Jump to content

சிம்பிளான புடலங்காய் பொரியல்


Recommended Posts

சிம்பிளான புடலங்காய் பொரியல்

 

மதியம் என்ன பொரியல் செய்வதென்றே தெரியவில்லையா? அப்படியெனில் வீட்டில் புடலங்காய் இருந்தால், அதனைக் கொண்டு பொரியல் செய்து சாப்பிடுங்கள். அதிலும் புடலங்காய் பொரியலை எப்படி சிம்பிளாக செய்வதென்று தெரியலையா?

veyu60.jpg

மேலும் இந்த புடலங்காய் பொரியலானது பேச்சுலர்கள் செய்வதற்கு ஏற்றவாறு மிகவும் ஈஸியாக இருக்கும். சரி, இப்போது அந்த புடலங்காய் பொரியலின் செய்முறையைப் பார்ப்போமா!!!

 

தேவையான பொருட்கள்:

 

புடலங்காய் - 1 (பொடியாக நறுக்கியது)

 

வெங்காயம் - 1 (நறுக்கியது)

 

சாம்பார் பொடி - 1 டேபிள் ஸ்பூன்

 

உப்பு - தேவையான  அளவு

 

பொருட்கள் தாளிப்பதற்கு...

 

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

 

கடுகு - 1 டீஸ்பூன்

 

உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

 

மிளகாய் - 1

 

கறிவேப்பிலை - சிறிது

 

செய்முறை:

 

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

 

பின்னர் அதில் புடலங்காயை சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பின் உப்பு மற்றும் சாம்பார் பொடி சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும்.

 

பிறகு அதில் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து 5-10 நிமிடம் நன்கு வேக வைத்து, மூடியை திறந்து, தீயை அதிகரித்து 5 நிமிடம் வதக்கி இறக்கினால், புடலங்காய் பொரியல் ரெடி!!!

 

Read more at: http://tamil.boldsky.com/recipes/veg/simple-snake-gourd-poriyal-recipe-007921.html

Link to comment
Share on other sites

புடலங்காயைப் பொரிப்பது பற்றி இன்றுதான் அறிகின்றேன்.

 

புடலங்காயும் பருப்பும் சேர்த்து என் அம்மா ஒரு கறி வைப்பார்...சுப்பராக இருக்கும். எழுதும் போது நாவில் வந்து போகின்றது அந்தச் சுவை.

Link to comment
Share on other sites

புடலங்காயைப் பொரிப்பது பற்றி இன்றுதான் அறிகின்றேன்.

 

புடலங்காயும் பருப்பும் சேர்த்து என் அம்மா ஒரு கறி வைப்பார்...சுப்பராக இருக்கும். எழுதும் போது நாவில் வந்து போகின்றது அந்தச் சுவை.

 

இது பொரியல் அல்ல நிழலி, புடலங்காய்கறிதான் ஆனால் இந்தியர்கள் கறியை பொரியல் என்று சொல்கிறார்கள் என நம்புகிறேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

-----

மேலும் இந்த புடலங்காய் பொரியலானது பேச்சுலர்கள் செய்வதற்கு ஏற்றவாறு மிகவும் ஈஸியாக இருக்கும். சரி, இப்போது அந்த புடலங்காய் பொரியலின் செய்முறையைப் பார்ப்போமா!!!

-----

 

ஒரு புடலங்காய்... ஒரு மீற்றர் நீளத்துக்கு மேல் இருக்கும்.

அதனை, பேச்சுலர்கள் செய்து... எத்தனை நாள் வைத்து சாப்பிடுவது. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புடலங்காய்  எப்பவும் நீளமாய்த்தான் வளரும், அதன் சுபாவம் அப்படி, நாங்கள்தான் எமது தேவைக்கு ஏற்றாற் போல் வெட்டி எடுத்துக் கொண்டு மீதியை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைக்க வேண்டும். கல்கட்டாப் பிடலங்காய் குட்டையாய் இருக்கும்....!

 

புடலங்காயில்  1 மீற்றர்...! பேச்சுலர்களுக்கு...!!

 

---  35 செ .மீ  காயில்  ஒரு வதக்கிய குழம்பு..!

 

---  25 செ . மீ  காயில்   தேங்காய்ப் பூ துருவிப் போட்டு , றாலும் சேர்த்து ஒரு வறை...!

 

----  30 செ . மி  காயில் ஒரு பிரட்டல்.. (படம் நோக்கவும்).

 

---   10 செ . மீ  காய்  சேதாரம்...! பேச்சுலர்ஸ் இல்லையா அதுக்கும் ஒதுக்க வேண்டும்.  :D :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.