Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசிய அரசுக்கு நாடாளுமன்றில் விழுந்தது முதல் அடி - திறைசேரி முறிகள் மூலம் பணம்பெறும் யோசனை எதிரணியால் தோற்கடிப்பு

Featured Replies

parliment%20445ff.jpg
 
 
தேசிய அரசு உதயமாகிய பின்னர், நாடாளுமன்றில் முதன்முறையாக இன்று செவ்வாய்க்கிழமை சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை 21 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.
 
திறைசேரி உண்டியலூடாக அரசு பெற்றுக்கொள்ளக்கூடிய கடன் தொகையை 400 மில்லியன் ரூபாவால் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் வகையில் அமைந்த இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக 31 வாக்குகளும் எதிராக 52 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
 
இவ்வாறு பிரேரணை தோற்கடிக்கப்பட்டதையடுத்து, எதிர்க்கட்சி எம்.பிக்கள் மேசைகளைத் தட்டியும், கூச்சலிட்டும் சபையில் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பிரேரணையைச் சமர்ப்பித்த நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட சிரேஷ்ட அமைச்சர்கள் வாக்கெடுப்பின்போது சபையில் இருக்கவில்லை.
 
அத்துடன், எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா , எதிர்க்கட்சி பிரதம கொறடாவான ஜோன் செனவிரட்ன ஆகியோரும் பிரசன்னமாகியிருக்கவில்லை. பிரேரணைக்கு எதிராக ஜே.வி.பியும் வாக்களித்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்கள் வாக்ககெடுப்பின்போது சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை. அதேவேளை, அண்மையில் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 26 எம்.பிக்களில் அமைச்சர்களான மஹிந்த சமரசிங்க மற்றும் விஜித் விஜிதமுனி சொய்ஸா ஆகிய இருவர் மட்டுமே பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
 
ஏனைய எவரும் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. நாடாளுமன்றத்தில் உள்நாட்டு திறைசேரி உண்டியல் சட்டத்தின் தீர்மானம் மீதான பிரேரணையை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க சமர்ப்பித்தார். இதற்கு முன்னரான தீர்மானத்தின் மூலம் அதிகாரமளிக்கப்பட்ட தொகைக்கு (850 பில்லியன் ரூபா) மேலதிகமாக 400 பில்லியன் ரூபாவைத் தாண்டாத தொகையொன்றை இலங்கையில் இலங்கை அரசின் திறைசேரி உண்டியல்களை வெளியிடுவதன் மூலம் கடனைப் பெறும் நோக்கில் இந்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.
 
இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக ஆளுந்தரப்பினர் கருத்து வெளியிட்டபோது, பிரேரணையை கடுமையாக எதிர்த்து எதிர்த்தரப்பினர் கருத்துக்களை முன்வைத்தனர். ஆட்சி அமைத்து குறுகிய காலத்துக்குள்ளேயே அதைக் கொண்டு நடத்த முடியாமல் பொருளாதார ரீதியில் பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தி நாட்டை ஆபத்தான நிலைக்கு அரசு கொண்டு செல்கின்றது என விவாதத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சி எம்.பிக்கள் விமர்சனங்களை முன்வைத்தனர். இதற்கு தாம் ஒருபோதும் அனுமதியளிக்க மாட்டார்கள் என உறுதிபடத் தெரிவித்தனர்.
 
விவாதத்தின் இறுதியில் வரிசைக்கிரமமாக வாக்கெடுப்பு நடத்துமாறு விமல் வீரவன்ஸ எம்.பி., சபைக்குத் தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடியிடம் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, இடம்பெற்ற வாக்கெடுப்பில் 21 மேலதிக வாக்குகளால் பிரேரணை தோற்கடிக்கப்பட்டது. அதேவேளை, மேற்படி பிரேரணை தோற்கடிக்கப்பட்டதையடுத்து, 19 ஆவது திருத்தம் தொடர்பிலும் அரச தரப்புக்கு கடும் அச்சம் ஏற்பட்டுள்ளது என்று அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
 
 
 
 
 
 

 

மைத்திரியின் அரசு கனகாலம் நிண்டு பிடிக்காது. 
வரும் தேர்தலில் மஹிந்த மீண்டும் முடி சூடுவார்.  :D  :icon_idea:
ரணில் தன்னுடைய நரி வேலையை காட்டினால் இதுதான் நடக்கும் .... முதலில் வெளிப்படையாக வரட்டும் .
 
  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரியின் அரசு கனகாலம் நிண்டு பிடிக்காது.

வரும் தேர்தலில் மஹிந்த மீண்டும் முடி சூடுவார். :D:icon_idea:

மைத்திரிக்கு பிரச்சனை இல்லை. ரணிலருக்குத் தான்.

கடைசில மைத்திரியை, நிறைவேற்று அதிகாரம் இது தான், உன்கையில், எடுத்து வெட்டி விளையாடு என்று சொல்ல வருகிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.