Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்காவில் நடைபெறும் விசேட தேவையுடையவர்களுக்கான ஒலிம்பிக் போட்டியில் யாழ் மாணவர்கள்

Featured Replies

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இடம்பெறும் விசேட தேவையுடைய மாணவருக்கான ஒலிம்பிக் போட்டியில் யாழ்ப்பாணம் கோண்டாவில் சிவபூமி மனவிருத்திப் பாடசாலையில் பயிலும் மாணவர்கள் மூன்று போர் கலந்து கொள்ளவுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் விசேட தேவையுடையவர்களுக்கான பாடசாலையான சிவபூமி சிறுவர் மனவிருத்திப் பாடசாலை சர்வதேச விசேட தேவையுடைய மாணவர்களின் ஒலிம்பிக் போட்டியில் மூன்றாவது தடவையாகவும் தமது மாணவர்களை பங்குபெற்றச் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இம் மாணவர்களுக்கான போக்குவரத்துச் செலவில் ஒரு மாணவனது செலவை யாழ்ப்பாணம் இந்துக் கல்லுாரி பழைய மாணவர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.

குறித்த மூன்று மாணவர்களும் தேசிய ரீதியல் நடாத்தப்பட்ட போட்டிகளில் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தியதன் மூலமே விசேட தேவையுடைய மாணவருக்கான ஒலிம்பிக் போட்டியில் தெரிவாகியுள்ளனர்.

இவர்களுக்கான பயிற்சிகள் மாத்தறை சர்வதேச விளையாட்டரங்கிலும் யாழ் பல்கலைக்கழக மைதானத்திலும் வழங்கப்பட்டு வருகின்றன. அங்கு இவர்கள் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.newjaffna.com/moreartical.php?newsid=37356&cat=nnews&sel=current&subcat=14

  • கருத்துக்கள உறவுகள்
மூன்று போர் கலந்து
போர்......காணும் நாம் கண்ட போர்கள்...வேண்டாம் போர் தேவை பேர்(மக்கள்)
  • தொடங்கியவர்

பேர் ஆ பேயரா?

சும்மா தமாசுக்கு

விசேட தேவையுடைய மாணவர்கள் அமெரிக்கா செல்வது பெருமையாக உள்ளது putthan

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் இவர்களுக்கு..!

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்....

வாழ்த்துக்கள் ,

 

எனது வீட்டிற்கு அருகில் தான் சிவபூமி இருக்கு இதன் பொறுப்பாளர் தங்கம்மா அப்பாக்குட்டியின் சிஷ்யன் இணுவிலை சேர்ந்த யாழ் இந்து பழைய மாணவன் ஆறு திருமுருகன் .இவர் கடந்த வருடம் கனடா வந்திருந்தார் .

 

இவரின் பேச்சு ஆற்றலால் உலகம் முழுக்க சுற்றி அடிக்கும் ஆள் இவர் .இந்த தொடர்புகளால் இவர் நாட்டில் செய்யும் சேவை நினைத்து பார்க்க முடியாதது .யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ,கணவனை இழந்த பெண்களுக்கு ,மனவிருத்தி குறைந்த குழந்தைகளுக்கு பாடசாலை தங்குமிடம் என்று அளப்பரிய சேவை செய்துவருகின்றார்கள் .

 

வானொலி அறிவிப்பள்ளர் இளையபாரதி இவரை பேட்டி கண்டார் .இளையபாரதியின் இடக்கு மடக்கு கேள்விகளுக்கு தடாலடி பதில்கள் கொடுத்து அவர் வாயை அடைத்தார்.

இன்னும் பல விபரங்கள் இருக்கு முடிந்தால் பின்னர் எழுதுகின்றேன் .


10806428_1029445943739244_42017114847550

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.