Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கார் திருட்டு வழக்கில் அசாம் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கைது

Featured Replies

RUMI_NATH_2373550f_2373606f.jpg

காங்கிரஸ் எம்.எல்.ஏ. ருமிநாத்| கோப்புப் படம்.
 
கார் கொள்ளை கும்பலுடன் தொடர்பு உள்ளதாக குற்றம் சாட்டப்பட்ட அசாம் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. ருமிநாத் இன்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்டார்.
 
இது தொடர்பாக போலீஸ் உதவி கமிஷனர் ஒருவர் கூறும்போது, "காங்கிரஸ் எம்.எல்.ஏ. ருமிநாத் இன்று காலை 7 மணியளவில் எம்.எல்.ஏ. விடுதியில் இருந்து கைது செய்யப்பட்டார். கார் கொள்ளை கும்பலுடன் தொடர்பு இருப்பதாக அவர் மீது புகார் வந்தது. அதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
முதலில் அவரை திஸ்பூர் காவல் நிலையத்த்துக்கு கொண்டு சென்றோம். விரைவில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி காவலில் எடுத்து விசாரிக்க உள்ளோம்.
 
ருமிநாத் மீது கிரிமினல் சதிதிட்டம், ஏமாற்றுதல் உள்ளிட்ட குற்றங்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 120 (பி), 420, 212 ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்துள்ளோம்" என்றார்.
 
முன்னதாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ருமிநாத், "நான் தலைமறைவு ஆகவில்லை, நான் அப்பாவி. முன்ஜாமீன் கேட்டு விண்ணப்பித்துள்ளதால் நான் குற்றவாளி என்று அர்த்தமில்லை. கார் கடத்தல் கும்பல் தலைவன் அனில் சவுகானுக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
 
சவுகானின் மனைவியை மட்டும் எனக்கு தெரியும். ஏனெனில் அவரும் ஒரு காங்கிரஸ் தொண்டர். என் மீது வீண் பழி சுமத்த நடத்தப்படும் அரசியல் சதி இது.
 
சட்டத்தின் மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன். என் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் சிறைக்கு செல்வதற்கு தயாராக இருக்கின்றேன்" என்று கூறியிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.
 
கார் கடத்தல் வழக்கில், எம்.எல்.ஏ. ருமிநாத் தரப்பில் இரண்டு முறை முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இரண்டு முறையும் குவாஹாட்டி நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்தது. இந்நிலையில் அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக கடந்த 8-ம் தேதி ருமிநாத்தின் முன்னாள் கணவர் ஜேக்கி ஜாகிரும் இதே வழக்கில் கைது செய்யப்பட்டார்.
 
இந்நிலையில், கார் கடத்தல் குற்றச்சாட்டு தொடர்பாக ருமிநாத்திடம் விளக்கம் கோரி அசாம் காங்கிரஸ் தலைவர் அஞ்சன் தத்தா நோட்டீஸ் அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

RUMI_NATH_2373550f_2373606f.jpg

காங்கிரஸ் எம்.எல்.ஏ. ருமிநாத்| கோப்புப் படம்.
 
கார் கொள்ளை கும்பலுடன் தொடர்பு உள்ளதாக குற்றம் சாட்டப்பட்ட அசாம் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. ருமிநாத் இன்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்டார்.

 

 

 

கார் கொள்ளை கும்பலுடன் தொடர்பு உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளாரே தவிர குற்றவாளி என்று நீதிமன்றத் தீர்ப்பு வராமலே மங்கையின் படம்வந்ததும் ஏன் எவரும் பொங்கி எழவில்லை என்று அதிசயித்தேன். பின்புதான் கவனித்தேன் அவர் சேலைகட்டியுள்ளார் ஆனால் நெற்றியில் பொட்டில்லை. 
Bindi-jpg-957.jpg
  • கருத்துக்கள உறவுகள்

பொது வாழ்க்கையில் மக்களின் தொண்டர்கள் என வந்தவர்களுக்கு அந்த விதி செல்லாது என நினைக்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்

பாஞ்ச்,

அது! அங்க தான் நீங்க நிக்கிறீங்க,

கனபேர், தீடீர் அண்ணன்மார், பொங்கி எழப்போகினம்: குய்யோ, முறையோ, ஆச்சா, போச்சா, அப்படியா, இப்படியா, உது சந்தேகம் மட்டும் தானே, பொம்பிளை தற்கொலை செய்தால்...

எங்குமே காரணம் இன்றி ஒரு பெண் கைதாக மாட்டார். ஏனெனில் கைது செய்பவர்களுக்கு குடும்பம், பெண்கள், பிள்ளை குட்டிகள் இருக்கும்.

கசாப்புக் கடைகாரருக்கு, ஆட்டைப் பார்ததும், இவ்வளவு கிலோ தேறும், இவ்வளவு லாபம் பார்க்கலாம் என அனுபவத்தால் தெரிவது போல், பொலீஸ்காரருக்கும், எது, அப்பாவி, எது முடிச்சவிக்கி, மொள்ளமாறி என பார்த்ததும் தெரிந்து கொள்வர்.

எல்லாத்துச்கும் மேல அந்த திருட்டுமுழி இருக்குமே.

:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தனிப்பட்ட நபரின் செய்திக்கும் பொதுவாழ்விற்காக தம்மை அர்ப்பணித்தவர்களின் செய்திக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.  :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.