Jump to content

முட்டை பிரட் மசாலா


Recommended Posts

முட்டை பிரட் மசாலா 

 

முட்டை பிரட் மசாலா என்பது அனைத்து வேளைகளிலும் செய்து சாப்பிடக்கூடிய ஒரு அற்புதமான மற்றும் மிகவும் ஈஸியான ரெசிபி. அதிலும் இரவு நேரத்தில் வீட்டிற்கு சென்ற பின், மிகவும் சோர்வுடன் இருந்தால், இந்த முட்டை பிரட் மசாலா செய்தாலே போதும். இதனை அப்படியே சாப்பிடலாம். முக்கியமாக குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

 

143m43m.jpg

 

சரி, இப்போது அந்த முட்டை பிரட் மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! 

 

தேவையான பொருட்கள்:

 

பிரட் - 8 துண்டுகள்

 

முட்டை - 4

 

மஞ்சள் தூள் -  1/2 டீஸ்பூன்

 

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

 

சிக்கன் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்

 

தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)

 

பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)

 

கடுகு - 1/2 டீஸ்பூன்

 

உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

 

எண்ணெய் - தேவையான அளவு

 

உப்பு - தேவையான அளவு

 

செய்முறை:

 

முதலில் முட்டையை வேக வைத்து, கோது அகற்றி  தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

 

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்துக் கொள்ள வேண்டும்.

 

பின்பு அதில் வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கி, பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சிக்கன் மசாலா தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.  

 

அதற்குள் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து , பிரட் துண்டுகளின் முனைகளில் உள்ள ப்ரௌன் பகுதியை நீக்கிவிட்டு, நெய் ஊற்றி பொன்னிறமாகவும், மொறுமொறுவென்றும் டோஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

 

 வாணலியில் ஒவ்வொரு வேக வைத்த முட்டையையும் ஆறு துண்டுகளாக வெட்டிப் போட்டு, முட்டையில் மசாலா சேர மெதுவாக பிரட்டி விட வேண்டும்.

 

இறுதியில் டோஸ்ட் செய்து வைத்துள்ள பிரட் துண்டுகளையும் சிறு துண்டுகளாக்கி வாணலியில் சேர்த்து ஒரு முறை பிரட்டி இறக்கினால், முட்டை பிரட் மசாலா ரெடி!!!

Read more at: http://tamil.boldsky.com/recipes/non-veg/bread-egg-masala-008018.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவசரத்துக்கு சுலபமாய் செய்யக் கூடியது, பிள்ளைகளும் விரும்பி உண்பார்கள்...!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.