Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பசில் ராஜபக்ச கைதுசெய்யப்பட்டார்!

Featured Replies

14a83fd3e0e2a8e1fbc8972767b216d9_L.jpg
 
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும், மகிந்த ராஜபக்சவின் சகோதரருமான பசில் ராஜபக்ச சற்றுமுன்னர் கைதுசெய்யப்பட்டார்.
 
நிதி குற்றவியல் ஆணைக்குழு முன்பாக இன்று வாக்குமூலமளிக்கச் சென்ற பசில் ராஜபக்ச இன்று மாலை வரை தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்தார். இதன்பின்னர் பின்னரே பசில் ராஜபக்ச கைதுசெய்யப்பட்டார்.
 
மகிந்த ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் பசில் ராஜபக்ச வெளிநாடு சென்றிருந்த நிலையில் நேற்று நாடு திரும்பியமை குறிப்பிடத்தக்கது.
 
இதேவேளை, ராஜபக்சக்கள் பலர் விரைவில் கைதுசெய்யப்படுவர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்திருந்தமை நினைவூட்டத்தக்கது.
 
விசாரணைக்குச் சென்ற பசில் ராஜபக்ச கைது APR 22, 2015by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள்

basil1-300x200.jpgசிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக, இன்று காலை 11 மணியளவில், நிதிக்குற்ற விசாரணைப் பிரிவுக்கு பசில் ராஜபக்ச சமூகமளித்திருந்தார்.

அவரிடம், மாலை 5 மணி வரை விசாரணைகள் நடத்தப்பட்டதையடுத்தே, கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, இன்று பிற்பகல், பசில் ராஜபக்ச விசாரிக்கப்பட்டு வந்த நிதிக்குற்ற விசாரணைப் பிரிவின் முன்பாக, வீதித்தடைகள் போடப்பட்டு, கலகத் தடுப்பு பிரிவு காவல்துறையினரும், குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகளும் குவிக்கப்பட்டனர்.

basil-police.jpg

இதனால் பசில் ராஜபக்ச எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.

அதேவேளை, பசில் ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவரை  கடுவெல நீதிமன்றத்தில், முன்னிலைப்படுத்துவதற்காக இரகசியமாக கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.puthinappalakai.net/2015/04/22/news/5445

இதுவும் ஒரு புது விதமான உத்தி தான்

பசில் வியட்நாமிலேயே தங்கியிருந்தார்! வெளியுறவு அமைச்சு வெளியிடும் அதிர்ச்சி தகவல்
[ புதன்கிழமை, 22 ஏப்ரல் 2015, 09:21.41 AM GMT ]
basil-0012.jpg
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்‌ச, வியட்நாமில் இருந்தே டுபாய் வழியாக நேற்று இலங்கை திரும்பியிருப்பதாக வெளியுறவு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் வாக்கெண்ணும் பணிகள் நிறைவடைந்து முடிவுகள் வெளியான பின்னர், ஜனவரி 11ம் திகதியே நாட்டை விட்டு வெளியேறிய பசில் தம்பதியினர் அமெரிக்காவுக்குச் சென்றதாகவே அப்போது செய்திகள் வெளியாகியிருந்தன.

பசில் அமெரிக்க குடியுரிமை பெற்றிருப்பதும் இதற்கு காரணமாக இருக்கலாம்.

எனினும், பசில் தம்பதியினர் இதுவரை காலமும் வியட்நாமிலேயே தங்கியிருந்ததாக வெளியுறவு அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.tamilwin.com/show-RUmtyERWSUjs5C.html

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

விசாரணைக்குச் சென்ற பசில் ராஜபக்ச கைது APR 22, 2015by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள்

basil1-300x200.jpgசிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி 

basil-police.jpg

படத்தைப்பார்த்தால் தெரியுது...

கைது செய்யப்பட்டது பசிலா?

காவல்த்துறையா??.. :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் ஒரு நாடகம். சிங்களம் வலு அவதானமாக உலக அரசியல் காயை நகர்த்துகிறது.  :icon_idea:

றாஜபக்ச குடும்பத்திற்கு புள்ளிகள் வழங்கினால் (கெட்டவனிலை இருந்து கடுங்கெட்டவன் வரை)  அதுக்குள்ளை தேறக் கூடிய ஆள் பசில் தான். அதாலை தமிழர் எண்ட வகையிலை நாங்கள் சந்தோசப்பட ஒண்டுமில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

றாஜபக்ச குடும்பத்திற்கு புள்ளிகள் வழங்கினால் (கெட்டவனிலை இருந்து கடுங்கெட்டவன் வரை)  அதுக்குள்ளை தேறக் கூடிய ஆள் பசில் தான். அதாலை தமிழர் எண்ட வகையிலை நாங்கள் சந்தோசப்பட ஒண்டுமில்லை. 

எனக்கும் கன காலமாக ஒரு 'சந்தேகம்' இருந்தது!

இவரது அப்பா.. ஒரு 'ஏலியானாக' இருக்குமோ எண்டு! :D

அந்தக் குடும்பத்துக்குப் பொருந்தாத மனுசன்! 

குறிப்பு!  ஏலியன் எண்டு எழுதப்போக.. யாழ் அதை 'எலியன்' என்று எழுதி விட்டதால் திருத்தப்பட்டது!

Edited by புங்கையூரன்

"சென்டிமென்ட்" இதே ஒரேயொரு காரணத்தால் தான் தமிழன் குடும்ப வாழ்க்கையிலும் சரி, தன்மானத்திலும் சரி, இழித்தவாய் ஆகின்றான்.நானும் ஒன்றும் விதிவிலக்கல்ல உங்களைப்போல் ஒரு சாதாரண மனிதன் தானே! ஏதோ பட்டதைச் சொன்னேன்

Edited by BLUE BIRD

நீங்கள் சொல்லுறது...சரிதான்...!

இருந்தாலும் சுரண்டப்பட்ட தமிழன் பொருளாதாரத்தில்..பத்து வீதம் இவருக்குப் போனதில.. எனக்கு இவர் மீது.. எப்பவுமே ஒரு கறள் ! :D

நீங்கள் சொல்லுறது...சரிதான்...!

இருந்தாலும் சுரண்டப்பட்ட தமிழன் பொருளாதாரத்தில்..பத்து வீதம் இவருக்குப் போனதில.. எனக்கு இவர் மீது.. எப்பவுமே ஒரு கறள் ! :D

உங்களுக்கும் பத்து வீதக்கதை தெரிந்து போச்சா.பல புலம் பெயர் தமிழர்கள் பத்து வீதம் கொடுத்துள்ளார்கள்.எமது களத்திலும் ஒரு சிலர் இருப்பதாகக் கேள்வி ஆனால் இதுவரை என்னால் கண்டுபிடிக்கமுடியவில்லை.ஆனால் இப்போ சில வேளை நீங்களும்....?

இந்த ஆளுக்குப் பெயரே 'மிஸ்டர் ரென் பேர்சன்ட்'! :D

உங்களுக்கு இப்ப தான் விடியுது போல.. நீலப்பறவை! :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொன்னையா அண்ணை வேலையை காட்ட தொடங்கீட்டார்.  :icon_mrgreen:

sarath-fonseka-2009-12-13-6-40-0.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.