முதலிடத்தில் லேடி சூப்பர் ஸ்டாராக விளங்கினார் என்று சொல்லலாம். தமிழ் சினிமாவில் முதல் லேடி சூப்பர் ஸ்டார் இவரே. இப்போ நயன்தாரா இருந்தாலும் சில படங்கள்(டோரா) அவரையும் கவிழ்த்து விடுகின்றன..

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

mqdefault.jpg

 

Vedavathi.jpg

வேதவதி அல்லது சீதா ஜனனம் 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.

டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில்

எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி,

எம். ஜி. ஆர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

ஷ்யாமளா பிச்சர்ஸ் தயாரிப்பில், 11 ஜனவரி 1941 ஆம் தேதி இப்படம் வெளியானது

 

எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி - நாரதர்

ஆர். சுப்பிரமணியம் - ராவணன்

பி. ஜி. வெங்கடேசன் - விபீஷணன்

எம். ஜி. ஆர் - இந்திரஜித்

வி. எஸ். மணி - ராமர்/விஷ்ணு

எம். ஜி. சக்கரபாணி - ஜனகர்/குபேரன்

பி. எஸ். வீரப்பா - இந்திரன்

எஸ். நந்தரம் - யமன்

கே. எஸ். வேலாயுதம் - நந்தி/அனுமான்

என். எஸ். வேலப்பன் - நளகூபரன்

வி. ஸ்ரீனிவாச சாஸ்திரி - அக்னி

கே. ராமசாமி ஐயர் - கும்பகர்ணன்

எஸ். ராமுடு - வருணன்

பி. கோவிந்தசாமி - சிவன்

டி. வி. கிருஷ்ணசாமி - சூரியன்

பி. லக்ஷ்மணசாமி - லக்ஷ்மணன்

எம். சங்கரராமன் - வாயு

ஏ. சி. சுந்தரம் - தூதர்

கோலார் ராஜம் - மண்டோதரி

கே. தவமணி தேவி - வேதவதி/சீதா

குமாரி ருக்மணி - ரம்பை

எம். எஸ். சரோஜா - மேனகா

டி. என். சுந்தரம்மா - லட்சுமி

எம். வி. குஞ்சம்மாள் - ஊர்வசி

எம். எஸ். சுந்தராம்பாள் - திலோத்தமை

ஜி. எஸ். சரஸ்வதி - பூதேவி

வி. எஸ். கௌசல்யா - பார்வதி

விசாலாக்ஷி - சூர்ப்பனகை
ஆகாச வாணி

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

420px-Anbalippu_poster.jpg 

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Araichimani_or_manuneethich_chozhan_tami

 

ஆராய்ச்சி மணி  அல்லது மனுநீதி சோழன்  ஒரு தமிழ்த் திரைப்படமாகும். பி. கே. ராஜா சாண்டோ இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் பி. பி. ரங்காச்சாரி, எம். ஆர். சந்தானலட்சுமி, எஸ். பாலச்சந்தர், எஸ். வரலட்சுமி, ஏ. ஆர். சகுந்தலா, என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

220px-Unmaiye_Un_Vilai_Enna-220x275.jpg

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாமும் அந்த காலதிற்கு பயணிப்பம்..☺️

Screenshot-2021-09-20-13-50-03-052-com-a

  • Like 2
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Aasai_Manaivi.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

250px-Kubera_Kuchela_1943.jpg

 

குபேர குசேலா 1943
ஆர். எஸ். மணி, மற்றும் பி. எஸ். இராமையா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. யு. சின்னப்பா, பாபநாசம் சிவன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Paattum_Bharathamum.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கல்யாணப்பரிசு (1959)

67041614.jpg

அப்போதெல்லாம் எம்ஜிஆரையோ சிவாஜியோ போட்டால், பூஜையின் போது மொத்த ஏரியாவே விற்றுவிடும். ’நான் தரேன் எவ்ளோ வேணும்?’ என்று பைனான்ஸியர்கள் வரிசைகட்டி கையில் பணத்துடன் வந்து நிற்பார்கள்..

ஆனால், எம்ஜிஆர் பக்கமும் போகாமல் சிவாஜி பக்கமும் போகாமல், ‘கல்யாண பரிசு’ படத்தில் ஜெமினி கணேசனை நாயகனாக்கினார். பாஸ்கராகவே வாழ்ந்து காட்டினார் ஜெமினி கணேசன்.

எஸ்.எம்.சுப்பையா நாயுடுவும் கேவி.மகாதேவனும் எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தியும் அவரவர் பாணியில் இசையால் தமிழகத்தைக் குளிர்வித்துக் கொண்டிருந்தார்கள். சீர்காழி கோவிந்தராஜன், டிஎம்.செளந்தர்ராஜன், டி.ஆர்.மகாலிங்கம், பிபி.ஸ்ரீநிவாஸ் என பலரும் பாடி மகிழ்வித்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் தன் முதல் படத்துக்கு, இசையமைப்பாளராக ஏ.எம்.ராஜாவை நியமித்தார். இன்னொரு விஷயம்... பாடகராக எல்லோருக்கும் ராஜாவைத் தெரியும். ஆனால், அவரை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார்.ஸ்ரீதர்.

ஜெமினி கணேசன் சரோஜாதேவியைக் காதலிப்பார். சரோஜாதேவியும் ஜெமினியை விரும்புவார். சரோஜாதேவியின் அக்கா விஜயகுமாரியோ, ஜெமினிகணேசனை காதலிப்பார். அக்காவின் காதலும் விருப்பமும் தங்கைக்குத் தெரியவர, அக்காவுக்காக தன் காதலையே தியாகம் செய்வார் சரோஜாதேவி. ஜெமினியையும் அப்படி தியாகம் செய்ய மன்றாடுவார். இறுதியில்,தன் காதலியின் விருப்பத்தை நிறைவேற்ற சம்மதிப்பார்.

ஜெமினிக்கும் விஜயகுமாரிக்கும் கல்யாணம். பிறகு மூவரின் வாழ்க்கையிலும் நிம்மதியோ ஆனந்தமோ இல்லாத நிலை. இவர்களை விட்டு சரோஜாதேவி எங்கோ செல்ல, குழந்தையும் பெற்றுவிட்ட நிலையில் விஜயகுமாரி இறந்துவிட, கையில் குழந்தையுடன் உலகமே சூன்யமாகிவிட்டதாகக் கருதும் வாழப் பிடிக்காத ஜெமினி சரோஜாதேவியைத் தேடிக்கொண்டு வர, அங்கே... சரோஜாதேவிக்குத் திருமண ஏற்பாடுகள் நடக்க, குழந்தையின் கையில் கடிதத்தைக் கொடுத்து உள்ளே அனுப்பிவிட்டுச் செல்ல, சரோஜாதேவியும் அவரைக் கல்யாணம் செய்துகொள்ளும் நாகேஸ்வர ராவும் அந்தக் குழந்தையை ஏற்றுக்கொள்ள... அவர்களுக்கு அந்தக் குழந்தைதான் ‘கல்யாண பரிசு’ என்பதுடன் படத்தை முடித்திருப்பார் ஸ்ரீதர்.

ஒரு படத்தில், கதைக்குள்ளேயே காமெடியை எப்படி நுழைக்கவேண்டும் என்பதற்கு ‘கல்யாண பரிசு’ மிகச்சிறந்த உதாரணம். தங்கவேலு சரோஜா ஜோடியின் கலாட்டாவும் காமெடியும் அமர்க்களம். தமிழ் சினிமா வரலாற்றில், ஒரு படத்தின் காமெடி தொகுக்கப்பட்டு, அது தனி ரிக்கார்டாக ஆக்கப்பட்டு, கல்யாணம், காதுகுத்து, சீமந்தம், கோயில் திருவிழா சமயங்களில் ஒலிபரப்பப்பட்டதென்றால்... அது ‘கல்யாண பரிசு’ காமெடியாகத்தான் இருக்கும். இதுதான் ஆரம்பம்!

மன்னார் அண்ட் கம்பெனி காமெடியையும் எழுத்தாளர் பைரவன் என்று பொய் சொல்லி வாங்கிக் கட்டிக் கொண்டதையும் இன்னும் நூறு ஆண்டுகளானாலும் மறக்கமாட்டார்கள் ரசிகர்கள். தங்கவேலு - சரோஜாவின் காமெடிகளால் வெடித்து ரசித்தார்கள். ரசித்துச் சிரித்தார்கள். அந்த ‘தட்டுனான் பாரு...’ ‘எங்கே... முதுகுலயா?’ என்கிற வசனங்கள் இன்றைக்கும் பாப்புலர்.

உணர்வு பூர்வமாகவும் உணர்ச்சிபூர்வமாக எழுதிய ஸ்ரீதரின் வசனங்கள் ஒருபக்கம். இந்தியாவின் ஒளிப்பதிவு மேதையும் ஸ்ரீதரின் மிக நெருங்கிய நண்பருமான ஏ.வின்செண்டின் ஒளிப்பதிவு இன்னொரு பக்கம்.

ஏ.எம்.ராஜாவின் மனதை வருடிக் கொடுக்கும் இசை இன்னொரு பக்கம், ஜெமினி, சரோஜாதேவி, விஜயகுமாரி எனும் முக்கோணக் காதல் கதை என்கிற வார்த்தையையும் கதையாடலையும் உருவாக்கிய ஸ்ரீதரின் திரைக்கதை ஜாலம் ஒருபக்கம் என நாலாபக்கமுமாக நம்மைக் கட்டிப் போட்டது ..‘கல்யாண பரிசு’.

’வாடிக்கை மறந்ததும் ஏனோ’, ‘ஆசையினாலே மனம்’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ’அக்காளுக்கு வளைகாப்பு அத்தான் முகத்திலே புன்சிரிப்பு’, ’உன்னைக் கண்டு நானாட’, ‘காதலிலே தோல்வியுற்றான் காளையொருவன்’ என்று எல்லாப் பாடல்களையும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதினார்.

எல்லாப் பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டடித்தது. இதில் ‘உன்னைக் கண்டு நானாட’வும் ‘காதலில் தோல்வியுற்றான்’ பாடலும் இரண்டிரண்டு முறை வந்து, இன்னும் உலுக்கியது. ’கல்யாண பரிசு’ பட பாட்டுப்புஸ்தகத்தை வாங்கி வைத்துக் கொண்டு, பாடல்களை மனனம் செய்து, அந்தப் பாடல்களைப் பாடி, தங்கள் காதல் தோல்விக்கு மருந்தாக்கிக் கொண்ட காளையர்களும் யுவதிகளும் அன்றைக்கு ஏராளம்!

அன்றைக்கு ஏகப்பட்ட பேர், தங்கள் காதல் தோல்வியின் ஞாபகார்த்தமாக, வேறு யாரையோ திருமணம் செய்து, குழந்தை பெற்றுக்கொள்ள, அந்தப் பெண் குழந்தைக்கு ‘வசந்தி’ என்று பெயர் வைத்து ஆறுதல்பட்டுக்கொண்டார்கள்.

முதல் படமான ‘கல்யாண பரிசு’ படத்தின் மூலமாகவே இப்படியான பல சாதனைகளைச் செய்திருந்தார் ஸ்ரீதர். புதுமை இயக்குநர் என்று கொண்டாடப்பட்டார்.

1959-ம் ஆண்டு, ஏப்ரல் 9-ம் தேதி வெளியானது ‘கல்யாண பரிசு’. இந்தப் படம் வெளியாகி, 62வருடங்களாகிவிட்டன. இன்றைக்கு மட்டுமல்ல... இன்னும் 60 வருடங்களானாலும் காதல் தோல்விப் படத்துக்கான ஆகச்சிறந்த ஐகான்... அடையாளம் என்று கொண்டாடப்பட்டுக் கொண்டே இருக்கும் ‘காதல் பரிசு’... இந்தக் ‘கல்யாண பரிசு ..

இலங்கை செய்திதாளில்  அன்றைய நாளில் வெளியான விளம்பரம் யாழ் கள உறவுகளுக்காக இதோ..

Screenshot-2021-10-05-08-48-09-438-com-a

  • கருத்துக்கள உறவுகள்
Posted

320px-Thavapudhalavan.jpg

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Devakanya1943.jpg

 

ஹொன்னப்ப பாகவதர், யூ. ஆர். ஜீவரத்தினம், வி. என். ஜானகி, டி. ஆர். ராமச்சந்திரன் மற்றும் பலர் நடித்திருந்தனர்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

DasiAparanji1944.jpg

தயாரிப்பு    எஸ். எஸ். வாசன்
பி. என். ராவ்
ஜெமினி ஸ்டூடியோ
கதை    கொத்தமங்கலம் சுப்பு
இசை    எம். டி. பார்த்தசாரதி
எஸ். ராஜேஸ்வர ராவ்
நடிப்பு    கொத்தமங்கலம் சீனு
எம். கே. ராதா
கொத்தமங்கலம் சுப்பு
எம். வி. மணி
புஷ்பவல்லி
என். எஸ். சுந்தரம்
எம். எஸ். சுந்தரிபாய்
ஜெயலட்சுமி
எல். நாராயணராவ்

 




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எனக்கு தெரியாது பார்க்கவில்லை ......ஆனால் இங்கு அர்ச்சுனா குரல் கொடுப்பது பாதிக்கப்பட்டுள்ளவர்கள் சார்பாக   அது எனக்கு பிடித்து உள்ளது  இந்த மக்களுக்குகாக   இதுவரை எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினர்களும்   பேசவில்லை   ஏன்?? அர்ச்சுனாவின். செயல்கள்  கோமாளித்தனமானது  தான்  100% ஒத்துக் கொள்கிறேன்  ஆனால் நான் அதை பார்க்கவில்லை   பார்க்க விரும்பவில்லை  ஏன்?   ஏனென்றால் எவருமே குரல் கொடுக்க விரும்பாத மக்களுக்குகாக. துணிந்து குரல் கொடுக்கிறார் யாரும் தட்டிக் கேட்கத,.....  கேட்க விரும்பதா. அநீதியையும் தட்டிக் கேட்கிறார்கள் மேலும்  வட்டுக்கோட்டையை சேர்ந்த ஒரு ஆசிரியை  தனது மாமியாரயை   திடீரென வீட்டில் விழுந்து மயங்கிய நிலையில்  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்தார்கள்  பலமணி நேரத்தின் பின்னர்  ஒரு மருத்துவர் பல மருத்துவ மாணவர்கள் புடை சூழ. வந்தார்  நோயாளியை. தொட்டுக்கூட. பார்க்கவில்லை  எட்ட நின்று  ஆக கொலோரேஸ்.  என்றாராம்   அவர் போய் விட்டார்  சரியான மருத்துவம் அளிக்கபடவில்லை  இடையில் நடந்த பல விடயங்களை நான் மறந்து போனேன்     அந்த பெண் இறந்து விட்டார்  அதன் பின்னர் உடலை வெட்டி பார்த்து உள்ளார்கள்,... உடல் தைக்காமல். வட்டுக்கோட்டை பொலிஸார் மூலம் மரணவிசாரனை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது  இங்கே ஜேர்மனியில் என்னுடன் வேலை செய்த தமிழ் இளைஞர் ஒருவருக்கு இதோ பிரச்சனை  வாய் மூலம் சிறுநீரகம் வரை  ஒரு சிறு குழாயை விட்டு  கொழுப்பை அகற்றிவிட்டுயுள்ளார்கள்.   மூன்று மாதம் மருத்துவ லீவும். கிடைத்தது  மீண்டும்   நன்றாக வேலை செய்தார்    யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் நடந்த பல விடயங்கள் நீதிக்கு பிறம்பானவை    அவற்றிற்கு குரல் கொடுக்க. எவருமில்லை    இதுவரை எவருமில்லை  இப்போது அர்ச்சுனா என்ற ஒருவன் வந்துட்டாரு அவரை ஒரு கை பார்த்து விடவேண்டும். என்பது மேல் மட்டத்தின். விருப்பம்   அதற்கு நாங்கள் துணை போகலாமா.  ???? 🙏
    • இதே வைத்தியர் அர்ச்சுனா ஒரு முறை தனது மேலதிகாரி தன்னை சார் என்று அழைக்கூமாறு கேட்டதே நக்கல் நையாண்டி செய்து பல வீடியோக்களை வெளியிடப்பட்டதாக ஞாபகம்lément blockquote
    • சங்கி என்றால் சக தோழன் என்று அர்ததம் என்று சமீபத்தில் சீமான் கூறினார். இப்போது உண்மையான சங்கி என்றால் திமுக தான் என்கிறார். அப்படியாயின்  திமுக என் உண்மையான சக தோழன் என்று கூற வருகிறாரா? 
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.