Jump to content

கத்தரிக்காய் பிரியாணி


Recommended Posts

கத்தரிக்காய் பிரியாணி

1zowxnb.jpg

 

என்னென்ன தேவை?

 

பாசுமதி அரிசி - 200 கிராம்

 

கத்தரிக்காய் - கால் கிலோ

 

மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

 

மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்

 

இஞ்சி- பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

 

லவங்கம் - 4

 

நெய் - 3 டீஸ்பூன்

 

பட்டை - சிறு துண்டு

 

ஏலக்காய் - 3

 

பிரியாணி இலை - 1

 

வெங்காயம் - 1

 

தக்காளி - 2

 

தயிர் - 1 கரண்டி

 

நறுக்கிய கொத்தமல்லி, புதினா - சிறிதளவு

 

உப்பு - தேவையான அளவு

 

எப்படிச் செய்வது?

 

கத்தரிக்காயில் சிறிது உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் குழைத்துப் பூசி அரை மணிநேரம் ஊறவிடவும். பிறகு சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். பாசுமதி அரிசியை ஊறவைத்து, முக்கால் பதம் வேகவிட்டு, வடித்துக் கொள்ளவும்.

 

குக்கரில் நெய்யைச் சூடாக்கி, பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை ஆகியவற்றைச் சேர்த்துத் தாளிக்கவும். இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். புதினா, மல்லி சேர்த்து நன்கு வதங்கியதும் வெங்காயம், தக்காளி சேர்த்துத் தொக்கு போல் வதக்கவும்.

 

மஞ்சள் தூள், உப்பு, காரப் பொடி சேர்த்துக் கிளறவும். தயிர், முக்கால் பதம் வேகவைத்த சாதம், பொரித்தெடுத்த கத்தரிக்காய் இவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறி குக்கரை மூடிவைத்து ஐந்து நிமிடம் வேகவைக்கவும். ஆறியதும் குக்கரைத் திறந்து வெங்காய - தயிர் பச்சடியுடன் சேர்த்துப் பரிமாறவும்.

 

http://tamil.thehindu.com/society/recipes/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF/article7024276.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளிக்கிழமை விரதகாரருக்கு நல்ல சாப்பாடு. sign0173_zpsa34c29d3.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் காளானும் சேர்க்க அந்தமாதிரி இருக்கும்....!  :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.