Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டெல்லி, வட இந்திய நகரங்களில் கடுமையான நிலநடுக்கம்! ரிக்டரில் 7.7. அலகுகளாக பதிவு!!

Featured Replies

நேபாளத்தில் மற்றுமொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இந்த நிலநடுக்கம் 6.7 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது.
நேபாளம் தெற்கு கோடாரி எனுமிடத்திலேயே இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இதேவேளை, நேபாளம், காத்மண்டிலிருந்து 50 மைல் தூரத்தில் ஆறுமைல் ஆழத்துக்கு அடியில் 7.9 ரிச்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் சுமார் 2,000 க்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
 

நேபாள நிலநடுக்கத்தில் இந்தியத் தூதரக அதிகாரியின் மகள் உயிரிழந்துள்ளதாக வெளிவிவகாரத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

இதில் அவரது மகள் உயிரிழந்துள்ளதுடன் மனைவி படுகாயமடைந்த அதேவேளை அவரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் கபூர்தரா மார்க் பகுதியில் இந்தியத் தூதரக அலுவலகம் அமைந்துள்ளது.

இந்த வளாகத்தில் தூதரக ஊழியர்களின் குடியிருப்பு அமைந்துள்ள அதேவேளை அங்கு நிலநடுக்கத்தால் பல்வேறு வீடுகள் அழிவடைந்துள்ளன.

இந்த அனர்த்தத்தில் இந்தியத் தூதரக அதிகாரியின் குடும்பம் தங்கியிருந்த வீடு தரைமட்டமாகியுள்ளது.

sushma.jpg

- See more at: http://www.canadamirror.com/canada/41751.html#sthash.DwA3ZIlQ.dpuf

நேபாள பூகம்பத்தில் பலியானவர் எண்ணிக்கை 4000ஐ தாண்டியது

 

நேபாள பூகம்பத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 4000ஐயும் தாண்டிவிட்டதாக கூறும் அதிகாரிகள், ஆனாலும் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் அச்சம் தெரிவித்துள்ளனர்.

 

150427010919_nepal_624x351_n_nocredit.jp
நேபாள பூகம்பம்
 
பூகம்பத்துக்கு பின்னரான பல அதிர்வுகள் தாக்கியதன் காரணமாக, தலைநகர் காத்மாண்டுவில் உள்ள மக்கள் தமது வீடுகளுக்கு செல்லாமல், தெருவோர கூடாரங்களில் தங்கியிருக்கின்றனர்.
150427021720_nepal_tent_624x351__nocredi
இரவை கூடாரங்களில் கழித்தனர்
 
பூகம்பத்தின் மையப்பகுதியை நோக்கி மீட்பு பணியாளர்கள் செல்லத்தொடங்கியுள்ளனர். சில வீதிகள் தற்போது தடைகள் அகற்றப்பட்டுள்ள திறக்கப்பட்டுள்ளன.
150427072128_nepal_earthquake_damaged_am
மீட்புப் பணி தொடர்கிறது
 
காலநிலை சீரடைந்துள்ளதால், இமயமலையின் அடிவார முகாமில் அகப்பட்டுள்ள காயமடைந்தவர்களை மீட்பதற்காக ஹெலிக்கொப்டர்கள் புறப்பட்டுச் சென்றுள்ளன.
குடிதண்ணீர் விநியோகம் மிகவும் அவரசரமாக தேவைப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கூடாரங்களும், பிணங்களுக்கான பைகளும் கூடத் தேவைப்படுகின்றன.
 
  • கருத்துக்கள உறவுகள்

3 Meter in 30 Sekunden  

Erdbeben in Nepal verschob ganz Kathmandu

 

ein-erdbeben-der-staerke-7-8-erschuetter

Ein Erdbeben der Stärke 7,8 erschütterte am Samstag Nepal - es forderte über 4000 Menschenleben. (Quelle: USGS)

 

நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த பூமி அதிர்வில்.....

காத்மண்டு நகரம், 30 வினாடிகளில்... 3 மீற்றர் தூரம் நகர்ந்துள்ளது.

Edited by தமிழ் சிறி

நெஞ்சை பதற வைக்கும் நேபாள நிலநடுக்கம் 

 

  • கருத்துக்கள உறவுகள்

பசுபதிநாதர் ஆலயம் தப்பியது

 

 

நேபாளத்தில் நேற்று நேரிட்ட நிலநடுக்கத்தில் ஏராளமான கோயில்கள், புராதன சின்னங்கள் அழிந்தன. இதில் அதிசயிக்கத்தக்க வகையில் ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த பசுபதிநாதர் கோயில் எவ்வித சேதமுமின்றி தப்பியது.

காத்மாண்டுவில் அமைந்திருந்த யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னமான தர்பார் சதுக்கம், புராதன சின்னமாக திகழ்ந்த தரஹரா கோபுரம் ஆகியவை இடிந்து தரைமட்டமாகின. எனினும் காத்மாண்டுவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள பசுபதிநாதர் கோயிலுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை. இந்த கோயில் யுனெஸ்கோவின் புராதன சின்னம் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

 

http://tamil.thehindu.com/world/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81/article7141616.ece

ஆட்டுபவனே அவன் தானே ! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டுபவனே அவன் தானே ! :lol:

 

நேபாளம்... உலகில் இந்து மன்னாராட்ச்சியை கொண்ட நாடு,

அது, எங்களது போராட்டத்துக்கு, ஆதரவு தந்ததா?

 

சார்க் என்னும்.. குறுகிய வட்டத்திற்குள் நின்று கொண்டு.....

இமய மலையே..... சரியும், அளவுக்கு வந்திருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

நேபாளம்... உலகில் இந்து மன்னாராட்ச்சியை கொண்ட நாடு,

அது, எங்களது போராட்டத்துக்கு, ஆதரவு தந்ததா?

 

சார்க் என்னும்.. குறுகிய வட்டத்திற்குள் நின்று கொண்டு.....

இமய மலையே..... சரியும், அளவுக்கு வந்திருக்கு.

நேபாளத்தின் நிலையும்... ஈழத்தமிழரின் நிலை தான்! :o

 

இந்தியா.. நேபாளத்துக்கு மேலையும் ஏறிக் குந்திக்கொண்டிருக்கு! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நேபாளத்தின் நிலையும்... ஈழத்தமிழரின் நிலை தான்! :o

 

இந்தியா.. நேபாளத்துக்கு மேலையும் ஏறிக் குந்திக்கொண்டிருக்கு! :icon_idea:

 

"முற் பகல் செய்யின்... பிற்பகல் விளையும்."

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.