Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேவையா? சாதித்தது என்ன? மாற்று வழி?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீண்ட நாட்களாக என் மனதில் இருக்கின்ற ஒரு கேள்வியை கேட்டு தெளிவு பட்டு அல்லது தெளிவு படுத்தலாம் என நினைக்கின்றேன்.

புலத்தில் நம் தமிழர்கள் ஆர்ப்பாட்டங்கள் செய்வது, முடங்கங்கள் செய்ய முயல்வது, உண்ணாவிரதங்கள் இருப்பது, இது போன்ற செயற்பாடுகள் அதிகரித்துக்கொண்டு இருக்கின்றன. இப்படியான செயற்பாடுகள் தேவை தானா என்று மனதில் ஒரு கேள்வி எழுகின்றது. காரணம் இப்படியான செயற்பாடுகள் மூலம் எதையும் சாதித்து விட முடியாது என்பது எனது கருத்து, மாறாக நேரம் தான் வீணடிக்கப்படுகின்றது, அத்தோடு, இப்படியான ஆர்ப்பாட்டங்கள் உயர் நிலையில் உள்ளவர்களை விசனத்துக்கு ஆளாக்கும் சந்தர்ப்பங்களும் இருக்கலாம், காரணம் அவர்களுக்கு அதிக வேலைப்பழுக்கள் இருக்கலாம்.

ஒரு உதாரணமாக, சில தமிழ் பெண்கள், ஒரு நாட்டின் தூதுவராலயத்தின் முன்னால் அமைதியான முறையில் கூடி/ஆர்ப்பாட்டம் செய்து, அந்த நாட்டு யுத்த தயாரிப்புகளால் பெண்கள் கொல்லப்படுகின்றார்கள்... ஆதலால் அதை நிறுத்த சொல்லி ஆர்ப்பாட்டம் செய்ததாக இனையம் மூலம் அறிந்தேன். அவர்கள் சாதித்தது என்ன?

இப்படி பல நிகழ்வுகள் நடைபெறுகின்றன புலத்தில். அவ்வாறு செய்பவர்கள் எதனை சாதித்தார்கள் என யாராவது விளக்க முடியுமா?

உன்னான சும்மா உமக்குச் சும்மா இருக்கவே ஏலாதோ?......

நோண்டிக் கொண்டே எல்லாவிடத்திலயும் திரியிறது தர்ம அடி கிடைக்கத்தான் வழிவகுக்கும்........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உன்னான சும்மா உமக்குச் சும்மா இருக்கவே ஏலாதோ?......

நோண்டிக் கொண்டே எல்லாவிடத்திலயும் திரியிறது தர்ம அடி கிடைக்கத்தான் வழிவகுக்கும்........

ஏன் ஆதி எனக்கென்னா வாலா இருக்கின்றது பயப்பிட....(வெட்டி விடுவார்கள் என்று)

புலத்தில் உள்ள தமிழர்கள் ஜன நாயயக ரீதியாக தமது அரசாங்கங்ளிடம் விடும் கோரிக்கைகள் தான் இந்த ஆர்ப்பாட்டங்கள்.இதன் மூலம் அந்த அந்த அரசுகளுக்கும் மற்றும் சக மக்களிடமும் தமிழரின் பிரச்சினையை ஈர்ப்பதே இவற்றின் நோக்கம்.

இதனால் பல பயன்கள் ஏற்கனவே ஏற்பட்டுள்ளன.இனியும் ஏற்படும்.

இன்று அமெரிக்கா முதல் அனைத்து உலக நாடுகளும் தமிழரின் கோரிக்கைகள் நியாயம் ஆனவை என்று கூறுவது தமிழர்கள் தங்கள் ஒருமித்த குரலை இவ்வாறான போராட்டங்கள் மூலம் காடியதால் தான்.இன்று சர்வதேச நாடுகள் ஆக்கக் குறந்த பட்ஷ்ஷம் கண்டன அறிக்கை விடுவது கூட இவ்வாறான போராட்டங்களின் நெருக்கடியால் தான்.உள்ளூர அவர்கள் தமது நலங்களைப் பாதுகாப்பதற்காகஷ்ஷெயற் பட்டாலும் வெளிப்படையாக இவ்வாறான போராட்டங்கள் அவர்களுக்கு நெருக்கடிகளை உருவாக்கும்.

எமக்கு விடிவைத் தரப்போவது எமது ஆயுதம் தரித்த போரட்டம் தான் வேறு எவ்வகையிலும் யாராலும் எமக்குத் தீர்வு வரப்போவத்தில்லை.ஆனால் இவ்வாறான போராட்டங்கள் உலகத்தில் நாம் தனிமைப்படுத்தப் படாமல், எமது போரட்டம் பயங்கரவாதம் என்று முதிரை குத்தி ஓரங்கட்ட முடியாதவாறு பாதுகாக்கும்.மக்களின் ஆதரவுடனான போராட்டம் என்பதை இவ்வாறான ஜன நாயகப்போராட்டங்கள் புலத்தில் மக்களுக்குச் சொல்லும்.

உலகில் பல்வேறு போராட்டங்களும் ஒரு காலத்தில் எதுவித பயனையும் தராதன போல தோற்றம் அழித்தாலும் இறுதியில் அவை வெற்றி பெற்றுள்ளன.அதே போல் எமது போரட்டமும் அதன் இறுதி இலக்கை அடையும்.அதற்கு இவ்வாறான எதுவித பிரயோசனமும் அற்ற கேள்விகள் எந்தப் பயனையும் யாருக்கும் தரப் போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

உன்னான சும்மா உமக்குச் சும்மா இருக்கவே ஏலாதோ?......

நோண்டிக் கொண்டே எல்லாவிடத்திலயும் திரியிறது தர்ம அடி கிடைக்கத்தான் வழிவகுக்கும்........

ஆதி சொல்லுறதும் உண்மை. இப்படித்தான் முன்னரும் சிலர் கேட்க வெளிக்கிட்டு தர்ம அடியோ அடி. துரோகிப்பட்டமும் கிடைக்கும் கவனம். :lol:

ஆதி சொல்லுறதும் உண்மை. இப்படித்தான் முன்னரும் சிலர் கேட்க வெளிக்கிட்டு தர்ம அடியோ அடி. துரோகிப்பட்டமும் கிடைக்கும் கவனம். :lol:

என்னா நெடுக்ஸ்?...

ஆதியைக் குத்திக்காட்டுற மாதிரி இருக்கு!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[ஃஉஒடெ நமெ='னரதர்' டடெ='ணொவ் 17 2006, 07:27 PM' பொச்ட்='238749']

புலத்தில் உள்ள தமிழர்கள் ஜன நாயயக ரீதியாக தமது அரசாங்கங்ளிடம் விடும் கோரிக்கைகள் தான் இந்த ஆர்ப்பாட்டங்கள்.இதன் மூலம் அந்த அந்த அரசுகளுக்கும் மற்றும் சக மககளிடமும் தமிழரின் பிரச்சினையை ஈர்ப்பதே இவற்றின் நோக்கம்.

இங்கு எனது கருத்து என்னவெனில், ஜன நாயக ரீதியில் தமது நாட்டு அரசிடம் கோரிக்கை விடுவதற்கு ஆர்ப்பாட்டம் தேவையா? 100 பேர் குழுவாக சென்று ஒரு மகஜரை கொடுப்பதற்கும், 100 பேர் கையெழுத்து இட்டு கொடுப்பதற்கும் என்ன வித்தியாசம்? இப்படி ஆர்ப்பாட்டம் செய்து ஒரு மகஜரை கையளித்து விட்டு வருவதை விட, ஒரு 4 அல்லது 5 பேர் கொண்ட குழுவை அமைத்து, (தமிழர் சார்பாக) சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் அல்லது அரசுடன் ஒரு நேர அட்டவனையை சரி செய்து, அவர்களுடன் உட்கார்ந்து பேசி விளங்கப்படுத்தாலாமே? பத்திரிகையாளர்களுக்கும் அறிவிக்கலாம். இப்படியான அணுகுமுறைகள் அனைவருக்கும் அனுகூலங்களை கொடுப்பதோடு, அவர்களின் நிலைப்பாடுகள் என்ன என்பதை உடனுக்குடன் அறிந்து கொள்ளக்கூடிய ஒரு சந்தர்ப்பம் உருவாகும். அவர்களும் தமக்கு எதனால் இப்படியான விடயங்களில் தலையிட முடியாது உள்ளது அல்லது அவர்கள் தலையிடுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாக விளக்க ஒரு சந்தர்ப்பமாக அமையும். இப்படியான கலந்துரையாடல்கள் பிரச்சனைகளுக்கு தீர்வை சீக்கிரம் பெற்றுத்தரும் என்பது எனது கருத்து.

சக மக்களுக்கு அறியப்படுத்துவதால் என்ன பிரயோசனம்? அவர்கள் நமக்காக போராடப்போகின்றார்களா? வெறுமனே ஒரு அனுதாபம் தெரிவிப்பார்கள்.. அதனால் நமக்கு என்ன பலன்? அல்லது இலங்க்கைக்கு சுற்றுலா செல்வதை தவிற்பார்கள் என்பதற்காகவா?

இதனால் பல பயன்கள் ஏற்கனவே ஏற்பட்டுள்ளன.இனியும் ஏற்படும்.

இன்று அமெரிக்கா முதல் அனைத்து உலக நாடுகளும் தமிழரின் கோரிக்கைகள் நியாயம் ஆனவை என்று கூறுவது தமிழர்கள் தங்கள் ஒருமித்த குரலை இவ்வாறான போராட்டங்கள் மூலம் காடியதால் தான்.இன்று சர்வதேச நாடுகள் ஆக்கக் குறந்த பட்ஷ்ஷம் கண்டன அறிக்கை விடுவது கூட இவ்வாறான போராட்டங்களின் நெருக்கடியால் தான்.உள்ளூர அவர்கள் தமது நலங்களைப் பாதுகாப்பதற்காகஷ்ஷெயற் பட்டாலும் வெளிப்படையாக இவ்வாறான போராட்டங்கள் அவர்களுக்கு நெருக்கடிகளை உருவாக்கும்.

இன்று அனைத்து நாடுகளும் தமிழர்களது கோரிக்கை நியாயம் என்று கூறுவதற்கு ஆர்ப்பாட்டங்கள் காரணம் என்று சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கண்காணிப்புக்குழு, மற்றும் பல்வேறு அமைப்புகளின் அறிக்கைகளின் அடிப்படையிலும், சில வரலாற்று உண்மைகளின் அடிப்படையிலும் தான் அவர்கள் அதை சொல்கின்றார்கள். வெறுமனே ஆர்ப்பாட்டங்களை அடிப்படையாக வைத்து ஒரு கருத்தை வெள்யிடுவதற்கு எந்த ஒரு நாடும் படிப்பறிவில்லாத தலைவர்களை கொண்டிருக்கவில்லை. ஆர்ப்பாட்டங்கள் மூலம் தான் அவர்கள் உண்மை நிலையை அறிந்தார்கள் என்று நீங்கள் சொன்னால், நான் சொல்கின்ற மாதிரி நாட்டு பிரதி நிதிகளுடன் பேசி விளங்கப்படுத்தி இருந்தால் நமது கோரிக்கை நியாயமானது என்பதை எப்போதோ ஏற்றுக்கொண்டிருப்பார்கள். முடிவுகளும் கிட்டி இருக்கும். ஆர்ப்பாட்டங்களும் சண்டைகளும் எதற்க்கும் ஒரு நிரந்தர தீர்வை தராது.

ஆதி சொல்லுறதும் உண்மை. இப்படித்தான் முன்னரும் சிலர் கேட்க வெளிக்கிட்டு தர்ம அடியோ அடி. துரோகிப்பட்டமும் கிடைக்கும் கவனம். :lol:

ஏனுங்க நெடுக்ஸ் அதுதான் புத்திசாலித்தனமா மாற்றுவழி என்றும் தலைப்பில போட்டிருக்கிறோமில்ல.........

  • கருத்துக்கள உறவுகள்

ஏனுங்க நெடுக்ஸ் அதுதான் புத்திசாலித்தனமா மாற்றுவழி என்றும் தலைப்பில போட்டிருக்கிறோமில்ல.........

மாற்று வழியே தர்ம அடிதான் என்று அமையாவிட்டால் நன்று. முயற்சியுங்கள். நல்ல பலன்கிட்ட வாழ்த்துக்கள். :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாற்று வழியே தர்ம அடிதான் என்று அமையாவிட்டால் நன்று. முயற்சியுங்கள். நல்ல பலன்கிட்ட வாழ்த்துக்கள். :P

இங்கு கவனிக்கவேண்டியது என்னவென்றால் சும்மா கூறுவது மாதிரிப்பலன் குறைவாக இருந்தாலும்

1. மக்களை உணர்ச்சியுடனும் போரட்டத்துடனும் தொடர்புபடுத்தி வைத்திறுக்க உதவும்

2. conference என்ற பெயரில் சில ஆராச்சிக்கடுரைகளை வைப்பதன் மூலமும் பிற மொழி அக்கடமிக் மக்கள் மத்தியில் எமது நிலயைய் விபரிப்பதுதான் சிறந்தது. இது எத்தனை பேரால் முடியும். ஆகவே எம்மால் முடிந்ததைச் செய்வோம் என்று ஊர்வலங்கள் போகிண்றோம்.

3. அன்மையில் BBC க்கு முன்பு நடந்த ஆர்ப்பாட்டம் சிறந்தது. ஏனெனில் பத்திரிகையாளர்கள் சிங்களத்தின் பிடியில் இருந்து விடுவிக்க இவயே சிறந்தது.

4. புலம் பெயர்ந்து வாழும் மக்களில் எத்தனைபேர் அவரவர் நாட்டுப்பத்திரிகைகளில் எமது பிரச்சனையய்ப்பற்றி எழுதியுள்ளார்கள்.எனெனில் அனேகமாக செய்திகள் கொழும்பில் இருந்துதான் வரும் ஆகவே சிங்கள்த்தின் தாக்கம் இருக்கும் இதற்கு ஒரு மறுகடிதம் எழுதுவத்ற்கு கூடத்திறமயற்று இருக்கின்றார்கள் நம்மவர்கள். இவ்வேளயில் ஊர்வலம் போவத்தித்தவிர என்ன செய்ய முடியும்.

ஒவ்வொரு வரும் தம்மால் இயன்றதைச் செய்தால் அதுவே போதும்.ஆனால் உண்மையில் இவ்வாறான போராட்டங்க்களில் பங்குபற்றாமல் இவை பற்றி விமர்சிப்பவர்கள் தான் அதிகம்.சும்மா உம்மால் முடிந்ததை நீர் செய்யலாம் அதே போல் ஒவ்வொரு வரும் தம்மால் முடிந்த போராட்ட முறைகளில் பங்களிப்பை வழங்கலாம்.எல்லாம் ஒரே நோக்கோடு தான் செய்யப் படுகின்றன.இதில் எது சிறந்தது எது நல்லது என்றெல்லாம் அளந்துவிட முடியாது.மொத்தத்தில் நாம் எல்லா வழிகளிலும் புலத்தில் உள்ள மக்களின்,அரசியல் வாதிகளின் ,உடகங்களின் கவனத்தை எம் மீது திருப்பி உண்மைகளைத் தெளிவு படுத்த வேண்டும்.

சும்மா, உமக்கு சும்மாவே இருக்க தெரியாதா?

இந்த கொன்ஸப்ட் மிகவும் தெளிவானது, இலகுவானது.

ஆயுத போராட்டம் எனக்கு நாட்டை வாங்கி தரும்..ஆனால் மக்களின் ஒன்றுபட்ட குரல் தான் எம் நாட்டிற்கு உலகத்தில் ஒரு இடத்தை வாங்கி தரும்...

புரியாம கதைக்க கூடாது.நாரதர் அண்ணாட்ட ஒரு வகுப்பு போகவும்..

நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி ராசா சுமா சுமா ஏனப்பு மூக்கை நுளைகிறீர் எல்லாம் உமது முகமூடியைதான் கிழிக்கிறது உமக்கு பதில்

http://www.yarl.com/forum3/index.php?showt...15590&st=20

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி ராசா சுமா சுமா ஏனப்பு மூக்கை நுளைகிறீர் எல்லாம் உமது முகமூடியைதான் கிழிக்கிறது உமக்கு பதில்

http://www.yarl.com/forum3/index.php?showt...15590&st=20

சிவக்கொழுந்து முகமூடி கிழிக்கிறது..முகம் கழுவுறது இப்படியான அநாவசியக் கருத்துக்களைத் தவிர்க்கலாமே. இன்னொரு தலைப்பில் நடக்கும் சர்ச்சைகளை அடுத்த தலைப்புக்குள்ளும் இழுத்து வருவது விரும்பப்படுவதில்லை என்று கள மட்டுறுத்தினர் மேலே கூறியுள்ளதைக் கவனத்தில் எடுங்களேன்.

கருத்து முரண்பாடுகளை தெளிவான உங்கள் கருத்தை முன்வைத்து தீர்ப்பதை விடுத்து இப்படியான சினமூட்டத்தக்க சர்ச்சைக்குரிய கருத்துக்களை வைப்பதைத் தவிர்ப்பது நல்லதாக தென்படுகிறது. உங்களுக்கு நாங்கள் இப்படி சொல்வதே சர்ச்சையாகத் தென்பட்டால் இதைப் புறக்கணித்துக் கொண்டு உங்கள் பணியைத் தொடரலாம். இதற்காக எங்களோடும் புதிய சர்ச்சை ஆரம்பிக்கிறதில்லை. :P

  • கருத்துக்கள உறவுகள்

புலத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களும் ஊர்வலங்களும் அந்நாடுகளின் வெளியுறவுக் கொள்கைகளில் மாற்றங்கள் கொண்டுவரும், அல்லது உடனைடியாக ஏதாவது செய்வார்கள் என்ற நோக்கிற்காக நடாத்தப்படுவதில்லை. அவை பின்வரும் நோக்கங்களுக்காக நடாத்தப்படலாம்.

1. தமிழர்கள் எல்லோரும் ஒருமித்த குரலைக் கொண்டிருக்கின்றனர் என்பதை வெளிப்படுத்த

2. தமிழ்த்தேசியத்திற்கெதிரான ஓரிரு தமிழர்கள், தமிழர்களின் உண்மையான குரலல்ல என்பதைத் தெளிவுபடுத்த

3. வளர்ந்து வரும் தமிழ் இளையோருக்கு அவர்களின் மூதாதையர் நாடு மீது அக்கறை கொள்ளவைத்து அதன் மூலம் எதிர்காலத்தில் அவர்களின் பங்களிப்பை உறுதிப்படுத்த

4. புலத்து நாடுகள் எமது போராட்டத்தைப் பற்றிய பார்வையை மீளாய்வு செய்ய (இது நீண்ட கால நோக்கிலானாது)

இப்படிப் பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

புலத்துத் தமிழர்கள் போராட்டத்தின் பால் அக்கறையில்லாமல் இருக்கின்றார்கள், அல்லது அவர்கள் குரல்கள் சிதறி உள்ளன என்பது போன்ற கருத்துக்களை புலத்து நாடுகள் கொண்டிருக்காமல் இங்குள்ள தமிழர்கள் பார்த்துக்கொள்ளவேண்டும். இல்லையேல் சிங்கள அரசு, தமது இனவழிப்பைத் தொடரத் தேவையான உதவிகளை விரைவாகப் பெற்றுக்கொள்ள உதவி செய்தவர்களாவோம் (தூதுவராலயங்கள் கடவுச்சீட்டையும், விஸாவையும் மட்டும் வளங்கும் சேவைகளை மட்டும் செய்வதில்லை; அவை புலனாய்வு, அரசியல் பிரச்சாரம் போன்றவற்றைத்தான் முதன்மையாகச் செய்கின்றன).

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி ராசா சுமா சுமா ஏனப்பு மூக்கை நுளைகிறீர் எல்லாம் உமது முகமூடியைதான் கிழிக்கிறது உமக்கு பதில்

http://www.yarl.com/forum3/index.php?showt...15590&st=20

சிவக்கொழுந்து சார் வணக்கம். அனைவரும் தங்கள் கருத்துகளை எழுதி இருக்கின்றார்கள். சரியா பிழையா தேவையா... இல்லையா எதற்கு அவசியம் போன்றவற்றை எழுதி இருக்கின்றார்கள். ஏன் உங்களால் அப்படி ஒரு கருத்தை வைக்க முடியாமல் உள்ளது? ஏன் இப்படியான் முட்டுக்கட்டை போடும் ரீதியிலான பதில்கள்? எனக்குப்புரியவில்லை.

சும்மா, உமக்கு சும்மாவே இருக்க தெரியாதா?

இந்த கொன்ஸப்ட் மிகவும் தெளிவானது, இலகுவானது.

ஆயுத போராட்டம் எனக்கு நாட்டை வாங்கி தரும்..ஆனால் மக்களின் ஒன்றுபட்ட குரல் தான் எம் நாட்டிற்கு உலகத்தில் ஒரு இடத்தை வாங்கி தரும்...

புரியாம கதைக்க கூடாது.நாரதர் அண்ணாட்ட ஒரு வகுப்பு போகவும்..

நன்றி

1980 களின் முன்னர் யாழ்ப்பாண தமிழர்களுக்கு உலகில் இருந்த identity கும் இப்பொழுது இருக்கும் identity கும் எவ்வளவு வித்தியாசம்????? புரிகின்றதா?

1980 களின் முன்னர் யாழ்ப்பாண தமிழர்களுக்கு உலகில் இருந்த identity கும் இப்பொழுது இருக்கும் identity கும் எவ்வளவு வித்தியாசம்????? புரிகின்றதா?

புரியவில்லை உந்த ஐடன்ரி பற்றி மேலும் விரிவாக எழுதினால் தகுந்த பதில் அழிக்கலாம்.மேலும் யாழ்ப்பாணத் தமிழர்கள் என்றால் யார் ? தமிழ் ஈழத் தமிழர்கள் என்றால் யார்? சும்மா உமக்கு கன குழறுபடியான யோசனைகள் தலைக்க இருக்கு,விரிவாச் சொன்னா விளங்க்கப் படுத்தலாம்.

ஆதி சொல்லுறதும் உண்மை. இப்படித்தான் முன்னரும் சிலர் கேட்க வெளிக்கிட்டு தர்ம அடியோ அடி. துரோகிப்பட்டமும் கிடைக்கும் கவனம். :unsure:

இப்படியே மூட்டியும் கூட்டியும் கொடுத்து கொண்டு இருன்கோ :P :P

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே மூட்டியும் கூட்டியும் கொடுத்து கொண்டு இருன்கோ :P :P

இடி மின்னல் சூறாவளிக்கு முதலான..வானிலை அறிக்கை..எச்சரிக்கையா இருக்கும் களம்.

சிவக்கொழுந்து சார் வணக்கம். அனைவரும் தங்கள் கருத்துகளை எழுதி இருக்கின்றார்கள். சரியா பிழையா தேவையா... இல்லையா எதற்கு அவசியம் போன்றவற்றை எழுதி இருக்கின்றார்கள். ஏன் உங்களால் அப்படி ஒரு கருத்தை வைக்க முடியாமல் உள்ளது? ஏன் இப்படியான் முட்டுக்கட்டை போடும் ரீதியிலான பதில்கள்? எனக்குப்புரியவில்லை.

1980 களின் முன்னர் யாழ்ப்பாண தமிழர்களுக்கு உலகில் இருந்த identity கும் இப்பொழுது இருக்கும் identity கும் எவ்வளவு வித்தியாசம்????? புரிகின்றதா?

1980 க்கு முன் உலகம் நினைத்தார்கள் தமிழர் எப்படி தான் போட்டு அடிச்சாலும் சிங்களவனுக்கு கழுவிக் கொண்டு இருப்பார்கள் என்றும் அடிச்சு போட்டு தமிழரை நீங்கள் படித்தவர்கள் அறிவானவர்கள் நல்லவர்கள் எவளவு தான் அடிச்சாலும் கோவம் வராது திருப்பியும் அடிக்க மாட்டீங்கள் என்று ஆனா பிறகு நிலமை வேறு....

தமிழன் நக்கி திண்னும் கூட்டம் இல்லை என்று சிங்களவனில் இருந்து சர்வதேசம் வரை புரியவைக்கபட்டது ஆனாலும் சாப்பிட்ட பின் காலையில் வரும் கழிவு மாதிரி இன்னும் சில தமிழர்கள் இருக்கிறார்கள் என்றும் உலகமும் சிங்களவனும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்..............

..................

இடி மின்னல் சூறாவளிக்கு முதலான..வானிலை அறிக்கை..எச்சரிக்கையா இருக்கும் களம்.

எவளவு தான் சாம்பிராணி புகை போட்டாலும் அந்த நாற்றம் தொடர்ந்து வரும்..

  • கருத்துக்கள உறவுகள்

எவளவு தான் சாம்பிராணி புகை போட்டாலும் அந்த நாற்றம் தொடர்ந்து வரும்..

:P :P :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

1980 க்கு முன் உலகம் நினைத்தார்கள் தமிழர் எப்படி தான் போட்டு அடிச்சாலும் சிங்களவனுக்கு கழுவிக் கொண்டு இருப்பார்கள் என்றும் அடிச்சு போட்டு தமிழரை நீங்கள் படித்தவர்கள் அறிவானவர்கள் நல்லவர்கள் எவளவு தான் அடிச்சாலும் கோவம் வராது திருப்பியும் அடிக்க மாட்டீங்கள் என்று ஆனா பிறகு நிலமை வேறு....

தமிழன் நக்கி திண்னும் கூட்டம் இல்லை என்று சிங்களவனில் இருந்து சர்வதேசம் வரை புரியவைக்கபட்டது ஆனாலும் சாப்பிட்ட பின் காலையில் வரும் கழிவு மாதிரி இன்னும் சில தமிழர்கள் இருக்கிறார்கள் என்றும் உலகமும் சிங்களவனும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்..............

..................

எவளவு தான் சாம்பிராணி புகை போட்டாலும் அந்த நாற்றம் தொடர்ந்து வரும்..

இப்படிப் புகை அடிக்க என்று திரியுறதிலும் ஏதாச்சும் எழுதலாமே கருத்துக்கு கருத்தா. இந்தப் புகை அடிக்கிற கூட்டத்தாலதான் மட்டுறுத்தினர்கள் திணறிப்போகிறார்கள். :unsure:

சும்மா, மற்றவர்கள் சொன்ன பதில்கள் நியாங்களோடு மேலும் சொல்வதானால்...

ஏன் வருடா வருடம் labor party convention, conservative party convention நடக்குது? அதில ஆக்களை தூர இடங்களில இருந்து கூப்பிட்டு வில்லங்கப்படாமால் கட்சியின் கொள்கைகளை விளக்கங்களை புத்தகமாக பத்திரிகையாக வருடா வருடம் அடிச்சு அஞ்சலில அனுப்பி விடலாமே?

அப்பிடியே தேர்தல்கள் ஏன்று ஏன் மக்கள் வாக்கு நிலையங்களிற்கு சென்று நேரத்தை செலவளிக்கிறார்கள். ஒவ்வொரு கட்சியினரும் வீடு வீடாக போய் தமக்கு ஆதரவானவர்களிடம் இருந்து கைய்யெழுத்து வேண்டி குடுக்கலாமே? அதை பிறகு எண்ணி எந்த கட்சிக்கு ஆதரவு இருக்கு யார் பக்கம் மக்கள் இருக்கினம் யார் அவர்களை ஆழுவதற்கு உகந்தவர்கள் என்று தீர்மானிக்கலாம் தானே?

ஜனநாயக உலகில் வெகுஜன எழுச்சியை மக்கள் ஆதரவை மக்களை திரட்டி தான் காட்ட முடியும். எத்தனை மக்கள் அதில் நம்பிக்கை வைத்து தமது நேரத்தை ஒதுக்கி வீதியில் இறங்குகிறார்கள் என்பது அவர்கள் அதில் எந்தளவு ஆழமாக நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் எந்தளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்றதை களவுகள் சுத்துமாத்துகளிற்கு இடம் கொடுக்காது மிகவும் நம்பிக்கையான முறையில் எல்லோருக்கும் வெளிப்படையாக காட்டுகிறது. இது ஒன்றும் புலம்பெயர்ந்துள்ள ஈழத்தமிழர்கள் பின்பற்றும் பிற்போக்குத்தனமான அரசியல் அல்ல. எல்லா நாடுகளிலும் எல்லா இனமும் தமது வாழ்வுரிமை சுயநிர்ணய உரிமை தமது சுதந்திரம் போன்ற அதிமுக்கிய விடையங்களிற்கு பயன்படுத்தும் முறை.

இலங்கையில் இருப்பது ஒரு பயங்கரவாதப் பிரச்சனையல்ல, ஒரு நியாயமான விடுதலைப்போராட்டம் வறுமை வேலைவாய்பின்மையால் வந்த பிரச்சனை அல்ல. ஒரு சில மிதவாதிகளால் ஊதிப்பெருப்பிக்கப்பட்ட பிரச்சனையல்ல மக்கள் ஆதரவு கொண்ட போராட்டம். புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மக்கள் மாத்தரமல்ல மேற்குலகின் அளவுகோலில் சுதந்திர ஜனநாயக மேற்குலகிலும் உள்ள ஈழத் தமிழர்களின் ஆதரவையும் பெற்ற போராட்டம் என்று காட்டுவது அவசியம். அதை மேற்குலகில் ஏற்றுக் கொள்ளப்பட்ட முறைகளில் அந்தந்த அரசுகளிற்கு எடுத்துச் சொல்கிறார்கள். அதை ஒவ்வொரு நாடும் எமது போராட்டத்தை அங்கீகரித்து சுதந்திர தமிழீழத்தை பிரகடனப்படுத்தியபின்னர் 2 அரசுகளிற்கு இடையிலான உத்தியோகப+ர்வ இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளும்வரை அந்த நாட்டிலுள்ள புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் தொடரவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.